Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
சென்ற வருடம் இந்திரா சௌந்தர்ராஜனின் புத்தங்களில் இருந்து எடுத்து சின்னத்திரைக்கு கொண்டு வரப்பட்ட சில தொடர்களை மீண்டும் பார்த்தேன். மர்ம தேசம், சொர்ண ரேகை, சிவமயம், ருத்ர வீணை. எல்லாம் சிறுவயதில் வியப்புடன் பார்த்த தொடர்கள். அதன் வரிசையில் வந்த ஒரு தொடர் தான் 'கோட்டைபுரத்து வீடு'. தொடர் எனக்கு அவ்வளவு சுவாரஸ்யத்தை அளிக்கவில்லை என்றாலும் அந்த புதின வடிவை வாசித்து தான் பார்ப்போமே என்ற உந்துதல் தான் இந்த வாசிப்பு.
மதுரை அருகே உள்ள 'கோட்டைபுரத்து' சமஸ்தானம் ஒரு பழைய அரச பரம்பரை. அதன் இளைய ராஜா தான் 'விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தான்' என்கிற விசு. ஒரு புது வணிக முயற்சியை பற்றி கற்றுக்கொள்ள கோவை சென்று திரும்பும் இடத்தில் கதை ஆரம்பமாகிறது. அங்கிருந்து செல்லும் விசு தனது அண்ணன் கஜேந்திரனுக்கு குடும்ப கோவிலில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்கிறார். ஆனால் அவர் அண்ணன் பாம்புக் கடியில் இறக்கிறார். முப்பது வயதை அடையும்போது கோட்டைபுரத்து சமஸ்தானத்தின் ஆண்வாரிசுகள் இறப்பார்கள் என்றும் பெண் வாரிசானால் பிறப்பிலேயே இறப்பார்கள் என்றும் அங்கு உள்ள நம்பிக்கை. எல்லாம் ஒரு சாபத்தின் காரணம். அப்படித்தான் நடக்கவும் செயகிறது. விசுவும் முப்பது வயசை நெருங்குவதால் மிகவும் குழப்பம் அடைகிறார். அவர் காதலி அர்ச்சனா ஒரு துணிச்சலான முற்போக்கு சிந்தனைஉடைய பெண் என்பதால் இந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க நினைக்கிறாள். தனது இலக்கை அவள் அடைகிறாளா, விசு சாபத்தில் இருந்து தப்பிக்கிறானா, இருவரும் ஒன்று சேர்கிறார்களா என்பதே 'கோட்டைபுரத்து வீடு'.
அர்ச்சனா என்ற ஒரு பெண் எடுக்கும் தைரியமான முயற்சி தான் இந்த கதையின் முக்கிய பலம். நாம் கண்ட இது மாதிரி பட்ட மர்ம கதைகளில் எப்பொழுதும் நாயகன் தான் மர்மத்தை கண்டறிகிறான். நாயகி சும்மா ஒரு துணை பாத்திரம் மட்டுமே. ஆனால் இங்கு விசு தைரியமின்றி குழப்பத்தில் தவிக்கும் தருணங்களில் அவனை அரவணைத்து ஆறுதல் கூறுவதோடு நானே இதை கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லும் இடங்களும் அர்ச்சனா எடுக்கும் முயற்சிகளும் அருமை. கதை இரண்டு காலகட்டத்தின் அடிப்படையில் நடக்குது - ஒன்று கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருக்கும் இந்தியா என்ற காலகட்டம். இன்னொன்று இந்த நவீன காலகட்டம். பழைய காலத்து சமூக வாழ்வியல், அன்று சிறு மன்னர்களும் ஜமீன்தார்களும் இழைத்த கொடுமைகள், அவர்கள் கீழ் இருந்த குடிமக்களின் இன்னல்கள் இவையெல்லாம் தத்ரூபமாக படமிட்டு காட்டியிருக்கிறார் இந்திரா சௌந்தர்ராஜன். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் எல்லோருக்கும் அவுங்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மர்மமும். பிடித்தது என்று தனித்து குறிப்பிட ஒரு கதாபாத்திரத்தை சுட்டிக்காட்ட முடியவில்லை. ஒரு கட்டத்தில் மர்மத்தின் ரகசியத்தை கண்டுபிடித்து விட்டேன் என்று கூறி அதற்க்கான வாதங்களை அர்ச்சனா முன்வைக்கையில்; அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் வாதங்களை முழுவதும் சுக்குநூறாக்குவது போல் அமைந்தது அருமை. என்னை வியப்படைய செய்த பகுதியும் கூட. எழுத்தாளரின் மற்று கதைகளில் நடப்பது போல் இங்கும் மூட நம்பிக்கைக்கும் ஆன்மீகத்திற்கும் முற்போக்கு சிந்தனைக்கும் நடக்கும் போர் இங்கும் தொடர்கிறது.
