நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான ஜி. நாகராஜனின் இலக்கிய ஆளுமையைத் துல்லியமாக அறிய உதவும் தொகுப்பு இது. ‘ஜி நாகராஜன் படைப்புகள்’ (காலச்சுவடு பதிப்பகம், 1997) தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நாளை மற்றுமொரு நாளே’ (நாவல்), ‘குறத்தி முடுக்கு’ (குறுநாவல்), 33 சிறுகதைகள், உரைநடைப் பகுதிகளுடன், மேலும் இரண்டு சிறுகதைகள், மூன்று கவிதகைள், இலக்கிய அனுபவக் கட்டுரை, வாசகர் கடிதங்கள், சு. ரா.வுக்கு நாகராஜன் எழுதிய நான்கு கடிதங்கள் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் (சிறுகதைகள், ஒரு நாவல் மற்றும் குறிப்புகள்) அடங்கிய முழுமையான தொகுப்பு.
ஜி. நாகராஜன் (G. Nagarajan) தமிழ் எழுத்தாளர். நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள் ஆகியோரின் அடித்தள உலகை சித்தரிப்பவை இவருடைய எழுத்துக்கள். மனிதாபிமானநோக்கோ விமர்சனப்பார்வையோ இல்லாமல் அங்கதப்பார்வையுடன் அவ்வுலகை உருவாக்கிக் காட்டுபவை. கட்டற்ற வாழ்க்கைமுறை கொண்டவர் என்பதனாலும் ஒரு தீவிரமான ஆளுமைப்பிம்பம் இவருக்கு உள்ளது.
I cannot unread these stories ever! Genius of G.N. not lies in exploring the beauty of life but making us deep dive in the lives of downtrodden and fringes