தி. மாரிமுத்து என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்றுள்ள இவர் “யூமா வாசுகி” எனும் புனைப்பெயரிலும் எழுதி வருகிறார். “உனக்கும் உலகுக்கும்”, “தோழமை இருள்”, “அமுத பருவம்” எனும் கவிதை நூல்களையும், “உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைப் படைப்பையும், “மோர்னிங் திக்கெட்ஸ்” எனும் ஓவியப் படைப்பையும் வழங்கியிருக்கிறார். இவர் எழுதிய "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. மலையாள எழுத்தாளர் ஓ. வி. விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம் என்ற புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, 2017 ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
கண்ணாடி கல்லறைகள் எனும் ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் த்ரில்லர் பயணங்கள்..... பேராசை- சண்டை-கொலை-பிணம். அப்பிணத்தை மறைப்பதில் நடக்கும் நிகழ்வுகள் என நம்மை நொடிக்கு நொடி பதற வைக்கின்றன.
This entire review has been hidden because of spoilers.