நம் மனதில் கவலைகள் இல்லாமல் இருந்தாலே போதும், நாம் நோய்கள் இன்றி, நீண்ட காலம் நலமுடன் வாழலாம். நமது கவலைகளை மறக்க செலவில்லாத, எளிய வழி என்ன? ஒரு குழந்தையின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை தரிசிப்பது தான் அந்த எளிய வழி. குழந்தைகள் இந்தப் பூமியில் "வாழும் தெய்வங்கள்" எனப் போற்றப்படுகிறார்கள். கள்ளம் கபடமற்ற தங்களது புன்னகையால் நம் கவலைகளை சிதறடித்து, நமக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள் குழந்தைகள். குழந்தையின் புன்னகை நமது மனஅழுத்ததை ஒரு நொடியில் போக்கிவிடும். குழந்தைகள் என்றாலே நம் மனதில் குதூகலம் தான். குழந்தைகள் இருக்குமிடமே கலர்ஃபுல் தான். நம் கவலைகளை மறக்க வேண்டுமானால், குழந்தைகளிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாலே போதும், &#