Jump to ratings and reviews
Rate this book

Illuminati

Rate this book
It's about the illuminati families.

176 pages, Paperback

First published January 1, 2017

4 people are currently reading
25 people want to read

About the author

Karthik Sreenivas

2 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (31%)
4 stars
5 (22%)
3 stars
4 (18%)
2 stars
3 (13%)
1 star
3 (13%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Thamiziniyan Supa.
Author 1 book27 followers
November 17, 2021
Worst historical fiction novel.

ஒரு Historical Fiction நாவலாக இந்தப் புத்தகத்தைப் படித்துத் தொலைக்கலாம்.

ஆங்கிலத்தில் வாந்தியெடுத்த கான்ஸ்பிரஸிக் குப்பைகளை நக்கித்தின்று குறைபாட்டு மூளையில் செரித்து மீண்டும் தமிழில் வாந்தியெடுத்தது போன்ற புத்தகம் என தரக்குறைவாக இந்நாவலைப் பற்றி எழுத ஏதோ ஒரு கருமம் தடுக்கிறது.

Connecting the dots என்ற பதத்தை வைத்துக்கொண்டு கட்டுக்கதைகளை அள்ளித்தெளிக்கலாம். இந்தக் குப்பைப்புத்தகமும் அந்த வகையில் கடல் மட்டத்திலிருந்து 300 ஆடி ஆழத்தில் இருந்து ஒரு புள்ளியைக் கொண்டு வந்து ஏழடி ஆழச் சவக்குழியில் நெளியும் புழுவாக ஊர்ந்து ஒரு புள்ளியை இணைத்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடியாமல் செத்துப்போன ஒரு மலையேற்றக்காரனின் சவத்தில் இன்னொரு புள்ளியை இணைத்து எந்த விதமான லாஜிக் மயிறுகளுமற்ற ஒரு இணைப்பு கொடுத்து ஒரு கன்றாவி கதையை எழுதினால் எப்படி இருக்குமோ அந்தளவுக்கு மோசமான கதையாக்கம்.

கட்டுக்கதைகளையும் சுவாரஸ்யமாக அமைத்து எழுதுவதற்கான எந்த பயிற்சியும் இல்லாத ஒருவரால் கூட இந்தக்குப்பையை விட சுவாரஸ்யமாக எழுதிவிடமுடியும்.

ஒரு குடும்பத்தின் பெயர், அந்தக் குடும்பத்தின் ஏதாவதொரு புகைப்படம், கொஞ்சம் உண்மைச்சம்பவங்கள், கண்ட மேணிக்கு OVOP செய்த கட்டுக்கதைகளை மலையளவு கொட்டி மேலே சொன்ன குறைபாட்டு மூளையில் செரித்து வாந்தி எடுக்கிற புத்தகம் தான்...

நீண்ட வருடங்களுக்கு முன்பு இதே போல நாஸ்ட்ரடாமஸின் மண்ணாங்கட்டி தரிசணங்கள் என்ற ஒரு குப்பை புத்தகம் வெளியானது, அந்தக் கருமத்திலாவது இட்டுக்கட்டிய விளக்கங்கள் என கொஞ்சமாவது படிக்கமுடியும்.

அடேய் இலுமின்னாட்டி டிரம்பே... ஒழுங்கா அக்கவுண்ட்ல காசு போடுறா
Profile Image for Ramkumar.
Author 2 books41 followers
October 27, 2021
Felt like a lengthy whatsapp forward read. More assumptions and trying to connect dots which have huge gaps. For example, Walt Disney an Illuminati spoiled kids with his cartoons who were suppose to be studying at that age. If we take the same logic, what about government selling liquor, politicians owning Cinema production houses. I believe same logic applies here too. Suggests to people who are interested to read conspiracy whatsapp forwards.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Balaji Sriraman.
Author 1 book17 followers
September 29, 2020
இல்லுமினாட்டிகள் பற்றி முன்னமே சில பல விஷயங்கள் அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தாலும் இந்தப் புத்தகம் தரும் தகவல்கள் ஏராளம். StoryTel எனும் புதியதொரு செயலி மூலம் ஒலிப்புத்தகமாக (என் முதல் ஒலிப்புத்தகம்) கேட்ட இந்தப் புத்தகம் நிச்சயம் ஒரு impression-ஐ ஏற்படுத்தியது. எவ்வளவு தூரம் இதில் ஆராய்ச்சி உள்ளது என்று தெரியாவிட்டாலும் சாமானியனைக் காட்டிலும் எனக்கு கொஞ்சம் அதிக விஷயம் தெரியும் என்கிற திருப்தி இருக்கிறது. 4 நட்சத்திரங்கள்.
Profile Image for MJV.
92 reviews39 followers
January 17, 2021
சில நேரங்களில் கண் கட்டு வித்தைகள் என்று கூறக் கேட்டிருப்போம். ஆனால் அவை அப்படிதான் என்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல் போகக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும் பொழுது, ஒன்று அவை பொய்கள் என்று புறக்கணிப்போம் அல்லது உண்மையாக இருக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்து கடந்து செல்வோம். இப்படியான ஒரு நிலைப்பாட்டின் உருவமே இந்த உலகினை ஆட்டிப் படைப்பதாய் சொல்லப்படுகின்ற, இந்த உலகத்தினை நோட்டமிட்டு எப்போதும் அவர்கள் விரும்புகிறபடி இவ்வுலகத்தை ஆட்டுவிக்கும் 13 குடும்பத்தினரை உள்ளடக்கிய ஓர் அமைப்புதான் இல்லுமினாட்டி என்கிற அமைப்பு.

