Jump to ratings and reviews
Rate this book

செல்லாத பணம்

Rate this book
நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான மனித அனுபவத்தின் முழுமை... வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது. ‘செல்லாத பணம்’ என்ற படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக் கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின் முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை தெரியலாம். ஆனால், சிந்தனையின் வழக்கமான தன்மையைக்கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின் முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான் ‘செல்லாத பணத்தின்’ சிறப்பு.

222 pages, Paperback

Published January 1, 2018

27 people are currently reading
429 people want to read

About the author

Imaiyam

21 books93 followers
இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
148 (48%)
4 stars
120 (39%)
3 stars
26 (8%)
2 stars
11 (3%)
1 star
2 (<1%)
Displaying 1 - 30 of 67 reviews
108 reviews3 followers
November 17, 2022
செல்லாத பணம்
இமயம்

எங்க வாசிக்க தொடங்கி எங்கே முற்றுபெற்றது என்று பிரஞ்கை அற்று போனேன்.

ஒரு யுத்தம் காலம் போன்ற ஜிப்மர் மருத்துவமனை வளாகம், இன்னும் கண் முன் ஓடுகிறது..

ரேவதி,அமராவதி, ரவி, முருகன் உயிர்களாக எண்ணுல் பயணபடுகிறார்கள்.

எங்க ஆவது இந்த காதல் ஒரு புனிதம் பெறாதா என்ற ஏக்கம் என்னுள் தோன்றியது. ஆனால் இது தானே உண்மை என்ற எண்ணம் கொள்ளும் பொது மனது கொஞ்சம் ஆஸ்வாசம் அடைகிறது.

தான் செய்த தவறு என்று எண்ணி மனம் வருந்தும் பொது.. அந்த உயிர் நம்மை விட்டு விலக போகிறது என்ற ஒரு சுழல், மனிதனை எவ்வாறு மாற்றுகிறது..

என்ன பணம் இருந்து என்ன பயன், அவளது காயங்களை போக்காத போது.

வாசித்த பின்பு நம்மை அறியாமல் ஒரு துக்கம் நம்மை ஆட்கொள்ளும்.

மாண்டுவிடும் மனித உடலுக்கு தான் எத்தனை கவலைகள், பின்னல்கள், வேடிக்கைகள்.
251 reviews38 followers
November 11, 2022
புத்தகம் : செல்லாத பணம்
எழுத்தாளர் : இமையம்
பதிப்பகம் : க்ரியா
பக்கங்கள் : 222
நூலங்காடி : சப்னா புக் ஹவுஸ்

🔆சமைக்கும் போது, பாத்திரத்தில் சுட்டுக் கொண்டலோ, அல்லது கடுகு மேலே தெறித்து விட்டலோ, சில நேரம் இருக்கும் அந்த வலியைச் சொல்லி புரிய வைக்க முடியாது . சிறு தீப்பொறியை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உடம்பு முழுவதும் தீ பற்றி , எரிந்தால் அந்த வேதனையை என்னவென்று சொல்வது . அது தான் ரேவதிக்கும் நடந்தது .

🔆ரேவதி , அம்மா, அப்பா, அண்ணன் என அழகான குடும்பத்தில் பிறந்து செல்ல மகளாக வளர்ந்த பெண் . அனைவரின் அன்புக்கும் உரியவள். எல்லாம் ரவி மீது அவள் காதல் கொள்ளும் வரைதான் . அரசுப் பள்ளி தலைமையாசிரியரின் மகள் தான் ரேவதி . ரவியோ ஆட்டோ ஒட்டுபவர் , ஸ்டாண்டில் சண்டை போட்டு வம்பிழுத்து , நான்கு நாட்களுக்கு ஒரு முறை காவல் நிலையம் செல்வது அவனது வாடிக்கை .

🔆விருப்பமில்லாமல் தான் அவள் குடும்பம் , கல்யாணத்திற்கு சம்மதித்தது . மகள் நல்லா இருந்தா பரவாயில்லை , தினமும் குடித்துவிட்டு அடிதடி , ரகளை தான் .

🔆இப்படியிருக்கையில் , ஒருநாள் அவர்கள் மகள் தீப்பற்றி , காண முடியாத பொருளாக கிடக்கிறாள் . தீ சிகிச்சை பிரிவு எப்படி இருக்கும், மருத்துவர் , செவிலியரின் மனநிலை , நோயாளிகளின் உறவினர்களின் உளவியல் எல்லாம் புரிந்து கொள்ள முடிந்தது . ரேவதியின் பெற்றோர், அண்ணன், அண்ணி , இவர்களுடன் நாமும் ஜிம்பர் மருத்துவமனையில் இருந்த உணர்வு . எந்தவொரு பக்கத்திலும் நிறுத்திவிட்டு பிறகு படித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வரவில்லை .

🔆அதிக தீக்காயம் பட்டு, சிகிச்சையிலிருக்கும் ரேவதி , கட்டு கட்டான பணத்துடன் அவளின் அப்பா மற்றும் அண்ணன் – ரேவதி என்ன ஆனாள் என்பதே ----- செல்லாத பணம் .

🔆அது என்னமோ, தெரியவில்லை – சமையலறையில் பற்றி எரியும் நெருப்பு , மாமியார் நாத்தனாரை சீண்டுவதில்லை . பக்கத்து அறையில் இருக்கும் கணவன் மாமனாரை ஒன்றும் செய்வதில்லை . மருமகளை மட்டும் தீக்கிரையாக்குகிறது .


புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

Subasreenee Muthupandi
Happy reading
Profile Image for Muthu Vijayan.
37 reviews14 followers
May 17, 2021
இந்த நாவலின் பலமே இந்த நாவலுக்கான அவலம்தான்...
உண்மையான மனித அனுபவத்தின் முழுமை உண்டு...
Profile Image for Harikrishnan.
74 reviews8 followers
March 25, 2022
உண்மைய சொல்லனும் னா விமர்சிக்க தெரியல..
ஏன்னா நான் இந்த கதைக்கு தீர்வத் தேடினேன்.. ஒரு தீர்வும் சொல்லாமல் கதையை முடிச்சுட்டாரே னு இருந்தது..

ஆனால் தங்க. ஜெயராமன் எழுதிய பின்னுரை படிச்சப்ப, இந்த கதை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் என்று பாதி புரிந்து பாதி புரியல.

மறுவாசிப்பு அவசியம்..
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
August 28, 2019
ரேவதி உடம்புல நெருப்பு வச்சுக்குச்சு, அவ புருசன் ரவி அவள ஆஸ்பத்திரியில சேர்த்த போவயில போன் போட்டு அவ அம்மா, அப்பா அமராவதிக்கும் -நடேசனுக்கும் தகவல் சொல்லுறான். இவுங்க பதறி துடித்து அழுதுக்கிட்டு மவன் முருகனுக்கு போன்போட்டு தகவல் சொல்ல அவன் அடிச்சு புடிச்சு அறக்க பறக்க மருத்துவமனைக்கு வாரான். பின்னாலயே முருகன் பொண்டாட்டி அருண்மொழி கண்ணீருடன் மருத்துவமனை நோக்கி வாரா. 83% நெருப்பில வெந்த ரேவதியின் உயிரை காப்பாத்துங்க என பையில் பணத்துடன் மருத்துவமனையில் அலையும் உறவுகள் இந்தப் பணம் இங்கு இப்போது செல்லாது என்பதை உணரும் நிகழ்வே இந்த நாவல். - கலைச்செல்வன் செல்வராஜ்

செல்லாத பணம் புத்தகத்திலிருந்து எனக்கு பிடித்த சில வரிகள்,

“சந்தக்கி சந்த ஒரு ஆட்டுக்குட்டிய வித்து அவ கையில கொடுப்பன். எம்மாம் ஆட்டுக்குட்டிவுள வித்திருப்பன்? ஒவ்வொரு ஆட்டுக்குட்டி பொறக்கும்போதும் தரயில விய்யாம கையில ஏந்திக்குவன். ஒவ்வொன்னும் என் கையில வியிந்து, என் மடியிலதான் வளந்துச்சி. பொறந்ததிலிருந்து விக்கிறமட்டும் என் நிழலப் புடிச்சிக்கிட்டுத்தான் ஒவ்வொன்னும் ஓடியாரும். எங் கூடவே அலயுங்க. கழுதைங்க என்னெ வுட்டு செத்த பிரிஞ்சியிருக்காதுவோ. படுக்கிற செத்த நேரம்தான். கொட்டாயில கொடக்குங்க. மத்த நேரம் அடிச்சித் தொரத்துனாலும் எங்கியும் போவாதுவோ. மீறி மேயப் போனாலும் நான் ‘டூர்வோவ்’ன்னு சத்தம் கொடுத்தா போதும். எந்த எலாக்காவுல இருந்தாலும் ஓடியாந்துடுங்க. எங் குரலு அதுவுளுக்கு தெரியும். ஒவ்வொரு எலயா, ஒவ்வொரு செடியாப் புடுங்கி வாயில வைப்பன். ஒவ்வொரு கருவக்காயா பறிச்சி வாயில திணிச்சிவுடுவன். அப்பிடி வளத்த ஆடுவுளத்தான் வித்தன்.பணம் கொடுத்த பய கவுத்த மாத்தி இயித்துக்கிட்டுப் போவயில ‘போவ மாட்டன்’னு திலுப்பிக்கிட்டு எங்கிட்ட ஓடியாரும். காசக் கொடுத்தவன் சும்மா இருப்பானா? எம் மின்னாலியே எட்டிஎட்டி ஒதப்பான். அப்பியும் கவுத்த இயித்துக்கிட்டு எம் பக்கம் ஓடியாரப்பாக்கும். என்னியே பாத்துக் கத்தும். அப்ப நான் பணம் சரியா இருக்கான்னு எண்ணிக்கிட்டிருப்பன். நோட்டு கிழிஞ்சியிருக்கான்னு பாப்பன்.”

காதலிக்கிறப்ப பணம் வேணும், வீடு வேணும், சொந்தக்காரங்க வேணும்ன்னு தோண மாட்டங்குது. கல்யாணமான மறு நிமிஷமே வீடு, பணம், சொந்தம் வேணுமின்னு தோணுது. பணம்தான் எல்லாரையும் சேத்து வைக்குது. பிரிக்கவும் செய்யுது.

“தாலியக் கட்டுன வேகத்துக்கு ரெண்டு மூணு புள்ளையக் கொடுத்துப்புட்டுத்தான குந்துறானுவ? புள்ளை பெத்த பின்னாலதான் ‘ஒன்ன புடிக்கல போடி’ன்னு சொல்லி அடிக்கிறானுவ. நெருப்ப வச்சிக் கொளுத்துறானுவ. புள்ளை பெக்கத்தான் பொண்டாட்டி கட்டுறானுவ. புள்ளையும் பொறக்கணும், பொட்டச்சி சாமானும் புதுசா இருக்கணுமின்னா எப்பிடி?”

“ஒன் சாவுக்காகக் காத்திருக்க வச்சிட்டியே. ஒ���் உசுரு அடங்குனா நல்லதுன்னு என் வாயாலியே சொல்ல வச்சிட்டியே. நீ சாவலடி, என் தங்கமே. ஒன்னோட அம்மா நான் செத்தாத்தான் நீ சாவ. என் உசுரு இருக்க மட்டும் நீ என் நெஞ்சில இருப்பம்மா. எம் பொண்ணே நல்லா தூங்கு”. -இமயம்
Profile Image for Praveen (பிரவீண்) KR.
228 reviews33 followers
June 23, 2024
Blog link - https://kalaikoodam.blogspot.com/2024...

எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரம்பித்த வாசிப்பு. ஆனால் போக போக மீண்டு வரமுடியாத ஒரு அனுபவத்திற்கு உள்ளாக்கியது இந்த புதினம். எழுத்தாளர் யதார்த்தத்தை தத்ரூபமாக சொல்லியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மிடம் வாழ்க்கையை சொல்லி செல்கிறது. ரேவதி முக்கால்வாசி கதையிலும் மற்றவர்கள் பேச்சிலும் நினைப்பிலுமே சஞ்சரிக்கிறாள். இந்த புதினத்தை வாசிக்கிறவர்கள் கண்டிப்பாக ரேவதியின் வாழ்க்கையையும் வழியையும் கஷ்டங்களையும் எளிதாக கடந்து போக மாட்டார்கள். கதை அதிகமாக நகரும் இடமானது ஜிப்மர் வளாகம் தான். அதுவும் குறிப்பாக தீக்காயசிகிச்சை பிரிவு. அங்கு நடக்கும் அவலங்கள் மிகவும் யதார்த்தமாக காட்டியுள்ளார், அங்கு தீக்காயம் பட்டு வருகிறவர்கள் வலி ஒரு புறம் என்றால் அவர்களுக்காக ஏங்கி அரை வெளியில் காத்திருக்கும் குடும்பத்தினர் மறு புறம். ஒரு சம்பவம் சுற்றியுள்ள எத்தனை பேரை பாதிக்கின்றது. அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, புருஷன் என்று பல பேர் பார்வையில் இந்த கதை நகர்கிறது. ஒரு அற்பமான விஷயத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிறததா என்று நாம் ரேவதியை பற்றி நினைக்கலாம். அது ஒகாதல் என்று கூட நம்மால் சொல்ல இயலாது. ஆனால் போக போக அவள் அனுபவிக்கும் வலி அவள் வாழ்க்கையை பார்க்கும் விதம் மருத்துவமனையில் படும் இன்னல்கள். கோபம், பகை மற்றும் ஏற்றத்தாழ்வு மனிதர்களை எப்படியெல்லாம் நிலைகுலைய வைக்கிறது என்று இதில் நாம் காணலாம். இந்த புதினத்தை எளிதில் கடந்து செல்லமுடியாமல் பல முறை பக்கங்களை விரித்து வைத்து சிந்தனையில் ஆழ்ந்த்திருக்கிறேன், கணீர் விட்டிருக்கிறேன். அவளது அண்ணனும் அப்பாவும் அவ்வளவு கோவம் வைத்திருந்தாலும் செய்தி அறிந்த நொடிப்பொழுதில் அதெல்லாம் மறக்கப்பட்டது. ரேவதியின் கணவன் மீது வெறுப்பு ஏற்பட்டாலும் கூட கடைசியில் இலை விஷயங்களில் அவன் நினைப்புகள் சரியென பட்டது. பணத்தை வாரி இறைக்க தயாராக இருந்தும் அதை வைத்து ஒன்றும் செய்யமுடியாத நிலைமை. பணத்தால் மரணத்தை, வலியை போக்கமுடியுமா என்ன? மிக சரியாகவே இந்த பேரை இமையம் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த கதாபாத்திரங்கள் மட்டுமின்றி புதினம் முழுதும் வந்துசெல்லும் பாத்திரங்கள் மூன்று - மரணம்,பணம், ஆம்புன்ஸ்.

அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாத புதினம். பல சிந்தனைகள் சில கண்ணீர்கள் நெறய சிந்தனை என்று எனக்குள் பலவிதமான உணர்ச்சிகளை உண்டாக்கிய வாசிப்பு. கண்டிப்பாக எல்லோராலும் வாசிக்க படவேண்டிய ஒரு புதினம். இமையம் கண்டிப்பாக எல்லோராலும் வாசிக்கப்படவேண்டியவரே. இளகிய மனம் படைத்தவர்களுக்கு இது சற்று கடினமான வாசிப்பாகவே அமையும்.
22 reviews2 followers
January 14, 2022
செல்லாத பணம் - இமையம்
⠀⠀
உறவை விட கௌரவம் தான் முக்கியம் என்று நினைத்து காதலித்தவனுக்கு கட்டி கொடுத்த பின் ரேவதியிடம் இருந்து முருகனும் நடேசனும் விலகியிருக்கின்றனர். பின்பு ரேவதி சாவ கிடைக்கும் போது எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கூறி அழுகின்றனர்.அந்த இடத்தில் பணம் செல்லாமல் போகிறது. கண்ணீர்யின்றி நாவலை கடப்பது கடினம். கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்.
Profile Image for Deepti Srivatsan.
Author 1 book47 followers
March 21, 2021
அழுது அழுது என்னுள் உள்ள கண்ணீரெல்லாம் வற்றி போய் விட்டது. மனம் வலிக்கிறது. இத்தனைக்கும் எந்த கதாப்பாத்திரங்கள் மீதும் தனிபட்ட ஈர்ப்பு இல்லை. எல்லோரும் ஒருவகையில் லூசுங்கனு தான் தோன்றது. Still, I just couldn’t put it down.
Profile Image for Karthick.
369 reviews121 followers
December 14, 2021
ஒரு மாதம் முன்பு நூலகத்தில் செல்லாத பணம் என்ற நாவல் என் கண்ணில் பட்டது. அதுவும் "2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நாவல்" என்றதும் ஆர்வம் என்னை தொற்றிக்கொண்டது.

இமையம் எனும் எழுத்தாளர் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அவரது படைப்பை வாசிப்பது இதுவே முதல்முறை.
நான் இந்த நாவல் படித்ததன் மூலம் என்னை மிகவும் தாக்கிய, அதே சமயம் நாம் கற்றுக்கொள்ளவும், நம்மை மாற்றிக்கொள்ள பல விஷயங்கள் ஏராளம் இதில் உள்ளது என்று அறிந்துக்கொண்டேன்.

ஆணாதிக்க மனப்பான்மை, பெற்றோர்களின் அகங்காரம் & வலி என்று பல சமூக பிரச்சனைகளை பேசுகிறது.
படித்த & வசதியான வீட்டுப்பெண் ரேவதி, ரவி என்பவனை காதலிக்கிறாள். பெற்றோர் உடனான போராட்டத்தின் பின் திருமணம் செய்துக்கொள்கிறாள். ரவியின் கொடுமையை தாங்க முடியாமல் எண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி செய்கிறாள். தீக்காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.

அது தற்கொலையா, விபத்தா அல்லது கொலை முயற்சியா என்று கதை நகர்கிறது. மருத்துவமனை, போலீஸ், குடும்ப சண்டை, பெற்றோர்களின் வேதனை என்று படிக்க படிக்க இதயம் கனமாகிறது.

இந்த நாவலின் சிறப்பு மனித வாழ்வியலை எதார்த்தமான கதைக்களம் கொண்டது தான்.
ஆண், பெண் என்று எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
Author 2 books16 followers
February 24, 2025
சில புத்தக மதிப்புரைகளில் அந்த படைப்பு வாங்கிய வெற்றிகளையும் , விருதுகளையும் மேற்கோள் காட்டி இருப்பார்கள் . அதைப்பார்தே நிறைய பேர் அந்த புத்தகத்தை வாங்கி படிப்பார்கள் .அப்படி வாங்கும் புத்தகங்களில் சிலவற்றை படித்து முடிக்கும் போது இந்த விருதையும் , வெற்றிகளையும் இந்த புத்தகம் எப்படி வாங்கிற்று என்கிற கேள்வி எழும் . ஆனால் வெகு சில புத்தகங்களை படிக்கும் போது தான் இந்த படைப்பு விருதுகளுக்கும் , வெற்றிகளுக்கும் முழுத்தகுதியான படைப்பு என்று தோன்றும் . அப்படிப்பட்ட ஒரு புத்தகம் தான் இந்த செல்லாத பணம் . இலக்கியத்தை மக்கள் இடையே அதிலும் குறிப்பாக மாணவர்களிடையே கொண்டு செல்லும் ஒரு படைப்பாக இது இருக்கிறது என்பது என்னுடைய அபிமானம் . இந்த புத்தகத்தை படித்தவுடன் கண்டிப்பக யாருக்கும் தீக்குளிக்கும் என்கிற எண்ணம் அறவே தோன்றாது . செல்லாத பணம் என்கிற இந்த படைப்பின் தலைப்பு ஆயிரம் மடங்கு இந்த படைப்பிற்கு பொருந்தும் . மனித மனம் சமூகத்தின் சிந்தனைக்கேற்ப எப்படி தன்னை வடிவமைத்து அதிலே பயணப்படுகிறது என்பதை இந்த கதை நிஜத்தின் அருகாமையில் இருந்து சொல்கிறது . படைப்பில் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களின் நியாயமும் நம்மை யோசிக்க வைக்கிறது , ரவியின் நியாயத்தையும் சேர்த்து . இருபதாம் நூற்றாண்டின் நடுத்தர வர்க்க தமிழ் சமூகத்தின் பிரதிபலிப்பு இந்த நாவல் என்றால் அது மிகையாகாது .
Profile Image for Manikandan Jayakumar.
94 reviews19 followers
March 11, 2024
Don't want to read this novel again due to the high feeling this novel gave.

In one of the Chennai Book fair, before 5 or 6 years, At that time I have read almost all his works except "Peththavan". I asked him why Sedal or a lead character in Kovezhu kazhuthaigal didn't thought about sucide or attempted any. He asked whether I read Peththavan. Nope at that time i haven't. Later he said that sucide is not the solution and i was not convinced, I kept on insisting on how come sucide thought didn't came to their mind.

Now this novel answered all those questions.
16 reviews
August 28, 2024
நாம் புரிந்துகொள்ள முடியாதவற்றையெல்லாம் வார்த்தைச் சட்டங்களுக்குள் உவகை, அச்சம், நகை என்று தனித்தனியாக அடைத்து ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கிறோமா?

பிரிந்து நிற்காமல் ஒன்றன் மீது ஒன்றாய்ப் படறும் ரேகைகள்தானோ மனித உணர்வுகளெல்லாம்!

உணர்வுகளை அனுபவிக்கும் மையம் ஒன்று எப்போதுமே உள்ளதா?

அல்லது, அவ்வப்போது வரும் உணர்வு வெள்ளங்கள் தான் 'நான்' என்று உருவாகி அதே கணத்தில் மற்றொறு 'நான்' என்பதற்கு வழிவிட்டு மறைகிறதா?
Profile Image for MP.
126 reviews1 follower
January 10, 2022
கௌரவத்தை உறவிற்கு மேற்பட்டதாக நினைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தில் இருக்கிற பல பேர் எடுக்கும் தப்பான முடிவுகளின் விளைவுகளை பணத்தை வைத்து திருத்த முடியாது என்பது தன் இந்த நாவலின் சாராம்சம்.
முன்னாடிலாம் பேப்பர்ல யாரது தீக்குளித்ங்கனு நியூஸ் பாத்தா ஒன்னும் தோணாது. பாவம்ன்னு சொல்லிட்டு ஒரு செகண்ட்ல கடந்து போயிட்டே இருப்பேன். ஆனால் இனிமேல் அப்படி இயல்பாக கடந்து போகமுடியாது. இந்த நாவல் கட்டாயம் உங்களை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும்.

இந்த மாதிரிலாம் எங்க நடக்க போகுதுனு நம்ம நினைப்போம். ஆனால் இன்னைக்கும் இதே விஷயம் வேற வேற மாதிரி நடந்துகிட்டு தன் இருக்குதுன்றது தன் எதார்த்தம்.

கடந்த 5 நாளா எனக்கு ஒழுங்கா தூக்கம் இல்ல. கண்ண மூடினாலே நான் அந்த ஹாஸ்பிடல் போகிறேன். I am not exaggerating. கட்டாயம் இந்த நாவல் உங்க தூக்கத்தை கெடுக்கும். இரவு 4-5 தடவ எந்திரிச்சுட்டு திரும்ப தூங்க ரொம்ப கஷ்டப்பட்டேன். I hope I will sleep peacefully henceforth.

பொழுது போக்கிற்காக நாவல் படிக்கும் நண்பர்கள் இந்த புத்தகத்தை தவிர்க்கவும். ஜெயகாந்தன் எழுத்து பிடித்தவர்களுக்கு இந்த நாவல் பிடிக்கும். எழுத்து வழியாக சமூக பிரச்னையை பேசியிருக்கும் இமயம் சார்க்கு என்னுடைய நன்றிகள்.
25 reviews2 followers
June 6, 2021
செல்லாத பணம்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் குடும்பப் பிரச்சனையில் தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவளுக்கு நடக்கும் இன்னல்களையும் அவளை சுற்றி உறவினர்கள் படும் இன்னல்களையும் பற்றி இந்தக் கதை விவரிக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வளவு பணம் கையில் இருந்தாலும் ஒரு உயிரை காப்பாற்ற தேவைப்படவில்லை என்பதே இந்த கதையின் உட்கருத்து.

உண்மையில் கதை படிப்பவர்களுக்கு ஒருவர் தீக்காயங்கள் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் எனவே சித்திரவதைகள் அவர்களுக்கு நடக்கும் என்பதை கண் எதிரே கொண்டு வந்துவிட்டது இந்த செல்லாத பணம்.
Profile Image for ishhreads.
223 reviews15 followers
September 2, 2025
Sellatha Panam - Imayam

I was seeing this book going rounds in Bookstagram. A burnt woman is the translated version of this book. Also, @kanchan di, review, I badly wanted to read. I decided to read it in Tamil.

Revathi, a well-educated woman, and she is pampered well at home. Her father is a headmaster in a government school. Everything was going well. During her final year while waiting for official approval to join the job. In the meantime, she happened to see Ravi, who is an auto driver. He was following her everywhere and even threatened that he would only marry her. Her parents weren’t ready to marry her to him. Whenever they try to marry her off. She attempts anything to stop. Finally they agreed to get her married with a condition that they won’t speak to her anymore. After 6 years of her married life. They received a call from her husband that she herself burnt in a fire. Has been taken to Jipmer Hospital in Pondicherry. They were ready to spend money for her to be cured, but she can’t be cured completely. Since her body has been burned more than 80%.

The story was haunting enough for me to clearly see that patriarchy exists even in 2025. Nothing has changed in this world. After finishing the book, I wrote a few lines sharing it here, though in Tamil, I'll translate it.

“In life some people get support from either side of parents because they have some wealth, ‘money,’ in their hands. Whereas on one side there will be wealth (“money”), the opposite person may not have that much wealth, but they are kind and happy. Still, people around us are weighed by the status of how much “money” we have.

If you feel triggered by this line. I’m sorry, and that’s the reality around us even now. That never changes anything.

Though I have read his other novel, this was really interesting, though the story revolves around the hospital, but the way it was written knocked me down. I couldn’t come out of it. In a place where Ravi says that the parents of Revathi only killed if they have given some money to them, they will be too well-off. I won’t say he was a saint in the story. But this point is very true. I'm not sharing the full point he spoke, but the truth has been spoken here.

Definitely worth the Sahitya Akademi Award. If you want something to read sad and feel the pain. Go ahead with it.
Profile Image for Irfan.
11 reviews2 followers
April 5, 2022
செல்லாத பணம்

இமயம் அவர்களின் இயல்பான படைப்பு,
சரியான நேரத்தில் மனிதர்களின் தவறான அல்லது தவறிய முடிவுகள் வாழ்க்கையில் செல்லாத பணமே...

