நான் ஓவியன் அல்ல; என் கவிதைகளும் சொற்களற்று உள்ள எழுச்சியின் புனைதல்கள்.அவைகளில் அவள் இடம் என்னவென்று எனக்கு இன்னும் நிச்சயமாகவில்லை. அதுவும் பரமபதப் படம்தான். ஒரு சமயம் பெரிய ஏணி, மறுசமயம் பாம்பு. நாம் எல்லோருமே ரசாயன முடிகிச்சுகள். அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்பட்டவர்கள்.
Lalgudi Saptarishi Ramamrutham was a veteran Tamil novelist, having authored 300 short stories, 6 novels and 10 collections of essays.
Born in 1916, he was a native of Lalgudi and one of the writers of the Manikodi era. He started writing when he was 20 originally in English and then changed over to Tamil. He worked in Punjab National Bank for 30 years and settled down in Chennai after his retirement. La.Sa.Ra. worked for three years as a typist in Vauhini Pictures, which then produced a series of landmark Telugu films like "Vande Mataram", "Sumangali", and "Devata". It was then K. Ramnoth, another South Indian movie director, told La.Sa.Ra. not to waste his gift indicating that his hoping for a career in films would not be salutary. He ultimately became a banker but he continued with his writing.
He won the Sahitya Akademi Award in 1989 for Chintha nathi, a collection of autobiographical essays.
My first book of Lalgudi Saptharishi Ramamrutham (La.Sa.Ra) and I was overwhelmed by the powerhouse of words! Where you expect to appreciate the beauty of words, this book exhibits the knife like character of words to cut through pages and characters. This is writing that is beyond story telling where words/sentences and paragraphs are standalone, mesmeric.
The first stark difference in the Tamil in this book is the part colloquial (mixed with Malayalam, English) dialogues in a pure Tamil narrative. The author does not shy away from venturing into the vulgar if he feels the need for it. The confidence shown by the author in his command of the language is awe inspiring.
The book starts with "Thalaimurai Idaiveli" (Generation Gap) - a letter written by an aged father to his sons pleading them to love/respect him despite his shortcomings. Cut to somewhere in Kerala where the aged father is living in exile, far away from the family ties, at the mercy of George's conditional kindness and the lazy caretaker young Ursala George (Urs). He has runaway from his family, wallowing in self pity and pride, longing for human interactions.
Events in one day, including a letter from his wife, makes him go back to Chennai in a hope that his sons will have finally mended their ways. He takes along Urs as a companion and when he reaches his house, it takes only hours for his parental disappointments to sink in along with guilt of a husband and the piercing words of the wife. He cant help himself reflecting back on his brought up as compared to the pointless show-offiness of existence chosen by his sons. He holds his wife responsible for supporting the kids too much.
The fact that the narrator is flawed in his own words makes the book even more powerful. The writing could easily have part of his own self. The observations in tamil, I don't even think can be captured in translation.
Ideally, I would have loved to write this review in Tamil, but then, it would have been a love letter from a new fan. Hope to read more of his books!
1988ல் எழுதப்பட்ட புத்தகமான இதில், கேரளத்தில் திருவனந்தபுரம் பக்கம் ஏதோ ஒரு மலைகிராமத்திலும் சென்னையில் தனது வீட்டிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் சிலவற்றை பகிர்ந்திருப்பதை போல எழுதியிருக்கிறார், திரு லா.சா.ரா
வயதான காலத்தில் வீட்டைவிட்டு வெளியேறி 5வருடகாலம், கேரளநாட்டில் எங்கோ ஒரு ஓலை குடிசையில் வாழ்ந்து வந்ததில், மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்ற கடிதம் அவரை சென்னை நோக்கி அழைத்திருக்கிறது.
