கடவுச்சொல்: விறுவிறுவிறுப்பான தமிழ் நாவல் ஆசிரியர்: ஜெயராஜ் விஜய்குமார் எதிர்பாராத திருப்பங்கள், மனதோடு ஒட்டும் பாத்திரங்கள், நம்மைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகள், ஆதாயத்துக்காக உறவுகள் செய்யும் துரோகங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்திய தாக்கம், நமது கண்களுக்கு மறைவாக அதிகார மட்டங்களில் நடக்கும் இரகசிய நகர்வுகள் அத்தனையையும் இக்கதை பிரதிபலிக்கிறது. இது ஒரு இலக்கியம் தொடர்பான நாவலோ அல்லது மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் வகை நாவல் அல்ல. அரசியல் நையாண்டி மற்றும் சஸ்பன்ஸ் திரில்லர் வகை நாவல் என்பதையும் இலக்கிய ஆர்வலர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். விறுவிறுப்பான கதையமைப்பு, எளிய உர
பணம், எவருக்கும் அது வந்த வழிகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல அதன் மதிப்பு மட்டுமே கண்களை நிரப்பும்.
தமிழக அரசியலில் விளையாடும் கறுப்புப் பணத்தைத் தனதாக்கி கொள்ள முயல்பவர்கள் சந்திக்கும் இழப்புகளைக் களமாகக் கொண்ட கதையில் ஏமாற்றம் அடைந்த பிறகு அநீதி கூட ஒருகட்டத்தில் வெறுத்து நேர்மையின் பக்கம் சாய்த்துவங்கும் என்பதாக முடிகிறது.
தனக்குக் கீழ் உள்ளவன் தன்னையே தாக்கும் வலிமை கொண்டவனாக மாறுவதைத் தாங்கமுடியாத தமிழக முதல்வர் அவனை அழிக்க நினைத்ததில் வெற்றி பெற்றாலும் அவன் மூலமாகக் கிடைக்க வேண்டியதாக அவர் போட்டு வைத்த கணக்குகளை மகனே நிர்மூலமாக்கி தன்னை அரசியல் ஆட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தியதை தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்.
நியாயத்தின் உள்ளே கதாபாத்திரங்களை அடக்காமல் இயல்பாக உலாவ விட்டதே கதையின் சுவாரசியங்களாகிறது.
சிறுவர்களுக்குக் கதை சொல்லும் போது “புரியுதா” என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பது மாதிரி இக்கதாசிரியர் கதையின் உள்ளே வந்து வாசிப்பவர்களிடம் பேசி செல்கிறார்.
விறுவிறுப்பு. கதை படிப்பவர்களோடு ஆசிரியர் உரையாடும் நடை. பல முடிச்சுகளை, கால ஓட்டத்தில் பின்னோக்கிச் (flashback) சென்று அவிழ்ப்பது ரசிக்கும்படி இருந்தது. தமிழ் நாவல்கள் (Rajeshkumar, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர்) பிடித்தோருக்கு இந்நூலும் பிடிக்கும். கடவுச்சொல் மீளமைத்தல் (Password reset), கணக்கு செயலிழக்கச் செய்தல் (Account Blocking) போன்றவற்றை தொழில்நுட்பம் (Technology) அறியாதவர்களுக்கும் ஏற்றவாறு எளிமைப்படுத்திச் சொல்லிய விதம் பாராட்டுக்குரியது. அக்காலத்தில் காகிதத்தில் அச்சடிக்க வேண்டும் என்றதால் குறைந்த பக்கங்களில் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இப்போது மின்நூலாகத் தருவதால் அச்சுச் செலவு இல்லை, அதனால் இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதி இருக்கலாம். தூக்கம் வரும்வரை படித்தாலே இரண்டு இரவுகளில் படித்து முடித்து விடலாம் என்னும்படி சிறிய நூல். அமேசான் பக்கங்களை கணக்கிட வைத்திருக்கும் algorithmல் ஏதும் பிழை போல. நிறைய பக்கங்கள் இருந்ததாகச் சொன்னது ஆனால் கதை உடனே முடிந்துவிட்டது, விறுவிறுப்பும் வேகமாக நகர்ந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நல்ல முயற்சி.
Very Good work by the author. The story moves with a political touch and i can very well related it to the current indian politicians. The twists and unexpected events are good and handled nicely. I thoroughly enjoyed the flow of books. First few pages were very drowsy , but then after sometime you will be glued to the book. Very good effort to keep the secret. Good job. The finishing was a positive one , though i expected something else.(That's why i gave 4 stars) Nevertheless , for sure the book "கடவுச்சொல்" is worth a read.
Kadavuchol (Password) Story sticks with the title. Political oriented story. Story timeline reflects the few scenario of contemporary. Apart from that perfect fiction roped with vengence, love, emotions. Once you understand and keep the characters in your mind then it's easy to get the flow of the book.
Surely it will be converted into film... It deserves. Eagarly waiting to see in theatre. My heartful thanks to Mr. Vijayakumar jayaraj for the wonderful Novel. Expecting more from you. 😊
Enjoyed reading this unputdownable thriller novel. The number of twists in this technical novel and their seamless integration convey the amount of hardwork done by the author.
விறுவிறுப்பான அரசியல் கதை. கறுப்பு பணத்தை அடைய இளங்கோ ஒரு வழியிலும், அர்ஜுன் ஒரு வழியிலும் முயலும் பகுதிகள் நன்றாக இருந்தது. Smart glasses கதையில் முக்கியமான ஒன்றாக இருக்கமோ என்று நினைத்தேன். ஆனால் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.