D. Selvaraj (Tamil: டி. செல்வராஜ்; 14 January 1938 – 20 December 2019) was an Indian writer who wrote novels, short stories, and plays in the Tamil language. A lawyer by profession, he was involved in various Communist and left-leaning writers' organisations such as the Democratic Writers Association of India and the Tamil Nadu Progressive Writers Association (TNPWA), of which he was an executive committee member. He received the Tamil Nadu Government's literary award for the best novel of 2011 for his work on tannery workers of Southern Tamil Nadu titled Thol. He did the field work for Thol for a decade before writing it. The novel was awarded the Sahitya Akademi award for Tamil in 2012.
First: It is a satire on counterfeit gurus. Tamil Nadu in particular and India in general had/have this menace - the mushrooming of many fake religious figures who claim themselves to be enlightened gurus. To prove their claim many indulged/indulge in fraudulent activities - creation of miracle narratives associated with that guru or his activities, for example. People, both the illiterate and educated, are also gullible who fall easily into these tricks. Such people are parodied in this short novella.
Second: It is a satire on people who claim themselves to be of noble race.
கதையின் போக்கும் கதாபாத்திரத்தின் தன்மைகளுமே அக்கதை எவ்வகையில் சொல்லப்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.ஒரு மனிதனின் வீழ்ச்சியை விவரிக்க உணர்வுபூர்வமாக அமைய வேண்டும் என்றால் அவனின் வெற்றியில் இருந்து தொடங்கப்பட வேண்டும்.பகடியாக ஒருவனின் வீழ்ச்சியைச் சொல்லப்படும் போது அவனை விட அவனைச் சுற்றியமைக்கப்படும் சூழலே முக்கியக் கதாபாத்திரமாக உருமாறுகிறது.
சிருங்காரபுரி ஜமீனுக்கு வயதான பிறகு தான் தனக்கென ஒரு வாரிசு வேண்டும் என்ற ஞானோதயம் பிறக்கிறது.அதுவரை மனம் போன போக்கில் கூடி விளையாடிய பெண்களையெல்லாம் விட்டு விட்டு இளம்வயது பெண்ணை மணந்து கொண்டு தன் குறிக்கோளில் வெற்றியும் பெறுகிறார்.
குழந்தை கருப்புத்துரை பிறந்த நேரம் தந்தைக்குப் போதாகாலம் என்ற கணிப்பு ஜமீனை வதைக்க அந்தத் துக்கத்திலே நாட்களைக் கடத்துகிறார்.சொன்ன நாட்கள் கடந்து சென்ற பிறகு தான் உயிருடன் இருப்பதால் வாக்கு சொன்னவனுக்குத் தண்டனை தர ஏற்பாடு செய்பவரை மேலும் வதைக்கப் பிறந்த மகன் அவனுக்குச் சொந்தமில்லை என்று சொன்னதுடன் ஊரில் வண்ணானனாக இருந்து இறந்து போனவனைக் கைகாட்டு தான் தப்பித்துப் போகிறான் வாக்கு சொன்ன வள்ளுவன்.
அவமானத்தால் ஜமீன் காணாமல் போக,கருப்புத்துரையைப் பெற்றவளும் தனக்குக் களங்கம் ஏற்பட்டது என்று தற்கொலை செய்து கொள்வதால் பிறந்த சிசு வண்ணானின் மனைவியான ஈனப்பேச்சியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
கருப்புத்துரை ஜமீன் வாரிசு என்று சொல்லி வளர்க்கப்பட்டதால் எந்நேரமும் கனவிலே சஞ்சாரம் ஆகுகிறான் மக்களை ஆள்வது போல, சுதந்திரத்திற்குப் பிறகு ஜமீன் ஆட்சி முடிவுக்கு வர அந்த ஊரில் வட்டிக்குப் பணத்தைக் கொடுக்கும் சித்திரபுத்திரன் செட்டியாரும்,கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் அய்யண அம்பலமும் முக்கிய மனிதர்களாகின்றனர்.
துணிகளைத் துவைப்பது,கனவில் வாழ்வது என்ற இருவேலைகளில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் கருப்புத்துரை அவ்வப்போது ஈனப்பேச்சியிடம் திட்டும் அடியும் வாங்கிக் கொண்டு எதைப் பற்றியும் விவரம் இல்லாமல் தன் போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பவனை வாழாவெட்டியாக வீட்டில் இருக்கும் சித்திரபுத்திரன் செட்டியாரின் மகள் அவனை வசப்படுத்தும் போது திருட்டுப் பட்டம் சுமத்தி ஐந்து வருட தண்டனையில் கருப்புத்துரையை ஜெயிலில் அடைத்த பிறகே செட்டியார் ஆசுவாசம் கொள்கிறார்.
தண்டனைக்காலம் முடிந்து பரதேசியாக ஊருக்கு வரும் கருப்புத்துரையை ஒருவருக்கும் அடையாளம் தெரியாமல் போக, அவன் வந்த நேரம் பஞ்சத்தில் ஆட்கொண்ட அவ்வூரின் நிலத்தில் மழைத்துளிகள் விழுந்து மீண்டும் செழிப்புற்றதால் மெய்ஞ்ஞானச் சித்தர் சுவாமிகளாகக் கருப்புத்துரை கொண்டாடப்படுகிறான்.இது எதையும் அறியாமல் பசிக்கு உணவு,தூங்க ஓர் இடம்,கனவில் உலாவருதல் என்று தன்போக்கில் இருப்பவனின் மேல் கொலைப்பழி விழுகிறது.
மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தைக் கறக்கும் செட்டியாரிடம் இருக்கும் பத்திரங்களையும்,பணத்தையும் களவாடியது மட்டுமில்லாமல் அவரின் மகளையும் கொலை செய்துவிடுகிறது ஒரு புரட்சிகும்பல்,அதன் பழி மெய்ஞ்ஞானச் சித்தராகக் கொண்டாடப்படும் கருப்புத்துரை மீது விழுகிறது. விசாரணையில் அவனின் பூர்வீகம் அறியப்பட்டு மரணத் தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது.
தனக்கு ஏன் இதெல்லாம் நடக்கிறது என்ற விவரம் கூட அறிந்து கொள்ள முடியாமல் தூக்குக் கயிற்றில் தன் இறுதிப் பயணத்தைத் துவக்குகிறான் கருப்புத்துரை.