விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். இதனை காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றினார். அதை கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். எந்தப் பணியை ஆரம்பித்தாலும் விநாயகரை வணங்கி ஆரம்பிப்பது நம் மக்களின் வழக்கம். எழுதுவதற்கு முன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம். விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும், முறையாகத் திட்டமிடவும், அனைவரிடமும் அன்பு செலுத்தவும், அனைவரது அன்பும் நம் மீது பரவவும், சுமூகமான வாழ்வை சந்தோஷமாக மேற்கொள