இதன் சின்னத்திரை வடிவம் என்னை வெகுவாக கவரவில்லை என்றாலும் புத்தக வடிவம் என்னை ரொம்பவும் ரசிக்க வைத்தது. அருமையான ஆன்மீக மற்றும் வாழ்வியல் சிந்தனைகளை நிலைநாட்டி மூட பழக்கங்களை சுட்டிக்காட்டும் விதத்தில்இருக்கும் இப்புதினம்; இந்திரா சௌந்தர்ராஜனின் மற்று கதைகளை போலவே. வாசகரை இருக்கையின் ஓரத்திற்கு வரவைக்கும் ஒரு புதினம்.
எவ்வகைத் தவறாயினும் அது செய்தவர்களை மட்டுமே தாக்கும் ,ஆனால் பெண்ணின் கற்போடு விளையாடும் போது அது தலைமுறையையே அழிக்கவல்லது.
கோட்டைப்புரத்துச் சமஸ்தானத்தில் ஆண்கள் முப்பது வயத்திற்கு மேல் உயிரோடு இருந்தது இல்லை என்ற சரித்திரம் தொடர்கிறது தற்போது தலைமை வகிப்பவரையும் சேர்த்து.அந்த சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களில் இளையவன் வசுவை தவிர அனைவரும் பெண் பித்தர்கள். ஒரு பத்தினியின் சாபம் தான் இப்படித் தொடர்மரணத்திற்குக் காரணம் என்று நம்பப்பட்டாலும் வசுவை காதலிக்கும் அர்ச்சனாவிற்கு மட்டும் சந்தேகம் எழுகிறது.
சுதந்திர போராட்ட காலத்தில் சமஸ்தானத்திற்கு வேலை செய்யும் அடிமை பெண் பிள்ளைகளின் கற்பை துச்சமாகக் கருதி விளையாடியதே அவர்களுக்குத் துர்மரணத்தால் குழிதோண்ட காரணமாகிறது.
வலியில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி சமஸ்தானத்திற்கு எதிராக அதில் இருப்பவர்களின் உயிரை எடுக்கத் தற்செயலாக ஒரு பத்தினியின் சாபமும் அதில் சேர்ந்துவிடுகிறது அதனால் அனைத்தும் இரகசியமாகிறது. பல பல கிளைகதைகளும் விரிகிறது. பெரிய ராணி பல ஆண்டுகளுக்கு முன் ஒளித்து வைத்த பொக்கிஷங்களையும் இந்த உண்மைகளுடன் சேர்த்து அர்ச்சனா கண்டுபிடித்துத் தன் காதலன் உயிரை காப்பாற்றுகிறாள்.
கோட்டைபுரத்து வீடு மர்மம், சாபம், அரச குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மெல்லிய சிறப்புடன் எடுத்துக் காட்டும் புதினம். தொலைக்காட்சித் தொடராக மிகக் குறைவாக ஈர்த்த இந்திராவின் கதை. புத்தகமாக ஓரளவு நன்றாகவே இருந்தது . பழைய சமூக நெறிகள், மூடநம்பிக்கை, முற்போக்கு சிந்தனை ஆகிய மோதல்கள் புத்தகத்தை ரசனைமிக்க வாசிப்பாக மாற்றுகின்றன.
A must-read for anyone curious about how fear is often used as a tool in the name of spirituality and God. This story powerfully exposes how people can be manipulated through blind faith and superstition. With sharp insight and emotional depth, it challenges the reader to question authority and think critically about belief systems. Short, impactful, and thought-provoking — it leaves a lasting impression.