இந்த புத்தகம் இல்லுமினாட்டி என்ற அமைப்பின் நோக்கம் என்ன என்பதையும், அதன் தோற்ற வரலாறையும், அதில் அங்கத்தினராய் இருக்கின்ற குடும்ப உறுப்பினர்களையும் ஓர் எளிய அறிமுகமாக நமக்கு கடத்தும் நூல் என்று வைத்துக் கொள்ளலாம். இந்த இல்லுமினாட்டி பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு காணொளி பார்த்திருக்கிறேன். அதற்கு மேல் அதில் பெரிய அளவில் ஈடுபாடில்லை. இந்த புத்தகம் கண்ணில் பட்டவுடன் சரி வாங்கி படிக்கலாம், என்னதான் செய்கிறார்கள் இந்த இல்லுமினாடிகள் என்பதை தெரிந்து கொள்ள படிக்க ஆரம்பித்தேன். லூசிபெரியனிசம் என்ற கொள்கை கொண்ட இவர்கள், அறிவை தான் மிகப்பெரும் ஆயுதமெனவும், கடவுளெனவும்(சாத்தன் என்பதே பொருத்தம் என்கிற வகையில் ஆசிரியர் விளக்கியுள்ளார்) நம்பும் குழு.

ஜெர்மனியின் பவேரியாவில் தொடங்கி இன்று உலகம் முழுக்க ஆக்கிரமித்து இருப்பதாக சொல்லப்படும் இந்த இல்லுமினாட்டிகள் யார்? இவர்களின் நோக்கம் என்ன? ஏன் சட்டென்று நம் கவனத்தை எளிதில் திசை திருப்பும் செயல்கள் நடக்கின்றன. அப்படி ஒன்று நிகழும் பொழுதினில் மனிதர்கள் நாம் எப்படிப்பட்ட நிகழ்வுகளில் தொலைந்து போகிறோம்? விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், போர்கள், வங்கிகள் என்று அனைத்தையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இல்லுமினாட்டிகள் யார் ஏன் இப்படி செய்கிறார்கள்? குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகான இவர்களின் ஆயுதம் எதுவாக மாறியது?

யார் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துகின்றனர்? யார் தொலைக்காட்சியைக் கட்டுப்படுத்துகின்றனர்? நாம் எடுக்கும் முடிவுகள் நாமாகவே எடுக்கிறோமா அல்லது ஒரு மாய காட்சி நம் முன்னால் எப்போதும் பின்னப்படுகிறதா? அமெரிக்கா தான் இதை செய்கிறது என்று, இன்று வரை நினைத்திருந்த அனைத்து நினைவுகளையும் தூளாக்கி பதை பதைக்க செய்கிற புத்தகம். இல்லுமினாட்டிகளின் உலகம் என்ன, அவர்கள் ஏன் உருவானார்கள்? எண்ணிப் பார்க்க முடியாத பணத்திற்கும், செல்வத்திற்கும், அதிகாரத்திற்கும் நிழல் உலகின் சொந்தக்காரர்கள் இவர்கள்.

உண்மையில் இந்த புத்தகம் இந்த உலகத்தினை பார்க்கும் விதத்தை மற்றும் வகையில்தான் அமைந்திருந்தது. இவர்களைப் பற்றி பல ஆண்டுகளைக் கடந்தும் ஆராய்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறன. ஆனால் உண்மைகள், பொய்கள் என்று பிரித்தறிய முடியாதபடிக்கு கொட்டி கிடக்கின்றன இவர்களைப் பற்றிய செய்திகள். ராட்சீல்டு குடும்பம் தொடங்கி ராக்பெல்லர் குடும்பம் என்று மொத்தம் 13 குடும்பங்கள்தான் இந்த உலகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நிகழ்த்திக் காட்டுவதாய் சொல்லப்படுகிறது. வால்ட் டிஸ்னி குடும்பம், லீ குடும்பம், டூபாண்ட் குடும்பம் என்று ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு குடும்பம் இயல்பாகவே சக்தி மிக்கதாக உள்ளது.

