நமது இந்தியா ஓர் ஆன்மீக புண்ணிய பூமி. இங்கு பல மகான்கள் வாழ்ந்து, தங்களது ஆன்மிகப் பணியின் வாயிலாக மக்களின் வாழ்க்கையை செழிப்படையச் செய்து, புகழுடன் மறைந்துள்ளனர். இந்த மகான்களை "நடமாடும் தெய்வங்கள்" என்று அழைக்கலாம். இவர்கள் எந்த நேரமும் கடவுள் சிந்தனை கொண்டவர்கள். ஆன்மீகக் கருத்துக்களை மக்கள் மனங்களில் விதைத்து, மக்களிடையே ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியவர்கள். இவர்கள் தெய்வீகத்தன்மை கொண்டவர்கள். யோக நிலையில் கடவுளுடன் பேசும் ஆற்றல் கொண்டவர்கள். மகான்கள் பெரும்பாலும் மௌனமாக இருப்பார்கள். இவர்கள் மக்களைத் தேடிச் செல்வதில்லை. மக்கள் தான் இவர்களைத் தேடிச் சென்று அருளாசி பெறுகின்றனர். மகான்கள் தங்களைத் தேடி வரும் பக்தர்களின் வாழ்வி