எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
ஒட்டுமொத்த இந்தியாவையும் கலங்கடித்துக்கொண்டிருக்கிறது வியாபம் புயல். நினைத்துப் பார்க்கமுடியாத இடங்களில் எல்லாம் இந்த ஊழல் ஆக்டோபஸின் கொடூரக் கரங்கள் பரவிப் படர்ந்திருக்கின்றன. வியாபம் ஊழலோடு தொடர்புடையவர்கள் மட்டுமல்ல, அதனை விசாரிக்க முயன்றவர்களும்கூட மர்மமான முறையில் இறந்துபோயிருக்கிறார்கள். வியாபம் ஊழலின் பின்னணி என்ன? இதன் பயனாளிகள் யார் யார்? இதன் ஆணி வேர் எங்குள்ளது? ஏன் இதுவரை வழக்கு விசாரணைகளில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை? அரசியல், மர்மம், மோசடி, மரணம் அனைத்தும் பின்னிப் பிணைந்திருக்கும் வியாபம் ஊழல் பற்றிய சுருக்கமான, பரபரப்பான பின்னணி இந்நூல்.
திறமையைக் கண்டுபிடிக்க வைக்கப்படும் தேர்வில் கூடப் பல கோடிகளை சுருட்டலாம் என்பதை நாட்டிற்குச் சொன்ன மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழலை பற்றிச் சொல்கிறது இப்புத்தகம்.
பல வருடங்களாக அரசு நடத்தும் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் மூலம் தகுதியில்லாதவர்கள் எல்லாம் டாக்டராகி உலாவந்த பிறகே ஊழலின் ஆழம் புரிந்து எதிர்ப்புகள் கிளம்பி அதன் நுனியை தொடுவதற்குள் பல கொலைகளை இயற்கை மரணமாகவும் புதிரான மரணமாகவும் மாற்றியதை தடுக்கமுடியவில்லை.
மருத்துவத் தேர்வுகளில் மட்டுமில்லாமல் அரசாங்கம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தலையிட்டுத் தங்களுக்குப் பணத்தைக் கொடுத்தவர்களுக்கு உழைத்த ஊழல்வாதிகளை அடையாளம் காணப்பட்டாலும் தண்டனைகள் கிடைக்காதது விசாரணையின் மெத்தனங்களைக் கூறுகிறது.