எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
"நேர்க்கோட்டில் போகிற ஒரு வாழ்க்கையுண்டு. அதில் தர்மங்கள் உண்டு. தர்மங்கள் குறித்த சங்கடங்கள் உண்டு. தர்மம் என்று சொல்லப்படுபவற்றை எட்டி உதைக்கும் ஒரு நிழல் உலக வாழ்வும் அந்தக் கோட்டை ஒட்டியே கிளர்ந்தெழுந்து வருகிறது. அரசியல் சார்ந்த வணிகத்தில் அவர்களின் இருப்பு தவிர்க்க முடியாதது. ஏழைகள் நிறைந்த தேசத்தில் அவர்களது தலைவிதியைத் தீர்மானிப்பவர்களுக்கு நெருக்கமான இருட்டு உலகத்தைப் பதிவு செய்யும் நாவல் இது. தரையிலிருந்து புறப்பட்டு கோபுரத்தைச் சாய்க்க விளையும் இளம் எத்தனத்தை அதன் பின்னணியோடு விர்க்கிறது. ஒழுக்கவியலைப் போற்றும் தட்டிலிருந்து புறப்பட்ட ஒருத்தன், வாழ்வின் நிமித்தமாக, அத
இந்த எழுத்தாளன் மீது ஏனோ ஒரு ஈர்ப்பு , ஆனால் வாசிக்க முடியவில்லை.
இந்த நாவலை வாசிக்க வாசிக்க பக்கங்கள் புரண்டதே தெரியவில்லை, அரசுக்கும் நமக்கு இருக்கும் இடை தரகர்கள் தான் கதையின் மாந்தர்கள். நாயகன் எவ்வாறு ஒரு ஆடு புலி போல் காரியங்களை திறம்பட நடத்துகிறான் ஒரு மேஜிக் ஷூ அல்ல எல்லாம் கரிய தரிசனம்!
வாழ்வின் எந்த உயரம் சென்றாலும், நம்மை சுற்றி ஒரு கூட்டம் இருக்க தான் செய்யும், அதை தக்க வைக்க ஒரு போலி சாயல் நம்மில் உள்ளது, நாயகன் அவனே.நம்மை நேசிப்பது ஒருவர் ஆயினும் அதுவே ஆதுரம், ஆனால் நாம் அதை என்றுமே எண்ணுவதில்லை.
தொடர்புகள் தான் இங்கே மென்மை, செயலை முடிக்க பணம் மற்றும் தகுந்த ஆளுமை தான் இந்த கதை ஆடல்.
சந்திரன் எல்லோர் வாழ்விலும் வருவானா தெரியாது. ஆனால் அவன் போல் இங்கு சிலரே உள்ளனர்!
பல அடுக்குகள் கொண்ட ஆனால் எளிமை ஆன ஒரு நாவல்!!
போலிகள் ரோலக்ஸ் இல்லை, இருந்தாலும் இருக்கலாம் ஆனால் !!! காரணம் இன்னும் அருமை நாவலில்....
நான் படிக்கும் சரவணன் சந்திரனின் முதல் நாவல். மிக எளிய நடையில் இருந்தது. நான் இதுவரை அறிந்திராத அரசியல் தரகர்களின் வாழ்கையை பற்றி கூறியிருக்கிறார் சரவணன் சந்திரன். பல இடங்களில் என் பெயர் ராமசேஷன்ஐ நினைவுபடுத்தியது. இது ஒற்றை கதையாக கையாளபட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பல நிகழ்வுகளின் தொகுப்பாக இருப்பதனால் இதில் கூறப்படும் சந்திரனின் கதையை என்னால் ஒன்றி கவனிக்க இயலவில்லை. எனினும் Rolex watch என்ற பெயர் காரண நிகழ்வு மிக கவித்துவமாகவும் தத்துவார்தமாகவும் சொல்லபட்டிருக்கிறது.
நிறைய சம்பவங்களையும் அனுபவங்களை சுவாரஸ்யமாக படைத்திருக்கிறார் ஆசிரியர். கல்லூரிக்கால அத்தியாயங்கள் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. கதையின் ஓட்டம் பல இடங்களில் தாவிக் கொண்டே இருந்ததை தவிர்த்திருக்கலாம்.