கேரள வீட்டின் உரிமையாளப் பெண்ணாண 'உர்சுலா'வை, சென்னைக்கு தன்னுடன் அழைத்து சென்றதையும், அங்கு அவரின் மனைவி 'மதுரம்', தமது பிள்ளையின் திருமணம் முடிக்க இந்த உடல்நிலை நாடகம் நடத்தியதையும், விரும்பத்தகாத விடயங்கள் நடந்ததால் அவளை உடனே கேரளாவிற்கு அழைத்து வந்ததையும் எழுதியிருக்கிறார். கடைசியில் நாடகத்தனமான முடிவொன்று வருகிறது.
இது சுயசரிதையா, புனைவா, வயதானவர்களுக்கே உரித்தான இளையவர்களை பற்றிய புலம்பலா, வாழ்ந்து முடிந்துவிட்ட சலிப்பா, அல்லல்பட்டது போதும் என்ற அயர்ச்சியா, முதிர்ச்சியின் வெளிப்பாடா அல்லது இது எல்லாமுமா என்பதாக எண்ண வைக்கிறது இந்த தொண்ணூத்தி சொச்ச பக்க புத்தகம்.
ஆங்காங்கே எள்ளல்களும் கேலி பேச்சுகளும் கலந்த நடையிலும், பிராமண பேச்சு வழக்கிலும் எழுதப்பட்டுள்ளது. அதே வேளையில் மீண்டும் மீண்டும் வாசிக்கும்படியான, உரையாடல்களை(குடும்பத்தாருக்குள் நடக்கும்) எழுதியிருக்கறார். ஆழமான, கருத்து செறிவுள்ள விசயங்களை சர்வ சாதரணமாக நிகழ்ந்த உரையாடல்களாக எழுதப்பட்டிருக்கிறது. சில வரிகளை திரும்ப வாசித்தால்தான் தெரியும், sarcastic ஆக சொல்லப்பட்டிருக்கிறது என்று, அவ்வளவு வார்த்தை விளையாட்டுகளை நிகழ்த்தியிருக்கிறார் .
முதிர்ச்சியின் பக்கம் நின்று வேடிக்கை காட்டும், 'கேரளத்தில் எங்கோ'.
புத்தகத்திலிருந்து சில வரிகள்:
"....மகனே இன்று உனக்கு நான் வேர். நாளை நீ என்னைத் தாங்கும் விழுது
நானும் நீயுமாய், வேரும் விழுதுமாய் மாறி மாறிக் காத்த மரம்தான் இந்த மனிதப் பரம்பரை. ஆகவே நம்முன், தலைமுறை இடைவெளி என்று தனியாக எது?
கடிவாளம் மறுக்காத குதிரை உண்டோ? வளர்ச்சியின் அடையாளமே எதிர்ப்புதானே! எதிர்ப்பெனும் துடிப்பு. ஆனால் கடிவாளத்துக்கு படியாமல் முடியாது. கடிவாளம்தான் உன் திசைமானி என்பதை உணர்ந்து அதை ஏற்பதுதான் உன் வளர்ச்சியின் பக்குவத்தின் அடையாளம்.
மகனே, நான் உனக்கு வேலி அல்ல. நீயேதான் உனக்கு வேலி. நான் உன்னுடைய வேர். நீ என்னைத் தாங்கும் விழுது. நான் இன்னும் அசக்தனாக வில்லை. ஆனால் உன்மேல் சாய விரும்புகிறேன். அது எனக்கு பெருமை. ஆகையால் கிட்டே வா. - அப்பா" ...
...." 'என்னை ஆண்டு கொள்' என்று பூமி சூரியனுக்கு காட்டும் ஆராதனை, அர்ச்சனையில் வில்வ இலைகள்போல் புள்ளினங்கள் ஆகாயத்தில் பறந்து செல்வதே ஒரு கண்கொள்ளாக் காட்சி."....
..."இருப்பதுதானே மாறி மாறிப் பங்கு சுற்றி வருகிறது. ஒன்று வேண்டுமானால், வேறு ஒன்றை இழக்கத்தான் வேணும். கிடைப்புக்கும் இழப்புக்கும் வித்யாச எடைதான் தீர்ப்பு, தண்டனை, வெகுமதி எல்லாமே...."...
