Jump to ratings and reviews
Rate this book

இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்

Rate this book
கி. ராவின் அணிந்துரை இசையில்லாத ஒரு நாடகத்தையோ முக்கியமாக ஒரு திரைப்படத்தையோ தமிழனால் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. இப்போது நாடகம் மட்டுந்தான்; முன்பெல்லாம் இசை மழை கொட்டும், "சங்கீத கோவலன் நாடகம்” இப்படி, மூணாவதுபட்சம்தான் நடிப்பு! ரெண்டாவது பேச்சு (வசனம்) சங்கீத நாடகம், நாட்டிய நாடகம், பேச்சு நாடகம் இப்படிப் பிரிக்கலாம். (நிஜ நாடகம் நேற்று வந்தது) பூர்வீக நாடகக் கலையாளர்களிடமிருந்து முளைத்து வந்த நமது திரைப்படத்துறைக்கு அதன்-முன்னதின்-ஜாடை அப்படியே இறங்கி வந்து விட்டதில் வியப்பேதும் இல்லை. காலம் மாற மாற திரைப்படத்துறையில் பாட்டும் பேச்சும் வற்ற ஆரம்பித்தது. ஏட்டுநடைப் பேச்சாக இருந்த வசனம் மக்கள் மொழிப் பேச்சாக மாற ஆரம்பித்தது

107 pages, Kindle Edition

First published January 1, 1998

8 people are currently reading
16 people want to read

About the author

Ramesh Predan

20 books3 followers
Ramesh Pradan (ரமேஷ் பிரேதன்)
(27 October 1964 – 27 September 2025)

Born in Puducherry to Marudhamuthu and Balasundarambal, with roots in Tiruchirappalli, Ramesh Pradhan was a distinguished Tamil writer, critic, and translator. His education took him from local middle and high schools in Puducherry and Trichy, through Kallve College, and onwards to a Diploma in French Linguistics from Alliance Française and a Master’s degree in History at Annamalai University.

Before becoming a full-time writer, he worked in various roles: as a teacher in the Gandhian movement Aseeba, as branch manager at New Century Book House, as archival/documentation staff in Chennai, and as librarian at Auroville Central Library.

In 1993, his literary career began in partnership with Prem; their first publication together was "Pudaikkappatta Prathigalum Ezhuthappatta Manithargalum", released under the joint name Ramesh Prem. Over the years, Ramesh co-authored 21 books with Prem, and later authored several books on his own after the partnership ended.

His output spanned poetry, novels, short stories, plays, and literary criticism. He was celebrated for bringing postmodern sensibilities to Tamil literature—fragmentary narrative, emotional restraint, challenging conventions. His works earned multiple honors including the Kamban Pugazh Literary Award (twice: for poetry and for novel), Sujatha Poetry Award, Kalampudithu Poetry Award, Ki. Ra. Karisal Award, Prabanjan Award, and in 2025, the Vishnupuram Literary Award.

Despite health challenges, he remained committed to writing up until the end. Ramesh Pradhan passed away in Puducherry on 27 September 2025 due to illness. His literary voice continues to be remembered among readers and peers in Tamil literature.


See More on: Wikipedia Page | TamilWiki Page

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (16%)
4 stars
7 (38%)
3 stars
6 (33%)
2 stars
1 (5%)
1 star
1 (5%)
Displaying 1 - 4 of 4 reviews
19 reviews1 follower
March 29, 2025
நிலையுள்ள அல்லது நிலையற்ற எந்த ஒரு பொருளைக் கொண்டும் ஒப்புமை கூற இயலாத ஒருவர் இளையராஜா. இளையராஜா என்பது ஓர் உணர்வு. கோபத்தை, காதலை, காமத்தை இன்னும் பல உணர்வுகளை எப்படி உணர மட்டும் முடியுமோ அப்படி இளையராஜாவை உணர மட்டுமே முடியும். உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்கால்களும் அவரால் ஆட்கொள்ளப்பட்டு தன்னை அவர்  விரல்களின் நுனிச்சதையில் முழுமையாக ஒப்படைத்து கொள்ளும். குறிப்பு பாதத்தில் அல்ல. எப்படிக் கவிஞர் பிரான்சிஸ் கிருபாவைப் படிக்கும் போது நம்மைக் கிருபாவாகவே உணர்கிறோமோ எப்படி திரையில் ரஜினியின் அவமானங்களையும் வெற்றிகளையும் நமக்கானதாகவே உணர்கிறோமோ அப்படி  ராஜாவைக் கேட்கும் போது, ராஜாவை  உணரும் போது நம்மை ராஜாவாகவே உணர்ந்து எவர் பாதத்திலும் பணிய மனம் மறுக்கும். அதுவே ராஜ தருணம்.அதுவே குழந்தைச் செருக்கு. அப்படி உணர்தலின் வழியே அடையக்கூடிய ஒருவரை எழுத்தாளர் கி.ரா அவர்களின் அறிவுறுத்தலின்படி ரமேஷ் - பிரேம் கண்ட நேர்காணலின் விளைவே இந்தத்.

