எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். 1. கதிர் வீட்டிலிருந்து விடுதிக்கு அனுப்பப்பட்ட நாளில் கனவுகளில் சந்தோசப்படப் பழகினான். எல்லா சந்தோசங்களும் தற்காலிகமானவை என்பதை பால்யம் உணர்த்திய நாளில் அவனுக்குக் கனவுகளின் மீது வெறுப்புண்டானது. எதையெல்லாம் விரும்புகிறோமோ அதையெல்லாம் வெறுக்க நேரும் சூழல் வருந்தத்தக்கது.
2. பசியால் நிரம்பிய பகலும், பயத்தால் நிரம்பின இரவுகளும் வாய்க்கப்பெற்ற விடுதிக் காலத்தில் வெளிச்சம் கூடப் பாதுகாப்பாய் இருந்ததில்லையென கர்த்தரிடத்தில் அவன் மன்றாடாத நாளில்லை.
3. கர்த்தர் அவனிடம் பேசுவதுண்டு, அவன் பிரார்த்தனைக்குச் செவி சாய்ப்பதுண்டு. எல்லா வருத்தங்களையும் நான் நீக்கப் பண்ணுவேன், உன்னை வருந்தச் செய்கிறவர்களுக்கும் சேர்த்துப் பிரார்த்தி ஸ்தோத்திரம் என்பார்.
4 stars for the narration and its portrayal of poverty. 1 star for its pathetic understanding of homosexuality and its condoning of stalking, sexual harassment and assault.
இந்நாவலின் கதை எத்திசையில் பயணித்தாலும், அதன் மையமாக விளங்குவது உறவுகளே : தந்தை-மகன், தாய்-மகன், ஆண் - பெண், ஆண் - ஆண் , வஞ்சித்தவன் - வஞ்சிக்கப்பட்டவன், வீழ்த்தியவன் - வீழ்த்தப்பட்டவன் என இவ்வனைத்து உறவுகள் வழி உருவாகும் சிக்கல்கள் அமைக்கும் வன்மம் நிறைந்த பாதைகளில் கதை வேகமாகப் பாய்கிறது.
கதையின் நாயகன் கதிர். ஊர்த் திருவிழாவில் தந்தையைக் கொல்ல வேண்டுமென வேண்டி ஒரு கிடாவை அவன் பலி கொடுக்கும் புள்ளியில் கதை தொடங்குகிறது. பின் அவன் குழந்தைப் பருவம். தந்தையால் கைவிடப்பட்ட குடும்பம். பசியால் சிதையும் பிழைப்பு. அன்பு செலுத்த நேரமோ மனமோ இல்லாத தாய். அவரது வாழ்க்கையும் இவன் தந்தையால் பாழ். வறுமையில் இருந்து தப்பிக்க இவனை ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறார். அங்கு இவன் முதன் முதலாக அன்பாக நடத்தப்படுகிறான்; கிறிஸ்துவத்தை அறிந்து கொள்கிறான். சில வருடங்களில் தந்தை பெரும் கடன் சுமைகளை சேர்த்து வைத்து விட்டு சிறைக்குச் செல்ல, கல்வியை நிறுத்தி வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம். வேறு ஊருக்கு குடிபெயர வேண்டிய அவமானம். தொழிற்சாலையில் நண்பர்கள் இல்லாமல் இயந்திரங்களுடன் கழியும் வாழ்க்கை. திறமையுடன் அடுத்த வேலைகளுக்கு முன்னேறுகிறான். நண்பர்களை சம்பாதிக்கிறான். எங்கு சென்றாலும், அவன் தந்தையின் பாவங்கள் அவனைப் பின்தொடர்ந்து அவன் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டே வருகின்றன. தந்தை மீதான வன்மமும் பழி தீர்ப்பதற்கான வெறியும் நாளுக்கு நாள் வளர்கிறது. அவன் தந்தையின் செயல்கள் அனைத்தும், அவன் வெறுப்புக்கான முழுக்காரணமும் 300 பக்கங்களுக்குப் பிறகு வெளிச்சமாகிறது.
இயற்கையாக நல்ல குணம் கொண்டவன். திறமைசாலி. நேர்மையானவன். இவ்வாறு அவன் அறிமுகம் இருந்தாலும், பெண்களுடனான அவன் நடத்தை இழிவு. காணும் அனைத்து பெண்களையும் காமத்துடன் மட்டுமே அணுகுபவன். துன்புறுத்துபவன். சில சமயங்களில் எல்லை மீறி வன்முறை நிகழ்த்துபவன். ஆனால் தான் செய்வது தவறு என உணராதவன். நம் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கமும் நாகரீகமற்ற அணுகுமுறைகளும் கலந்துருவாக்கிய ஒரு அருவருக்கத்தக்க product இவனுடைய இம்முகம்.
கதையின் பல இடங்களில் கதிர் தன்னையே வெறுக்கிறான். அருவருக்கத் தக்கவனாக உணர்கிறான். பெற்றோரால் விரும்பப் படாததால் தொடங்கிய இந்த சுய வெறுப்பு சமூகம் அவன் முகத்தையும் உருவத்தையும் ஏழ்மையையும் சூழ்நிலையையும் நிராகரிப்பதால் பலப்படுகிறது. வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்கச் சந்திக்க, அவன் விருப்பத்தை மீறி சூழ்நிலைகளால் வேறு காரியங்கள் செய்ய நிர்பந்திக்கப்படும் போதெல்லாம் இந்த வெறுப்பு கூடுகிறது. தன்னை ஒரு புழு போல் உணர்கிறான்.
கதிருடைய கதையுடன் கம்போடிய டைரிக்குறிப்புகள் எனத் தனியான ஒரு சரடு நீள்கிறது. கம்போடியாவில் நடந்தேறிய இனப்படுகொலையில் மாட்டிக் கொண்ட ஒரு தமிழ் குடும்பத்தின் கதையாக தொடங்கி, அக்குடும்பத்தில் பிழைக்கும் ஒரே ஆளான கதிரின் தந்தை பெரும் கொடுமைகளுக்கு ஆளாவதை விவரிக்கிறது. கதிருடைய குழந்தைப் பருவம், கம்போடியா, அவன் சந்திக்கும் மனிதர்கள், மேற்கொள்ளும் தொழில்கள், அவன் தந்தையின் சிறைவாசம் என கதை வலையாக விரிகிறது.
கதிருக்கு நண்பனாய் அறிமுகமாகும் முருகன் என்பவன் அவன் மீது காதல் கொண்டு அதை வெளிப்படுத்துகிறான். இந்த உறவைப் பற்றிய அத்தியாயங்களில் முருகனின் காதலைப் பற்றிய வர்ணனைகளில் "பெண் தன்மை" என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுவது உறுத்துகிறது. ஓர்பால் ஈர்ப்பைப் பற்றிய மிகவும் தவறான, அரைகுறை புரிதலுடன் எழுதப்பட்ட இந்த உறவு தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துகிறது. "ஓரினப் புணர்ச்சி" என்ற வார்த்தையை உபயோகிக்கும் போதே எழுத்தாளருடைய புரிதலின் முதிர்ச்சி என்னவென்று தெரிகிறது. கதையிலும் ஓர்பால் உறவு எங்கு வந்தாலும் அது வெற்றுக்காமத்தின் வெளிப்பாடாகவோ வன்முறையின் வெளிப்பாடாகவோ தாக்குதலாகவோ தான் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. முருகன் என்னும் பாத்திரம் வெறும் நெருங்கிய நண்பனாக வந்திருந்தாலும் கதையில் பெரிய மாற்றம் இருந்திருக்காது. முருகனின் ஒருதலைக் காதலை ஓரளவு சரியாக சித்தரித்திருந்தாலும், இவர்களின் உறவு தேவை இல்லாமல் இங்கு ஓர்பால் ஈர்ப்பைப் பற்றிய தவறான புரிதல்களையே ஏற்படுத்துகிறது.
கதிரின் காதல் கதையாக வரும் சத்யாவின் கதை கவுரவக்கொலைகள் பற்றிய ஆசிரியரின் விமர்சனமாக மட்டுமே வெளிப்படுகிறதே தவிர ஒரு காதல் கதையாக நம்பும் படி இல்லை. இங்கும் sexual harassment மூலமே காதல் பிறக்கிறது. இங்கும் கதிர் திருந்தாமல், பெண்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் அவர்களை stalk செய்வது காதலின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. கேவலமான, முகம் சுழிக்க வைக்கும் காதல்.
லக்ஷ்மி சரவணகுமாரின் எழுத்து ஆங்காங்கே எஸ்ராவை நினைவுபடுத்துகிறது. நன்றி பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள Zarathusra, Albert Camus, Herman Hesse, Rumi ஆகியவர்களின் தாக்கமும் அவரது எழுத்தில் அதிகம் தலைகாட்டுகிறது. நடை தடையில்லாமல், விறுவிறுப்பாகப் பயணித்தாலும் அடிக்கடி வழிமறிக்கும் இந்த தத்துவக் குவியல்கள் சலிப்படையச் செய்கின்றன. முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றன. கதையின் வேகமும் தாக்கமும் வீரியமும் இதற்கு ஈடுகட்டுகின்றன.
கொமோரா உணர்த்தும் ஆதார உண்மைகள் சில: - ஒருவரது வாழ்க்கையில் நிம்மதி, வசதி, மகிழ்ச்சி என யாவும் அமைவது அவர்க்கு வாய்த்த பெற்றோர்களைப் பொறுத்தே. - நம் சமூகத்தில் கடமைக்காக கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கப்படும் திருமணங்களால் அத்தம்பதியரின் வாழ்வோடு (சில சமயம் அவர்கள் வாழ்வை விட அதிகமாக) நாசமாவது அவர்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளின் வாழ்வே. - திருமணம் என்னும் சிறைக்குள் இவ்வாறு அடைக்கப்படுபவர்கள் சமூகம் தன் மீது நிகழ்த்திய வன்முறைகளை தங்களது பிள்ளைகளின் மீது நிகழ்த்துகிறார்கள். - இத்தகைய கட்டாயங்களுக்கும் சாதிக் கட்டுப்பாடுகளுக்கும் முதலில் இரையாவது பெண்களின் உரிமைகளும் சுதந்திரங்களும் மகிழ்ச்சியும் வாழ்வும். - பணம் இல்லையெனில் இன்னும் மோசமாகும் இந்நிலைமை மேலும் குடும்பங்களைச் சிதைக்கிறது. கடன்களாலும் பெற்றோரின் பாவங்களாலும் பிறழ்வுகளாலும் குற்றங்களாலும் இயலாமையினாலும் கவனிப்பின்மையினாலும் கடும் உடல்/மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படும் இக்குழந்தைகள் காலப்போக்கில் அவர்களது பெற்றோர்களின் பிம்பங்களாக மாறுகிறார்கள்.
இவற்றைத் தவிர, வறுமை ஏற்படுத்தும் தப்பிக்கமுடியா சூழல், தனிமை, இந்தியாவில் சிறைகளில் நிலைமை, சிறையிலும் தொடரும் சாதிக்கட்டுப்பாடு, சமூகம் தன் உச்சத்திலுருப்பவர்களை காக்க கொடுக்கும் பலிகள், பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இருக்கும் பிணைப்பு, அன்பு காட்டப்படாத குழந்தைகளின் மனச்சிதைவு, கிராமத்து வாழ்க்கை எனப் பலவற்றை கொமோரா பேசுகிறது.
இந்நாவல் மனிதர்களிடம் நிலவும் வெறுப்பை பேச இருக்கிறது என்று முன்னுரை கொடுத்திருக்கிறார் லஷ்மி சரவணகுமார். ஆனால் மகனை காப்பாற்ற உயிர் விடும் தந்தை, கணவனுடன் சல்லாபித்தவனிடம் வாஞ்சையுடன் இருக்கும் பெண், ஆதரவற்றவர்களிடம் பாசமாக இருக்கும் ரோஸி சிஸ்டர் என்று அன்பு பொங்கி வழிகிறது. கதிருக்கும் அவன் தந்தை மேல் இருக்கும் வெறுப்பு விலாவரியாக சொல்லப்பட்டிருக்கிறதே தவிர அழுத்தமாக இல்லை.
இன்றும் ஓரினசேர்க்கை(குறி சொல்லுபவர்), அதிகாரமிக்க பாலியல் உணர்வுள்ள பெண்கள்(சுதா) பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சி கொள்ளும் நிலையிலா இருக்கிறது தமிழ் இலக்கியச் சமூகம்?
கதை நடக்கும் காலம் தெளிவாக இல்லை. கதாப்பாத்திரங்கள் பேசிக்கொள்ளும் மொழி வெறும் வர்ணப்பூச்சாகவே தெரிகிறது . வானா ரூனா, செட்டி தெரு என்றாலே புயலிலே ஒரு தோணி நினைவில் வந்துபோகிறது
சாத்தானின் மனவெளி குறிப்புகள் அட்டகாசம். கதிர் தந்தையை கொள்வதின் மனத்தடுமாற்றமும் நன்று. பிழையுள்ளவர்களால் தான் மன்னிக்கமுடியும் போன்ற ஸ்பார்க்குகளும் உண்டு.
அது சரி தந்தையை கொல்ல மகன்களை தூண்டி விடுகிறார் என்று எந்த கலாச்சார காவலர்களும் கிளம்பவில்லையா. இன்னும் கொஞ்சம் பப்ளிஸிட்டி கிடைத்திருக்கும்
'அப்பன் சேத்துவைக்கற சொத்துல மட்டும் இல்ல, பாவத்துலயும் பிள்ளைக்கு பங்கு இருக்கு' என்ற வசனத்திற்கு பொருத்தமாக 'கதிர்'-ன் அப்பா செய்யும் தவறுகள், குரூரங்கள் அவனை எப்படி துரத்துகிறது, அது அவனுள் கோபத்தையும் வன்மத்தையும் எவ்வாறு வளர்க்கிறது, இதிலிருந்து வெளிப்பட வன்முறையும், பழிவாங்குதலும் தான் தீர்வா? கம்போடியா வதைமுகாமின் கொடூரங்கள், சாதியக் கொடுமைகள், bisexual நபர்களின் வாழ்க்கை, அவர்கள் இந்த சமூகத்தில் இயல்பானவர்களாக எவ்வாறு நடத்தப்படவேண்டும் என பல விஷயங்களை ஆழமாக விவாதிக்கும் அருமையான நாவல் கொமோரா.
ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்கள் இருந்தாலும், நாவலின் யதார்த்தத்திற்காக கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்.
YouTube பதிவாக கொமோரா நாவல் பற்றி, எங்கள் தளத்தில் காண:
மாறிக் கொண்டேயிருக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதேனும் ஒன்று அக்காலக்கட்டத்தின் பிரதானமான பேசு பொருளாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில், இன்றைய காலம் நவீனத்தின் பாதையில் நடைபயின்று கொண்டிருந்தாலும், அதன் பெரும்பான்மை, விளிம்பு நிலை என்ற சொல்லாடலினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், பேச்சுகள், திரைப்படங்கள், ஓவியங்கள் எனப் பரவலாக அனைத்திலும் விளிம்பு நிலை மக்கள், அவர்தம் பல்வேறு வகையான வாழ்வு நிலைகள், அவர்தம் உணர்வுகள் என அவற்றைப் பற்றியே பேசியும், பார்த்தும், விமர்சித்தும், அனுதாபம் கொண்டும் என, ஒரு நிலைக்கு மேல் சலித்துப் போகும் அளவிற்கு அந்நிலை இன்று பேசு பொருளாகி விட்டது.
விளிம்பு நிலை என்ற சொல்லுக்கு புறக்கணித்தல் என்பதும் ஒரு பொருள். அந்த வகையில் ஒதுக்கப்பட்டவை, தவிர்க்கப்பட்டவை, அலட்சியப்படுத்தப்பட்டவை, தாழ்த்தப்பட்டவை, அசூயையாகப் பார்க்கப்பட்டவை எனப் புறக்கணிக்கப்படுதலில் பல்வேறு நிலைகள் இருக்கின்றன.
அறுசுவைகளில் கசப்பு, ஐந்திணைகளில் பாலை, நவக்கிரகங்களில் சனி, நால்வகை வர்ணங்களில் சூத்திரர் போன்ற ஏராளமான உதாரணங்கள், இங்கு ஏராளமாகவும் இருக்கின்றன.
“மனதிற்கு பிடித்து விட்டால், இனிப்பு என்பது எப்படி ஒரு சுவையோ, அப்படியே கசப்பு என்பதும் ஒரு சுவையே” என்பது சுவாமி சுகபோதானந்தாவின் வரிகள். அது நாவின் சுவைக்காக மட்டுமே கூறப்பட்டதல்ல, அதன் வழி மனதின் உணர்வுகளுக்காகவும் உரைக்கபட்டது.
கசப்பு என்பது சுவைகளில் புறக்கணிக்கப்பட்ட ஒன்று என்றாலும் கூட, அது இல்லாமல் அறுசுவையில் முழுமை என்பது இல்லை.
அந்த வகையில், மனிதன் என்ற முழுமைக்குள் அன்பு, கருணை, தியாகம் போன்ற நேர்மறை குணங்கள் மட்டுமல்ல, வெறுப்பு, பொறாமை, கோபம் போன்ற எதிர்மறை குணங்களும் கலந்தே இருக்கின்றன. அவைகளின் தொகுப்பு தான் மனிதன். ஆனால், நமக்குக் கற்பிக்கப்பட்டவை அனைத்தும் அன்பினாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்படும் வாழ்க்கை முறையையே. உண்மையிலேயே, மனித வாழ்க்கை அன்பினால் மட்டுமே தான் கட்டமைக்கப்பட்டுள்ளதா? தியாகத்தினால் மட்டுமே அது நிறைவு கொள்கிறதா? கருணையே எல்லோரிலும் பொங்கி பூரிக்கிறதா? என்றால், “இல்லை இல்லை” என்ற கூக்குரல் தான், அனைவரின் மனதிலும் ஒலிக்கும். ஆனால், அக்குரலின் முணுமுணுப்பு கூட வெளியில் கேட்டு விடாத அளவிற்கு அக்குரலின் தன்மையை உள்ளுக்குள்ளேயே அடக்கி, அல்லது மனதிற்குள்ளேயே வைத்து குமைந்து இறுதியில் அதனூடே இறந்தும் போகிறோமே தவிர, அத்தகைய குணங்கள் எதுவும் என்னிடம் இல்லையென்று மார்தட்டிக் கொள்ள இயலாது, என்பது தான் மானுட வாழ்வின் யதார்த்தம்.
