விலியத்தின் பழைய ஏற்பாட்டிலுள்ள கதைகளை நாவல் வடிவில் சொல்லும் நூல். விவிலியம் இலக்கிய நூல். அத்தனை வகையான சிறுகதை வடிவங்களையும் தன்னுள் கொண்டிருக்கும் பிரமிப்பூட்டும் நூல். அந்தக் கதைகள் காலத்தைத் தாண்டி போதிப்பவை ஆன்மீக பாடங்கள் மட்டுமல்ல, இலக்கிய வியப்புகளையும் தான். ஒரு மாதிரி கதை ! முதல் பாவம் 0 கடவுள் உலகையும், முதல் மனிதன் ஆதாமையும் படைத்து அவனுக்கு ஒரு துணையையும் அளித்து ஏதேன் என்னும் தோட்டத்தையும் அவர்களுக்காய் அமைத்துக் கொடுத்தார். ஏதேன் தோட்டம் பூமியின் சுவர்க்கமாக இருந்தது. அங்கே அனைத்து விதமான பழமரங்களும் இருந்தன. தோட்டத்தில் நான்கு ஜீவ நதிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஆதாமும் அவனுடைய துணைவியும் ஏதேன் தோட்டத்தில் தெய்வங்களைப் போல வாழ