சிகரம் செந்தில்நாதன் எழுதியுள்ள புத்தகம். இந்த புத்தகத்தின் தலைப்பு என்னவோ முருகன்தான் என்றாலும் இது முருகவணக்கத்தில் தொடங்கி வள்ளலார் நிறுவிய சத்யஞான சபையில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் முடிகின்றது. அடிப்படையில் இந்த புத்தகம் விளக்க நினைப்பது இதுதான் . முருகன்தான் தமிழ் கடவுள் , குறிஞ்சி நில கடவுளாக இருந்து , அனைவருக்கும் பொதுவான ஒரு கடவுளாக உயர்ந்தவன். வடநாட்டு ஸ்கந்த மரபோடு காலப்போக்கில் தொடர்பு ஏற்பட்டுள்ளது, எனினும் வடநாட்டு ஸ்கந்தன் என்கிற சுப்ரமணியன் வேறு , முருகன் வேறு . அதை நிறுவ முருகன் சிவனுக்கு பிள்ளையாக மாறினான் , அதற்கு வடநாட்டு ஸ்கந்த மரபு உதவியது. அதுவே சோமாஸ்கந்தர் . வடநாட்டு ஸ்கந்தன் விநாயகரின் அண்ணன் , தென்னாட்டு முருகன் விநாயகரின் தம்பி. முருகன் குறிஞ்சி நிலத்தின் தலைவன் , அவனின் காதல் மனைவி வள்ளி , பெருதெய்வ வழிபாட்டில் , முருகனை பொறுத்த , இந்திரனின் மகள் தெய்வானை முருகனுக்கு கருப்பு மனைவியாக்கப்பட்டால். முருக வழிபடு முதலில் வேல் வழிபாடாக இருந்து பின்னர் , உருவ வழிபாடாக இருக்கலாம் . முருகன் பற்றி கூறும் வரலாற்று நூல்கள் எட்டுத்தொகை நூலான பரிபாடலில் , முருகன் பற்றி 7 பாடல்கள் உள்ளன. நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை முருகனை பற்றியது . வடநாட்டு ஸ்கந்த மரபோடு முருகனை பொருத்தி எழுதப்பட்டது கந்தபுராணம் , அதை எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார்.
அறுபடை வீடு திருமுருகாற்றுப்படையில் முதல் வீடாக குறிப்பிடப்பட்டுள்ளது திருப்பரங்குன்றம் , இரண்டாவது திருஆவினன்குடி , இந்த ஊர் பழனி மலையின் அடியில் உள்ளது . இங்குள்ள முருகன் கோவில் தான் இரண்டாவது அறுபடை வீடு . பழனி தண்டாயுதபாணி அல்ல . மூன்றாவது திருச்செந்தூர் , நான்காவது தணிகை மலை என அழைக்கப்படும் திருத்தணி . மற்ற முருகன் கோவில்கலிருந்து , இது சற்று வேறுபடுவது , இங்கு சூரசம்ஹாரம் நடப்பதில்லை . ஐந்தாவது சுவாமிமலை , ஆறாவது பழமுதிர்ச்சோலை . பக்தர்களின் எண்ணிக்கையிலும் , வருமானத்திலும் தமிழக கோவில்களிலேயே முதலில் இருக்கும் இரண்டு கோவில்கள் பழனி மற்றும் திருத்தணி தான் . கதிர்காமம் கதிர்காமம் தென் இலங்கை பகுதியில் உள்ள பழைமையான முருகன் கோவில். இது கோவில்களுக்கெல்லாம் கோவில் என அழைக்கப்படுகிறது. இங்கு உருவ வழிபாடு கிடையாது. வள்ளலார் இந்த நூலில் சத்யஞான சபையில் சிவலிங்கத்தை வைத்து வழிபட உரிமை கோரி சபாநந்த ஒளி சிவாச்சாரியார் தொடுத்த வழக்கு பற்றி கூறப்பட்டுள்ளது . அந்த வழக்கு நீதியரசர் சந்துரு முன்பு வருகின்றது . அவர் வழங்கிய தீர்ப்பு வள்ளலார் குறித்த ஒரு முன்னுரையாகவே இருக்கின்றது. வள்ளலார் எழுதிய புகழ் பெற்ற வரியான "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் " , ஒரிஸாவிலுள்ள , காளஹண்டி பகுதியில் ஏற்பட்ட வறட்சி குறித்து அவர் எழுதியது .