ஆனால், அது மட்டுமேயல்ல வாழ்வின் யதார்த்தம். அது அதன் ஒரு பக்கம் மட்டும் தான். இன்னும் கூட அதன் நீட்சிகள் மறைந்து சிதிலமாகிக் கிடக்கின்றன. அறியாதவை என்பதனால் மட்டும் அதனில் குரூரங்கள் இல்லையென்று கூறி விட முடியாது என்பதை, நம் மனதைக் கூறு போட்டுச் சொல்கிறது, லக்ஷ்மி சரவணக்குமாரின் “கொமோரா”.
எல்லாவற்றிலும் விளிம்பு நிலை இருக்கும் போது, மனித உணர்வுகள் மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன? அவற்றிலும் புறக்கணிக்கப்படுபவை உண்டு. அவற்றுள் மிகச் சாதாரணமாக நாம் கடந்து போகும் அல்லது அலட்சியப்படுத்தும் அல்லது மறைத்து வைக்கும் “வெறுப்பு” என்ற உணர்வே இக்கதையின் பிரதான களம். “கொமோரா” எனும் சொல்லுக்கு அழிக்கப்பட்ட மேடு என்பது பொருளாம். ஒரு உணர்வின் விளிம்புநிலை, அந்த மனிதனை எத்தனை ஆழமாக பாதித்து, அவனை எந்த அளவிற்கு அழிவின் விளிம்பு வரை கொண்டு செல்கிறது என்பதையே இக்கதை மிக மிக பட்டவர்த்தனமாகப் பேசுகிறது.
“வெறுப்பு” என்பது ஒரு உணர்வான போதிலும், அதனை சுவை எனும் துய்த்தலாக உருவகப்படுத்துகிறார் ஆசிரியர் தன் முன்னுரையில். எனில், அது எந்த அளவிற்கு கதையினுள் ஊடுருவிச் செல்லும் எனும் எதிர்பார்ப்பையும், கூடவே அவ்வெறுப்பின் பரிமாணங்களை வாசிக்கத் தான் வேண்டுமா? எனும் தயக்கத்தையும் நம்முள் விதைக்கவே செய்கிறது. எனினும், எல்லாவற்றையும் கடந்து, அப்படி என்ன தான் சொல்லி விடப் போகிறது எனும் ஆர்வத்தையும் அது கிளறி விடுவதால், வாசிப்பின் நுழைவாயிலுக்குள் இழுத்துச் சென்று நிறுத்துகிறது.
ஒரு மகன் தந்தையைக் கொல்ல தன் வாழ்நாளெல்லாம் காத்திருக்கிறான், என்பதை நம்புவதற்கே கடினமாயிருக்கும் போது, அதற்கான அத்தனை நியாயங்களும் அவனுக்கு இருக்கின்றன என நம்மையே அவன் பக்கம் ஈர்த்து விடும் சூட்சுமம் ஆசிரியருக்கு மிக இலாகவமாக கைவந்திருக்கிறது.
அவனது துயரங்கள், வேதனைகள், அவமானங்கள் என அனைத்திலும் உள்ள வலியை வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து தெறிக்க வைத்து, நம்மையும் அதை அனுபவிக்க வைத்தாலும் கூட, அதனிலும் ஓடிக் கொண்டிருந்த ஒரு மெல்லிய நிதானத்த�� நம்மால் உணர முடிகிறது. ஆனால், அதில் தெரியும் அம்முதிர்ச்சியான மனநிலை, ஆசிரியருடையதா? அல்லது கதிர் என்ற கதாபாத்திரத்தினுடையதா? என்பதில் குழப்பம் மேலிடுகிறது. அது ஆசிரியரின் சொந்தக்கதை என்பதனால் கூட இருக்கலாம்.
கதிரின் வாழ்க்கையை காட்சிப்படுத்துதலின் போதே, அழகர்சாமியின் கதையும் ஊடுபாவாக வந்து வந்து போகிறது. ஆகையால், அது அந்த இரு கதாபாத்திரங்களின் காத்திரத்தன்மையை ச��றிது குறைக்கவே செய்கிறது.
கதிரின் கடந்த காலத்தை விட, அழகர்சாமியின் கடந்த காலம் தான் மிகவும் பதைபதைக்க செய்வதற்கான அத்தனை நியாயங்களும் கொண்டிருக்கிறது. ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், அவர் மேல் எள்ளளவும் பரிதாபம் தோன்றவில்லை. கதிரின் பக்கம் தான் நம் மனம் சாய்கிறது என்பதில், கதிருக்கான நியாயங்களை மறைமுகமாக வலியுறுத்தும் ஆசிரியரின் சாமர்த்தியம் புலப்படுகிறது.
கம்போடிய டைரிக் குறிப்புகள் அழகர்சாமியின் நிலையை விளக்கும் வகையில் என்றாலும் கூட, அது கதையின் போக்கிற்கு தடையாகவே வருகிறது.
கதை நெடுகிலும் வரும் பலதரப்பட்ட மனிதர்கள், எவ்வித கட்டுக்களும், ஒழுக்கங்களும், நியதிகளும், நோக்கங்களும் இல்லாத எளிய வாழ்வின் அசல் பிரதிகள். ஆனால் வாழ்வின் மீதான அன்புகளும், ஆசைகளும், நம்பிக்கைகளும், ஏக்கங்களும் அவர்களுக்கு ஏராளம். அதுதான், எத்தகைய நிலையிலும் வாழ்வை புதிதாக அவர்களைத் தொடங்க வைக்கிறது என்பதையும் போகிற போக்கில் பதிவு செய்கிறது.
இக்கதையின் ஆகச்சிறந்த ஒன்று என்றால் அது பெண்கள்… இக்கதையின் பெண்கள் மிக மிக ஆழமான முறையில் நம்மை ஆச்சரியப்படுத்தி விடுகின்றனர். அதுவும் எவ்வித பாசாங்குகளும், மேற்பூச்சுகளுமற்ற நிலையில். பாலியல் தொழில் செய்யும் ராணி, மீனா போன்றவர்கள். வெளியே உறவு கொண்டிருக்கும் சுதா, மலர் போன்றவர்கள். இவர்களிடமிருக்கும் வாழ்க்கையைப் பற்றிய பார்வைகளும் எண்ணங்களும் மிகவும் ஆழமானது. அது அவர்களது அவல வாழ்க்கை கொடுத்தது என்றாலும் கூட, அதுதான், அந்தப் புரிதல் தான் அவர்களை மீண்டும் மீண்டும் வாழ வைக்கும் காரணியாக இருக்கிறது. சத்யா, சக்தி, தனம் போன்றவர்களின் அன்பு மனமும் கூட அவர்களது வாழ்வின் சூழல் கொடுத்தது தான். இப்படி இந்தப் பெண்கள் எல்லாரும் வாழ்க்கையை வாழும் முறையை அதிலிருந்தே எடுத்துக் கொள்ளும் வித்தையை மிக அழகான முறையில் அவர்களது வாழ்வியலோடு பதிவு செய்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது. ஏனெனில், எவரின் மீதும் கதிருக்கு மரியாதையோ அன்போ இல்லை. எனினும், அவர்களை எவ்விதத்திலும் அவன் கீழாக நினைக்கவும் விழையவில்லை. அந்த நேர்மையே அவனை இக்கதை முழுவதிலும் நிமிர்ந்து நிற்கச் செய்கிறது.
உடலால் சிலரும் மனதால் சிலரும் அவனிடம் நெருங்கினாலும், எல்லோரிடமிருந்தும் அவனால் விலகி நிற்க முடிகிற அளவிற்கு அவனுள், வெறுப்பு தன் வேர்களை ஆழப் பதித்திருப்பதை பக்கத்திற்கு பக்கம் கதை நெடுக உணர முடிகிறது.
விஜி அண்ணனின் அப்பா கதாபாத்திரமும் அவரது தியாகமும், இக்கதையைப் பொறுத்தவரை தேவையற்ற ஒன்றாகத் தான் படுகிறது. அது ஆசிரியரின் “எல்லா தந்தைகளும் கெட்டவர்களல்ல” என்று எண்ணத்தை வாசகரிடம் கூறி விடும், அவசியமோ அல்லது அவசரமோ அன்றி வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்கதாபாத்திரம் இல்லையென்றாலும் கூட கதிரின் மீதான மதிப்பீடு எள்ளளவும் மாறப் போவதில்லை.
மேலும் இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று என்றால், அது கதிர்-முருகன் இடையேயான பந்தம். அது நட்பா, காதலா, தோழமையா, என அதன் பெயர் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் மிக மிக ஆழமான தொரு பந்தம் அவர்களுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கிறது. கதிரின் அத்தனைக் குணங்களோடும் அவனை ஆதரிக்கும் ஒரு தோழமை, அவனுடன் இணைந்து கொலை செய்வதற்கும் துணிந்த மனம், என கதிரின் உற்ற உறவாகவே முருகனின் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கும் விதத்தில் அவ்வளவு எளிமை. அதுவே அக்கதாபாத்திரத்திற்கான சிறப்பு.
