நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. அந்த பட்டியலில் ஏடிஎம், வைஃபை, புளூ டூத், சென்சார்கள், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், 3டி, டச் ஸ்கிரீன் என பல விஷயங்கள் உண்டு. நமக்குத் தெரிந்த இந்த விஷயங்களின் உள்ளே நடக்கின்ற தெரியாத விஷயங்களை நமக்கு எளிமையாய் அறிமுகம் செய்து வைக்கிறது இந்த நூல். தினத்தந்தியில் தொடராய் வந்தபோது இலட்சக்கணக்கான வாசகர்களைச் சென்று சேர்ந்த இந்தத் தொடர் இப்போது உங்களுக்காக.