ஆனால் இவர்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக இருப்பது பிரிட்டிஷ் ராஜவம்ச குடும்பத்தினர் என்று கூறப்படுகிறது. 2ஆம் உலகப்போருக்கு பின்னர் தொடங்கப்பட்ட ரகசிய திட்டம் Mind Control எனப்படுவதாகும். உலகைக் கட்டுப்படுத்த வந்த மாபெரும் சக்தியாக உருவெடுத்தது பொழுதுபோக்கு துறை. உலகத்தை கட்டிப்போட இவர்களால் எடுக்கப்பட்ட ஆயுதம் ஒன்று பொழுதுபோக்கு இன்னொன்று பணம். பல நாடுகள் சட்டென உள்நாட்டு போரில் அழிந்து போவதும், சில நாடுகளின் பொருளாதாரம் சட்டென பொங்கிப் பெருகுவதும், இப்படி எல்லா செயல்களையும் திட்டமிட்டு செய்வது இல்லுமினாட்டிகள் என்று இந்த புத்தகம் கூறுகிறது. நாடுகள் கடந்த மனிதர்கள் இதன் அங்கத்தினராய் இ��ுப்பதாய் தெரிகிறது. ஒரே நோக்கம் உலகம் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே. அது யாருக்கும் தெரிந்து செய்யப்படுவதில்லை என்றும் எல்லாமே மறைமுகமாய் நடைபெறும் தன்மையில் தான் இவர்களின் வெற்றியே இருப்பதாய் எழுத்தாளர் தெரிவிக்கிறார்.

இவை அனைத்தும் கட்டுக்கதை என்று எளிதில் கடந்து போகவும் செய்யலாம். அல்லது ஆமாம் என்று ஒத்து கொள்ளவும் முடியும். இவர்களை என்ன செய்ய முடியும்? அல்லது இவர்கள் உண்மையில் இருக்கிறார்களா? என்பது போன்ற கேள்விகளை முன் வைத்தவர்கள் பலரும் இங்கு தற்போது இல்லை என்பதிலிருந்து, கற்பனையில் கடந்து போக முடிகின்ற ஒற்றை சொல் இல்லுமினாட்டி அல்ல என்பது மட்டும் விளங்குகிறது. மற்றவை பற்றி தெரியவில்லை. வாசிக்கலாம், தெரிந்து கொள்ளலாம். படித்துப் பாருங்கள்...
Profile Image for Krishna Priya.
16 reviews4 followers
June 2, 2021
இல்லுமினாட்டி என்ற வார்த்தை முதன்முதலில் ஒரு திரைப்படத்தில் தான் கேள்விப்பட்டேன்.அதற்குப் பிறகுதான் இலுமினாட்டி பற்றிய அர்த்தத்தை தேட ஆரம்பித்தேன். இல்லுமினாட்டி என்ற சொல்லிலை உலகை முழுமையாக அறிந்துகொண்டு முக்தி அடைந்தவர்கள் என பொருள் கொள்ளலாம்.

இந்த உலகத்தை 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது விருப்பப்படி ஆட்டி வைக்கிறார்கள் . உலகை நோட்டமிடும் கண்கள் என்று இவர்களைக் கூறுவார்கள்.

இந்தப் புத்தகம் இல்லுமினாட்டி என்ற அமைப்பை பற்றியும், அதன் தோற்றம் ,அதன் உருவான விதம் ,நோக்கம், அதில் உறுப்பினராக உள்ளவர்கள் என அனைத்து கருத்துக்களையும் நமக்கு புரியும் படி விளக்கப்பட்டுள்ளது.

யார் இவர்கள் ?இவர்களின் நோக்கம் தான் என்ன? உலகின் பணப்புழக்கத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? ஏன் திடீரென்று நமது கவனத்தை திசை திருப்புகின்ற செயல்கள் நடக்கின்றன? உலகின் அத்தியாவசிய பொருட்களான நுகர்வு பொருட்கள், பெட்ரோல், டீசல், அணுசக்தி ,மெடிக்கல், ஆயுதங்கள், மீடியா ,வங்கிகள், அரசியல் ,உணவு, மத அமைப்பு, நில அமைப்பு ,தகவல் தொடர்பு என அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இல்லுமினாட்டிகள் யார்? ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பதற்கான அனைத்து காரணங்களையும் பற்றி விரிவாக இந்த புத்தகம் அலசுகிறது.

உலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதே இப்புத்தகத்தின் நோக்கம். நாடுகடந்த மனிதர்கள்தான் இதன் அங்கத்தினராக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கதை என்று நினைத்தால் கதை. இதைப்பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள இப்புத்தகம் நிச்சயம் நமக்கு பயனுள்ளதாக அமையும்.
Profile Image for இராவணன்.
15 reviews2 followers
August 19, 2021
It's so exciting to read conspiracy stuff,this is created in such a interesting way, it's like watching avengers movie,funny and grippy...
Worth a try in leisure
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.