Jump to ratings and reviews
Rate this book

தாண்டவராயன் கதை

Rate this book
தன் மனைவியின் கண் நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத்த தெரிந்துகொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டவ்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றான், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மயாமாய் மறையச்செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தையையும் கற்றுவைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்

- பின் அட்டை குறிப்பு

952 pages, Unknown Binding

First published December 1, 2008

4 people are currently reading
53 people want to read

About the author

Ba. Venkatesan

10 books20 followers
Ba. Venkatesan (Tamil: பா. வெங்கடேசன்;) (Known as Ba.Ve) is a noted Tamil writer and Literary Critic.

His best-known and critically acclaimed works are Baageerathiyin Mathiyam, Thaandavaraayan Kathai. He currently lives in Hosur, Tamil Nadu.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (72%)
4 stars
3 (27%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Sudeeran Nair.
93 reviews20 followers
August 2, 2020
நூல் விமர்சனம் : தாண்டவராயன் கதை
பாகீரதியின் வாசிப்பிற்குப் பின்னுண்டான உந்துதல் பா.வெங்கடேசனின் மற்றுமுள்ள படைப்புகளையும் வாசித்து விட வேண்டுமென்று ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரின் எந்த படைப்பும் அச்சில் இல்லை என்பதிருந்தாலும் நம்பிக்கை ஒரு பக்கமிருக்க அதன் பலம் என் பக்கம் என்னவோ எப்போதுமே இருக்கிறது. புத்தகத்திற்காய் ஒரு கணிசமான தொகையை செலவழித்தாலும் அதை தேடிப் போய் கண்டடையும் பைத்தியத்தில் நான் இன்னும் சேரவில்லை என்றே கருதுகிறேன். சொல்லி வைத்த புத்தகக் கடையிலிருந்து எனக்கான புத்தகம் காலம் தாழ்த்தாமலே வந்து சேர்ந்ததும் ஒரு கதை தானென்றாலும் அந்த கதை சொல்லலுக்கான தளமிதுவில்லை என்ற எண்ணத்தில் புத்தகத்தின் நேரடி விமர்சனத்திற்கு சென்றுவிட எத்தனிக்கும் மனதில் என்ன எழுதுவது என்ற அச்சத்தோடே தொடங்கும் பாக்கியசாலியாக இருக்கிறேன். படித்த பிடித்த புத்தகத்தை விமர்சனம் செய்யாமல் கடப்பது அப்புத்தகத்தின் மீதான நமது வெளிப்பாடுகளை நம்முள் புதைத்து விடுவது போன்றதாகும்.

பாகீரதியின் மதியத்திற்குப் பின்னானத் தேடலில் எழுத்தாளனின் இந்தக் கதைக்கான ஒன்றிரண்டு விமர்சனங்கள் கண்ணில் தட்டுப்பட அதனை வாசிக்கும் போது அந்த புத்தகம் வெளியிட்ட காலப்பொழுதில் அப்புத்தகம் தானடைய வேண்டிய இடத்தை அடையவில்லை என்பதே இந்த விமர்சனங்களை வாசித்த பின்னான அனுபவமாய் காண நேர்ந்தது. அது என்னவோ இந்த எழுத்தாளனுடையப் படைப்புகளை வைத்திருக்கிறோம் அல்லது படிக்கிறோம் என்று சொல்லும் போதே அதற்குரிய பின்னூட்டங்கள் நம்முள் பிரமிப்பையோ பயத்தையோ செலுத்தி விடுவது வரவேற்பதற்குரிய அம்சமாய் படாமலும் இந்த புத்தகத்தை அந்த அச்சத்தினுள்ளே கடத்தி மறைத்து விடும் போக்கே இந்த புத்தக இடம் பெற வேண்டிய இடத்தை இழந்து விட்ட நம்பிக்கையை என்னுள் கொடுக்கிறது.

புனைவிற்குள் வரலாற்றின் நாயகர்களை நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகளோடு புகுத்தி அந்த கதையை உயிர்பிக்கும் ஆசானாய் மாறுவதே எழுத்தாளனின் திறமாய் இந்தப் புத்ததகத்தில் என்னால் காண முடிகிறது. இத்தனை வரலாற்றுத் தரவுகளையும் இடங்களையும் தன் மனதினுள் கடத்தி அதனை தன்னெழுத்தின் மூலம் படிக்கும் நம்மையும் கொண்டு விடும் போது நிச்சயமாய் பிரமிப்பே மிஞ்சுகிறது.

வரலாறுகள் எப்போதும் இனிமையாக இருப்பதில்லை என்பதில் என்னுள் மாற்றுக்கருத்துகள் பிறந்ததில்லை.கதைக் களம் சொல்லும் விசயம் காலனியாதிக்க சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளோடே ட்தொடங்கும் புதினம் நம்மை கொண்டு போவது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் இங்கிலாந்தில் துவங்கி பிரெஞ்சு புரட்சியினுள்ளே நம்மை கொண்டு சென்று அங்கிருந்து நம்மை ஆளப்போகின்ற ஆங்கில ஆதிக்கத்தின் தொடக்கமான கிழக்கிந்திய கம்பெனி தென்னிந்தியாவில் தன்னாதிக்கத்தை நிலை நிறுத்த முயல வேண்டி திப்பு சூல்தானின் பேசவோ போரிடவோ முயன்ற தருணத்தின் கதையாக மாற்றி நிற்க விடாமால் நீலவேணி என்ற குதிரையின் ரதத்தூடே காலச்சக்கரத்திற்குள் புகுத்தி விடுகிறது. அதன் பின்னான நம்மின் நிலை படிப்பதிலிருந்து வரலாற்றையும் புனைவில் நீளும் கற்பனைகளில் கதை, கதைக்குள் கதைகளாக விரிந்து செல்கிறது.

பரிச்சயப்படாத என்று சொல்லக் கூடிய ஆனால் படிக்க முடிகின்ற ஒரு எழுத்தைக் கொண்டு நம்மில் வியாபிக்கும் எழுத்தாளனை பாராட்ட வேண்டாம் அதற்கு பதில் அந்த எழுத்தை எல்லோரும் வாசிக்கவும் அதை விவாதிக்கவுமான முயற்சிகளை செய்வதில் நானும் முனைகிறேன் என்பதில் எனக்கும் சிறிய மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்கிறேன்.

படிக்கும் புத்தகங்கள் வெறுமனே நம்முள் புகுந்து நம்மை கடந்து விடாமல் சொல்லும் செய்தியையோ அல்லது சொல்ல முற்படுகின்ற வரலாற்றில், நடந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை புனைவின் சாதுர்யத்தில் படிக்கும் மனதின் திடச் சித்தத்தில் நிச்சயம் பதிந்து விடும் கதாப்பாத்திரங்களாக எலினாரும், ட்ரிஸ்ட்ராமும், ஷெல்லியும், கெங்கம்மாவும், விபூதியும், துயிலார் பூசாரியும், சொக்க கௌடவும் , நீலவேணியும், தாண்டவராயனும், கோணய்யனும் இருப்பார்கள்.

இந்த புத்தகம் படித்த முடித்த போது எந்த தாக்கமும் என்னுள் ஏற்படவில்லை என்று சொல்லி விட முடியாமல் கதையில் வரும் நீலவேணியின் பாதைக்கான நீளும் கதைப்பாடலும் ,ஷெல்லியின் கதையும், துயிலார் இனத்தின் அழிப்பும் நாடோடி வாழ்க்கையும் , கிழக்கிந்திய மற்றும் திப்பு சூல்தானின் ஆளுமைக்குள்ளில் மனித வாழ்வியலும் நம்முன் கடந்து போகிறது.

நாவலின் குறை படிக்கும் போது சில இடங்களில் தோன்றிய சலிப்பும் சில நேரம் கதை களத்திலிருந்து கடந்து சென்று விடுகிறதோ என்ற தோணலிருந்தாலும் கடந்து போன களமும் படித்துச் செல்லும் நேரம் கதைக்கான ஒரு அம்சமாய் மாறி போய் விடும் என்பது என் நம்பிக்கை.

