சூத முனிவரான சௌதி, மஹாபாரதம் ஒரு லட்சம் ஸ்லோகம் கொண்ட நூலாகும் எனச் சொன்னாலும், ஆதிபர்வத்தில், முதல் உபபர்வமான அனுக்கிரமாணிகத்தின், 101ம் சுலோகம், "உண்மையாக வியாசர் முதலில் 24,000 செய்யுள்களில் தனிபட்ட பகுதிகளை கொண்ட பாரதத் தொகுப்பையே செய்தார்; அவ்வளவு மட்டுமே கல்விமான்களால் பாரதம் என்றழைக்கப்படுகிறது" என்று சொல்கிறது. மேலும், ஆதிபர்வம் 1:20ல், "இந்த வரலாறு "ஜெயம்" என்று அழைக்கப்படுகிறது" என்றும் ஆதிபர்வம் 2:390ல் "துவைபாயனரின் உதடுகளால் சொல்லப்பட்ட இந்தப் பாரதம் இணையற்றதாகும்" என்றும் சொல்லப்படுகிறது. வியாசரின் உதடுகளால் சொல்லப்பட்ட அந்த 24,000 சுலோகங்கள் எவையாக இருக்க முடியும்? நிச்சயம் அவை முழுமஹாபாரதத்திற்குள் கலந்தே இருக்கும்.