சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆதிச்சநல்லூர் மீள் அகழாய்வைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பெரும் நாகரீகம் சிறுகரண்டியால் மண்ணை துழாவுவதன் வழியே மேலேழுந்து கொண்டிருந்தது. படிந்துள்ள மண் அடுக்குகளை வைத்து ஆண்டுகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்ல? காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ? அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா? கலையை அறிதலும் காலத்தை அறிதலும் ஒற்றைப் புள்ளியில் முடிச்சிட்டுக் கிடக்கிறது. அதுதான் இயற்கை.’’
இயற்கையைப் பற்றி இப்படியாக ஒரு சிந்தனை. இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் சு.வெங்கடேசன். இவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாவலாசிரியர். இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் என்ற வரலாற்று நாவலுக்கு 2011-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம். பட்டம் பெற்றவர். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது ‘ஓட்டை இல்லாத புல்லாங்குழல்’ என்ற கவிதை நூலை எழுதியுள்ளார். இவைதவிர திசையெல்லாம் சூரியன், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் (கவிதை), கலாசாரத்தின் அரசியல், மனிதர்கள், நாடுகள், உலகங்கள், சமயம் கடந்த தமிழ் போன்ற நூல்களையும் படைத்துள்ளார். சிறந்த சொற்பொழிவாளர்.
இடதுசாரி சிந்தனையுள்ள இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். களஆய்வு மேற்கொண்டு காவல்கோட்டம் நாவலைப் படைத்த இவரின் எழுத்துக்களில் வெளிப்படும் சொல்லாடல்கள் தரம் மிகுந்தவை.
இவர் சமகாலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த அலங்காரப்ரியர்கள். இதில் பல்வேறு தகவல்கள், பலதரப்பட்ட மனிதர்கள் என தெரிந்துகொள்வதற்கு ஏராளமான தகவல்கள் நிரம்பிக்கிடக்கின்றன.
Su. Venkatesan (சு. வெங்கடேசன்), also known as S. Venkatesan, is a Tamil writer from Tamil Nadu, India and Tamil Nadu State Committee member of Communist Party of India (Marxist). His debutant novel Kaaval Kottam published in 2008 was awarded the Sahitya Academy Award for Tamil in 2011. The Tamil film 'Aravaan' is based on it. The Sahitya Academy-winning writer is also the president of the Tamil Nadu Progressive Writers Association. His second novel 'Veerayuga Nayagan Velpari' was serialised in Tamil popular magazine Ananda Vikatan. 'Veerayuga Nayagan Velpari' is the second Novel after Ponniyin Selvan to make a big craze between the readers at that time.
சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் என்னும் மகாப்புதினம் என்னை கவர்ந்தது. 'அலங்காரப்பிரியர்கள்' ஒன்றும் விதிவிலக்கில்லை. கலை, ஓவியம், இலக்கியம், வரலாறு என்று பல பரிமாணங்களின் கட்டுரைத் தொகுப்பே அலங்காரப்பிரியர்கள்.
ஏழு கட்டுரைகளில் என்னை மிகவும் தாக்கியது மூன்று:
1. உ.வே.சா. சமயம் கடந்த தமிழ்: உத்தமனாதபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயரின் தமிழுக்கு அளித்த மாபெரும் பங்களிப்பு, சைவ மதம் கடவுள் செயல்பாட்டிலும், இலக்கிய நூல்களிலும் புத்தம், சமணத்திற்கு எதிராக தன் ஆதிக்கம் செலுத்தியது,சமணர் கழுவேற்றம் என்று பல அறியப்படாத பொக்கிஷங்களை ஆசிரியர் அடுக்கி வைத்துள்ளார்.
2. திருநங்கையர் வரலாறும்- காலனிய அரசியலும்: திருநங்கைகள் ஒற்றர்களாகவும், அதிகாரம், அரசனின் பாதுகாப்பு என்று பல முக்கிய அந்தஸ்துகளை வகித்தவர்கள். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், அர்த்தசாஸ்திரம் என்று அவர்களின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டுக்கு பிறகு அவர்களுக்கு நடந்த கொடுமைகள், அவர்களுக்கு ஏற்பட்ட இழிவுநிலைகள் எல்லாம் கருப்புச் சரித்திரத்தின் பக்கங்கள். சீசரா லோம்ப்ரோசோ (Cesare Lombroso) என்னும் இத்தாலிய குற்றவியலாய்வாளரைப் பற்றி கட்டாயம் படிக்க தவறாதீர்கள்.
3. வஞ்சியர் காண்டம்: இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திற்கு சற்று அல்லது மாறுபட்ட கதைக்களம் - ப்ரளயனின் வஞ்சியர் காண்டம் (நாடகம்). கண்ணகி, கண்ணகியின் செவிலித்தாய், தோழி தேவந்தி, பணிவிடை செய்த இளம்பெண் ஐயை - இவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வு. கற்பு நெறி, தெய்வத்தன்மை என்று இல்லாமல், அறிவையும் ஞானத்தையும், கலையையும் முதன்மைப்படுத்தும் முயற்சியே வஞ்சியர் கண்டத்தின் நோக்கம். செவிலித்தாய் - கண்ணகியின் உரையாடல் உச்சக்கட்டம். அதுவே வஞ்சியர் கண்டத்தின் உள்ளகம் என்று நான் கருதுகிறேன்.
இவை அனைத்தும் கட்டுரைத்தொகுப்பே என்றாலும், இதன்மூலம் பின்னோக்கி பயணித்து, அறியப்படாத மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொள்வதற்கு ஒரு துருப்புசிசீட்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பருகு, பருகு என வாரி வாரி கொடுத்துள்ளார். ஆம், படித்தவை எல்லாம் மறைக்கப்பட்டவை, உணர்ச்சிகள் நிரம்பியவை,
தெரிந்து கொள்ள வேண்டியவை என அலசி ஆராய்ந்து கட்டுரை வடிவில் கொடுத்துள்ளார்.
பௌத்தம்; சமணம் என, படைப்பும்; படைக்கப்பட்டவையும், வரலாறும்; ஒதுக்கப்பட்டவையும் என ஒன்றினைத்து கூறியிருப்பது மேலும் ஆர்வத்தை தூண்டுகிற ஒன்றே. கட்டுரை வாசித்தலும் சுவையானவையே என்று உணர்ந்த தருணம் !!
Refreshing, thought provoking analysis of cultural history and well known Tamil stories and events. தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்.
இது ஏழு கட்டுரைகளை கொண்ட தொகுப்பு. சு வெங்கடேசன் அருமையான புதுமையான விதங்களில் என்னை சிந்திக்கவும் ஆச்சர்யப்படவும் வைத்துவிட்டார். ஒளி பற்றிய கட்டுரையாகட்டும், சிற்பங்களில் காணாமல் போகும் சிற்பிகளாகட்டும், தமிழ்ப்பணியால் மதவேற்றுமைகளிலிருந்து கலையை காப்பாற்றிய உ வே சா பற்றியதாக இருக்கட்டும், திருநங்கையர்களை குற்ற பரம்பரையரென சாடிய அவலத்தைப் பற்றியதாக இருக்கட்டும்... பிரமாதம் பண்ணியிருக்கிறார். ஒரு நாள் நானும் என் சிந்தனைகளை இவரளவேனும் ஸ்பஷ்ட்மாக எழுதமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறேன்.
Big fan of Su.Ve... One of the main aims of a literary work is to sow the interest for further reading. This book does the same in addition to providing a great reading as usual. I learnt about Manohar Devadoss and I'm already buying his books. Thanks again!