What do you think?

ஜீவனாம்சம்
பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல். ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது. பெண்ணொருத்தியின் வாழ்வாகிய பெருவெளியைக் காட்டும் ஆற்றல் இதற்குள் பொதிந்திருக்கிறது.
136 pages, Paperback
First published January 1, 2004
About the author
C.S. Chellappa
76 books65 followersசி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 4 of 4 reviews
February 24, 2021
'வாடிவாசல்' நாவலின் வேகமான, Consise ஆன கதைசொல்லல் 'ஜீவனாம்சம்'ல் இல்லை. அவற்றை நான் எதிர்பார்த்தும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை. இருந்தாலும் சி.சு.செல்லப்பா-வின் இரண்டாம் நாவலான இது, அவரின் முதல் நாவலைவிட, பல விதங்களில் முற்றிலும் மாறுபட்டதாகத் தோன்றியது.
பதின்வயதில் விதவையாகிப் போய், தன் பிறந்தவீட்டை வந்தடைந்துவிட்ட ஒரு பெண் (சாவித்திரி). அந்த வீட்டின் சமையற்கட்டு, பின்னாலிருக்கும் கிணற்றடி, வீட்டிற்குள்ளிருந்து எட்டிப் பார்த்தால் கொஞ்சமாகத் தெரியும் ரேழி வாசல் - இவையே தன் சிறு உலகமாக மாறிப்போக, தனக்கென்று அவளிடம் இருப்பவை அவளின் புக்கக நினைவுகள் மட்டுமே. இந்தச் சின்ன சட்டகத்துக்குள் கதை சொல்லப் பார்த்திருக்கிறார் சி.சு.செல்லப்பா.
அவர் வார்த்தைகளிலேயே:
“ ‘வாடிவாசல்’ எழுதும்போது என் உத்தேசங்களில் ஒன்று செயல் இயக்கத்தை எவ்வளவு வேகமாகச் சித்தரித்துக்காட்ட முடியும் என்று பார்ப்பதுதான். அங்கே அது அவசியம். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஒரு வேகஇயக்கம், கதையின் போக்கிலே மட்டுமில்லாமல், சூழ்நிலை, பேச்சு இவற்றினூடும் தெரிய வேண்டும் என்பது. ‘ஜீவனாம்சம்’மில் அதுக்கு மாறாக. செயல் இயக்கம் - எவ்வளவு வேகமாக இருந்தாலும் சரி, அதை சித்தரிக்கும் போது, அணுவைப் பிளக்கிற மாதிரி அசைவையும் பிளந்து, சினிமாவில் ‘ஸ்லோ மோஷனில்’ காட்டுவது போல் அந்த அசைவைகண்களால் நிதானமாக தொடரும்படியாக, பிடித்து நிறுத்தித் தேக்கிக் காட்டுகிற மாதிரி செய்ய வேண்டும் என்றுஎனக்குப் பட்டது. இங்கு அது அவசியம். எனவே சாவித்திரியை அசைபோட வைத்தேன். சாவித்திரி என்ன, கதைநெடுக அசைபோடும் ஒரு மந்தகதி தான் ஓடுவதாகவே நான் நினைக்கிறேன். ‘வாடிவாசல்’லுக்கு நிறைவு துரிதகதியில்சித்தரிப்பு மூலம். ‘ஜீவனாம்சம்’முக்கு நிறைவு மந்தகதியில் சித்தரிப்பு மூலம். ”
நாவலில் சில அருமையான தருணங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் நாவல் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. 134 பக்கங்கள் தான் என்றாலும் நீண்ட புத்தகம் ஒன்றை வாசிப்பதுபோன்ற அயர்ச்சி அவ்வப்போது வந்துபோனது.
மேலும் நாவலைப் பற்றி:
https://youtu.be/8C0yTGqdiUQ

January 19, 2018
நான் வாசித்த வரையில் ஆதவன் மற்றும் நகுலன் படைப்பில் இருக்கும் psychoanalysis ஜீவனாம்சம்த்தில் கொஞ்சம் அதிகமாகவே தென்பட்டது
கதை ஒரு சிறுகதை அளவில் சொல்லக்கூடிய அளவில்தான் இருக்கிறது ஆனால் அதை சொல்ல அவர் முயன்றிக்கும் விதம் மிகவும் அபாரமானது
ஆனால் சொல்ல வந்த விசயத்தை மீண்டும் மீண்டும் சொன்னது அலுப்புதட்ட கூடியதாய் உள்ளது. வாடிவாசலிருந்த நடைக்கு முற்றிலும் மாறுபட்ட அம்சமாக இருக்கிறது
கிளாசிக் என்று வரையறை படுத்தவிட்டாலும் ஒரு முறை படிக்கலாம்

August 29, 2018
சிறுவயதில் விதவையான நாயகி தன அண்ணன் வீட்டில் மிச்ச காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கும்போது வெளி உலக பிரச்சனை அலைக்கழிக்கா விட்டாலும் உறவுக்குள் உள்ள பிரச்ச்சனை தான் கதை... வாழ்க்கை கஷ்டம்தான்....
February 8, 2022
கதையின் போக்கிலும் சூழலிலும் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. ஆனால் கடைசி அத்தியாயம் சற்றே The great Indian kitchen படத்தின் முடிவினை போல் இருந்ததால் என்னை மிகவும் கவர்ந்தது.
Displaying 1 - 4 of 4 reviews