எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன? இதுவரை நடத்தப்பட்ட விண்வெளி ஆய்வுகள்மூலம் நாம் புதிதாக என்ன கற்றிருக்கிறோம்? இயற்பியலும் உயிரியலும் புவியியலும் நம் அறிவை எப்படி விசாலமாக்குகின்றன?அணு முதல் இமய மலை வரை; வெட்டுக்கிளி முதல் டைனோசார் வரை; நிலம் முதல் ஆகாயம்வரை; ரத்தம் முதல் மூளை வரை; ஓசோன் முதல் பொலோனியம் வரை; பனிக்கட்டி முதல் எரிமலை வரை; நிலா முதல் ரோபோ வரை. அனைத்தையும் மிகவும் எளிமையாக, ரசிக்கும்படி அறிமுகப்படுத்துகிறது இந்த அறிவியல் பெட்டகம்.
இந்நூலின் ஆசிரியர் என்.ராமதுரை அவர்களை பற்றி மிக சமீபத்தில் தான் கேள்வி பட்டேன். http://www.ariviyal.in/ என்னும் தன் வலைத்தளத்தில் அவர் எழுதிய சில கட்டுரைகளை படித்து விட்டு, அவரது எழுத்தின் மேல் ஆர்வம் கொண்டு இப்புத்தகத்தை வாங்கினேன். எளிய நடையில், மிக சரியான உவமைகளுடன் அறிவியல் செய்திகளை விளக்குகிறது இப்புத்தகம். ஆச்சர்யமூட்டும் பல அறிவியல் செய்திகளை சுவாரசியமான நடையில் எழுதி இருக்கிறார். சில பக்கங்களே நீளும் கட்டுரையில், அறிவியல் செய்தி பற்றிய ஒரு குறிப்பு, அதை பற்றிய விளக்கம், உடன் ஒரு ஆச்சர்யமளிக்கும் செய்தி என கச்சிதமான நடையில் எழுத்தப்பட்டுள்ளது.
சப்மரீன் கடலில் மூழ்குவது எப்படி என்பதை இப்படி விளக்குகிறார். "இறுக மூடப்பட்ட ஒரு காலி பாட்டிலை நீர் நிறைந்த தொட்டியில் போட்டால் அது மிதக்கும் . ஆனால் அந்த பாட்டிலின் மீது ஓர் இரும்புத் துண்டைக் கட்டி நீரில் போட்டால் பாட்டில் மூழ்கிவிடும் . அந்த இரும்புத் துண்டு தகுந்த எடை கொண்டதாக இருக்குமானால் பாட்டில் அடிமட்டத்துக்குச் செல்லாமல் நீரில் அமிழ்ந்தபடி இருக்கும் . சப்மரீனும் காலி பாட்டில் மாதிரிதான்"
புனைவு இழைகள் என்பது என்னை சுத்திகரிப்பு செய்வதில் இருந்து கிடைக்கும் துணைபொருள் என்பதும், ஜோசியத்தில் நாம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களை ஏன் தேர்ந்தெடுத்தோம், கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்வது என்றால் என்ன என்பதை பற்றிய விளக்கமும் என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது. அம்மாவாசை அன்று நிலவை காண முடியாததை பற்றி விளக்குகையில், "எதிரே நிற்பவரின் முதுகை உங்களால் காண இயலாது என்பது போலவே சூரிய ஒளிபடும் சந்திரனின் முதுகுப் புறத்தை நம்மால் காண இயலாது" என சாதாரணமாக சொல்லி செல்கிறார்.
வானில் உயரே உயரே செல்ல செல்ல காற்றின் அடர்த்தி குறைவதால், உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது, அதனால் நினைவிழந்து, உயிர் போய்விடும். இதை, "ஒரு சிட்டிகை உப்பை உட்கொள்ள வேண்டும் என்றால் அதை கால் தம்ளர் நீரில் கரைத்துக் குடிப்பதுதான் சரி . ஒரு பெரிய அண்டா தண்ணீரில் அந்த உப்பைக் கலந்தால் அண்டா தண்ணீரையும் குடிக்க வயிற்றில் இடம் கிடையாது. வானில் மிக உயரத்தில் இதுதான் நிலைமை" என்னும் போது மிக எளிதாக புரிந்து விடுகிறது.
பூமியில் மனிதன் காலடி படாத இடம், சேறு எரிமலை, விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன், வானில் பழுதடைந்த ஸ்கைலாப் விண்கலம் இந்தியாவில் விழலாம் என பீதி நிலவிய நேரத்தில் ஸ்கைலாப் சிங் என பெயரிடப்பட்ட குழந்தை, Airships, Nuclear Fusion, பிளம்பர் என்னும் சொல் உருவான காரணம், உலகில் மிக மூத்த பாறை என பல தளங்களில் விரவி செல்லும் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழில் எழுத்தப்பட்ட அறிவியல் கட்டுரைகளில் மிக முக்கியமானது.