இந்த நாவல், எனது நாவல்களிலேயே இன்றளவும் அதிகமாகப் பேசப்படுகிறது. இதற்கு இணையாக எனது 'வாடாமல்லி' இப்போது பேசப்பட்டாலும், இந்தப் படைப்பு, இந்த நாவலின் வயதளவிற்கு வரும்போது பேசப்படுமா என்பது புதிர்தான். 'ஒரு கோர்ட்டுக்கு வெளியே'யின் சிறப்பு, எந்தப் பத்திரிகையிலும் தொடர்கதையாக வெளிவராமல், நேரடியாக எழுதப்பட்டது என்பதுதான். என்ன காரணத்தினாலோ, பதிப்பாளர்கள், இந்த நாவலை நூலகங்களுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. ஆனாலும், இந்த நாவலைப் போன்ற தாக்கத்தை, எந்த நாவலும் இந்த அளவிற்கு ஏற்படுத்தவில்லை. - சு.சமுத்திரம்
ஊர் முக்கியஸ்தர் ஒருவர் செய்யும் குற்றத்திற்கு துணை போகாமல் தனது மனசாட்சிப்படி நடந்து கொண்ட ஒரு பெண்ணை அந்த ஊர் முக்கியஸ்தர் எவ்வாறு பழி வாங்குகிறார் என்பது கதை. தனிமனித பழிவாங்கலாக தொடங்கும் கதை ஒரு கட்டத்திற்கு மேல் ஜாதிய ஒடுக்கு முறையாக மாறுகிறது. கதை 65 70 ஒட்டிய காலகட்டங்களில் நடக்கிறது ஒரே ஜாதிக்குள் இருக்கும் கிளை ஜாதிகள் கூட மோசமான ஜாதியை உணர்வுகளையும் தீண்டாமைகளையும் பகைமைகளையும் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிகிறது. ஊர்க்காரர்ள் மிக மோசமாக அந்த பெண்ணை நடத்த துவங்குகிறார்கள் ஒரு கட்டத்தில் வாசகர் ஆன நமக்கு இந்த ஊர் மக்கள் அத்தனை பேரையும் வெட்டி எறிய வேண்டும் என்ற கோபம் கூட எழுகிறது அந்த அளவுக்கு ஒரு மோசமாக நடத்துகிறார்கள். தனி ஆளாக ஊர்க்காரர்களின் கால்களில் விழாமல் ஜாதியை கோட்டை உடைத்துக் கொண்டு வந்து வாழ்ந்து காட்டியதால் உலகம்மை தமிழில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக ஆகிவிட்டாள். தமிழில் இந்த நாவல் வெற்றி பெற்ற ஒன்றாகவே இருந்து வந்துள்ளது இதன் மொழி மிக இலகுவாக இருந்தாலும் சில இடங்களில் வட்டார வழக்குச் சொற்கள் புரியாமல் ஆவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இளையராஜாவின் இசை உலகம்மை என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது ஆனால் அந்த திரைப்படம் எங்கேயும் காண கிடைக்கவில்லை அல்லது இன்னும் வெளியாகவில்லையா என்று தெரியவில்லை.
மிக அருமையான புத்தகம். ஆசிரியரின் எழுத்து நடையும் வசனங்களும் ஆழமாக உள்ளது. கதை களத்திற்கே அந்த கால காலகட்டத்திற்கே நம்மை கடந்த சென்று விடுகிறார். ஆழ்ந்த கருத்து செறிவு. இது பாடப்புத்தகம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது.