சுமார் 480 ஆண்டுகளுக்கு முன் (அதாவது 16-ம் நூற்றாண்டில்) ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை. சிறு வயதிலேயே காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். விகடமாகப் பேசுவதில் வல்லமை பெற்றான். அதனால் அவன் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான். வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக &#