கல்யாண்ஜி (வண்ணதாசன், சி.கல்யாணசுந்தரம்) (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1946) தமிழின் நவீன கவிஞர், எழுத்தாளர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும், வண்ணதாசன் ( Vannadasan) என்ற பெயரில் புனைவுகளையும் எழுதியவர். கனடா இலக்கியத்தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
மொத்தம் 67 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. நகர வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை miss செய்கிறோமோ அந்த விஷயங்களையெல்லாம் ரசித்து கவிதை எழுதி இருக்கிறார் ஆசிரியர். For ex: அருவியில் குளிப்பது, கரையோரமாக உட்கார்ந்து மீன்களை பார்ப்பது, மரம் விட்டு மரம் தாவும் கிளிகள், சிப்பி பொறுக்கும் சிறுமிகள் மற்றும் பல.
முன்னுரையில் ஆசிரியர் தன்னுடைய கவிதைகளை வேறு இரண்டு கவிஞர்களுடைய கவிதைகளோடு ஒப்பிட்டு தன்னுடைய கவிதைகள் எந்த இடத்தில் இருக்கின்றது என்று யோசிப்பார். அப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது அவர் வீட்டில் ஒரு குறுத் தக்காளிச் செடி வளர்ந்து அதன் இலையில் மிகவும் சிறிதாக மூன்று முட்டைகள் இருக்கும். அதை பார்த்தபிறகு ஆசிரியர் கூறுவதாவது,
நான் தியாகுவுக்கும் ராஜ சுந்தரராஜனுக்கும் இடையில் எங்கு நிற்கிறேன் எனக் கவலைப்படத் தேவையுண்டா? தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது அவரவருக்கு அவரவர் வாழ்வு. அவரவர் இடம், அவரவர் மொழி, அவரவர் சொல். நான் இந்தக் குறுத் தக்காளிச் செடியருகில் இருக்கிறேன். மிகவும் குனிந்து உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரிகிற அல்லது தெரியாமலே போகிற அந்த மூன்று முட்டைகள் போல என் கவிதைகள் இருக்கலாம். இதை யிட்ட பறவையை நான் பார்க்காமல் போயினும், இவை ஒரு அடர் மழைக் காலத்தில் இடப்பட்டன. இதற்குப் பிந்தி ஒரு கடும் பனிக் காலமும் சுடு வேனில் காலமும் வரலாம்.
இந்தத் தருணத்தில் எனக்கு மிகவும் தேவையான அறிவுரையை படித்தது போல ஒரு உணர்வு. திரும்ப திரும்ப மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அவரவர்க்கு அவரவர் வாழ்வு, அவரவர் இடம், அவரவர் மொழி, அவரவர் சொல்.
This entire review has been hidden because of spoilers.
முக்கால்வாசி கவிதை புரிந்தது, புரியாதவை சில.. பிடித்த கவிதை பல நல்ல படிமங்களை உடையது புதிதாக கவிதை படிப்பவரும் வாசிக்கக் கூடியதே வண்ணதாசன் தான் கல்யாண்ஜி என்பவர்