பைபிள் மாந்தர்களின் வாழ்க்கையை அழகிய கவிதையில் உலவ விட்டிருக்கும் நூல் இது. ஆதாம், ஏவாள், நோவா, ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, யோசேப்பு, எஸ்தர், ரூத், யோபு உட்பட பலருடைய வாழ்க்கை இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாம் கதையின் ஒரு பகுதி ! பூமியின் ஆடையாய் மூடுபனி மட்டுமே முளைத்திருந்தது அப்போது. இன்னும் மழை தன் முதல் பிரசவத்தை நடத்தவில்லை. தன் முதல் மனிதனுக்கு ஆண்டவர் ஆதாம் என்று பெயரிட்டார். ஏதேனில் அத்தனை ஏற்றங்களையும் அவனுக்காய் ஏற்படுத்தி, ஒரு மரத்தை மட்டும் தடை விதித்தார். அதை உண்டால் நீ சாகவே சாவாய் என்று முதல் எச்சரிக்கையை விடுத்தார். அதுவே மனுக்குலத்தின் மீது விடுக்கப் பட்ட முதல் எச்சரிக்கை.