வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் தவிட்டு நிறக் குருவிகள் ஜன்னலின் வழியே உள்நுழைந்து சுழலும் மின்விசிறியில் அடிபட்டுச் சாகின்றன ஜன்னலை அடைக்க வேண்டும் அல்லது விசிறியின் சுழற்சியை நிறுத்த வேண்டும் எதையும் செய்யவில்லை எனது பூனைக்கு உணவு வேண்டும் O பேயாதல் புணர்ச்சி அறியாமல் செத்த பெண்கள் பேயாவார்களாம் நடுநிசி பேய்களைத் தேடி விடாயோடு அலைகிறேன் பேயைப் புணர்ந்தார்க்கு மரணமில்லை-இது சிவவாக்கியர் கூற்று O வண்ணத்திகளின் அநாதைப் பருவம் ஊரெங்கும் விழாக்கோலம் தீக்கொன்றைகள் பூத்துக் குலுங்கும் இந்தப் பருவத்தில் வண்ணத்துப் பூச்சிகளை குழந்தைகள் கூட பொருட்படுத்துவதில்லை O பாலரசĬ