Jump to ratings and reviews
Rate this book

ரத்த உறவு

Rate this book
Yuma Vasuki’s Blood Ties is a harrowing tale of domestic violence and terror. Set in a small town in rural Tamil Nadu, it deals with a joint family of three brothers sternly presided over by their widowed mother. Intertwined with graphic accounts of violence are scenes of everyday life of the children of the novel, made bearable by the presence of mind and calm of the eldest of them, a girl.

282 pages, Paperback

First published April 30, 2008

5 people are currently reading
107 people want to read

About the author

யூமா வாசுகி

40 books12 followers
தி. மாரிமுத்து என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்றுள்ள இவர் “யூமா வாசுகி” எனும் புனைப்பெயரிலும் எழுதி வருகிறார். “உனக்கும் உலகுக்கும்”, “தோழமை இருள்”, “அமுத பருவம்” எனும் கவிதை நூல்களையும், “உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைப் படைப்பையும், “மோர்னிங் திக்கெட்ஸ்” எனும் ஓவியப் படைப்பையும் வழங்கியிருக்கிறார். இவர் எழுதிய "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. மலையாள எழுத்தாளர் ஓ. வி. விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம் என்ற புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, 2017 ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (18%)
4 stars
7 (63%)
3 stars
2 (18%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
2,121 reviews1,107 followers
November 16, 2017
குடும்ப வன்முறைகள் மனித மனங்களை வலிக் கொள்ளச் செய்து அதற்கென எந்த எல்லையிலும் அடங்குவதில்லை, அடக்குமுறையை மீறி எழுந்தாலும் அவர்களின் பலவீனங்களால் தகர்த்தப்பட்டு மீண்டும் மீண்டும் வன்முறையின் சுவடுகளைத் தாங்கச் செய்கின்றனர்.

மகனின் இறப்பில் கூட அவனின் இழப்பை பெரிதுபடுத்தாமல் தொலைந்து போன பணமுடிப்புக்கு புலம்பும் தாய்.

எவரை பற்றியும் கவலைப்படாமல் அனைவரின் முன்பும் கணவனை அடித்துத் துவைக்கும் ஆங்கார மனைவி.

உடம்பில் ஓர் இடத்தையும் விட்டு வைக்காமல் இரத்தகளறியாக்கும் கணவனிடமிருந்து விடுபடாமல் அவனின் இழப்பையும் தாங்க முடியாமல் துடிக்கும் அன்பு மனைவி.
பல முறை முகத்தில் கொத்தாகச் சளியை துப்பும் தகப்பனை வெறுக்காமல் அதைத் துடைத்துவிட்டு அவனிடத்தில் அன்பு செலுத்தும் மகள், வயிற்றுப்பாட்டுக்கு கூடப் பணம் கொடுக்காமல் குடித்து விழுந்து கிடப்பவனை வீட்டுக்கு அழைத்து வந்து சுத்தப்படுத்தும் தேவதைக்கு அவனால் உண்டாகும் அவமானங்களாலும் அடிகளாலும் உண்டான வலியை புறந்தள்ள வைக்கிறது.

அன்பு என்ற வார்த்தைக்குள் இருக்கும் அர்த்தத்தை உணராத பெரியவர்களின் உலகில் இருக்கும் சிறுவர்கள் அவர்களால் படும் வலிகளும் அவமானங்களும் பால்ய பருவத்தை இழக்காமல் அனைத்தையும் தாங்கிக் கொண்டு தங்கள் உலகில் மகழ்ச்சியோடு வாழ்கின்றனர்.

கொடூர மனங்களைக் கொண்ட வீட்டில் இருக்கும் சிறுவன் மாரி மூலம் அங்கே இருப்பவர்களின் குணங்கள் கதையாக விரிகிறது.

மூன்று பிள்ளைகளைப் பெற்றாலும் பணத்தின் மேல் மட்டுமே பாசம் காட்டும் பாட்டி, பேரன் பேத்தி என்று ஒருவருக்கும் தன் அன்பின் வெளிப்பாடு என்ன என்பதைக் காட்டாமல் மூர்க்கமாகவும் ,வன்முறைகளைக் கொண்டே அவர்களை நெருங்குகிறார். என்றோ ஒரு நாள் தன் கணவனை இரண்டாம் மருமகளான ரமணியின் அண்ணன் வாய்த்தகராறில் கட்டிப் போட்டதால் பழிவாங்கும் வெறியுடன் மகனை உசுப்பேற்றி குடும்ப வன்முறைக்கு ஓர் அழகிய கூட்டையே பலியாக்குகிறார்.