இக்கதையின் ஒட்டுமொத்தத்திற்குமான உச்சம் என்றால், இரண்டு இடங்களைக் கூறலாம். முதலாவது, கதிர் அவனது தந்தையை கொலை செய்ய முயற்சிக்கும் இடம், அவனது அந்த முதல் முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அத்தனை தவிப்புகளும், தடுமாற்றங்களும், நம்மையும் தொற்றிக் கொண்டு படபடப்பின் அச்சத்தில் ஆழ்த்தி விடுகிறது. அதன் முடிவில் அவனுக்கு ஏற்படும் இயலாமையும் தோல்வியும், நம்மை “அச்சோ அவன் தோற்று விட்டானே” என்று பரிதவிக்கவும் வைக்கிறது. பஞ்சமா பாதகங்களில் ஒன்றான கொலையையே நம் மனதை விரும்ப வைக்கும் அளவிற்கு, அவனுடன் நாம் ஒன்றி விடும் அந்த உணர்வுகள், மிக மிக வலியது. கூடவே எது ஒன்றையும் விட உயிர் மிகப் பெரியது என்பதையும், உணர்த்தியே செல்கிறது.
இரண்டாவது, கதிர் அழகர்சாமி எனும் மனிதனை கொலை செய்து முடிக்கும் அந்த இடம். எந்த அன்பிற்கும் நெகிழ்ந்து கொடுக்க முடியாமல், எந்த நம்பிக்கைக்கும் பாத்திரமாக முடியாமல், எந்த ஆசைக்கும் அடிபணிய முடியாமல் இறுகிக் கிடந்த அவன் மனதில், இத்தனை நாட்களாக தான் மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்ற இறுமாப்பில் வீற்றிருந்த அத்தனை வெறுப்பும் கரைந்து உருகி ஓடும் அளவிற்கான அத்தனை ஆத்திரமும் வெறியும் வன்மமும் அவனது ஒவ்வொரு செயலிலும் பரிபூரணமாக பொங்கி வெடித்து சிதறியதை, நம்மால் பதற்றத்தோடு காண முடியவில்லை. மாறாக, கண்ணீர் கசிந்த கண்களால் மட்டுமே தான் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு அதன் காட்சிப்படுத்துதலில் அத்தனை நேர்த்தி. அத்தனை உண்மை. அத்தனை வலி. அத்தனை ஆறுதல். இறுதியாகக் கதிரின் ஆறுதலில் நாமும் ஆறுதல் கொள்கிறோம்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்புகள், அவற்றில் குறிப்பிடப்பட்ட ஜென் கதை, புத்தர், மணிமேகலையின் வரிகள், பைபிளின் வாசகங்கள், ஆங்கிலப் பாடல்கள் என அனைத்தோடும், ஆன்ரூ சாமியாரின் வார்த்தைகளும் இணைந்து ஒரு தத்துவார்த்த பார்வையை இக்கதைக்குக் கொடுத்திருக்கிறது. அது கதிரின் மன ஓட்டங்களிலும் நமக்குப் புலப்படுகிறது. அந்தத் தத்துவார்த்தம் தான் அவனது வெறுப்பை நியாயத்தின் பக்கமாக நம்மையும் பார்க்க வைக்கிறது. இதுவும் ஆசிரியரின் ஒரு வகை உத்தியோ? ஆயினும் அதனைக் குறையாகக் கொள்ளவும் இயலவில்லை.
“பசித்தவனின் குருதி உறிஞ்சிக் கொள்ள வேலைகளுக்காப் பஞ்சம்” என்ற வரியின் உழைப்பின் பயனின்மையும்,
“ஏற்றுக்கொள்ள முடியாத ஒவ்வொன்றின் மீதும் என்றென்றைக்குமான விருப்பங்கள் நிலைபெற்று விடுகின்றன.” என்ற வரியின் நிராசையின் ஏக்கமும்,
“தொடுவதற்கு முன்பு வரையிலான அன்பு தொடுதலுக்குப் பிறகு வேறொன்றாகத் தான் மாறி விடும் போல்” என்ற வரியின் புரிதலின் ஆழமும்,
கதை முழுவதும் விரவிக் கிடக்கிறது. அது ஆசிரியரின் பக்குவப்பட்ட எழுத்திற்கான உதாரணங்கள்.
“வெறுப்பு” எனும் உணர்வு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல தான். உடன்படக் கூடிய ஒன்றும் அல்ல. ஆயினும், அது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதையே இக்கதை முழுவதும் வலியுடன் சொல்லிச் செல்கிறது.
ஒரு ஆசுவாசத்தை நம்முள் எழுப்பிய உணர்வோடு கதை முடிந்த போதும், மனம் கனத்தே கிடக்கிறது. அத்தனைக் காத்திரமாக கதிரின் உணர்வுகள் அத்தனையையும் வாசகருக்குள் கடத்தி விடும் அளவிற்கு, எளிமையும் வன்மையுமான உணர்வுகள் உள்ளடங்கிய ஒரு தேர்ந்த மொழி நடை.
இறுதியாக, தனிமையில் நாடோடியாக அலைந்து திரியும் கதிரின் பால் நமக்கு இறுதியில் மிஞ்சுவது, “இனியாவது நிம்மதியா இரு” என்று சொல்ல வைக்கும் ஒருவகை வாஞ்சையே. மேலும், வெறுப்பு எனும் உணர்வின் மீது சிறு அக்கறையும் நம்முள் எழவே செய்கிறது.
“எது உன்னை, உனது சிந்தனைகளைப் புரட்டிப் போட்டு உன்னைத் தடுமாற வைக்கிறதோ, எது உனது பார்வைகளையும், தீர்மானங்களையும் சிதறடிக்கிறதோ அதுவே இலக்கியம்” எனும் கூற்றுக்கிணங்க, என்னைப் பொறுத்தவரையில், லக்ஷ்மி சரவணக்குமாரின் ���கொமோரா” மிகச்சிறந்த இலக்கியப் படைப்பு என்றால் அது மிகையில்லை.
ஒரு கேள்வியில் இருந்து இந்த நாவலை அணுகலாம், மனிதர்கள் ஏன் இவ்வளவு மோசமான குரூரமான வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்?. கதிரின் பதின் பரு��த்தில் துவங்கும் நாவல் அவனின் இளமைக்காலத்தில் முடிகிறது அனைவராலும் கைவிடப்பட்ட புறக்கணிக்கப்பட்ட ஒருவனை இந்த சமூகம் மூர்க்கத்தனமான வதைக்கும் போது மனிதர்கள் மீதான வெறுப்பாகவும் வன்முறையாகவும் மாறுகிறது. அதே நேரத்தில் கொடூரமான இனப்படுகொலையில் இருந்து தப்பி பிழைக்கும் அழகர்சாமி போன்றவர்கள் எவ்வாறு வன்முறையாளர்களாக மாறுகிறார்கள் என்பது வரும் இறுதி அத்தியாயம் மொத்த நாவலையும் இதுவரை வாசித்து வந்த வாசகனின் பார்வையை மொத்தமாக புரட்டி போட்டு நாவலை மறுபரிசீலனை செய்ய சொல்கிறது. இறுதி அத்தியாயத்திற்கு முன்பு கூட வேறு ஒரு கோணத்தில் தெரியும் நாவல் இறுதி அத்தியாயத்தில் மொத்தமாக மாறிவிடுகிறது. அதே போல் இன்னொரு இடம் விஜி அப்பா மரணம் வெறுப்பின் வழியே வரும் நாவல் இங்கே மறுபரிசீலனை செய்ய சொல்கிறது ஆனாலும் அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆதரவு இல்லாமல் அனாதை கிறிஸ்துவ பள்ளியில் வதைபடும் கதிரும், கம்போடியா இன படுகொலையில் வதைபட்டு தப்பி பிழைக்கும் அழகர்சாமியும் வாழ்வின் மீதான சரி தவறுகளை கணக்கிடும் காலமாக இருக்கிறது. அழகர்சாமி கொல்லப்படும் இடத்தில் அவருக்காக சில நொடிகள் பரிவு தோன்றுகிறது. அதே போல கதிரின் நியாயங்களை முறையாக நாம் மனதில் ஏற்படுத்த நாவல் தவறுகிறது . குறிப்பாக ஆரூன்சாமி வரும் இடம் கதிரின் பக்கத்தை நாயபடுத்த மன்டுமே வலிய உருவாக்க பட்டு நாவலுக்கு வெளியே நிற்கிறது. கம்போடிய இனப்படுகொலை வரும் இடங்கள் மிக விரிவான ஒரு சித்தரத்தை அழிக்க தவறிவிட்டது என்று நினைக்கின்றேன் வெறும் தகவலாக நின்று விடுகிறது. இவ்வளவு பெரிய நாவலில் முக்கியமான இடம் என்றால் சரியாக வந்து இருப்பது எதுவென்றால் சக்தி-முருகன்-கதிர் இவர்களுக்குள் நிகழும் புரிதல்கள் குறிப்பாக முருகனுக்கும் கதிருக்கும் இருக்கும் உறவை தெரிந்து கொண்ட பிறகும் சக்தி அவர்களை அவ்வளவு இயல்பாக ஏற்றுக் கொள்ளும் இடம் சக்தியை மொத்த நாவலிலும் முக்கியமான ஒரு பாத்திரம் காட்டிவிடுகிறது. எல்லாம் தெரிந்தும் கதிரின் அம்மாவை பார்த்து கொள்ள அரசு மருத்துவமனைக்கு செல்கிறாள் இறுதி வரை அவனோடு நல்ல உறவில் இருக்கிறாள்.