சிக்கலான நீண்ட கதையம்சத்தை கொண்ட நாவலை ஒரு முறை வாசித்து விட்டு விமர்சனம் எழுதுவது ஆகச் சிறந்த முறையல்ல காரணம் கதையைப் படிக்கும் மனம் அதன் முடிவை மட்டுமே
மனதில் கொண்டு நகரும் போது விடுபடும் பல நிகழ்வுகளும் அதனுள் இருக்கலாம். நிச்சயம் மீண்டும் படிக்கும் போது நம்முள் வேறு பல சிந்தனைக்குள்ளும் இட்டு செல்லும் என்ற எண்ணவோட்டத்தில் நல்ல விமர்சனத்திற்காய் மீண்டுமொரு முறையோ அல்லது அதற்கு மேலுமோ படிக்க உகந்த இடத்தில் தாண்டவராயன் கதை இருப்பதாகவே உணர்ந்து இது போன்ற பிரமாண்ட கதையைக் கொடுத்த பா.வெங்கடேசனிற்கு எனது மனமார்ந்த நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

குறிப்பு : காலச்சுவட்டில் மறு பதிப்பு வெளிவந்துள்ளது...
Author 2 books16 followers
December 5, 2022
நவீன தமிழ் மொழியின் காவியம் என்று இந்த புத்தகத்தை சொல்லலாம் (இன்னும் ஆசிரியர் வெங்கடேசனின் மற்ற புத்தகங்களை படிக்காமல் சொல்கிறேன் . படித்துவிட்டால் என் முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்பதையும் இங்கே நான் பதிவு செய்து கொள்கிறேன் . ) சிறு குறு நாவல்கள் இளைஞர்களை வாசிப்பில் இழுக்க இன்னும் அதிகம் வேண்டும் என்று முழக்கங்கள் இருக்கும் இந்த நேரத்தில் பெருநாவல்களான காவியங்களின் மதிப்பு என்பது தனி தான் என்று நிரூபிக்கும் பெருங்காப்பியம் இது . சில புத்தகங்கள் நம் கையை பிடித்து அந்த கதையோட்டத்திற்குள் இழுத்து செல்லும் , சில கதைகளை அந்த கதாசிரியர் நம் அருகில் உட்கார்ந்து நமக்கு பொறுமையாக எடுத்துரைப்பார் , சிலக்கதைகள் நம் உணர்ச்சிகளை உசுப்பேற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும் . இந்த தாண்டவராயன் கதையை பொறுத்தவரை ஆசிரியர் இது தான் தலைப்பு உள்ளே என்ன இருக்கிறது நீந்தி பார்த்துக்கொள் என்று நம்மை தள்ளிவிட்டு விட்டு அவர் கிளம்பிவிடுவார் . கதையில் மூழ்கி கதையோட்டத்தில் சுழன்று முத்து எடுக்கிறோமோ இல்லையோ என்பதை தாண்டி இந்த கதை நம்மை இழுத்து செல்லும் வேகமும் அதனுடன் பயணிக்கும் அந்த பயணமுமே வாசகனுக்கு ஒரு அற்புதமான அனுபவம் என்றே கூறவேண்டும் . கற்பனைக்கடல் என்கிற சொல்லிற்கு இந்த நாவல் கொடுத்திருக்கும் மரியாதையே சமீபகால இலக்கிய நாவல் எதுவுமே வழங்கவில்லை என்று சொன்னால் மிகையாகாது . பலவருட வாசகனாக இருக்கும் ���ருவன் ஒரு புத்தகத்தை படிக்கும் போது ஒரு வரி பிடித்து போய் அந்த வரியிலிருந்து அவன் கற்பனைக்கு உயிர்கொடுத்து சின்னதாய் ஒரு கதையை அவன் மனதில் உருவாக்கி யாருக்கும் தெரியாமல் தன் திறமையை நினைத்து அகமகிழ்வான் . அந்த சிறு சந்தோசத்தை கூட ஆசிரியர் இந்த புத்தகத்தை படிக்கும் வாசகனுக்கு கொடுக்காமல் எல்லாவற்றையும் கற்பனை செய்து முழுமைப்படுத்தியிருக்கிறார் . தமிழில் தன்னை ஒரு வாசகனாக நினைத்து கொள்ளும் அத்தனை பேரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு கற்பனை களஞ்சியம் இந்த புத்தகம் . எல்லாருக்கும் இதை நான் பரிந்துரைத்தாலும் , வாசிப்பை வேட்கையாய் கொண்டவர்களால் மட்டுமே இதை முடிக்க முடியும் என்கிற ஒரு எச்சரிக்கையையும் நான் செய்து விடுகிறேன் .
Profile Image for Krishnamurthy  N.
9 reviews
February 26, 2025
தமிழ் மக்கள் கொண்டாடவேண்டிய நாவல். இது மொழியின் பெருங்கடல்
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.