ஆபத்துக்குப் பொய் சொல்வதில் பாவமில்லை என்பார்கள். தருமர், "அஸ்வத்தாமா, அத குஞ்சரஹா" - என்று துரோணாச்சாரியாரை நிலைகுலையச் செய்யும் பொருட்டு சொல்லிய ஒரு பொய்யால், அதுவரை நிலத்தில் பதியாமல் ஓடிக்கொண்டிருந்த அவரது ரதம், பூமியில் படிந்து விட்டதாம்.
எனக்கு இரதம் எதுவும் கிடையாது. ஏற்கனவே, எனது கார் நிலத்தில் பதிந்துதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே, நிறையப் பொய்களைத் துணிந்து சொல்லலாம். ஆனாலும், ஒரு எழுத்தாளர் பொய் சொல்வதற்கு முன்பாக நிறைய யோசிக்க வேண்டும். இன்று துணிந்து பொய் கூறினால், நாளை உண்மை சம்பவங்களைப் பற்றி எழுதும் போது, ஆதாரங்களைத் தந்தாலும், அவற்றை வாசகர்கள் நம்ப மறுப்பார்கள். சரித்திர நாவல்களை எழுதும்போது, "நீங்கள் எழுதுவது உண்மை சம்
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதியிருக்கிறார்.
தற்போது கல்கியில் கூடலழகி என்கிற சரிந்திர தொடரை எழுதிவருகிறார்.
சரித்திர கதைகளில் அரியணையை அலங்கரிக்கும் மன்னனின் வீரத்தால் உண்டான சாம்ராஜ்ஜியத்தின் எழுச்சியையோ வீழ்ச்சியையோ என்று தனிப்பட்ட ஒருவனைப் பற்றி சொல்வதில் தொடங்கி மெல்ல அவன் ஒரு கூட்டத்தின் தலைமையானதால் அந்த மக்களின் கூட்டுசமூகத்தின் நிலைப்பாட்டில் அடங்கியப் பொதுவான பிரச்சனைகளைச் சமாளித்த யுக்திகளையும்,அமைத்த வியூகங்களையும் விவரித்து போவதில் சரித்திர புனைவுகளின் சுவாரசியம் அடங்கி இருக்கிறது.
சோழ மன்னன் தன் அரியணையைப் பாதுகாத்துக் கொள்ளச் செய்த ஏற்பாடு எதுவுமே அவரின் வாரிசுகளைத் திருப்திபடுத்தவில்லை.
மன்னன் குடும்பத்திலுள்ள மங்கைகள் அரசாங்க ஆட்டத்தில் வெறும் பகடைகளாகவே இருப்பதால் அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் ஒதுக்கப்பட்டு மக்களின் நலனுக்கான என்று அவர்களின் மீதி திணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியுள்ளது.
அழகுக்கு இலக்கணமான பெண்ணையே கொண்டாடுவது ஒரு கட்டத்திற்கு மேல் போனால் அது ஆபத்தின் பாதையைத் தான் அடையும்,பெண்ணிற்கே அப்படிச் சொல்லும் போது ஓர் ஆண் தன் அழகால் தன்னைத் தானே ஆராதித்தால் அவன் மட்டுமில்லாது அவனைச் சார்ந்தவர்களும் துன்பத்தின் வாசலை தான் அடைய முடியும்.
பேரழகு கொண்ட குந்தள இளவரசன் கோவிந்தன் பெண்களுடன் பள்ளியறையில் இருப்பதும்,தன்னை அழகு படுத்திக் கொள்வதில் மட்டும் கவனமாக இருப்பவன் தந்திரமாகத் தமையனை கொன்று அரியணையில் ஏறினாலும் பெண்களின் உடலில் மேல் மட்டும் கண்களைப் பதிப்பவனிடமிருந்து சாம்ராஜ்ஜியம் பறிக்கப்படுகிறது.
பார்க்கும் பெண்களை எல்லாம் தன் பள்ளியறையில் அடைப்பவனுக்கு அவன் கையில் அகப்படாமல் போன விந்தளையாலே முடிவு கட்டப்படுகிறது.
தங்கையின் கணவன் கோவிந்தனின் துர்போதனையால் தன் குணத்தை இழந்து அவன் போலவே மாறிய சோழ அரசன் அரிஞ்சயனின் முடிவும் கோவிந்தனின் முடிவு போலவே அமைகிறது அதுவும் விந்தளையாலே.
சோழ மன்னன் பராந்தகனின் வாரிசுகளைச் சுற்றியே அமைந்த இப்புதினம் அரசாங்க விளையாட்டுகளால் வாரிசுகள் அலைக்கழிக்கப்படுவதும், மதியுள்ளவன் அரியணையில் அமர வகுக்கும் வியூகங்களும், வெற்றி பெற வேண்டுமானால் எந்தக் கொடும் செயல்களையும் செய்யத் தயங்காகத் திட மனதும் அதற்கான திட்டமிடலையும் விவரிக்கிறது. முடிவில் அனைத்து மனிதர்களும் மண்ணில் தான் விழப்போகிறோம் என்று தெரிந்தாலும் அடுத்தவனை அழித்துத் தன்னை மேலுயர்த்திக் கொள்வதில் போடும் சண்டைகளால் அவர்களுடன் நெறுமுறைகளைப் பின்பற்றி வாழும் மனிதர்களே பெரும் துன்பத்திற்கு ஆளாகுகின்றனர்.
