மீம்ஸ் என்றால் என்ன? பிரபலமான ஒரு விஷயத்தைப் படம்போட்டுக் கலாய்ப்பது! இன்றைக்கு சமூக வலைதளங்களைப் பரபரவென இயக்கிக்கொண்டிருப்பதே மீம்ஸ்தான். பக்கம் பக்கமாக எழுதிச் சிரிக்க, ரசிக்க வைத்ததெல்லாம் அந்தக் காலம். ஒரு படம் போட்டு பகபகவெனச் சிரிக்கவைப்பதே இந்தக் காலம். அரசியலோ, சினிமாவோ, விளம்பரமோ, நாட்டுநடப்போ எதுவாக இருந்தாலும் அந்தப் படங்களின் ஸ்டில்களை எடுத்துப்போட்டு தமிழ், இங்கிலீஷ், தங்கிலீஷில் கமென்ட் போட்டுப் பொளக்கிறார்கள் மீம்ஸ் உருவாக்குபவர்கள். மொக்கை சினிமா, சேனல் சீரியல்கள், டி.ஆர்.பி டிராமா, 'இணையமே கதி’னு கிடக்கும் இளைய தலைமுறைனு எல்லாத்தையும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. யார் மனசையும் புண்படுத்தாமல் கிண்டல் பண்றதுதான் &