சூழ்நிலைகளே மனிதனை ஆட்டுவிக்கும் போது இன்றைய தவறு நாளை நல்லது என்று என்று ஏற்றுக் கொள்வதில் தவறில்லை...
தான் வளர்ந்த முறையால் பெண்களையே மதிக்காத விஜயனும்,எதை சொன்னாலும் நம்பி பதட்டத்தில் யோசிக்கும் திறனை இழந்து வார்த்தைகளை அதிகம் தவற விடும் உதயாவும் மோசமான சூழலில் முதலில் அறிமுகமானதால் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.
உதயாவை பிடித்துப் போக எல்லாவகையிலும் அவளுக்கு நெருக்கடி கொடுத்துத் திருமணம் செய்து அவளை அடித்து நொறுக்குகிறான்.எவ்வளவு அடி வாங்கினாலும் அவனை விட்டுப் போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவளை வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான்.
தந்தை இரண்டாவது திருமணம் செய்ததால் அவர் குடும்பத்தையே வெறுத்து ஒதுக்கிய விஜயனுக்குக் காலம் கடந்து உண்மைகள் தெரியவருகிறது அவன் தாய் தன்னைப் பெற்றெடுத்த பிறகு வேறு ஒருவனோடு சென்றுவிட்டாள் என்று...
உடலாலும் மனதாலும் விஜயனிடம் அடி வாங்கி வாங்கியே துவண்டு போய் இருப்பவள் மாமனார் வீட்டில் தங்கி தன்னை ஒருவாராகத் தேற்றிக் கொள்ள இருவருக்கும் இடையில் இருந்த பிரிவும் சில சம்பவங்களும் விஜயனை முழுதாக மாற்றி உதயாவை தன் ‘உயிராக’ ஏற்றுக்கொள்ள வைக்கிறது...