மிகவும் எளிதான கதைக்களம், ஆழமான அழுத்தமான கதாபாத்திரங்கள் , கதாபாத்திரங்களையும் கதைகளத்தையும் மிகவும் எளிதாக கண் முன்னே ஓட விடலாம், இதுவே நாவலின் முதல் வெற்றி;

கதை இயல்பு மீறாமல் கடலூர்-பாண்டிச்சேரி பகுதிகளில் நகர்கிறது, அதன் வட்டார வழக்கு சொற்களை இயல்பாய் அழகாய் நேர்த்தியாய் இமயம் கையாண்டதே இரண்டாம் வெற்றி;

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் , கறாரான நர்ஸ் மற்றும் செக்யூரிட்டிகள் மத்தியில் ஒரு சொந்தம் உள்ளே உயிருக்கு போராடுகிறது என்று தெரிந்தும் என்ன நிலைமை என்று தெரியாமல் , மனதுக்குள்ளே குமுறி, அந்த படிக்கட்டுகளில் அமர்ந்தும், நம்மை போன்ற சக மனிதர்களின் கதைகளை கேட்டு பதறி, உறக்கம் துளைத்து அந்த நிகழ்காலத்தை கடந்ததுண்டா? அப்படி நீங்கள் கடந்திருந்தால் நாவலின் ஜிப்மர் மருத்துவமனை காட்சிகள் அதன் பிரதிபலிப்பே; கண்ணீர் கட்டாயம்...

கதையில் அதிகமாக "எவ்வளவு செலவானாலும் பாரவால சார்" என்று வரும் இடங்களில், பணம் செல்லாததாகவே இருக்கிறது...

பணம் தான் பெட்ரோல் என்கிற இந்த காலகட்டத்தில் , பணமும் மரணிக்கும் என்பதை மிக கச்சிதமாகவும் அழுத்தமாகவும் இமயம் கூறியுள்ளார்.

தலைவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் "கவுரவம் கவுரவம்னு என் கவுரவத்தையே நாறடிச்சிட்டியேடா" என்பது வரும் கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் பொருந்தும்😄

2020 சாகித்ய அகாதமி விருதுக்கு ஓர் உரிய படைப்பு...
Profile Image for Ananda Raghavan.
10 reviews
April 5, 2023
நான் இமையம் எழுதிய பிற நூல்களை வாசித்தேன் குறிப்பாக இந்த நூலை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த கதையில் தொலைபேசியில் நடக்கும் உரையாடலை மிகவும் அழகாக எழுதி இருக்கிறார். சில கட்டத்தில் பணம் வெறும் வெற்று காகிதம் ஆகவே கருதப்படுகின்றன என்பதை கதை மீண்டும் மீண்டும் நமக்கு டாக்டர் மூலமாகவும் ஆனந்தகுமார் மூலமாகவும் உணர்த்துகிறது. கதையில் ரேவதியை தீயிட்டு கொளுத்தியது யார் என்று ரவி சொல்லிய காரணம் என்னை மேலும் இறுகி போக செய்தது. ஒருவரின் இறப்பு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த கூடுமோ அதைவிட பல மடங்கு வலியை உண்டாக்க கூடும் ஒருவரின் இறப்பை நாம் எதிர் நோக்கி காத்திருக்கும் பொழுதுகள். சில நேரங்களில் நம் மணம் இறுகி உடைக்க முடியாத நிலையில் இருக்கக்கூடும் அப்போது இந்த நூலை படிப்பது ஆகச் சிறந்த தருணமாக நான் கருதுகிறேன்.
அனைவரும் முன்னுரை படித்து விட்டு கதையை படிக்க தொடங்குவீர்கள் இந்த நாவலில் முன்னுரை இல்லை ஆனால் பின்னுறை உள்ளது அதை நீங்கள் முதலில் படிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
4 reviews1 follower
July 2, 2023
கண்ணீர் இல்லாமல் இந்த நாவலை கடப்பது கடினம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
11 reviews1 follower
June 7, 2021
Very keen detailing!
I can able to visualise all the scenes from the beginning.
This book is a must read.

The story will revolve around you after reading.




Very well deserved for the award!
53 reviews8 followers
October 31, 2024
#5thBook #5Feb2024 #Madhu_ReadingChallenge2024

வாசித்து ரெண்டு வாரத்துக்கு மேல ஆகுது. ஆனால் இப்பவும் இ‌ந்த நாவல் பற்றி எழுதனும்னா கை நடுங்குது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். 222 பக்கங்கள் கொண்ட, நான்கு பகுதிகளாக நாவல் விரிகிறது. நாவல் படிக்கும் போது 2 வது பகுதியின் போது, ஒரு பதட்டம் நம்மை பற்றிக் கொள்ளும். ஒவ்வொரு பக்கமும் ஏதோ ஒரு நாவல்/ கதை படிக்கிறோம் என்ற நினைப்பு இல்லாமல், நம்மையும் உணர்ச்சி வசப்பட வைக்கும்.
த#ற்கொலை என்பதே கொடுமை அதிலும் தீ வைத்து த#ற்கொலை என்பது நினைத்துக் கூடப் பார்க்க கூடாத ஒ‌ன்று,. அதன் பின்பு நேரும் கஷ்டத்தையும் , குடும்பம் படும் அவஸ்தையையும் தெரிந்த பின்பு (இந்த நாவல் படித்த பின்பு) யாருக்கும் அ‌ந்த எண்ணம் வராது.
இமையம் அய்யா அவர்களது நாவல்களின் சிறப்பு, நம்மால் அதை கதையாக அணுக முடியாது, நம்முடன் பிணையப்பட்ட ஒன்றாகவே இருக்கும். ஆனால் இந்நாவல் நம்மை அ‌ந்த குடும்பத்தில் உள்ள ஒரு ஆளாக இழுத்துக் கொண்டு சென்று, எல்லாரும் கோபப்படும் போது கோபப்பட்டு, அழும் போது அழுது, அரற்றும் போது அரற்ற வைக்கக் கூடியது.

பெற்றார்களை எதிர்த்து காதல் திருமணம் செய்த கணவனுடன் ஏற்பட்ட விரக்தியில் தீக்#குளிக்கும் ரேவதியின் இறுதி நாட்களை சுற்றியே கதை நடக்கிறது. ரேவதிக்கும் கணவன் ரவிக்கும் என்ன பிரச்னை, எ‌ப்படி விப‌த்து நட‌ந்தது. எ‌ந்த மாதிரி ட்ரீட்மெண்ட் பண்ணுவாங்க, மருத்துவமனையின் procedure என்ன. இறு‌தி‌யி‌ல் ரேவதிக்கு என்ன நட‌ந்தது எ‌ன்பதே கதை.

கதையில் தீயில் வெந்தவர்களுக்கு தரும் மருத்துவம், அவர்களின் உடம்பில் ஏற்படும் அகோர மாற்றம், cleaning process, hospital formalities, இறந்த பின்பு என்ன பண்ணுவாங்க, எப்படி பாடிய கொடுப்பாங்க என்று அனைத்து விதமான தகவலும் விலாவாரியாக உள்ளது. ரொம்ப மனசு தைரியம்/ எ‌ந்த ஒரு பெ‌ரிய விஷயமும் மனச சங்கடப் படுத்தாது என்பவர்கள் படிங்க.

#madhureadingchallenge #MadhuReads #TinkMadhuReads #readingchallenge
#readingtime #bookstagram #bookrecommendations #bookdealsforbrokebibliophiles #bibliophiles #booklover #tamilnovels #reading #bookworm #bookstagrammer #read #bookish #bookaddict #booksofinstagram #bibliophile #bookaholic #booklove #tamilbooks #tamilreaders
197 reviews7 followers
February 26, 2022
I dont know how to classify this novel.. It was a very hard read of what's happening in an hospital emergency ward of fire accident victims..

It tells the story of Revathy who is a well educated person but somehow falls for Ravi who comes from a poor family and is an auto driver.. She suffers with him and his family and comes as a burnt victim nto the hospital, it was not known till the last whether it was a suicide, accident or murder..

Revathy's family is a well to do and educated( her father keeps around 10 lakhs cash while coming nto the hospital, but it does not have value at all, as nothing can be done to save her)..

மனித மனங்களின் புதிர்களை எடுத்துரைக்கும் நூல்..

Why revathy behave like this, she also gave death statement as the fire caught her while cooking and her family too gave the same statement, when everyone was telling her family to move a case against Ravi..

Why her family is always on the top, not coming down to talk with her and Ravi( especially her father and brother).. Their respect in society and arrogance of being rich surpasses their love for daughter and sister..

The author talks about how everyone ( even the police) mentions that why educated women do like this? As much as they blame Ravi they equally blame Revathy too..

In the afternote, the author mentions that this.novel.is to depict the human emotions and thoughts that gets displayed in such situations, rather than a typical novel discussing on the front and behind stories of the incidents..

It may and will surely create an aversion on hospitals, at the same.time will also feel baf for the people working there..
Profile Image for Alamelu  Janaki.
13 reviews
May 2, 2023
So before I began this, I know what sort of a turmoil it would be. After acquainting myself with Imayam through Pethavan (The Begetter), I have understood that he will say things bluntly and dangerously raw. His story dumbfounded me with endless questions about an individual in the society and the societal standards perpetuated consciously by the victims around.

Selladha Panam, which won 2020 Sahitya Academy Award is about an educated girl, from an affluent background who tries to transcend her boundaries by choosing the "supposedly" inappropriate spouse. The resulting downfall that happens is the plot.

Revathi transcends the boundaries of caste, education and class. Unable to straddle between the two worlds, She sets herself on fire, the Self-immolation puts her life at stake. The fire that consumes her is the repercussion of the choice she makes.The ensuing ripples reflect the grim reality of caste and class.

There are too many intricate details. The narration is so gripping that the readers are at no Previlege to predict things earlier. We understand the reality only through the perceptions of Revathi and her husband Ravi's family.

The socio-economic divide and the stereotypes that follows imprints a set of strong, vehement prejudices against each other's community.

The title takes a jibe at how money can be valueless at a desperate situation. Even after the disaster, nothing changes, bigotry continues even more ferociously.
Profile Image for Mohamed Azarudeen.
7 reviews3 followers
January 1, 2025
செல்லாத  பணம்  - இமயம்

2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்.

நாவலின் கதைநாயகி ரேவதி, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, தன் காதலான ரவியைத் திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், இந்தத் தைரியமான முடிவு அவளது வாழ்க்கையை நரகமாக்குகிறது. சமூகத்தின் ஒதுக்கலும், குடும்பத்தின் அலட்சியமும் அவளைக் கொத்திக் கிழிக்கின்றன. கணவனின் வன்முறையையும், சகிப்புத்தன்மையையும் தாங்கிக்கொள்ளும் அவள், ஒரு உயிர்த்தியாகியாகிறாள். அதற்குபிறகு நடக்கின்றன நிகழ்வுகளை நாவல் விவரிக்கின்றது. கதையின் பெரும்பான்மையான பகுதி பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நகர்கிறது. 


தன் மகளை எப்படியாவது மீட்க முயலும் பெற்றோர்களின் வலி கனக்கிறது. 'எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்ல' என சொல்லும் இடத்தில் பணம் செல்லாத பணமாகிறது. சரியான நேரங்களில் எடுக்கும் தவறான முடிவுகளின் விளைவுகளை கதை ஆழமாக உணர்த்துகிறது. அகங்காரம், கெளரவம், சமூக வேறுபாடு மற்றும் ஏற்ற தாழ்வுகளை இப்புனைவு மிக துல்லியமாக கையாண்டுள்ளது. 

