கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.
Charu Nivedita (born 18 December 1953) is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.
நம் சமூகத்தில் நிகழும் அநேக குற்றங்களுக்கு காமம் பிரதான காரணமாக இருக்க, பாலியல் சார்ந்த உரையாடல்களின் முக்கியத்தை, பாலியல் பற்றிய புரிதல்களில் நம் சமூகத்துக்கு இருக்கும் போதாமையை உணர்த்தும் முக்கியமான புத்தகம். சாரு-நளினி உரையாடல்கள், ஆண்-பெண் சமத்துவம், பாலியல் கல்வியின் அவசியம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் தேவைகளில் உள்ள வேறுபாடுகள், அதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை, அவர்கள் நம் சமூகத்தில் நடத்தப்படும் விதம், இந்த சமூகத்தில் அவர்களின் தேவை என பல தளங்களில் விரிகிறது.
Charu, once again proved, how important he is to our society. பிற்சேர்க்கையில், சாரு பாலியல் கல்வி பற்றிய தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. அருள் எழிலனுக்கும் வாழ்த்துக்கள்.
Note to Publishers:
I had read this book via Kindle. There are quite a few spelling mistakes and certain words are unreadable. Hope this will be taken care of.
பாலியலைப் பற்றியும் பாலியல் கல்வியைப் பற்றி பாலியல் புரிதலை பற்றி விவாதிக்க வேண்டும் பாலியல் என்ற சொல்லுக்கு கடுமையான வார்த்தையாக போய்விட்டது. நூற்றுக்கு 96 சதவீதம் ஆண்களுக்கு உறவு கொள்ளும் பெண்கள் கிடைப்பதில்லை. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் பாலியல் தொழிலாளர்களுக்கு கஸ்டமர் கிடைப்பதில்லை. இது ஒரு சமூக நோய். ஆண்கள் பெண்கள் பாலியல் இயல்பான உணர்வில் படிந்திருக்கும் கசடுகளையும் வெளிச்சமிட்டு காட்டுவதே இந்த புத்தகத்தின் நோக்கம். அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் பாலியல் சார்ந்த விவாதங்களை நடைபெற வேண்டும் .
2008 இல் பாலியல் ஒரு உரையாடல் என்ற தலைப்பில் பதிப்பித்த புத்தகம் 2016இல் இச்சைகளின் இருள்வெளி என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியீட்டு இருக்கு. தலைப்பில் மனுஷ்யபுத்திரன் கைவண்ணம் தெரியுது.
இது பாலியல் பற்றிய உரையாடலின் எழுத்து வடிவம். பாலியலைப் பற்றி பேசக்கூடிய சரியான இரண்டு நபர்களை பேசவச்சி இருகாங்க. நளினி மற்றும் சாரு. பாலியல் தொழிலாளியாக இருந்த நளினி அந்தத் தொழில் இருக்கும் பிரச்சனைகள், அந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை, சமூகத்தின் பாலியல் தொடர்பான பார்வை, பிரச்சனைகளை உளவியல் ரீதியிலே அணுகி இருகாங்க.
இந்தச் சமூகம் வெறும் ஆணின் தேவையை மட்டுமே மையமாக வச்சி சுத்திட்டு இருக்கு, பெண்களை மறந்துடுது சில நேரம் ஆண்களையும் மடந்துடுது அது இழ்டத்துக்கு சுத்திட்டு இருக்கு. ஆண் பெண் இரண்டு தரப்பிலயும் போதாமை, அறியாமை இருக்கு அத போக்க பாலியலை பற்றிப் பேசியே ஆகணும். அந்த உரையாடலை இங்க இருந்தாவது அரமிக்கட்டும்.
ஒரு சில typo தவிர்த்து ஒரு அமர்க்களமான புத்தகம். வாழ்க்கையில் ஒரு முறையேனும் படிக்க வேண்டிய புத்தகம்.
காமம் பற்றியும் சமூகம் வைத்திருக்கும் போலியான பிம்பங்கள் பற்றியும் மிகத் தெளிவான உரையாடல். ஆண்கள் பெண்கள் இருவரும் ஒரு வித போதாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அது தொடர்ச்சியாக வன்முறைகளை நிகழ்த்தி கொண்டிருக்கிறது மனிதனின் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் அடக்கப்பட்ட காம உணர்வாக தான் இருக்கிறது . இந்த உரையாடல் மிகவும் தேவையான ஒன்று இந்த சமூகத்துக்கு