Jump to ratings and reviews
Rate this book

ஐந்தும் மூன்றும் ஒன்பது

Rate this book
அடுத்த நிமிட​மோ அடுத்த நா​​ளோ, அடுத்த வருட​மோ, அடுத்த நூற்றாண்​டோ இந்த உலகில் என்ன​வெல்லாம் நிகழப்​போகிறது என்ப​தைக் கணித்துச் ​சொல்லும் காலப்பணி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் அ​தைத் தங்கள் வசப்படுத்திக்​கொள்ள யார்தான் துடிக்க்மாட்டார்கள்? அப்படி ஒரு ​தேட​லை ​நோக்கிப்​போகும் க​தை இது காப் பலகணி இருப்பதாக​வே வாசகர்கள் நம்பிவிடக்கூடும் இப்படி ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்கு​மே என்ற நி​னைப்பு இ​தைபடிக்கும் ஒவ்​வொருவருக்கும் எழும். அறிவியிலின் தளத்தில் நின்று ஆன்மிகத்​தைப் பார்ப்பதும், ஆன்மிக நம்பிக்​கைகளின் அடிப்ப​டையில் அறிவிய​லைப் பார்ப்பதும் இந்த நாவலின் ஸ்​பெஷல். தீடீர் திருப்பங்களும் வித்தியாச கதாபாத்திரங்களும் அவர்களின் உரையாடல்களும் உங்க​​ளை ​வேறுஉலகத்துக்கு அ​ழைத்துச் ​​செல்லும்.

392 pages, Paperback

First published January 1, 2015

14 people are currently reading
39 people want to read

About the author

Indra Soundar Rajan

310 books385 followers
Indra Soundar Rajan was the pen name of P. Soundar Rajan, an Indian Tamil author of short stories, novels, television serials, and screenplays.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
30 (65%)
4 stars
11 (23%)
3 stars
4 (8%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
2,121 reviews1,109 followers
December 9, 2017
அமானுஷ்யங்களை புரிந்து அதை நெருங்கினால் மட்டுமே மேலே தொடர்ந்து செல்ல அனுமதிக்கும் என்பதுடன் எதற்காக தொடங்கியதோ அதற்கான முடிவை நோக்கி எந்த விதமான இடையூறும் இல்லாமல் நிறைவேற்றும்.

நடக்கும் செயல்கள் யாவும் கணித வரைமுறைகளுக்குள்ளே அடங்கி ஏற்கனவே எழுதப்பட்டதின் மேல் நிகழ்வதாக அமரும்..

ஓய்வு பெற்ற ஆராய்ச்சியாளரான கணபதி சுப்ரமணியத்தை தேடி வருகிறார் ஜோதிடத்தை குடும்பத் தொழிலாக கொண்ட வள்ளுவர், எதிர்காலத்தில் நிகழும் சம்பவங்களை முன்கூட்டியே சித்தர்கள் கணித்து வைத்து இருந்த காலப் பலகணியை பற்றி தன் முன்னோர் குறிப்பிட்டிருந்ததை சொன்னதோடு அல்லாமல் தன் வாழ்வின் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதனால் அந்த காலப் பலகணியை முழுவதுமாக கணபதியே கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புகிறார்.

சுயநலத்திற்காக பலகணியை தேடினால் உயிர்பலி கொள்ளும் என்பதை மெய்ப்பிக்க தொடர்ச்சியாக மாண்டு கொண்டே வருகின்றனர் சதுர்வேதியின் அடியாட்கள்.உலகத்தில் தான் தான் அனைத்தும் என்ற ஆசையை நிறைவேற்ற அந்த காலப் பலகணி தேவையென்பதால் வள்ளுவரைத் தொடர்கின்றான் சதுர்வேதி.

எதிர்பாராத விபத்தில் கணபதிக்கு உடல்நிலை குறைப்பாடாக அவரின் பேத்தி பிரியதர்சினி வர்ஷனுடன் புறப்படுகிறாள் பலகணியை அடைய கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன்.
எந்த மலையில் சித்தர்களால் அது பாதுகாக்கப்பட்டு வருகிறதோ அங்கே வந்து சேர்கின்றனர்.

1008 ஓலைச்சுவடிகளில் கடைசி நான்கு மட்டுமே பிரியதர்சினியின் கையில் அகப்பட மற்றவைகள் வெள்ளத்தில் சித்தருடன் சேர்ந்து எங்கு பயணப்பட வேண்டுமே அதை நோக்கி நகரத் தொடங்குகிறது.

பெயர் தெரியாத நோயில் கூட்டம் கூட்டமாக செத்தொழியும் மக்களை காப்பாற்ற எழுதப்பட்ட நாலு சுவடிகள் மட்டுமே அவளின் கைகளில் தங்கியிருப்பதை கண்டறிந்த வள்ளுவர் அதில் இருக்கும் பரிகாரத்தை நிறைவேற்ற ஜோதிலிங்க தரிசனத்திற்கு புறப்படுகிறார்.

அறிய வேண்டிய செய்தியை இவர்களுக்கு தெரிவித்த பிறகு அவ்வேட்டில் இருந்த எழுத்துகள் மறைந்து போகிறது.எதற்காக இந்த காலப் பலகணி இவர்களை தேடி தன்னை வெளிப்படுத்தியதோ அதன் பணி முடிவடைகிறது.

புகழுக்காக பலகணியை அடைய முற்பட்டவர்கள் அனைவரும் இறந்துவிட இரகசியம் இரகசியமாகவே புதைந்து போகிறது..
Profile Image for Saravanan.
356 reviews20 followers
September 13, 2021
சித்தர்கள் பற்றியது. வர்ஷன் அவர்கள் தேடுவதைப் பற்றி ரஞ்சித்திடம் சொல்ல ஆரம்பிக்கும் போது, அதைப் பற்றி சொல்ல இது சரியான நேரமில்லை, பேசற இடமும் இது இல்ல என்று சொல்லும் ப்ரியா, அடுத்த நிமிடம் அவளே சொல்கிறாள்.

இந்திய ஒன்றிய அரசு சுங்கச் சாவடி என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை கதையின் கதாப்பாத்திரமும் அனுபவிக்கிறது.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.