இயற்கையும் இறையும் ஒன்றென்பதை உணர்த்துவதே நம் மரபு. இயற்கையை போற்றி அதன்வழி வாழும் வாழ்க்கை ஒன்றே அனைவருக்கும் பயன் தரக்கூடியது. அண்டமே பிண்டம் என்பதற்கிணங்க உடலையும் இவ்வுலகையும் இணைத்து ஆசான் செந்தமிழன் கற்றுத்தரும் பாடம் அனைவருக்குமானது. நாம் உண்ண வேண்டிய உணவுகளை எவ்வாறு தெரிந்து கொள்வது? அதன் உற்பத்தியின் பின்னணி என்ன? உணவையே மருந்தாக்கும் நம் மரபு வழி எத்தகையது? நிறுவனங்களின் சர்வாதிகார ஆட்சியில் நம்மை சுற்றி நடப்பவை என்ன? மருந்துகள் மற்றும் வேதிப்பொருட்களின் விளைவுகள் என்ன? என அனைத்தையும் தெளிவாக விளக்குகிறார். இன்றைய காலத்தில் சகலரும் படிக்கவேண்டிய அவசியமான புத்தகம். இயற்கையோடு ஒன்றித்து மருந்துகளற்ற மகிழ்வான வாழ்க்கைக்கு மரபுவழிக்கு திரும்புவது ஒன்றே சிறந்த தீர்வு. • “இயற்கையைச் சீரழித்து வளர்ச்சி காணுதல் என்பதன் உண்மையான பொருள், மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதுதான். ஏனெனில், மனிதர்களும் இயற்கையின் அங்கங்கள்தான். இயற்கை வேறு, மனிதர் வேறு என்ற மயக்கத்தை நவீன அறிவியல் நிலைநாட்டியுள்ளது.”
Great Book! Must read, if you love nature. We came to know some basic things like how to take food, how to treat nature, how we are affected by the current food culture, how we are distrubing the nature?.
நன்று. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். நன்று. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். நன்று. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.