இரவீந்திரநாத தாகூர் என்றவுடனேயே நம் நினைவக்கு வருவது இவர் ஒரு கவிஞர் என்பதுதான். இவர் ஓர் அற்புதமான கதாசிரியரும்கூட. இவருடைய படைப்பாற்றலின் இன்னொரு பரிமாணத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது தாகூர் கதைகள். இதில் இடம்பெற்றுள்ள 13 கதைகள், மனித நேய மகத்துவத்தை, வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் நமக்குள்ளே ஒரு தேடல் தாகத்தையும் கிளப்பிவிடும் வகையில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன.
ஒரு சில நிமிடக் கவனக் குறைவால், எஜமானரின் கழந்தையைப் பறிகொடுத்துவிட்ட விசுவாசமான வேலைக்காரன், ஒரு பிராயச்சித்தம் தேடினான். எஜமான் குடும்பம் இழ்ந்ததை மீட்டுக் கொடுத்ததற்காக இந்த அப்பாவி ஜீவன் கொடுத்த விலை...? கனம் கோர்ட்டார் அவர்களே... கதை சொல்லும் அதை!
புனிதராகக் காட்டிக்கொண்டு, அருள் மொழிகளை உபதேசித்து வந்த ஒரு கபடச் சாமியார், தனது பக்தை ஒருத்திக்கு வஞ்சக வலை விரிவுத்தார். குடும்பத்தலைவியான அந்தச் சராசரிப் பெண்ணோ, நிஜமான துறவுக்கு இலக்கணமாகப் புது வாழ்க்கையத் தொடங்கினாள். முடிவில்லாத தேடல் பயணத்தைத் தொடர்ந்த அவளின் வாழ்க்கை நாடகத்தில் எத்தனை எத்தனை காட்சிகள்...? பக்தை கதையில் பாருங்கள்.
விஷமத்தனமும் கும்மாளமுமாகக் கொட்டமடிக்கும் சின்னப் பையனுக்கு, கடுமையான, கண்டிப்பான அம்மா கொடூரமானவளாகத் தெரிகிறாள். பெற்ற தாயைப் பிரிந்து சென்ற பிரகு, அவள் மடிதான் சொர்க்கம் என்பதை அருமை மகன் உணரும் நெகிழ்ச்சியான கதை, லீவு விட்டாச்சு...
கண்ணுக்குக் கண்ணான கண்ணாளனே, தன் கண்கள் பறிபோனதற்குக் காரணமானவன் என்பதைத் தெரிந்துகொண்டும், அவன் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாத ஓர் அபலைப் பெண்ணின் உருக்கமான கதை, கண்கள். திசை மாறிப் போகவிருந்த கணவன் இவள் அன்புக்கு அடிமையான மாயம் நிகழ்ந்தது எப்படி? கண்கன் சொல்லும், அந்த ரகசியத்தை!
Awarded the Nobel Prize in Literature in 1913 "because of his profoundly sensitive, fresh and beautiful verse, by which, with consummate skill, he has made his poetic thought, expressed in his own English words, a part of the literature of the West."
Tagore modernised Bengali art by spurning rigid classical forms and resisting linguistic strictures. His novels, stories, songs, dance-dramas, and essays spoke to topics political and personal. Gitanjali (Song Offerings), Gora (Fair-Faced), and Ghare-Baire (The Home and the World) are his best-known works, and his verse, short stories, and novels were acclaimed—or panned—for their lyricism, colloquialism, naturalism, and unnatural contemplation. His compositions were chosen by two nations as national anthems: India's Jana Gana Mana and Bangladesh's Amar Shonar Bangla.