ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம். அதுதான் இந்திய தரிசனம். இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே இவை உள்ளன. வெளிவந்த காலகட்டத்தில் நாளும் பல ஆயிரம்பேர் காத்திருந்து வாசித்தவை இப்பதிவுகள்.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
பயணக்கட்டுரைகள் வகையறாவில் இதுவே எனது முதல் வாசிப்பு. ஜெமோ போன்ற ஆசிரியர்களின் படைப்புகள் என்றாலே சற்று உதறல் எடுக்கும். படித்தால் நமக்கு புரியுமா புரியாதா என்ற அச்ச உணர்வு மேலோங்கி நிற்கும். சமீபத்தில் கிண்டிலில் வெகு குறைவான விலையில் இப்புத்தகத்தை வாங்கினேன். படித்து தான் பார்ப்போம்.. பிடிக்கவில்லை என்றால் நிறுத்தி விடுவோம் என்று தான் ஆரம்பித்தேன்.
தாரமங்கலத்தில் தொடங்கி புத்த கயாவில் முடியும் வரை நாமும் ஜெமோ உடன் பயணிக்கும் உணர்வை தருகிறது. வரலாறு, கோவில்கள் என்று ஆர்வம் இருந்தது என்றால் இப்புத்தகம் இன்னும் இனிக்கும். எத்துணை சிற்பங்கள், கோவில்கள், சமூகங்கள் நம் பரந்த தேசத்தில்.
புத்தகம் குடும்பத்துடன் குதூகலமாக ஒரு பகல் நேரத்தில் ரயில் பயணம் செய்வது போல அலுப்படையாமல் சலிக்காமல் இருக்கிறது. புத்தகம் முடியும் பொழுது இன்னும் வட மேற்கு, வடகோடி மாநிலங்கள் பற்றியும் எழுதியிருக்கலாமோ என்று தோன்றாமல் இல்லை. ஆனால் முன்னுரையிலேயே இந்தியாவை முழுமையாக பத்து நாட்களில் சுற்றி விட முடியாது என்றும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றும் கூறிவிடுவதால் அதை குறையாக சொல்ல முடியாது.
வரலாறு மீதும் பயணங்கள் மீதும் தீராத ஆசை கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய புத்தகம். வரலாறு என்பது கோவில்களில் அதன் கல்வெட்டுகளில் சிற்பங்களில் இருக்கிறது ,அதன் மதிப்பு தெரியாத மூடர்கள் இன்று பல்வேறு கோவில்களும் சிற்பங்களும் சிதைக்கப்பட்டு வருகிறது .இந்த பயணத்தின் வழியாக பல்வேறு மாநிலங்களில் பின்புலத்தையும் நாம் அறியமுடியும் .நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் பொது வெளியில் மலம் கழிப்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது பரவலாக குறைந்து விட்டது. ஆனால் மத்திய பிரதேச உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக சேர்ந்து பேசிக் கொண்டு வெட்ட வெளியில் மலம் கழிக்கிறார்கள் மத்திய பிரதேசத்தில் நிலவும் கொடுமையான வறுமையும் பஞ்சமும் நமக்கு இந்தியாவின் வேறொரு முகத்தை காட்டுகிறது இத்தனைக்கும் மத்திய பிரதேசம் பத்து கிலோமீட்டருக்கு ஒரு ஆறு செழிப்பான ஓடக்கூடிய மாநிலம், விவசாயம் செழித்து இருக்கக்கூடிய மாநிலம் தமிழகத்தில் ஆரம்பித்து புத்தர் ஞானம் பெற்ற இடமான போத் காய வில் முடியும் இந்த சிறிய புத்தகம் உங்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை தரும்.
ஜெயமோகன் அவர்களின் பாணியில் ஒரு பயண அனுபவம் தான் இந்தப் புத்தகம். ஒவ்வொரு இடங்களைக் கடக்கும்போதும் அவற்றின் தற்கால நிலைமை, வரலாற்றுத் தொன்மை பற்றிப் பகிர்ந்திருப்பதெல்லாம் அருமை. ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்பூட்டுவது போல இருந்தாலும் போகப்போக எமக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தி எம்மையும் தன்னுடன் பயணிக்க வைத்து "இன்னும் கொஞ்சத் தூரம் போகலாம்" என்று நாம் நினைக்கும்போது புத்தகம் முடிவடைந்து விடுகிறது. அது தான் ஜெ.மோவின் எழுத்திலுள்ள மஜிக். இதில் அவர் ஒரு இடத்தில் சொல்லி இருப்பது போல 'இந்தியா இன்னமும் பார்க்கப்படாத ஒன்றாகவே எஞ்சுகிறது' என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மையே.
This is about the experiences of the author Mr Jeyamohan of his travel from Tharamangalam to Budha Gaya visiting various temples with his friends in a vehicle. His observations about rich treasure of architectural beauty lying unattended in Andra Pardeshi makes a sad reading. How the food, Dress etc changes distinguishing the people of various places have been brought out. After reading you also feel like going on a trip like this.
ஜெயமோகன்!! நான் வாசிக்க ஆரம்பித்த பொழுது அவரது ஒரு பயண கட்டுரை தான் என்னை வாசிக்க தூண்டியது! இன்று அவரது இந்த 'இந்திய பயணம்' அருமையான ஒரு தொடர் வண்டி போல தான் எனக்கு தோன்றியது!! தமிழ்நாடு முதல் காசி வரை இந்த பயணம். கோவில்கள் பல தர பட்ட சமயங்களை பற்றியது!! பேரரசுகள் அவை தந்த கோவில்கள், கலை , சிற்பம் என்னை மெய்மறக்க செய்தன!! பாட புத்தகம் என் வரலாற்றை இவ்வளவு சுவை ஊட்டியாய் இல்லாமல் போனது!! மீண்டும் வாசிப்பேன் நானும் அங்கே பயணம் போனேன் என்ற நினைவு ஒடையுடன்!!!!!
இந்திய மிக மிக பெரிது . இந்தியா முழுக்க சுத்தி வரவேண்டும் என்ற ஆசை நீண்ட காலமா இருந்துது. இப்போ ஆசைமட்டும் இல்லாம நல்ல நோக்கத்தோட ஒரு பண்பாட்டு ,கலாச்சார சிந்தனையோட பயணமா இருந்த நல்ல இருக்கும்னு பட்டுது மனசுக்கு. நானும் நண்பர் ஒருவரும் பேசும்பொழுது 25வது வயசுல குறைந்த பட்சம் இந்தியாவின் முக்கிய ஸ்தலங்களை யவது பொய் பார்த்திருக்க வேண்டும் என்று.
This book is not only a document on travel. It also says the cultural, historical, political information about the places visited by the author during his travel. The beautifully crafted words gives the feeling of travelling along with the author while reading. Recommend read for a weekend evening.
My First book written by Jeyamohan. Having heard about his writings in various platforms, bought this book based on ratings from goodreads.com. Recommended for Tamil Travelogue readers who are interested in Indian temples.