குடிகார கணவனிடமிருந்து தன்னையும் குழந்தைகளையும் பாதுகாக்க போராடி ஓய்ந்து போகும் ரமணியின் உடலில் அடிபடாத பாகம் என்று எதுவுமில்லை,உடைபடாத மண்டையும் இல்லை.அவ்வளவு வலிகளையும் தாங்கிக் கொண்டு அடிக்கடி அப்பா வீட்டில் போய்க் குணமாகி திரும்பவும் உதைப்பட மாமியார் வீட்டுக்கு வந்து சேர்கிறாள்.

குடிப்பழக்கத்தால் உடல்நிலை சீர்க்கெட்ட தினகரனை தாயாய் இருந்து அரவணைக்கும் அவரின் மகள் வாசுகியிடம் கூட மூர்க்கத்தையே காட்டுகிறான் இறுதி வரை தான் செய்த தவறை உணராமலே மறைந்தும் போகிறான்.

தினகரனின் அண்ணா இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வந்த பிறகு எந்நேரமும் குடியில் இருப்பதால் எதிர்காலப் பயங்கொள்ளும் மனைவி அவரின் மீது தாக்குதலை உண்டாக்குகிறாள் அருகில் எவர் இருந்தாலும் கவனத்தில் கொள்ளாமல். தன் சுயமரியாதை இழந்து கௌரவமும் குலைந்து போனதால் தற்கொலைச் செய்து கொள்கிறார்.

எந்தக் கெட்டப்பழக்கத்திலும் தன்னை ஒப்புக்கொடுக்காமல் பணத்தைச் சேமிப்பதிலே கவனம் செலுத்தும் தினகரனின் தம்பி,அண்ணன் இறந்த பிறகு அவன் தன்னிடம் வாங்கிய கடனுக்காக அவனின் பங்காக இருக்கும் வீட்டை பிடுங்கிக் கொண்டு நிராதரவாக இருப்பவர்களை எந்தச் சுணக்கமும் இல்லாமல் வெளியேற்றுகிறான்.

மனதில் ஈரமில்லாதவர்களே என்றாலும் தங்களின் குடும்பம் என்று அவர்கள் செய்யும் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டு அவர்களின்பால் அன்புச் செலுத்தும் வாசுகி தனியொருப்பிறவி..

தினகரனின் இழப்பு அடைத்துவைத்த கூண்டிலிருந்து தப்பிக்க வைக்கிறது.நிறுத்தி வைத்திருந்த வாசுகியின் படிப்பு தொடர்கிறது.அவளின் இரு தம்பிகளும் தங்கள் பால்ய பருவத்தைத் தொலைக்காமல் அதே விளையாட்டு குறும்புடன் வாழத் தடையில்லாமல் நாட்கள் நகர்கின்றன புது இடத்தில்.எந்த நேரத்தில் தன் உடலின் மீது வன்முறை நிகழுமோ என்ற பயம் ரமணியை விட்டு நீங்குகிறது ஆனால் உடல்நிலை சரியில்லாத முதல் மகனுக்குச் சிகிச்சை அளிக்காமல் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட கணவனால் இறந்து போன தலைமகனின் இழப்பு வடுவாக ரமணியின் மனதில் பதிந்துகிடக்கிறது.

Profile Image for Swarna Deepika.
21 reviews31 followers
December 26, 2022
It's like watching a dark (triggering domestic violence scenes are present throughout) but sometimes funny, sometimes emotional Tamil movie set in the 60s.
Profile Image for Anshuman Sinha.
14 reviews
March 5, 2019
Morbid as most truths are, the violence is graphically detailed and enough to freeze ones blood...This is where the feminists need to go to work, not whining in air-conditioned studios and bollywood platforms, but that may be too much hard work for a third wave feminist.
1 review2 followers
Read
June 5, 2021
pdf
This entire review has been hidden because of spoilers.
1 review1 follower
June 6, 2021
Super
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.