அறிவுஜீவித்தனம் என தனியாக எதுவும் துருத்திக்கொண்டு தெரியாமல் ஒரு சாமானியன் உலகைக் காணும் பார்வையோடு அணுகுகின்றன செல்லமுத்து குப்புசாமியின் இந்த சிறுகதைகள். ஒவ்வொரு கதையை வாசித்து முடிக்கும் போதும் ‘அட ஆமாம்ல’ என்ற நினைப்பு வந்து போகிறது. நாம் கடந்து வரும் அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துப் பார்க்கிற அல்லது பார்த்த அனுபவத்தை நமக்கு உருவாக்குகின்றன. ஆன்சைட் வாழ்க்கை, அபார்ட்மெண்ட் வாழ்க்கை, ஆணின் மனோபாவத்தோடு உலகைக் காணும் வாழ்க்கை, பேச்சிலர் வாழ்க்கை, நகர வாழ்க்கை, கிராம வாழ்க்கை, நகரத்துக்கு கிராமத்துக்கும் இடையே மனதளவில் தத்தளிக்கும் திரிசங்கு வாழ்க்கை, குழந்தைகள் உலகம், முதியவர்களின் லைஃப் ஸ்டைல் என எல்லாத் தளங்களிலும் பயணி