அண்மைக்காலத்து வரலாற்றில் இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம் காதல் வாழ்வை சமூக வாழ்வை அன்பை குடும்ப உறவுகளை சிதைக்கிறது. மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது.
தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனம் கசியும் விதமாக ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல்கிறது. காதலை, நட்பை, உயிர் கலந்த உறவுகளை, சமூக நேசத் தையும் சீரழித்த, கடந்த முப்பது ஆண்டுக்கால ஈழத் தமிழ்வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்துக் கண்முன்னும் நம் மனசாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி.
உலகத்தின் யுத்தகாலக் கலைப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பல காலம் பேசப்படும்.
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, ரொறன்ரோ-தமிழகம்-ஈழம் என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்.
வெளிவந்த நூல்கள் நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்) சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள், ஓகஸ்ட் 2007, பனிக்குடம் பதிப்பகம்) இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்) கானல் வரி (குறுநாவல்) ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்) பார்த்தீனியம் (நாவல், 2016)
இலங்கை யுத்தகால கொடுமையான சம்பவங்களை விரிவாக, எளிமையா , எல்லோருக்கும் புரியும் படியும் , அரசியல் சார்புயற்ற, எளிய மனிதன் பார்வையில் பதிவு செய்தது இந்தப் புத்தகத்தின் சிறப்பு மற்றும் வெற்றியும் கூட. ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள் .
"பார்த்தீனியம்....நிலத்திலை இருக்கிற சத்தையெல்லாம் உறிஞ்சிப் போடும். அதைவிட, தனக்கு பக்கத்திலை எந்தவொரு செடியையும் வளரவிடாம அழிச்சுப்போடும்......இநதியாவும் பார்த்தீனியமும் ஒண்டுதான். தன்ரை நன்மைக்காக அல்லாமல் எங்களுக்காக எந்தக் கால்த்திலையும் இநதியா உதவி செய்ததில்லை. செய்யப் போறதுமில்லை.”
A shocking and heart-wrenching tale of how the Indian Peace Keeping Force (IPKF) -- the military contingent on a peacekeeping operation in Sri Lanka between 1987 and 1990 (sent by then Indian Prime Minister Rajiv Gandhi) -- turned into 'Innocent-People-Killing-Force'. The novel is about a war-time romance and through the conflicts of separated lovers, it addresses the social ostracism, economic blockades, land appropriation, torture, and pogroms carried out by Sri Lankan army and its intervening Indian masters against the Tamil minority. The story also tackles the bloody, internecine disputes (killings and kidnappings) between various Tamil militant outfits and LTTE (Liberation Tigers of Tamil Eelam).