கதிர் - சத்யா காதலை எழுத்தாளர் எந்த விதத்தில் நாயபடுத்துகிறார் என்று தெரியவில்லை. ஒரு சாராய வியாபாரி கஞ்சா வியாபாரி வறுவாய்க்கு வழி இல்லாத ஒரு லும்பன் கல்லூரி படிக்கும் சத்தியாவை (17 வயது) காதல் என்று இழுத்து கொண்டு ஓடுவதை அப்படியே அந்த பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எவ்வாறு நினைக்கிறார். (அந்த பெண்னை அந்த குடும்பம் கொலை செய்து விடுகிறது. இது இந்தசமூகத்தின் நோய்கூறு சாதி வன்முறை) . ஒரு முறை வாசிக்க வேண்டிய நாவல் தானா ? இல்லையா? விளிம்பு நிலை மனிதர்களை வைத்து எழுதப்படும் படைப்புகள் இறுதியில் பொதுவாக ஏமாற்றத்தை தருகிறது.
Kindle பதிப்பில் ஒரே எழுத்து பிழை .. ஒரு இடத்தில் முருகன் என்று வரவேண்டும் ஆனால் கதிர் என்று இருக்கிறது.. கதிரை கதிரே எப்படி அழைத்து செல்ல முடியும்.
The only think I liked about this book was that it was engaging. Other than that the book was really bad for me. It wasn't written well. There was so many descriptions of landscapes that were somehow always connected to the current mood trying to be portrayed. I am okay with some amount of melodrama but this was taking it to new heights. Every point that was made was driven home with excessive force and there was no space for anything to be there between the lines.
I would commend this book on its plot if it had been done well. I remember I once did an exercise where in every alternate sentence there should be some action that takes the plot forward. This book seems to have been written as an answer to this exercise. Things keep happening, not all of them necessarily contributing anything to the book overall. Most of it felt gratuitous. I've seen movies with unwarranted nudity and violence that are just there to appease an audience. This might be the first time I am encountering such a thing in a book.
I felt compelled to finish the book mainly because I wanted to see if all of this was leading anywhere. The last few chapters where particularly excruciating to get through because of all the bland philosophizing. But the ending (*minor spoiler* where Kathir checks if anyone is seeing before stamping a fish to death) at least seemed appropriate and felt like a nice touch. I am not sure what the point of the random epilogue was though. I had given up trying to make too much sense from this book long before though.
எனக்கு மிகவும் பிடித்த நாவல். மிகவும் எதார்த்த கொடூரமான வாழ்க்கை பின்னணி கொண்ட கதை. Cambodia யில் நடந்த Genocide பாகம் மற்றும் மதுரை சுற்றி கதிரின் வாழ்க்கையில் நடக்கும் பகுதியும் நம்மை இந்த தமிழர் என்ற கலாசாரம் பண்பாடு, அப்பா மகன் பாசம் அன்பு காதல் என்று எல்லாவற்றிலும் இருக்கும் ஒரு மாயையை (நமக்கு சொல்ல பட்டு கொண்டு இருந்த ஒரு அன்பு மாயை) உடைத்து எரிந்து இருக்கிறது இந்த நாவல். எனக்கு மிகவும் பிடித்த இடம் மட்டு முத்திரத்தை குடிக்க வட மாநிலத்தில் இருந்து நம்ம ஊருக்கு வருபவர்களை சொன்ன விதம் Ultimate. இதில் ஒரு வரி இப்படி வருகிறது "தத்துவங்களை நேசிப்பதற்குத்தான் இந்த உலகத்தில் எத்தனை மனிதர்கள். மனிதர்களை நேசிக்கத்தான் மனிதர்களில்லை". கொமோரா one of the best novel in Tamil
கதிரின் தந்தை அழகர்சாமி தனது விருப்பம்போல வாழ்வை வாழ அதனால் பாதிக்கப்படும் கதிர் அழகர்சாமி மீது வன்மத்தை, வெறுப்பை, பகையை உள்ளத்தில் வளர்க்கிறான். அழகர்சாமியின் கதை கம்போடிய டயரிக் குறிப்பு வழியாக அறியும் போது அவர் மீது நமக்கு இறக்கம் பிறக்கிறது. கதிர் தனது வலி நிறைந்த இருள் உலகிலிருந்து வெளியேறும் கதையே கொமோரா. கம்போடிய டயரிக் குறிப்புகளை இந்த கதையிலிருந்து நீக்கிவிட்டால் இதை உப்புநாய்கள் பார்ட்2 என நாம் கொமோரா வை சொல்லாம். -கலைச்செல்வன் செல்வராஜ்.
லஷ்மி இதுவரைக்குமாக எழுதிய அத்தனை நாவல்களையும் படித்துவிட்டவன் என்கிற முறையில் சொல்கிறேன், லஷ்மி தன் படைப்பில் அடைந்திருக்கும் உச்சம் இந்நாவல். எவ்விதங்களிலும் குறையில்லாமல் படைக்கப்பட்ட நாவல். வாசகர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றும் கூட. நாவலின் சில முக்கிய பகுதிகளை சாத்தானின் மனவெளிக் குறிப்புகளாக எழுதியவிதம் அருமை. அந்தக் குறிப்புகள் நீண்ட அத்தியாயங்களாக இடம் பெற்றிருந்தாலும் அலுக்காமலேயே இருக்கும். ஏனென்றால் தான் ஒரு சிறந்த கதை சொல்லி என்று நிருபித்திருக்கிறார் லஷ்மி சரவணகுமார். உங்களின் வாசகன் என்பதில் மெல்லியதோர் பெருமை எனக்கு.
சிறுகதைக் கலை கொஞ்சம் சுலபமாகவே இருக்கிறது. பெரும்பாலும் இரண்டு, மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு எளிதில் ஒரு பொம்மலாட்டத்தை நிகழ்த்தி சில நிமிட நேரங்களுக்குள் வாசகனைப் பிரமிப்புக்குள் மூழ்கடித்து விடுகிறான் சிறுகதையாசிரியன். ஒரு நாவல் எழுதுவது அத்தனை எளிதல்ல. நிறைய பொம்மைகளைக் கொண்டு சிடுக்குகள் ஏதும் விழாமல் பெரும்பாலும் ஒரே நேரத்திலேயே கலைநிகழ்த்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறான் நாவலாசிரியன். அதோடு அவன் பல மண���நேரங்கள் வாசகனின் கவனத்தையும் கோரி இழுத்துப் பிடித்து நிற்க வேண்டிய நிலையில் இருக்கிறன்.
பெரும்பாலும் ஒரு வண்ணநூலைக் கொண்டு ஒற்றை வண்ண உடையொன்றை உருவாக்குகிறான் சிறுகதை எழுத்தாளன். வெவ்வேறு வண்ணநூல்களைக் கொண்டு பலவண்ணமுடைய ஆடை ஒன்றை நெய்கிறான் நாவலாசிரியன். பல வடிவங்கள் அவ்வாடையில். பூவும் இருக்கலாம், பூவையும் இருக்கலாம், பூதமும் இருக்கலாம். அவரவர் மனவிகற்பங்க��ுக்கும் விகாரங்களுக்குமேற்ப அவ்வடிவங்களும் வண்ணங்களும் பிடித்ததாகவோ பிடிக்காததாகவோ அமைகின்றன. சோக இசைக்கென்றே கூட பொருந்தி வரும் மனதுடையவர்கள் நம்மில் இருக்கிறார்கள் அல்லவா?
கொமோரா அந்த வகையில் எதிர்மறை வண்ணத்திலிருக்கும் நாவல் எனலாம். வெறுப்பின் நாவல் என்று நாவலாசிரியர் முன்னுரையிலேயே நம்மிடம் சொல்லிவிடுவதால் உள்ளே நமக்காக என்ன காத்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது. வெறுப்பும், வெறுப்பின் பின்னாலிருக்கும் நியாயங்களுமே இந்நாவலின் பேசுபொருள் என்கிறார் ஆசிரியர். அன்பைப் போலவே அசாத்திய வெறுப்பும் அருவெறுப்பும் நிஜம் என்று முன்னுரைக்கிறார்.
கொமோரா என்கிற பெயரிலிருந்தே நாவலின் எதிர்மறைத்தன்மை ஆரம்பிக்கிறது. விவிலியத்தில் சோதோம், கொமோரா நகரங்கள் எதிர்மறைக்கு எடுத்துக்காட்டுகளாக, பாவத்தின் சின்னங்களாக பலமுறை வந்து போகின்றன. யாவே என்னும் கோபமுள்ள கடவுள் சோதோம் கொமோராவைப் போலாக்குவேன் என்று பலமுறை தன்னைப் பின்தொடரும் மக்களுக்கு மிரட்டல் விடுத்தே வழிப்படுத்துகிறார்.
இந்த சோதோம் கொமோராவின் பின்னணி என்ன? விவிலிய மூதாதை ஆபிரகாமின் உறவினனான லோத்து சோதோம் கொமோராவில் தங்கியிருக்கிறான். அப்பொழுது யாவே சோதோம் கொமோராவின் பாவத்தைக் கண்டு அந்நகரங்களை அழிக்க எண்ணங்கொள்கிறார். சோதோம் கொமோராவுக்காக ஆபிரகாம் பேசும்போது அந்நகரங்களில் பத்து நல்லவர்கள் கூட இல்லை என்கிறார் யாவே. யாவேயின் தேவதூதர்கள் மனித வடிவில் போய் லோத்தின் வீட்டில் தங்குகிறார்கள். அந்நகரத்து மனிதர்கள் புதிதாக வந்த விருந்தாளிகளைப் ஓரினப் புணர்ச்சி செய்ய விரும்பி லோத்தின் வீட்டைச் சூழ்ந்து கொள்கிறார்கள். லோத்து தன் மகள்களைப் புணருமாறும் விருந்தாளிகளை விட்டுவிடுமாறும் வேண்டுகிறான்.
இதற்கு நகரத்தவர்கள் மசியாதிருக்கவே தேவதூதர்கள் அவர்களைக் குருடர்களாக்கி லோத்தைப் பாதுகாப்பாக நகரத்திற்கு வெளியே கொண்டுவிடுகிறார்கள். சோதோமையும் கொமோராவையும் வானத்திலிருந்து அக்கினியையுயம் கந்தகத்தையும் பொழியப்பண்ணி சுட்டெரிக்கிறார் யாவே. அந்தப் பட்டணங்களையும், அந்த சமபூமியையும், பட்டணங்களின் குடிகளையும், பயிர்களையும் யாவே தீயினால் அழித்ததாகவும், அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப் போல் எழும்பியதாகவும் வர்ணிக்கிறது விவிலியம்.
கொமோரா என்னும் பெயருக்கேற்ப எதிர்மறைத் தன்மை நாவல் முழுக்கவே விரவிக்கிடக்கிறது. வெறுப்பு, வன்முறை, காதலின் சுவடில்லாத காமம் என இவற்றைப் பற்றியே கொமோரா பேசுகிறது. காதல், கருணை போன்ற உணர்வுகள் பாலைவனத்தைப் போலிருக்கும் கதிரின் வாழ்வில் கானல்நீராகத் தோன்றி மறைகின்றன. விடுதியில் விடப்படும் கதிருக்கு ரோஸி ஆன்ட்டி கருணையைக் காட்டுகிறாள். ஆனால் அவள் சூழ்நிலைகளால் கதிர் என்கிற கிருபாவை விட்டுப் பிரிய நேர்கிறது. முருகன் காதலைப் பொழிகிறான். ஆனால் தன்பாலீர்ப்பைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் சூழல் இல்லாத நிலையில் அவனும் கடல்கடந்து கதிரைப் பிரிகிறான். சத்யா கதிரைக் காதலிக்கிறாள். இருந்தாலும் இன்ன சாதி பூட்டுக்கு இன்ன சாதி சாவிதான் என்கிற எழுதப்படாத விதியால் கதிரின் வாரிசைத் தனது வயிற்றில் சுமந்து தனது குடும்பத்தினராலேயே கொல்லப்படுகிறாள் சத்யா.
கருணையையும் காதலையும் சொட்டு சொட்டாகவே கதிர் ருசி பார்க்கிறான். அவன் முழுதாக அவற்றை உணரும் முன் அவனிடமிருந்து அவை விலக்கப்பட்டு வன்மத்துடன் பிடுங்கப்படுகின்றன. அதனால் ஏற்படும் ஏமாற்றம் அவனது வெறுப்புணர்ச்சியை அதிகரிக்கிறது. வன்முறையில் மற்றுமொரு படியேறச் செய்கிறது.
கதிருக்கும் முருகனுக்குமிடையிலிருக்கும் தன்பாலீர்ப்பு கொமோரா என்னும் பெயர் இன்னும் பொருந்திவர வாகாக அமைகிறது. சோதோம் கொமோரா நகர் மக்கள் விருப்பமில்லாத விருந்தாளியுடன் பாலுறவு கொள்ள முயன்றதற்காகத் தண்டிக்கப்படவில்லை. தன்பாலுறவு கொள்ள விரும்பியதாலேயே கொல்லப்படுடகிறார்கள் என்பதைப் பல விவிலிய வாக்கியங்கள் உணர்த்தி நிற்கின்றன. Sodomize என்பது குதப் புணர்ச்சிக்கு ஆங்கிலத்தில் இன்னும் வழங்கப்படும் வார்த்தை.
கதிர் இரண்டு முறை முக்கியமான சமூக விதிகளை மீறியதாலேயே அதிகம் பாதிக்கப்படுகிறான். அவன் செய்யும் கொலையோ, குற்றச்செயல்களோ அவனை அவ்வளவு தீவிரமான பாதிப்புக்குள்ளாக்குவதில்லை. முருகனுடனான தன்பாலீர்ப்பை சக்தி (முருகனின் மனைவி) அறிந்துவிடுவதால் அவன் முருகனை விட்டு நெடுங்காலம் பிரிய நேர்கிறது. சத்யாவுடனான சாதிகடந்த காதலால் சத்யாவே கொல்லப்படுகிறாள். அது வன்முறையினின்று மீட்சியின் பக்கம் லேசாகச் சாய்ந்த கதிரை விலக்கி முழுதாய் வன்முறையின், பிறழ்ச்சியின் பக்கமாகவே சாய வைக்கிறது. அதனுடன் அவன் இளமைப்பருவத்தில் அவன் மீது திணிக்கப்பட்ட வன்முறைகளும் சேர்ந்து கொள்கின்றன. ஒரு கட்டத்தில் பிறழ்வுச் சமூகத்தின் அங்கமாகவே கதிர் மாறிப்போகிறான்.
பிறருக்கு எந்த தீங்குமில்லாமல், ஆனால் சமூகம் எழுதப்படாத விதியாகக் கடைபிடித்து வரும் எல்லைக்கோட்டினைக் கதிர் தாண்டும்போது தான் அவன் துன்பம் பெருகுகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் அவன் வாழும் பிறழ்வாழ்வு துன்பங்கள் பெரிதுமில்லாமல் அவனுக்கு உகந்ததாகவே இருக்கிறது. அந்தப் பிறழ்வு நிலையில் தான் அவன் இயல்பாக இருக்கிறான். பொட்டலம் விற்கிறான். சிறைக்குள் பொட்டலம் கடத்துகிறான். காதலின்றி காமத்துடன் புணர்கிறான். தனது தந்தை அமைச்சர் சிபாரிசுடன் நன்னடத்தை விடுதலை அடையும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவனாகத் திகழ்கிறான்.
கதிரின் தந்தையான அழகர்சாமியின் இளமைப்பருவமோ இன்னும் கொடியது. கம்போடியாவில் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் கெமெர் ரூஜ் நுழைகிறது. கெமெர் வாழ்க்கையில் சித்திரவதைப்பட்டு தான் அறிந்த உறவுகளெல்லாம் சித்திரவதை முகாம்களில் அவன் காணாத இடங்களில் கொல்லப்பட, கட்டாயப் பணிமுகாமுக்குள் தள்ளப்படுகிறான். ஏதிலியாகவே தன் தாய்மொழியை முக்கால் பங்கு மறந்து தன் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறான்.
1975-1979 காலகட்டத்தில் கம்போடியாவில் கம்பூச்சிய கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிபுரிந்தது. சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக சீன, அமெரிக்க ஆதரவுடன் போல்பாட்டின் கொடுங்கோலாட்சியில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பல மக்கள் பலவிதமான சித்திரவதைக்கும் கொடுமைகளுககும் ஆளானார்கள். பதினைந்து லட்சத்திலிருந்து இருபது லட்சம் கம்போடிய மக்கள் இக்காலகட்டத்தில் இறந்திருக்கக் கூடும் என்பது கணிப்பு. கம்போடிய மக்கள் தொகையில் இருபத்தைந்து சதவீதம்! இன்னும் பல கல்லறைகளைத் தோண்டி காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். தனக்கு ஏதும் நேராத வரை வெளியுலக மனிதர்களுக்கு இவை வெறும் புள்ளிவிவரங்கள் தான். ஆனால் அந்தக் காலத்தில் அந்த நரகத்தில் வாழ்ந்த அழகர்சாமி போன்ற மனிதர்களுக்கு?
அழகர்சாமியின் இளமையைப் பற்றி நாவலில் பெரிய குறிப்புகள் ஏதுமில்லை. ஆயா சொல்லும் சில குறிப்புகளே உள்ளன. கம்போடிய கொடுமை வாழ்க்கை அழகர்சாமிக்கு ஒரு சமூக - எதிர் ஆளுமையைக் (Anti Social Personality) கொடுத்திருந்தது என ஆயா சொன்ன சில விஷயங்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. எந்த நம்பிக்கையுமில்லாத முழுக்க முழுக்க தன் நலத்தையும் சுகத்தையும் மட்டுமே விரும்பும், அவ்விருப்புக்காக எந்த எல்லைக்காகவும் போக விரும்பும் ஆதிகால மனித மிருகமாகவே கம்போடியாவிலிருந்து அழகர்சாமி திரும்பி வந்திருக்கிறான் என்பது சிறையில் நடக்கும் மோதல்களின் மூலமாக நமக்குத் தெளிவாகவே வெளிப்படுகிறது.
