Jump to ratings and reviews
Rate this book

தூவானம்

Rate this book

112 pages, Paperback

First published January 1, 1990

15 people want to read

About the author

A. Madhavan

8 books5 followers
A. Madhavan (ஆ. மாதவன்) was a Tamil writer born and raised in Thiruvananthapuram, Kerala. He was one of the pioneers of realist writing in modern Tamil literature. He has written short stories, novels, essays, and translations and has edited magazines. Furthermore, he was acclaimed by readers and critics alike as the storyteller of the market street, for bringing everyday events of the bazaar he lived in to his literary work.

He was the recipient of the 2016 Sahitya Academy Award for his collection of articles titled Illakkiya Chuvadukal (Literary Traces).

Selected works
Punalum Manalum (On a River’s Bank)
Krishna Parunthu (Brahmini Kite)
Thoovaanam (Drizzle)
Kaalai (Bull)
Ettavathu Naal (Eighth Day)

Translations from Malayalam:
Malayatoor Ramakrishnan’s Yakshi (A Mythical Being)
P.K. Balakrishnan’s Ini Gnan Urangatte (And Now, Let Me sleep)
Karoor Nilakantapillai’s Sammaanam (Reward)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (27%)
4 stars
8 (72%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
2,121 reviews1,108 followers
January 2, 2018
மனிதனின் அந்தரங்கம் வேறு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் காட்டும் காட்சிகள் வேறு,ஒன்றை ஒன்று தொடாதவாறு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளச் செய்யும் மெத்தனங்கள் என்றோ ஒரு நாள் தோல்வியில் முடிந்து அந்தரங்கத்தை வெளியுலகம் காணும் போது உண்டாகும் தவிப்பால் எடுக்கும் முயற்சிகளில் உணர்ச்சிகரமாகவே அமையும்.

இலக்கியத்தால் நட்பு இழையை அமைத்துக் கொண்ட வேணுவும் நாயகமும் பேசி பேசியே தங்களின் அறிவை மற்றவர்களுக்கு உணர்த்தி அவர்களின் மனதில் உயரிய இடத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இருவருக்கும் இடையில் புத்தக வாசிப்பு மட்டுமே ஒற்றுமையாக இருக்க மற்ற அனைத்திலும் வேறுபட்டே இருக்கின்றனர்.

வேணுவின் உள்மனகிடங்கை சொல்லாமலே புரிந்து கொள்ளும் நாயகம் அவனின் தனிப்பட்ட வாழ்வை பற்றி எந்த வித கருத்துக்களும் கூறாமல் இருப்பதே இருவருக்குள் எந்த வித சச்சரவு எழாமல் இருக்க,நாயகத்தின் குணத்தைத் தான் எழுதும் கதையில் வேறு சாயலில் வேணு கொண்டுவந்தது இருவருக்கும் கருத்துவேறுபாட்டைக் கிளப்பிவிடுகிறது.

வேணுவின் அந்தரங்க நினைவு சூழல் நாயகம் பற்றிய உண்மைகள் முழுவதும் முன்பே தெரிந்திருந்தால் அவன் எடுத்திருக்கும் முடிவால் நாயகத்தின் வாழ்வு வேறுவகையில் திசைமாறியிருக்கும்.

அறிவாளியாகத் தன்னைச் சமூகத்தில் காட்டிய நாயகத்தின் தனிப்பட்ட வாழ்வு தோல்விகளாலே இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வாழ்ந்தவனுக்கு மரணம் ஒரு விடுதலையளிக்கிறது.

தோற்றவனின் முடிவு உணர்வுபூர்வமாக எவரோ ஒருவரை பாதித்துக் கொண்டே இருக்கும் ...
Profile Image for Gowri Shankar.
13 reviews
April 5, 2020
ஆ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து நாவல் படித்த போதே ஒரு மனிதனின் உள்மன ரகசியங்களை, மாற்றங்களை, சறுக்கல்களை இந்த அளவிற்கு படம் பிடித்து காட்ட முடியுமா என்று தோன்றியது. இந்த தூவானம் நாவலில் அந்தரங்க ரகசியங்களை படம்பிடித்துள்ளார். என்னதான் ஒரு மனிதன் வெளிப்படையான ஆளாக தன்னைக் காட்டிக்கொண்டாலும் அவனுக்கென்று சில அந்தரங்க ரகசியங்கள் இருக்கும்.. சிலருக்கு நினைவுகளாக மட்டும், சிலருக்கு வாழ்வையே வழிநடத்தும் / தடம் மாற்றும் பூதாகாரமாய். வேணு. நாயகம் என்ற இரு இலக்கிய நண்பரகளின் உரையாடலில் தான் நாவல் நகர்கிறது. பெரும்பாலும் இலக்கியம் குறித்த உரையாடல்களாகவும் சில நேரங்களில் தனி மனித உறவுகள், உணர்வுகள், கம்யூனிசம் என்று தொட்டு செல்கிறது. நீண்டதாக இருந்தாலும் அலுப்பு தட்டாத சுவாரசியமான உரையாடல்கள். இறுதி அத்தியாயங்களில் நாயகத்தின் தனிப்பட்ட வாழ்க்கை விரிந்து, இருவரின் அந்தரங்க ரகசியங்களும் விரிகிறது. மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வரையில், மனதில் இருக்கும் உணர்ச்சிகளில் நன்மை என்ன? தீமை என்ன? சரி, சரியில்லை என்று கூற நாம் யார்? நாவல் முடியும்பொழுது இரு இலக்கிய ரசிகர்கள் குறித்த நாவல் என்பதையும் மீறி இறுதி சில பக்கங்களில் வரும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தே அவர்களை எடை போட வைக்கிறது. நாவலின் இறுதியில் வேணுவிற்கு இருந்த மனநிலை தான் நாவல் முடித்த போது எனக்கும் இருந்தது. அனைவருக்கும் பிடிக்குமா என்பதை மீறி என்னளவில் மிகவும் திருப்தி அளித்த நாவல்.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.