இராமாயணம்
-விளக்கவுரை, பிரபஞ்சன்
ஆயிரம் சொன்னாலும், இராம இதிகாசம் என்பது உலக மனிதர்களின் எண்ணம், குணம், வாக்கு, செயல், இந்த இந்த தருணங்களில், இப்படி இப்படி இருத்தல் தான் செம்மை என அறிவுறுத்தும் கருத்துப் பொக்கிஷம்.
இராமன் என ஒரு நபர் இருந்ததில்லை., இராமர் பாலம் கிடையாது., இராமன் ஆரியன், தமிழரல்ல, இராவணன்தான் தமிழன் என இப்படி முரணான கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும்.,
இராமாயணத்தில் சொல்லப்பட்ட மேன்மையான நிகழ்ச்சிகள் மூலம் மகத்தான கருத்துக்களுக்காக, ஒருமுறையேனும் வாசித்து விடுவது மிக உன்னதம்.
இவ்வளவு மகத்தான உன்னதமான மிகவும் மேன்மையான மனிதர்கள் கூட இருப்பார்களா? என வினவும்படியான இராம காதையில் இடம்பெற்றவர்களின் குணங்கள் அமைந்திருக்கிறது.
அந்த அளவுக்கு இரசமாக வால்மீகியும் கம்பரும் இராமாயணத்தை இயற்றியிருப்பதாக, தற்போது மறைந்த திரு #பிரபஞ்சன் இப்புத்தகத்தில் பல இடங்களில் சொல்லி, அயோத்தில் முதல் இலங்கை வரை அழைத்து செல்கிறார்.
இப்புத்தகம் வாசிக்கும் வரை, கேள்விபட்ட விஷயங்களில் ஒன்று, காவியங்கள் என்பது நம் வாழ்வின் சம்பவங்கள் இக்காவியங்களில் எங்கேனும் ஒரு இடத்தில் பொருந்திவிடும் என்பதுதான்.
இப்புத்தகத்தை வாசித்த பின் அது உறுதி செய்தாலும், நாம் நமக்கு ஏற்படும் சிக்கல்களையும் பிரச்சினை களையும் எப்படி அணுகுவது என்பதையும் மறைமுகமாக சொல்கிறது இக்காதை.
அதேபோல ஒழங்குமுறை, ஒழக்கம், நற்பண்பு முதலியவைகளையும் உள்ளடக்கி பொதிந்து வைக்கபட்டிருக்கிறது.
தந்தை-மகன்,
கணவன்-மனைவி
அண்ணன்-தம்பி
அண்ணன்-தங்கை
தந்தை-மகள்
சமவுரிமை
பெண்ணியம்
அரசன்-அமைச்சர்கள்
அரசன்-மக்கள்
மனிதம்
இயற்கை
என குடும்பம் முதல் சமூகம், உலகம் என அனைத்தும், இவ்வழி நடந்தாலொழிய அனைவர்க்கும் மேன்மை அமையாது என்பதை இராம காதை மூலம் தெளிவுபட விளக்கவுரை தந்துள்ளார் திரு#பிரபஞ்சன் அவர்கள்.
என்னை பொருத்தவரை தேவ-அசுர என இருவேறு குலங்கள் இருப்பதாக நினைக்கவில்லை.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவ குணமும், அசுர குணமும் ஒருங்கே இருப்பதாகவே நம்புகிறேன்.
நேரத்திற்கேற்ப அவை வெளிப்படுகின்றன. அப்படியாகவே இராமாயணக் கதையையும் பார்க்க வேண்டும். இதில் மதம் என்பதை நுழைத்து நல்ல கருத்துகளக மற்றவர்களிடம் கொண்டு சேர்க்காமல் விடுவது, உண்மையில் கவலைக்குரியது.
இராமனை கடவுளாக பார்ப்பதை விட நற்குணங்களையும், நற்சிந்தனைகளையும் கொண்ட மனிதனாக, உதாரண புருஷனாக பார்க்க வேண்டும் என்பதே இராமாயணத்தின் நோக்கமாக இருக்கிறது என்பதாகவே நாம் கருதுகிறோம்.