இளமைக்காலத்தில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அழகர்சாமியால் வன்முறைச் சுழலை விட்டு மீளவே முடியவில்லை. அளவுமீறிய காமத்தில் நிகழ்ந்த வன்முறையால் அழகர்சாமி சிறைக்குப் போகிறான். தனது மகனின் வாழ்வில் இல்லாமையின் மூலமாக, நிரந்தரமாகத் தனது மகனின் மீது ஏற்றிவைத்த குற்றவாளியின் மகன் என்கிற பாரத்தின் மூலமாகவே கதிரின் வாழ்வில் அழகர்சாமி வெளிப்படுகிறான். அந்த வன்முறை அவனது மகனான கதிரையுமே சுற்றி வருகிறது. கதிரின் மீது செலுத்தப்படும் வன்முறைகள், பதிலுக்குக் கதிர் நிகழ்த்தும், நிகழ்த்தாமலிருக்கும் வன்முறைகள் தான் கொமோரா.
இந்த நீளமான வன்முறையும் பிறழ்வுமான வாழ்வுப் பயணத்தில் தான் கதிர் பல மனிதர்களை சந்திக்கிறான். விடுதியின் ரோஸி டீச்சர், சந்திரன், முருகன், ஆன்ரூ சாமி, சுதா, சக்தி, விஜி, சுப்புராஜ் என எக்கச்சக்கமான மனிதர்கள். ரோஸி டீச்சரைத் தவிர எல்லோருமே சமூகத்தின விளிம்பில் வாழ்கிறவர்கள். பிறழ்வு நிலையில் வாழ்பவர்களுமுண்டு.
கதிர் தனது வாழ்வின் பல கட்டங்களில் பிறழ்வு நிலையை இறுக்கத் தழுவிக் கொள்கிறான். நம்பிக்கை வெளிச்சம் அவ்வப்போது தலைநீட்டினாலும் மீண்டு வருகிறது பிறழ்வு.
இந்த வன்முறைச் சுழலிருந்து கதிரால் மீள முடியுமா என்பதற்குப் பதில் தான் நாவலின் உச்சமான அழகர்சாமியின் கொலை. கதிர் தனது தந்தையைக் கொலை செய்கிறான். அதன்மூலமாக அவன் தன் வன்முறையின் ஆதி ஊற்றை அடைத்து விடுகிறானா என்ன? இல்லையென்றால் தந்தையைக் கொலை செய்வதன் மூலம் தனக்கான பிறழ்வு நிலையை இன்னும் வலுப்படுத்திக் கொள்கிறானா? அதற்கான பதில் நாவலில் இல்லை. ஆனால் அவன் தனது தந்தையைக் கொலை செய்வதன் மூலமாகத் தனது கடந்த காலத்தையும் கொன்று புதைக்கிறான் என்றே நாம் புரிந்து கொள்ள வைக்கிறது அவனுக்கு முன்னிருக்கும் மலேசிய வாழ்வு.
வரலாறும் வாழ்வும் மாற்றுகளைப் பற்றி சில நேரங்களில் சிந்திக்க வைக்கின்றன. ஒருவேளை போல்பாட்டின் ஆட்சி கம்போடியாவில் நிகழாமலிருந்திருந்தால்? ஒருவேளை சத்யா - கதிர் திருமணம் அவர்கள் திட்டமிட்டபடி முடிந்திந்தால்? ஒருவேளை கதிர் அழகர்சாமியைக் கொல்லாமலே மலேசியா கிளம்பிப் போயிருந்தால்?
கொமோரா நாவல் இரண்டு கதையோட்டங்களாகப் பயணித்து அழகர்சாமி என்கிற புள்ளியில் ஒன்றிணைகிறது. கம்போடியாவில் கெமெர் ரூஜ் காலத்திலிருந்த அழகர்சாமியின் இளமைக்காலத்தையும் விவரித்து கதிர் தனது தந்தையான அழகர்சாமியைக் கொல்வதின் மூலமாக முழுமையான மனிதனாக உணர்வதில் நாவல் உச்சமடைகிறது.
இளமையில் பசி, உடல் மீதான் வன்முறை, காம மீறல்கள் என்கிற வரிசையில் பார்த்தால் கதிரின் கதையும், அழகர்சாமியின் கதையும் ஒரே மாதிரியாக நகர்வதை உணரலாம். இந்த இரண்டு கதையோட்டங்களும் நேர்ப்பாதையில் தனித்தனியாகச் சென்றாலும், வன்முறை, பிறழ்வுநிலை என்பவை கதையோட்டங்களை இணைக்கும் கண்ணியாகத் தொடர்கின்றன.
பிறழ்வுநிலையைப் பேசுவதன் மூலமாக, பிறழ்வுநிலையில் வாழும் மனிதர்களைப் பற்றியே பேசுவதன் மூலமாக, வெறுப்பு, வன்முறை, காதலற்ற காமம் போன்றவற்றையும் சித்தரிப்பதின் மூலமாகப் பெருஞ்சமூகத்தின் எதிர்நிலையில், சமூகத்தின் விளிம்புகளில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைப் பேசி எதிர்மறை அழகியலோடு தன்னை நிறுத்திக் கொள்கிறது நாவல்.
இறுதியாகத் தமிழ் துணைப்பாட நூல்களில் கேட்கப்படுவதைப் போல, இந்நாவலின் மையக் கருத்து என்ன? இந்த நாவலுக்கு மையக் கருத்து என்று ஏதும் கிடையாது என்றே நினைக்கிறேன். மையக்கருத்து என்று ஏதாவது இருந்தால், மிக எளிமையான நீதி போதனைக் கதையாகவே முடித்திருக்கலாம்.
ஒருவன் வன்மம் நிறைந்த மனிதனாக மாறுவதற்கு ஆயிரம் காரணமிருக்கலாம், ஆனால் சிதறுண்ட, கொடுமையான, பசி நிறைந்த, வன்கொடுமைகள் துரத்திய பால்யம் காரணமாக அமைந்துவிட்டால், அது ஏற்படுத்தும் வன்மமும், உலகத்தின் மீதான வெறுப்பும் தனிக்க முடியாதவை. அப்படிப்பட்ட ஒருவனான கதிரின் வாழ்க்கை தான் இந்நாவல். நாவலின் அமைப்பு இரண்டு வெவ்வேறு இடத்திலும் காலத்திலும் நடக்கும், தொடர்புடைய கதைகள் அடுத்தடுத்து விவரிக்கப்படுகிறது . கதிர் தன் தாயை பிரிந்து வீட்டை விட்டு விடுதிக்கு போவதில் ஆரம்பிக்பிறது அவனுடைய பயணம். கதிரின் கதைக்கு இணையாக அவனின் தாத்தாவான கோவிந்தசாமி, கதிரன் தந்தையான அழகர்சாமியுடன் கம்போடியா நாட்டில் நடக்கும் புரட்சியின் காரணமாக, குடும்பத்துடன் தப்பிக்க முயற்சிக்கிறார். இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் இந்த வலிகள் நிறைந்த பயணம், கதிரின் எண்ணத்தை, செயலை எப்படி பாதிக்கிறது என்பதை, எந்த பூச்சும் இல்லாமல் ராவாக எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல்.
கதிர் தன்னுடைய நிலைக்கு தன் தந்தையின் பொறுபின்மை தான் காரணம் என்று நினைக்கிறான், அவரை பழிவாங்குவது அவனின் வன்மத்தை குறைக்கும் என்று எண்ணுகிறான், ஆனால் நாவலில் அழகர்சாமியின் பால்யத்தை குறைவாக சொல்லப்பட்டிருந்த போதும் கதிரின் பால்யத்தை விட கொடுமையானதாகவே படுகிறது. பூணையின் பச்சை மாமிசத்தை உண்ணும் நிலை கொடுமையானது. வதை முகாம் போன்ற இடத்தில் இருந்து எப்படியோ தப்பி சொந்த ஊருக்கு வரும் அழகர் சிக்கலான, எந்த சமூக விழுமியங்களும் கட்டுப்படுத்தாத நபராக இருக்கிறான். கதிர் தன் தந்தை ஏன் இப்படி இருக்கிறார் என்று எண்ண முயல்வதில்லை. மாறாக தன்னுடைய பிரச்சினையின் காரணமாக பார்க்கிறான். ஒரு கட்டத்தில் அவன் முந்தைய தலைமுறை கம்போடியாவில் பட்ட இன்னல்களை அறியும் போது, தந்தையின் மீதான வன்மம் வடிகிறது.
