நாம் படித்த நாவலை படமாக்கும்போது நாவாலோடு ஓப்பிடு செய்ய தோன்றுவதுபோல படமாக பார்த்துவிட்டு நாவலை படிக்கும்போது படத்தின் நடிகர்கள்,கதை களனே நாவலை வாசிக்கும்போதும் நினைவுக்கு வருகிறது.
தன் நிலத்தை விட்டுக்கொடுக்காத பணத்திற்கும், அதிகாரத்திற்கும் பணியாத ஒரு குடும்பம் அவர்களின் உறவுகள், சக மணிதர்கள் அவர்களின் வாழ்க்கை , ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அளவற்ற அன்பு , கஷ்டத்திலும் அவர்கள் இழக்காத நேர்மை , அவர்களின் இயல்புகள் ஆகியவற்றை வைத்து ஓரு நல்ல கிராமத்து கதையை அல்லது அனுபவத்தை தந்திருக்கிறார் பூமணி அவர்கள்.
அண்ணனின் கொலைக்கு பழிவாங்க கையை வெட்ட முயற்சித்து கொலையில் முடிய சிதம்பரமும் அவனது அய்யாவும் காடு , மலை,வரப்பு என்று அலைந்து இறதியில் சரணடைய முடிவு செய்வதே கதை , வடக்கூரானும் , ஜின்னிங் பேக்டரி முதலாளியும் கொலைகள் செய்தாலும் தைரியமாக வெளியில் திரிய முடிகிறது ஆனால் எளியவர்களுக்கு அது ஆகாத காரியம். சட்டமும் , போலிஸூம் பணம் உள்ளவர்களுக்குதான் என்பதை காட்சிகள் மூலமாக புரியவைக்கிறார் பூமணி.
அக்காலத்தில் கிராமங்களில் நிலக்கிழார்கள் எளிய மணிதர்கள் மீது காட்டிய அதிகாரமாக , பணக்காரர்கள் ஏழைகள் மீது காட்டும் ஆணவமாக, மேல்சாதிகாரர்கள் கீழ் சாதிகாரர்களிடம் காட்டும் அடக்குமுறையாக வடக்கூரானின் செயலை புரிந்துகொள்ள முடிகிறது
கதையின் வழியே நாமும் அவர்களோடு காடுகளில் பயணம் செய்கிறோம் , உணவு தயாரித்து உண்கிறோம் , கொலைக்கான அவர்கள் சொல்லும் நியாயத்தை கேட்கிறோம், இறந்துபோன சிதம்பரத்தின் அண்ணன்கிற்காக வருந்துகிறோம், வடக்கூரான் மீது கோபம் கொள்கிறோம் , கோர்ட்டில் ஆஜராக அவர்களை பஸ் ஏற்றி விடுகிறோம்.
படத்திற்காக நிறைய மாறுதல்கள் செய்து திரைகதையாக்கிருக்கிறார் வெற்றிமாறன் இரண்டையும் ஒப்பிடாமல் படித்தால், பார்த்தால் நாவல், படம் இரண்டுமே தரமான படைப்புதான்.