ஆக்கும் சக்தி எல்லாமே அழிக்கவும் வல்லவைதான். கண்டுபிடித்த விஞ்ஞானியைவிட உபயோகிக்கும் தீவிரவாதிக்கு அழிக்கும் திறன் அதிகமாகத் தெரியும். தீவிரவாதிக்குத் தெரியாத விஷயங்களும் தெரிந்திருந்தால்தான் காவல்படைகள் தன் வேலையைச் செய்ய முடியும்.
அமெரிக்காவின் ஒரு மூலையில் தன்பாட்டுக்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானியை ஏன் ஒரு அரேபிய எண்ணெய்க் கிணற்றுக்குக் கடத்த வேண்டும்? இங்கிலாந்து நடிகையுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பாலிவுட் இயக்குநரைக் காப்பாற்ற ஏன் இண்டர்போல் ஆர்வம் காட்டவேண்டும்? வேலையை விட்டு நீக்கப்பட்ட தொழிற்சாலை செக்யூரிட்டி ஆஃபீஸரை மீண்டும் கூட்டிவர ஏன் எஃப் பி ஐ உயிரை விட வேண்டும்?