காதலுக்கு மட்டுமா கண்ணில்லாம் இல்லை, அகங்காரம், கோபத்திற்கம் தான் கண்ணில்லாமல் போகிறது. 

கதையில் இரண்டு காதல் , ஒன்று இனிக்கிறது, மற்றொன்று கசக்கிறது. காரணம் பணமும் கல்வித்தகுதியும?

தீக்காய விபத்து, தற்கொலையின் கொடூரம் நினைத்துக்கூட  பார்க்க  முடியாத வலியும் வேதனைக்குரிய ஒன்று, நெஞ்சை உறைய வைக்கின்றது. 

ரேவதியின் மரணம் கொலையா? தற்கொலையா?

ரேவதியின் மரணத்திற்க்கு காரணம் ஆணாதிக்கமா? பெற்றோறின் கெளரவமா?

சமுதாயத்தின் ஏற்ற தாழ்வ��? அல்லத செல்லாத பணமா? 

என கேள்விகளை எழுப்புகிறது செல்லாத பணம் நாவல்.

கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.
1 review
October 17, 2024
This book won the Sahitya Akademi Award in 2020 . Imayam is a distinguished figure in Tamil literature. His works frequently delve into the lives of ordinary individuals, and language that is both accessible and engaging. This story set in Cuddalore and Virudhachalam, significant portions of the narrative unfold at JIPMER Hospital in Pondicherry. As readers immerse themselves in the text, they can vividly envision the hospital's wards, rooms, trees, benches, clocks, and the various personnel and their families present.

The story scrutinizes the egoistic dynamics within a family grappling with the aftermath of their daughter’s burn accident, here imayam prioritizing her perspective over assigning blame.

When director Vetrimaaran expressed interest in adapting the novel into a film, he sought to understand the background of the male character and his family, questioning the nature of the blame and the circumstances surrounding the fire.

Imayam clarified that his intent was not to disclose the family's background or to apportion fault, but to delve into the emotional state of the girl and the factors that led to her tragic situation. This exploration of her mindset is the heart of the narrative.
This entire review has been hidden because of spoilers.
22 reviews
Read
June 16, 2023
Mostly when I read a Novel or a Short story I always see the craft and form of it, how does the writer use the language? how the writer bends the situation? or how do they explore the characters? But for me first time I am fully invested in the emotional part of the narrative, and also it has all the form and craft quality. While reading the novel I also had a lot of questions about the characters and their decisions thats the beauty of the novel, but I also have a lot of questions outside the narrative, the story is happening in 2016 not some in the 1970s or 1980s, it is 2016 and it has a lot of fire cases and mostly married womens literally one to two floor of the emergency building allotted for fire cases that creates a lot of questions in my mind. like before said I am totally invested in the emotional part of the narrative till the last part before the revelation in the back of my mind there is thought running that Revathi would cure and come back to her mother's house and stay with her mother and father, but that didn't happen that really makes my heart heavier.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Aadhi Reads.
54 reviews2 followers
September 28, 2024
Imayam presents the harsh realities of life without any sugar coating. His writing not only pulls you in but makes you feel every ounce of emotion that his characters experience. He brilliantly captures the casteist side of society, along with the pivotal role money plays in shaping individuals' lives. The way financial stability can make or break a person is a harsh truth that he explores. It raises the question: would Ravi have been different if he had a stable job and income? Could his relationship have been healthier?

Revathi, an educated, well-off woman, finds herself trapped in a toxic love marriage, despite her family's desire to find her a groom who matched her in status, education, and caste. In another situation, I might have rooted for her, but in this case, all I felt was pity. She endured so much, and I feel even greater sorrow for her two children, who will grow up exposed to such toxicity.

Ultimately, the question remains: was she burned literally before, or after being burned by words?
Profile Image for Udhaya Bharathy.
34 reviews
June 6, 2022
ஒரு சம்பவம் நடந்தேறியது. அது ஏன்? எவ்வாறு? எதற்காக? யார் செய்தது? போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அச்சம்பவத்திற்கு முன்னும் பின்னும் கதாபாத்திரங்களின் எண்ணங்கள் மன மாற்றம் குறித்த கதை.
"பணம் பத்தும் செய்யும்", "பணம் என்றால் பிணம் கூட வாய் பிளக்கும்". அப்படிப்பட்ட பணம் இருந்தும் பயனில்லாத நிலை உண்டு எனக் குறிக்கும் கதை "செல்லாத பணம்".
கௌரவத்திற்காக பெற்ற பிள்ளையின் வாழ்க்கைக் கண்டுக்கொள்ளாத தந்தை; தந்தைக்கு ஏற்ற மகன்; இயன்ற வரை மகளுக்கு உதவும் தாய்; தனக்கு என்ன வேண்டும் என்று தெரியாமல் காதலித்து திருமணம் செய்யும் ரேவதி; காதலித்து திருமணம் செய்தவலைக் காப்பாற்ற முடியாதக் கணவன்.
ஏதார்த்தாமானக் கதை மற்றும் கதாபாத்திரங்கள், அழகிய நடை, அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
எனக்கு பிடித்த வரிகள்
1.அவன் கொஞ்சம் மெண்டல், நான் லூசு.
2.நீ சாவலடி, என் தங்கமே. ஒன்னோட அம்மா நான் செத்தாத்தான் நீ சாவ. என் உசுரு இருக்க மட்டும் நீ என் நெஞ்சில இருப்பிடமாக. எம் பொண்ணே நல்லா தூங்கு.
3. அந்த அவமானம்தான் அவள எரிச்சிது.

Displaying 1 - 30 of 67 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.