 தொகுப்பு. நான்கு பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பகுதியான "இசையும் கலாச்சாரமும் - ஒரு நினைவு" சமூகத்திலும் பண்பாட்டிலும் இசை நடத்திய தாக்குதல்களையும் அதே நேரத்தில் வருடி கொடுத்த இடங்களையும் ஆராய்கிறது. அடுத்த பகுதியான "இசையின் இடம் காலம் மற்றும் இளையராஜாவின் கற்பனைவெளி" ராஜா என்னும்  மகோன்னதத்தை கோட்பாட்டு ரீதியாகவும் ரசிக மனப்பான்மையுடன் சமூகப் பின்னணியுடனும் உரக்கப் பேசுகிறது. அதே நேரத்தில் இளையராஜா விட்டுச் செல்ல வேண்டிய இடங்களையும் கவனமாக இடித்துரைக்கிறது. குறிப்பாக திரை இசை மீறிய இசைக்கோலங்களை அவர் உருவாக்க வேண்டும் என்பது திரை இசையை விடாத என்றே புரிந்து கொள்ள மனம் விரும்புகிறது. ஏனெனில் திரையில் காட்சிகளுக்கு பாடல்களுக்கு அவர் இசையமைத்தாலும் அந்த இசை அந்த காட்சிகளையும் பாடல்களையும் மீறிய ஒன்றாகத்தான் இருக்கிறது. பல சமயங்களில் காட்சியையும் பாடல்களையும் ஏன் படங்களையும் வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் கருவியாகவே இருக்கிறது. இருந்தும் திரை ஊடகம் என்பது எளிய மனிதர்களின் நெஞ்சத்தில் அனுமதியின்றி  நுழையக் கூடியது செல்லப்பிராணி.  ராஜா எளியர்களின் ஆன்மா. எளியவர்களின் தாய் மடி. ஆகவே திரை இசையைக் கைவிடாத இசை மீறல் தொடர வேண்டும் என்பதே விருப்பம். கடைசி பகுதி இளையராஜா அவர்களின் நேர்காணலை ஒட்டி அ.மார்க்ஸ் எழுதிய விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றக்கூடிய பகுதி " இசையற்ற இடத்தில் இளையராஜா".  மூன்றாவது பகுதியாக வருவதுதான் "இளையராஜாவுடன் உரையாடல்". இசை என்றில்லை எந்த ஒரு கலையையும் நேசிக்கும், படைக்க எத்தனிக்கும் அல்லது படைப்பில் உச்சம் தொட்டதாக நினைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வாசித்து உணர வேண்டிய பகுதி. இசையை அனுபவித்தவர்கள் ஆராய்வதற்கான வாய்ப்பு. கடைசி பகுதியில் மட்டும் அ.மார்க்ஸ் அவர்களின் தகவலைத் திருத்தும் நோக்கில் ஒரு திரைப்பட பெயர் உள்ளது.அது தவிர தொகுப்பின் 108 பக்கங்களில் ஒரு வரியில் கூட ஒரு சொல்லாக கூட எந்த ஒரு திரைப்படத்தின் பெயரோ அல்லது பாடல் வரிகளோ பயன்படுத்தாமல் எழுதி இருப்பது கோட்பாட்டு ரீதியாக இசையையும் இளையராஜாவையும் நூலாசிரியர்கள் எப்படி அணுகி இருக்கிறார்கள் என்பதற்கு பேரெடுத்துக்காட்டு. இந்த நூல் இளையராஜாவை எந்த இடத்திலும் புனிதர் என்று சொல்லவில்லை. அவரின் இசை எவ்வாறு மனங்களை, சமூகத்தை, ஏன் இசையையே புனிதப்படுத்தியது என்று சொல்லுகிறது. கவிஞர் தீபு "சொற்களுக்கு ஞானஸ்நானம் அளிக்கப்பட்டு புனிதமாக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட அந்தச் சொற்களை வைத்துக்கொண்டு புனிதமற்ற இந்த வாழ்க்கையை இனி எப்படி எழுத ? "என்று ஒரு கவிதையில் எழுதி இருப்பார். ஒலியையும் காற்றையும் சுத்தம் செய்து சுத்தம் செய்து புனிதமற்ற இந்த வாழ்க்கையைத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பார் இசைஞானி.
Profile Image for Jagan K.
50 reviews15 followers
May 24, 2019
The interview portion was good

Apart from that there is not much of an insight towards aesthetics and philosophy of music. Wish the entire book was just that interview
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.