உண்மையானது எது பொய்யானது எது, ரோல்ஸ் வாட்ச்சிற்கு மட்டுமே இந்த குழப்பம் வரும். நடந்தவற்றை கோர்வை இல்லாமல் தொகுதிகளாக தருகிறது இந்த ரோல்ஸ் வாட்ச். புத்தகத்தின் நீளம் சற்று குறைவாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது
கதாநாயகன் தான் சந்தித்த பலரகங்களில் இருந்த கதாபாத்திரங்களை பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். பிற கதைகள் போன்று முதல் என்றும் பின்னர் முடிவு என்றும் இல்லாமல் 'ஜி நாகராஜன்' அவர்களின் புத்தகங்களான 'நாளை மற்றும் ஒரு நாளே' போன்றும் 'குறத்தி முடுக்கு' போன்றும் நகர்கிறது.
A novel with an interesting premise of showcasing bits and pieces of the rags to riches lifestyle of the main character growing into a "shadow man" involved with various political and government dealings. Each chapter focusing on different characters doesn't satisfactorily end up creating a portrayal of the few main characters that are clearly intended to be of reader's interest. I enjoyed the narration and events whenever the setting moved to college life, it is clearly one of the stronger elements of the novel. Except for some portions when the narration shone with biting sarcasm, it was somewhat of a "mid" experience overall.
சமகால அரசியல் தரகர்களின் வாழ்வை இவ்வளவு ஆழமாக பேசிய நாவல் எதுவுமில்லை . வாய்ப்புக்காக காத்திருக்கும் அத்தனை பேரும் தவமிருப்பவர்கள் இல்லை அதே நேரம் சாதாராண ஆசா பாசங்கள் உள்ளவனும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி வெற்றியை சுவைப்பான் என்கிற மனித சமூகம் இன்று வரை மறுத்தலித்துக்கொண்டிருக்கும் உண்மையை கருவாக எடுத்து எழுதியிருக்கும் ஆசிரியரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் . கலை வடிவம் அனைத்திலும் ஒரு நாயகனை அவனுக்கேற்ற வில்லனை ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கும் வாசகர்களை ஏமாற்றும் ஆசிரியர் அதைத்தாண்டி வாழ்வின் சாரம்சம் இது தான் , இப்படியும் கூட இருக்கும் என்ற முடிவுக்கு வாசகர்களை convince செய்துள்ளார் . கண்டிப்பா சமகால இலக்கிய படைப்புகளில் தனக்கான இடத்தை பிடிக்கும் நாவல் இந்த ரோலக்ஸ் வாட்ச் . பல நாட்கள் என் கண் முன்னேயிறுந்தும் எடுத்து படிக்காததற்கு வருந்துகிறேன், கண்டிப்பாக பரிந்துரைகளுக்கு ஏற்ற, இலக்கிய ஆர்வமுள்ளவர்களுக்கான நாவலிது.
ரொம்ப ஜல்லி அடித்து எழுதலாம் தான், ஆனால் சில விஷயங்களை அப்படி எழுதுவது அபத்தம் என புரிகிறது, என்னுடைய வேலையில் இடையில் சிறுது சிறிதாக படித்த நூல், ஒவ்வொரு அத்தியாயமாக பெருமையாய் படித்தது மனதை நெகிழ்த்திவிட்டது, சந்திரனுக்காக நானும் மனமார வேண்டி கொண்டேன் என்பது தான் உண்மை, அவர் உண்மையா இல்லையா என தெரியவில்லை, உண்மை என்றால் அவர் கண்டிப்பாக மீண்டுவரவேண்டும், இதில் வருகிற ஒவ்வொரு கேரக்டரையும் தனித்தனியாக விலாவாரியாக அனுபவித்து எழுத வேண்டும் என்றே அவா, பட் அதிகமான டைம் என்றதால் மனதில் அசைபோட்டு கொண்டிருக்கிறேன், எத்தனை நயமாக வடிக்கப்பட்ட கதாபாத்திரங்கள், அவர்களின் மனவெழுச்சிகள், அக சிக்கல்கள் என எழுத்தாளர் மெனக்கெட்டு வடித்து இருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது, கண்டிப்புப்பாக தவர விடக்கூடாத நாவல் இந்த "ரோலக்ஸ் வாட்ச்"
யாரோ ஒருவர் தான் சந்தித்த பல மனிதர்களை பற்றி அவர்களின் நினைவுகளை பற்றி புல் மப்பில் உங்களுடன் பகிர்ந்துகொண்டால் எப்படி இருக்கும் அப்படிதான் இருந்தது ரோலக்ஸ் வாட்ச்.
Insert "ச��்ர்ர்ரஆஆஆ அதுக்கு என்ன இப்ப" கண்ணாத்தாள் வடிவேலு image.
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் அது வீஏஓ அலுவலகமாகட்டும் பிரதமர் அலுவலகமாகட்டும் “இவரை பிடி காரியம் நடக்கும்” என ஒருவரை சொல்வார்கள், அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை சொல்லும் புத்தகம் இது. இவர்கள் எங்கும் தனியாக இல்லை, நம்முடனே கலந்து இருப்பார்கள், இவர்களது அகராதியில் சம்பளம், இலாபம் என்றெல்லாம் இருக்காது, இந்த வேலை முடித்து கொடுத்தால் இவ்வளவு வருமானம் அவ்வளவுதான், புரிகிறதா? வேலை செய்ய மாட்டார்கள், வேலையை முடித்து தருவார்கள்.
நிலத்திற்கு பட்டா வேண்டுமே?
இவ்வளவு செலவாகும்,
அடுத்த வருடம் பத்ம விருது வேண்டுமே?
இவ்வளவு செலவாகும்.
அந்த பணம் யாருக்கெல்லாம் போகும்?
அது சொல்வதற்கில்லை,
அதில் உனக்கு எவ்வளவு கமிஷன்?
அது உனக்கு தேவையில்லாதது,
இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்?
ரோலக்ஸ் வாட்ச் புத்தகத்தை படித்து தெரிந்து கொள்
முதலில் வாங்கி வைத்துள்ள புத்தகங்களை படித்து முடிக்காமல் புது புத்தகங்கள் வாங்குவதில்லை என்று முடிவெடுத்து 2 வருடம் பக்கம் ஆகிறது. இன்னும் இருக்கும் புத்தகங்களை முடிக்க முடியவில்லை, ஆனாலும் வேறு ஏதேனும் வகையில் பரிசாகவே எழுத்தில் ஈடுபடும் நண்பர்களின் அன்பளிப்பாகவோ புத்தகங்கள் சேர்ந்துக் கொண்டேதான் போகின்றன. அடுத்து புத்தகங்கள் வாங்கும் போது சரவணன் சந்திரனின் அனைத்து புத்தகங்களையும் வாங்கிவிடுவது என்ற விருப்பத்தில் இருந்தேன். அதற்கு முன்பாகவே ஒரு சிறுகதைப் போட்டியின் பரிசாக ரோலக்ஸ் வாட்ச் புத்தகம் என் வசம் வந்து சேர்ந்தது.
படிக்க ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி 158 பக்கங்கள் முடிந்ததென்றே தெரியவில்லை, கடைசியாக வெட்டாட்டம் நாவல் இவ்வளவு வேகமாக வாசித்தது. நிழல் உலக மனிதர்களை பற்றிய கதைதான் என்றாலும் இது முழுக்க மனிதனின் மனம் பற்றியது. அவனது ஈகோவைப் பற்றியது. தொடர்ந்து எழுத்தாளரின் எழுத்துக்களை முகநூலில் வாசித்தாலும் அதற்கும் புனைவிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம், ஏகப்பட்ட விறுவிறுப்பு.
சின்னதாக ஒரு கேள்வி, நீங்கள் புதிதாக ஒரு கார் வாங்குகிறீர்கள் அல்லது வீடு, யாருக்கெல்லாம் முதலில் சொல்வீர்கள்? உறவினர்களிடம், நண்பர்களிடம். எதற்காக உங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக, சரி இருக்கட்டும், ஒருவர் இருப்பார் உங்கள் நட்பு வட்டத்திலோ அல்லது உறவு வட்டத்திலோ. அவரை நீங்கள் எதிர்க்க முடியாது, அவரை விட்டு நீங்கள் விலகவும் இயலாது. அப்படி ஒருவரிடம் தான் உங்கள் வளர்ச்சியை ஒவ்வொரு முறையும் முதலில் காட்ட முனைவீர்கள் என்கிறேன். இல்லை அப்படி யாரிடமும் நான் போய் செய்வதில்லை என்கிறீர்களா? சரி இருக்கட்டும், உங்களிடம் ஒருவன் ஒவ்வொரு முறையும் நான் இதை சாதித்து விட்டேன் அடுத்து இதை செய்ய போகிறேன் என சொல்லிக் கொண்டே இருப்பானே கவனித்ததுண்டா?
கலிகாலத்தில் ஒவ்வொரு நல்லவனுக்குள்ளும் தீமை கலந்திருக்கும், ஒவ்வொரு கெட்டவனுக்குள்ளும் நன்மை கலந்திருக்கும் என்பார்கள். அதே போல இங்கு ஒவ்வொரு நண்பனுக்குள்ளும் ஒரு எதிரி இருப்பார், ஒவ்வொரு எதிரிக்குள்ளும் ஒரு நண்பன் இருப்பான். அதனால் தான் பிடிக்கிறதோ பிடிக்கலையோ சிலரை விலக்காமல் உடன் வைத்துக் கொள்வது, சிலரை எதற்கும் தள்ளி தொலைவில் வைத்துக் கொள்வது. அப்படிப்பட்ட இருவர் பற்றிய கதைதான் இது
“அண்ணா இந்த இங்கிலிஸ் படத்துல யார் ஹீரோன்னே தெரியலைன்னா, எல்லாரும் ஒரே மாதிரி இருக்கானுங்க”
“நல்லா பாரு, அதுல அதிகம் பேசாதவன் தான் ஹீரோவா இருப்பான்”
நான் மிக மிக இரசித்த வசனம், எப்படியாவது தன் நண்பனை தன் குருவை தன் சகோதரனை முந்தி விட வேண்டும், அவனது பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி சுதந்திரமாக இருக்க வேண்டும் என மனதிலும் வெளியிலும் போராடும் நாயகனால் சந்திரனை இறுதி வரை வெல்ல முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதில் யார் நாயகன் என்ற முடிவுக்கே வர முடியாது.
எந்த மேடையில் என்று நினைவில்லை, ஆனால் ஒரு இடத்தில் சாரு தனது எழுத்துலக வாரிசாக சரவணன் சந்திரனை ஏன் குறிப்பிட்டார் என்பதை 50 பக்கங்கள் தாண்டுவதற்குள் புரிந்துக் கொண்டேன்.
இராயல் என்பதன் வார்த்தையை சொல்லி புரிய வைக்க முடியாது, அது ஒரு வாழ்க்கைமுறை, வாழ்ந்தால் தான் புரியும். பணம் சம்பாதிப்பது மிக சிரமமான ஒன்று என நினைப்பவர்களால் அந்த வாழ்க்கையை நெருங்கக் கூட முடியாது. அதில் சிறிதேனும் அனுபவம் உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நூல் பிடிக்கும்
எனக்கு மிக மிக பிடித்திருந்தது. சில இடங்களில் என்னை பிரதிபலிக்கும் பாத்திரங்களும் வந்ததால் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.
தமிழ்ப்பிரபாவின் பேட்டையிலும் சிறுகதைகளாக சில மனிதர்கள் வருவார்கள். சிறுகதை அளவிற்கு அதன் நிறைவையும் கொடுத்திருப்பார்கள். அதேநேரம் அந்தக்கதைகள் இல்லாவிட்டாலும் நாவலில் எவ்வித குறைபாடும் இருக்காது. இங்கு நாவல் முழுக்க மனிதர்கள் வருகிறார்கள். இருந்தும் ஒருவர் கூட சிறுகதை அளவுக்குக் கூட தாக்கம் ஏற்படுத்தவில்லை. பெரும்பாலான மனிதர்கள் ஏதேனும் ஒன்றிற்கான உவமைகளாக வந்து போகிறார்கள். விநாயக முருகனின் உத்தி கூட இதுவே. ஒரு உவமையைச் சொல்ல வேண்டுமென்றால் அந்த உவமையை உருவாக்க மிகப்பெரிய சம்பவம் ஒன்றை உருவாக்குவார் பின் அதில் இருந்து உவமையை எடுத்து இதைப்போல் என கொண்டு வருவர். சில சமயங்களில் அவை சுவாரசியமாக இருக்கும், சில சமயங்களில் ஷப்பா என பெருமூச்செறியச் செய்யும். சரவணன் சந்திரன் கூறும் மனிதர்களும் பெரும்பாலும் அவ்வாறாகத்தான் வந்து போகிறார்கள்.
சந்திரனே கதையின் நாயகன். ஆனால் சந்திரன் நாயகன் என்று ரோலக்ஸ் வாட்ச் கட்டும் நம்மிடம் கடைசிவரை பெயரே சொல்லாத அந்த ஆசாமியால் அதை ஏத்துக்கொள்ள முடியவில்லை...ஆனால் மனதில் அவ்வளவு மரியாதை..தப்பு செய்யும் போதுவெல்லாம் சந்திரனை நினைத்தே பயப்படுகிறார்.. இவர் சொல்லும் கதைகள் வரும் மனிதர்கள் நடக்கும் காட்சிகள் நடத்தும் உரையாடல்கள் என்றும் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது.. 😎