சாகாவரம் நூல், மரணம், வாழ்க்கை, அச்சம், ஆன்மிகம் போன்ற ஆழமான உணர்வுகளைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு முக்கியமான படைப்பு.
தன் நெருங்கிய நண்பர்களின் இழப்பால், மரணத்தின் மீதான கேள்விகளும் அச்சமும் கொண்டு, மரணமில்லா வாழ்க்கையை தேடிய பயணத்தை தொடர்கிறான் கதையின் நாயகன் நசிகேதன். அப்பயணத்தில் சந்திக்கம் மனிதர்களையும், பயணத்தின் இறுதியில் கிடைத்த "வரம்" பற்றிய கற்பனை கதையே சாகாவரம்.
இந்ந நூலின் சிறப்பம்சம், இதுவரை பிறமொழிகளில் மட்டுமே நாம் கண்ட "Magical Realism" கதையம்சம்/வகை(genre) -ல் இந்நூல் அமைந்துள்ளதுதான். மற்றும் "Depression" (மனச்சோர்வு) பற்றி தமிழில் நான் வாசித்த நூல் இதுவே.
மரணம், மரண பயம் என்பது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதி , மற்றும மரண பயம் நம்மை வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விடாது என்பதை நாவல் வலியுறுத்துகிறது.
புத்தகத்திலிருந்து சில வரிகள்:
“முதல் கடிதம், முதல் குழந்தை, முதல் பணி, முதல் பள்ளியைப்போல முதல் மரணமும் மறக்க முடியாதது. வேண்டியவர்களின் மரணம் நமக்கும் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஞாபகங்கள் நம்மைத் தடவும் போதெல் லாம், அது தழும்பாகத் தட்டுப்படுகிறது. மரணம் வருகிற வயதில் வந்தால் யார் கவலைப்படப் போகிறார்கள்."
"இயற்கையின் படைப்பில் தன்னை அசிங்கமாக்கிக் கொண்டவன் மனிதன் மட்டுமே."
"வரவேண்டிய நேரத்தில், வரவேண்டிய வடிவத்தில் வருகின்றன மரணம் திருவிழா போல."
"எல்லோருமே ஒருவகையில் பிச்சைக்காராகளதான், பிச்சை கேட்கிற நபர்கள் மட்டுமே வேறுபடுகிறார்கள்."
இதுபோல முத்துகள் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்துள்ளன.
கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் சாகாவரம்.