Jump to ratings and reviews
Rate this book

வெண்முரசு #8

காண்டீபம் / Kaandeebam (வெண்முரசு / Venmurasu Book 8)

Rate this book
அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான்.

மகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்துக் கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்ததவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல்.

வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரததின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக

1319 pages, Kindle Edition

Published April 1, 2016

7 people are currently reading
74 people want to read

About the author

Jeyamohan

211 books849 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
48 (63%)
4 stars
22 (28%)
3 stars
4 (5%)
2 stars
1 (1%)
1 star
1 (1%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
April 20, 2020
What a great novel about Arjuna's journey. It was adventurous at few points, romantic at few points and spiritual finally. Arishtanemi's or Nemi (A Jain god's) character was top notch. Especially the Non-Violence (Ahimsa) angle was fantastic. Before this novel, I didn't have high opinion on Arjuna's character or place in Mahabharata may be because of the much hyped Karna character in modern times. But after this novel, I could see Arjuna and his journey in a much different and better angle.
Profile Image for Keerthi Raja.
21 reviews
July 15, 2022
My fav part of the book is arjuna's introduction to jain principles of non violence. Arishtanemi's Ascension into sainthood.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Anitha Ponraj.
277 reviews45 followers
September 8, 2025
வில்லுக்கு விஜயன் என்பது மகாபாரதத்தை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அந்த தலைசிறந்த வில்லாளியான விஜயனின் தெய்வீக குணம் பொருந்திய வில்லான காண்டீபம் தான் புத்தகத்தின் தலைப்பு.

அர்ஜூனனுக்கு ஆயிரம் பொண்டாட்டி என்று ஒரு கேலியான சொலவடை உள்ளது. பாண்டவர்கள் ஐவரில் நடுவனான அர்ஜூனனை பிடிக்காத பெண்கள் யாரும் இல்லை. அவனுக்கு வில்லுக்கு நிகராக பெண்களைப் பிடிக்கிறது. அதை திரும்பத் திரும்ப ஆசானும் புத்தகம் நெடுகிலும் சொல்லுகிறார்.

ஆனால் என்ன காரணத்தாலோ இதுவரை கர்ணன், பூரிசிரவஸ் என்று ஆர்மி அமைத்த குழுப் பெண்கள் அர்ஜூனனை அமைதியாகவே கடந்து விட்டோம்.

யாரென்று தெரியாத சுஜயனோட கதை தொடங்குகிறது. அவன் ஏதோ அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது மட்டும் புரிகிறது.

பல் முளைக்கும் முன்னே வாளேந்திப் போர் புரியும் வீரனாக இருக்க வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்புக்கு மத்தியில் தன் வயதுக்கு ஏற்ப கனவு கண்டு விளையாடும் குழந்தை சுஜயனை ஏன் கோழையாக ஆசிரியர் எழுதினார் என்று அவருக்குத் தான் வெளிச்சம்.

ஆனால் அதிலும் ஒரு நூறு முறை “முலையை” சுட்ட ஆசான் தவறவில்லை. அவர் எழுத்து இப்படித்தான் என்று இத்தனை புத்தகங்கள் கடந்தும் எண்ணத் தோன்றவில்லை. மாறாக அது ஒருவித எரிச்சல் உணர்வையே இன்னும் உண்டாக்குகிறது.

அவனை வீரனாக்க அர்ஜூனனின் கதை சொல்லி வளர்க்க செவிலிகளோட காட்டில் வசிக்கும் மாலினியின் குடிலுக்கு செல்கிறார்கள். எல்லாருக்கும் அர்ஜூனனோடு ஒரு பின் கதை இருக்கிறது.

‘ஒருத்தரையும் விட்டு வைக்கலயா’??

அவன் என்று சிரிக்கத் தோன்றுகிறது. அவர்கள் வெவ்வேறு புத்தகங்களில் இருந்து அர்ஜூனனின் கதை சொல்லும் விதமாக இளைய பாண்டவனின் வீரபிரதாபங்ஙள் புத்தகமாக விரிகிறது.

இது அர்ஜூனனின் கதை. அவன் நாட்டைவிட்டுச் சென்று ஒவ்வொரு முறையும் திரும்பி வரும்போதும் புதியவனாக திரும்பி வருகிறான். புதிய அனுபவங்களின் மூலம் மெருகேறியவனாக வருகிறான்.

அந்த அனுபவங்கள் விதவிதமானதாக இருக்கும் என்று பார்த்தால் எல்லாம் தூர தேசங்களுக்குச் சென்று ஒவ்வொரு பெண்ணை மணந்து கொள்வதில் தான் முடிகிறது.

திரௌபதிக்குப் பின்னர் மணந்த உலோபி, சித்ராங்கதை, சுபத்திரையை மணந்த கதை.

இப்படித் தான் இருக்கும்‌‌ என்று முன்பே கணித்து விட முடிவதாலோ என்னவோ என் வரையில் புத்தகத்தின்‌ எழுத்து நடை புதிதாகத் தோன்றவில்லை .

நாகர் உலகை விவரித்த விதம் அழகாக இருந்தது. அதே போல் சித்ராங்கதனனுடனான நீர் மாளிகை விவரணைகள் திரையில் VFX காட்சி போல் மனதில் பிரம்மாண்டமாக விரிந்தது. ஆனால் ஓவியங்கள் இல்லாதது‌ இந்த பாகத்துக்கு பெரும் குறையாகவேத் தோன்றியது.

விவரணைகளுக்கு கொடுத்த முக்கியத்துவம் கதையோட்டத்துக்கு கொடுக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.

சித்ராங்கதன் சித்ராங்கதையாக மாறிய விஷயங்கள் முன்பு அறிந்திராத தால் வாசிக்க ஆர்வமாக இருந்தது. சுபத்திரையை பெரிய வீராங்கனையாக இதற்கு முன்பு காட்டிவிட்டு இந்த பாகத்தில் சாதாரண பெண் போல் எழுதியிருப்பது ஏமாற்றத்தை அளித்தது. திரௌபதியும் அவ்வாறே!!!

ஒருவேளை எட்டு புத்தகங்கள் தொடர்ந்து வாசிப்பதாலோ என்னவோ அவர் எழுத்து நடை எல்லா புத்தகத்திலும் வித்தியாசமாக தொடங்கி பின்னர் ஒரே போல் முடிவது போல் தோன்றுகிறது. சலிப்பூட்டுகிறது.

இதிலும் பெண்களை காதல் கொண்டு வெல்லும் வரை ஓரளவு ஆர்வமாக செல்லும் வாசிப்பு, பின்னர் அவன் தூரமாக நோக்கிய விழிகளோடு இருந்தான், எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் அவனை அந்த பெண்களே அனுப்பி வைத்தார்கள் என்று ஒரே மாதிரியான இருப்பதால் முன்பே அதை கணித்துவிட முடிகிறது.

நேமிநாதர் குறித்த அத்தியாயங்கள் மட்டுமே சற்று புதியதாக, வாசிக்க ஆர்வமாக இருந்தது. மற்றவை எல்லாம், ‘என்ன இந்த பொண்ண காதலிக்க வைக்கிற வரைக்கும் சீனப் போடுவான் அப்புறம் அடுத்த பெண்ணுக்கு போயிருவான் அவ்வளவு தானே’ என்று சலிக்கிறது.

தலைப்பாக இடம்பெற்ற காண்டீபம் பற்றிய தகவல்கள் வாசிக்க ஆர்வமாக இருந்தது, அதைப் பற்றி கொஞ்சம் ஆழமாக நிறைய தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அதை ஒரே பக்கத்தில் எழுதி முடித்துவிட்டார்.

ஆறுகள் குளங்கள் மலைகள் எல்லாம் பக்கம் பக்கமாக விவரிக்கும் ஆசிரியர், எந்த புராணத்தை எழுதியிருக்கிறாரோ அதை குறைவாகவே எழுதுவதாக தோன்றுகிறது.

ஒரு பெருங்காவியம் வாசிக்கும் பிரம்மிப்பு பல நேரங்களில் குறைந்து, ஆசிரியரின் மனவோட்டம் இது என்று பிரித்தறிய முடியும் விதமாக தோன்றுகிறது.

உதாரணமாக, மண்ணில் யாரும் கண்டிராத ஒரு நிகரற்ற நகரமாக கிருஷ்ணனின் துவாரகை உருவாகிறது என்று சொல்லும் அர்ஜூனன், இந்திரபிரஸ்தம் திரௌபதியின் ஆணவத்தின் வெளிப்பாடு என்று சொல்கிறான்.

இது கதைமாந்தர் எண்ணவோட்டமா அல்லது ஆசிரியரின் மனவோட்டமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இறுதியில் அடுத்த தலைமுறையினரின் அறிமுகம் கூட வாசிக்க அவ்வளவு ரசிக்கவில்லை. பெரியவர்களால் எழுதப்பட்ட குழந்தை கதாப்பாத்திரங்கள் என்ற‌ எண்ணமே மிகுந்திருக்கிறது.

ஒருவழியாக சுஜயன் யாரென்று சொல்லிவிட்டார். ஆனால் அர்ஜூனனுக்காக காத்திருக்கும் காதலிக்கும் அத்தனை பெண்கள் இருக்க, செவிலியான சுபகையைத் தேடி தான் வருவேன் என்று அவன் சொல்வது எரிச்சலூட்டுகிறது.

மொத்தத்தில், மகாபாரதத்தில் ரசித்த கதாப்பாத்திரங்கள் அனைவரையும் வெண்முரசு முடியும் போது வெறுத்துவிடுவேன் என்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

காண்டீபம் - பேரு வச்சீங்களே, அதுக்கு ஒரு முழு அத்தியாயமாவது வச்சீங்களா??
30 reviews1 follower
July 2, 2021
The most exciting characters of this book is arihtanemi, supradeepam, subhagai and subhadradevi. Even arjunan took a back seat whenever these characters come in the scene.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.