எல்லோருக்கும் முதல் வணக்கம்! ஒரு சிற்றிதழ் துவங்கி நடத்த வேண்டும் என்கிற ஆசையை நான் முன்னெப்போதோ முடித்துக் கொண்டேன். நடுகல் 1991 ஆவணியில் முதல் இதழ் திருப்பூரிலிருந்து வெளிவந்தது. முதல் ஆறு இதழ்கள் மாதம் தவறாமல் வர காரணம் என் நண்பர்கள். அதன்பிறகு அச்சகத்தில் எழுத்துப் பொறுக்க்கியாக இருந்த நான் நினைத்த போது இதழை பல வடிவங்களில் கொண்டு வருவதை வழக்கப்படுத்தியிருந்தேன். சந்தா ஒவ்வொன்றும் ஒருதுளி ரத்தம் என்றெல்லாம் அறிவிப்போடு முதல் இதழ் வெளிவந்தது. சந்தாக்களும் சில கிட்டின. ஆறு இதழ்களுக்கும் பின்பாக தமிழகம் முழுக்க படிக்கும் ஆசையுள்ளோருக்கு இலவச பிரதியாக அனுப்பிக் கொண்டிருந்தேன். இதனால் அப்போது பல இலவச இதழ்கள் மாற்று இதழ்களாக எனக்கும் கிட்ட
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.