..."எல்லாச் சாலைகளும் சாலைக்கு நடத்திச் சென்று சாலையில் முடிகின்றன "...
..."அப்பா..கேள்வியும் உங்களுடையது. பதிலும் உங்களுடையதா? எதிராளிக்கு ஒன்னுமே கிடையாதா? உங்களுடைய பதிலை அவன் வாயிலிருந்து எதிர்பார்க்கிறீர்களே தவிர, அவன் பதில்-அவனாகவே நினைத்து அவனிடமிருந்து அவனிச்சையில் வெளிப்படும் அவனுடைய பதில், அது நீங்கள் ஏற்கனவே நினைத்து விட்ட பல பதில்களில் அடங்கிவிட்டாலும்..."....
'கேரளத்தில் எங்கோ' மலை இடுக்குகளில் தொடங்கி சென்னையின் பரந்த வீதிகளில் அலைந்து மீண்டும் அந்த மலை இடுக்குகளில் முடியும் இந்த புத்தகம் ஒரு சாமானியனின் வாழ்க்கை பதிவாகவே எனக்கு தோன்றுகிறது.
சிறந்த தமிழ் நடையில் அமைந்த இது 'அபிதா' வை போன்று மனதில் தடம் பதிக்கவில்லை என்றாலும் ஒரு நல்ல அனுபவத்தை நிச்சயம் தருகிறது.
புத்தகத்தில் இருந்து சில வரிகள், *ஒரு பிரம்மாண்டமான திரைச்சீலைக்கு வழிவிடுவதுபோல் சாலையின் இடப்புறம் மரங்கள் திடீரென ஒதுங்கிப் பின் விழுகின்றன. வானம் மரங்களின் சிறைகளினின்று விடுபடுகின்றது. அண்டப் பிடியிலிருந்து கிருஷ்ணபட்சம், பஞ்சமி நிலா உதயமாகிறது. அந் வட்ட விளிம்படியில் ஏரி ஜலம் செவ்வெள்ளித் தகடாய் ஜ்வலிக்கிறது. சிற்றலைகள் கிளுகிளுக்கின்றன, மீன்களின் துள்ளோசை விட்டு விட்டுத் தெறிக்கிறது.
*பாழுங்கிணற்றில் விழுந்துவிட்ட ஆள் தண்ணீரில் வாயைப் பிளந்து காத்துக் கொண்டிருக்கும் முதலை மேலே துரத்தி வந்த புலி உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு. ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம்புத்தேனுக்கு நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருந்தானாம். என்ன தவறு? இத்தனை கஷ்டங்களிடையே, கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதா? மனிதனின் சபல புத்தியைதான் பார்க்கணுமா!
Though I enjoyed La Sa Ra's biographical work Sindha Nadhi immensely, I am unable to appreciate his fictional works that much. His ability to write the arguments on both the sides is truly amazing.
The author portrays the difference of opinions due to generation gaps. Even though the first person narrative felt like biographical work, this book is identified as fiction only.
மர்மமாக தொடங்கி மர்மமாக முடியும் ஒரு குறுநாவல். கதை நாயகர் பெயர��� மர்மம்தான். ஆங்காங்கே 'சாமி' என்றுதான் அழைக்கப்படுகிறார். வீடு பிடிக்காமல் போனதால் கேரளத்தில் எங்கோ தலைமறைவாகி இருக்கிறார். ஓர் கடிதத்தின் பேரில் வீடு திரும்புகிறார், சென்னைக்கு. அங்கு நடக்கும் நிகழ்வால் மீண்டும் கேரளாவிற்கு திரும்புகிறார்.
தன் இரண்டாம் மகன் ப்ரபுவுக்கும் அவருக்குமிடையே நிகழும் ஒரு சம்பாஷணை நன்றாக இருந்தது. உண்மையில் அதிலிருந்துதான் இக்கதையின் நோக்கமே வெளிப்படுகிறது - தலைமுறை இடைவெளி. Could have been better.