அரசு பல் மருத்துவமனையொன்றின் வாசலில் மிக கோபாவேசத்துடன் மிஞ்சியிருந்த ஒற்றைப்பல் அசைந்தாட புலம்பிக்கொண்டிருந்த அரை மனநிலையிலான ஒரு கிழவனின் சாயலுடன் கோயில் தாஸ். கடந்த காலங்களில் என்னை கருணைமிக்க அன்பினார் அரவணைத்து நம்பிக்கையூட்டிய எண்ணற்ற முகங்களின் கலவையாய் சாரதா லீனா மேரி. இவர்கள்தான் இந்த நாவல்.
சூல் நாவலுடன் 2016 ஆம் ஆண்டின் சுஜாதா விருதை பெற்ற நாவல்... சூல் பிரம்மாண்டமான பதிவு அதற்கு இனையான ஒரு நாவலா என்ற ஆவலுடன் படிக்க தேர்ந்தெடுத்தேன்... கரன் கார்க்கியின் 'கறுப்பர் நகரம்' என்ற நூலை 30 பக்கம் கூட என்னால் தாண்ட இயலவில்லை அதனால் ஒரு எதிர்மறை மனோபாவத்துடன் படிக்க ஆரம்பித்தேன், இரண்டே அமர்வில் படித்து முடித்தேன்.... கோயில்தாஸ், சாரதா மற்றும் குஷ்பு தான் பிரதான கதாபாத்திரம்... எளிமையான கதை ஆனால் அவருடைய narration was out of the world... கதை முன்னும் பின்னுமாக நகர்கிறது, சாரதா கடவுளை பகடி செய்யும் இடமாகட்டும், அவள் அவ்வாறு செய்வதற்கான நியாயமான சூழலும் கதையில் இடம்பெறுகிறது... மாளிகையில் இல்லாத மனிதத்தை ரோட்டோர மறைப்பில் வாழும் மனிதர்களிடம் இருக்கும் என்பதையும், அவர்கள் அன்றாடம் வாழ்வின் பிரச்சினைகளையும் விவாதிக்கிறது... ஏனோ எனக்கு உரைக்கிறது (உங்களுக்கும் உரைக்கும்)... என்னை கவர்ந்த முக்கியமான அம்சம் கதை நெடுகிலும் பயன்படுத்திய வார்த்தைகள் அவ்வளவு அழகு... இவ்வளவு சிறந்த நாவலில் எழுத்து பிழைகள் ஏராளம் (இந்த பதிவில் கூட இருக்கலாம்😋..) படிக்காமல் விட்ட கறுப்பர் நகரம் நாவலை படிக்க வேண்டும்..🙏