மக்களின் தலைவனாக இருப்பவன் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பக்கம் சாயாமல் பொதுவின் பக்கம் நின்றாலே மக்களின் மன சிம்மாசனத்தில் அமரலாம்.தலைவனின் ஒழுக்கம் தடுமாறும் போது அக்கூட்டுசமூகத்தையே குதறிப் போட்டுவிடுகிறது, அது தான் பல சாம்ராஜ்ஜியங்களின் வீழ்ச்சியை எடுத்துரைக்கிறது.
சாம்ராஜ்ஜியங்களின் வீழ்ச்சியும் எழுச்சியும் வீரத்தால் நிர்மானிக்கப்படுகிறது என்றாலும் அதில் பெண்களின் கண்ணீரே பெரிதும் அடங்கியுள்ளது.
இது ஒரு சரித்திர புனைவு நூல். 918 கி.பி. தொடங்கி, 957 கி.பி. அரிஞ்சய சோழனின் மர்மமான திடீர் மரணம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டுள்ளது. சோழ அரசர் பரந்தகனின் மகன் அரிஞ்சயன், குந்தள இளவரசன் அமோகவர்ஷனுடன் போரிட சென்ற பொழுது மர்மமாக கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் புனையப்பட்ட கதை. நாவலின் தொடக்கத்திலேயே அரிஞ்சயன் என்று அழைக்கப்படும் அரிந்தமன் போருக்கு செல்லும் முன்பாக கொல்லப்படுகிறான். அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஒவ்வொரு கதாபாத்திரங்களை அறிமுகமாகி கதை சூடு பிடிக்கிறது. சோழம், குந்தளம், சாளுக்கியம், முனைப்படி, வேலமுமம், வைத்தும்பம் சாம்ராஜ்யங்கள் இடையே நடக்கும் பல்வேறு அரசியல் சார்ந்த திருமணங்களால் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படுகிறது. குந்தள மன்னன் கோவிந்தன் கொல்லப்படும் இடத்தில் பல திருப்பங்களுடன் கதை மேலும் வேகம் பிடிக்கிறது. பல முடிச்சுகள் அவிழ்கப்பட்டு மீண்டும் அரிஞ்சயன் ஆற்றிரூர் போர்க்கள முகாகாமில் கொலை செய்யப்படுவதில் சேர்க்கிறது. சோழ மன்னன் பரந்தகனின் பிள்ளைகளான ராஜாத்தியன், கண்டராதியன், அரிஞ்சயன், வீரமாதேவி, அனுபமா, குந்தள மன்னன் இந்திரன், அவன் மகன்கள் அமோகவர்ஷன், கோவிந்தன், முனைப்படி மன்னன் ராமதேவன், அவன் மகள் வீரநாராயணி, சகோதரன் ரவிதேஜன், சாளுக்கிய மன்னன் வீமன், அவன் மகள் குந்தவை, வேமுலவாடா மன்னன் நாகநரேந்திரன், அவன் மகள் உஜ்வலா, வைத்தும்ப மன்னன் வைத்தும்பராயன், அவன் மகள் கல்யாணிதேவி, இவர்களை மையமாக வைத்தே இந்த கதை நகர்கிறது.
சோழ வரலாறு புதினமான பொன்னியன் செல்வனில் சுந்தரசோழர் பிள்ளைகள் பற்றிய கதையை போலவே இந்த நூல் பரந்தக சோழனின் பிள்ளைகள் பற்றியது. புனைவு தான் ஆனாலும் வாசித்து முடிக்கும் போது ஒருவித நிறைவு கிடைக்கிறது.
This is my first book from this author. I liked the book. Few morals here and there. The characters are very tightly designed esp Rajadhkesi. It's a great read 👍. Looking forward to reading other books from this author.
King Arinjaya Chola – who was the third son of the famous Chola King Paranthaka 1 – died during the eighth month of his own reign. His death is deemed to be sudden and untimely, but more importantly the “cause” of it is still shrouded in deep mystery, to this day! Hence, based on a series of some relevant “real” historical events that took place prior to King Arinjayan’s death in Chola history, author Kalachakram Narasimha gives us his own opinion on the “probable” cause – which again is, purely circumstantial – of King Arinjaya Chola’s sudden and mysterious death. Though the author’s personal view – and thereby his own conclusion on this matter – is strictly hypothetical in nature, it still remains – if not convincing – a compelling one, nevertheless! Author Kalachakram Narasimha’s deep knowledge of Chola dynastical history, his vivid imagination and narration, coupled with doses of humour along the way, are all highly applaudable. Should prove to be an interesting and engrossing read for fans of “historical fiction”, in general and for fans of Chola Dynastical History, in particular!
Nice historical fiction. A prequel for Ponniyin Selvan which narrates about two generations before sundarachola and finishing with Kundhavai. Overall good narration and storyline.