மேலும் இந்த கதை பயணிக்கும் விதம் அதில் கதிர் சந்திக்கும் மனிதர்கள் எல்லாம் எந்த முகமூடியும் அணியாமல் வலம் வருகிறார்கள். ஜாதியின் கோரக் கரங்களினாலும் கதிர் பாதிக்கப்படுகிறான், அதனால் சமூகத்தின் மீதான தன் வெறுப்பு அதிகமாகிறது. எழுத்தாளரின் வழக்கமான வாசனை விவரணைகள் இதிலும் இருக்கிறது. குருதி வாசம், உப்புக் காற்றின் வாசம், துர்நாற்றம் போன்ற வாசனைகள் தொடர்ந்து நாவல் முழுக்க வருகிறது. அகச்சிக்கலை ஆராயும் முக்கியமான நாவல் கொமோரா. இது அனைவருக்குமான நாவல் இல்லை, லஷ்மி சரவணகுமாரை புதிதாக படிப்பவர்களுக்கு அதிர்ச்சியான எழுத்தாக இருக்கலாம். வாசிக்க நினைப்பவர்கள் இவரின் கானகன் மற்றும் ரூஹ் என்ற நாவல்களிலிருத்து இவரை ஆரம்பிக்கலாம்.
லஷ்மி சரவணகுமாரின் 'கொமோரோ' நாவல், பண்பாடு மற்றும் நாகரீகத்தின் பெயரால் விலக்கப்பட்ட மனிதர்களின் அக உணர்ச்சிகளான பகை, வெறுப்பு போன்றவை எவ்வாறு ஒரு மனிதனுக்கு பெரிய மனத்தடையாகவும், அதே நேரத்தில் அவனது ஆன்ம விடுதலை நோ���்கிய பயணமாகவும் அமைகிறது என்பது பற்றியது. இந்த சமூகம் அன்பு, கருணை போன்ற உணர்ச்சிகளை போற்றுதலுக்குரியதாகவும் வெறுப்பு, வன்மம் மற்றும் பகை போன்ற உணர்ச்சிகளை விலக்கப்பட்டதாகவும் கொண்டிருந்தாலும், மனிதனுக்கு இவ்வுணர்ச்சிகள் எவ்வாறு ஆதாரமாக உள்ளதென்பதையும், மனித மனத்தின் நன்மை, தீமை என்பதை கடந்து இயங்கும் தன்மையையும், நாவலின் கதை மாந்தர்கள் வழியே வாசகனுக்கு நாவலாசிரியர் கடத்துகிறார்.
சிதைக்கப்பட்ட பால்யத்தை கொண்ட ஒருவனுக்கு இயல்பிலேயே ஏற்படும் மனிதர்கள் மற்றும் சமூகத்தின் மீதான வெறுப்பு, தனது சூழலுக்கு காரணமான தனது அப்பாவின் மீதான பகை, அவன் மேல் அக்கறை கொண்ட சில மனிதர்களின் அன்பு என பல்வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்புடன் கூடிய வாழ்க்கை சித்திரம் தான் இந்த நாவல். கம்போடியாவில் நடைபெறும் போரை பற்றிய பகுதிகள் தரும் அழிவின் சித்திரம், மனித மனங்களின் இருண்ட பக்கத்தின் மீது வெளிச்சமாய் பாய்கிறது. எல்லா மனிதனும் ஏதோவொரு காரணத்திற்காக யாரோ ஒருவர் மீது வெறுப்பை சுமந்து கொண்டு திரிவது, வெளிப்படுத்தப்பட்ட வெறுப்பு மனதில் ஏற்படுத்தும் ஆசுவாசம், கொலையின் வழி வெளிப்படும் கருணை, தொடர் வன்முறைகளாலும் துயர்களாலும் ஏற்படும் மனவிலக்கம் அல்லது பந்தமற்ற தன்மை என இந்த நாவல் தொட்டு செல்லும் பல பகுதிகள், ஒரு நடுத்தர வாழ்க்கையில் இருக்கும் வாசகனுக்கு புது அனுபவங்கள். வன்முறைகள் சில மனிதர்களுக்கு தங்களின் இயல்பில் தொடர் மாறுதல்களையும், சில மனிதர்களுக்கு மாறாத்தன்மையையும் அளிப்பது விந்தைக்குரியது. மனதில் இருண்ட பக்கங்கள் என்பது நன்மை, தீமை சார்ந்து சமூகத்தால் வெளிப்படுத்த தகுதியில்லாததாக அடையாளப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் தான். உணர்ச்சிகளுக்கு மேன்மை, கீழ்மை என்ற வேறுபாடில்லை, எல்லா உயிருக்கும் ஏற்படுவது போல, தன் மேல் நிகழும் செயல்களுக்கு மனத்தில் ஏற்படும் விளைவு தான் உணர்ச்சிகள், மனதில் தோன்றும் எந்த உணர்ச்சிகளும் விலக்கத்தக்கதல்ல என்ற உண்மையையும், தடையின்றி வெளிப்படுத்த அனுமதிக்கும் போது உணர்ச்சிகள் மனிதனுக்கு விடுதலை நோக்கிய பயணத்தை சாத்தியப்படுத்துவதையும், இந்நாவல் வலி, துன்பம், பகை, வெறுப்பு,வன்மம், அன்பு, கருணை, நேசம், நட்பு மற்றும் காதல் நிறைந்த வாழ்வின் வழியே வெளிப்படுத்துகிறது.
பெருன்பான்மை சமூகத்தால் குற்றவாளி என்றும், இவனெல்லாம் வாழவே தகுதியற்றவன் என்றும், இவனைக் கொலை செய்யவேண்டும் என்றும் மனதார வெறுக்கக்கூடிய ஒரு கேரக்டரை வைத்து இந்தக் கதை உருப்பெற்று இருக்கிறது.
புத்தகம் வாங்கி 2 வருடங்கள் ஆகிறது, ஏதோ ஒரு காரணத்தால் முதல் 70 பக்கத்தைப் படித்தவுடன் பரணில் தூக்கி வீசிவிட்டேன். என்ன மனநிலையில் இருந்தேன் என்ற நினைவில்லை, திடீரென்று மீண்டும் படிக்க ஆரம்பித்த 3 தினங்களில் புத்தகம் முழுவதும் படித்தாகிவிட்டது. இதையா இத்தனை நாள் படிக்காமல் விட்டோம் என்று யோசிக்கவைத்து விட்டது.
நிஜ வாழ்க்கையில் கதிர் மாதிரி ஆட்களை பிணந்தின்னி கழுகை மாதிரி அசூயையுடன் பார்க்கப் பழகியிருக்கும் நாம் ஒருகட்டத்தில் ச்ச கதிர் இவ்வளவு இன்னலில் என்ன செய்வான் என்று யோசிக்க வைத்துவிடுகிறது. நம்மை கதிராகவே என்ன வைத்ததில் ரைட்டர் வெற்றியடைந்துவிட்டார்.
கடும் நெருக்கடியில், அதீத வெறுப்பை உமிழும் சமூகத்தின் இன்னல்களிலேயே வளர்ந்து வரும் ஒருவனின் வாழ்வில் நிகழும் கொடூரமும், அன்பும், காதலும், காமமும், நட்பும் , வெறியும், துரோகமும் தான் கதை.
எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும் அவர்களுக்கும் அன்பு செலுத்த ஒரு பெண்ணும், அவளின் அன்பும், இச்சையும் ஸ்பரிசமும் எப்போதும் இருக்கும். சில நேரம் நிஜக் குற்றவாளிகள் எப்படி காதலியுடன், பொண்டாட்டியுடன் இருக்கிறார்கள் , இந்த கொடூரர்களுக்கு எங்கிருந்து இந்தத் துணை கிடைக்கிறது என்று யோசிப்பதுண்டு. ரோஸி டீச்சர், சுதா என்று இக்கதையில் வரும் பலரும் அன்பை கொடுக்கும் தருணங்கள் அந்த சந்தேகத்தை தீர்த்துவிட்டது.
தந்தை மீது அதீத கோபமும் வன்மமும் கொண்ட குழந்தையாக வளம் வரும் கதிரின் கோவத்திற்கான காரணம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாமோ என்ற சின்ன ஆசை. மத்தபடி ஐ லவ் திஸ் புக் 😁😁 வர்த்து ரீடிங்கு.அதுவும் கம்போடியாவும் கதிரும் இணையும் இடம் அன் எக்ஸ்பெக்டட் ❤️
This is a gem of a book! Gives an intense reading experience!
I wasn't impressed by the author's first book - Uppu Naigal. I felt that book had just 2-3 unrelated novellas alternated between it's chapters. It simply doesn't give you a feeling of a long fiction!
And then I went with the author's famous "Kaangan" and that was a wonderful book! It had a matured storytelling and seemfully corrected whatever the first book missed out.
I approached Gomorrah reluctantly but it turned out to be a wonderful surprise. The writing is very mature, the subject relies very much on the author's life, the plot is quite linear and the plot development is solid.
The chapters that covers Cambodian civil war had been done excellently. Little have I read the intensity of war as it as been done in the few chapters of this book - especially in Tamil literature! The author deserves applause for boldly approaching this subject in this way and seemlessly relating it into the heart of rural tamil culture and people.
The let down are the chapters that covers homosexuality. These are very unconvincing compared to the rest of the narrative that lies far closer to the reality.
The book contains one of the longest endings I have read. Spanning 50+ pages, engulfing stong emotions, chaos, continuously maintaining a fight within conscience about good & bad, the ending deserves a shout out!
இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன்பாக நிறைய விமர்சனங்களை பார்த்தேன் அவர்கள் கொடுத்த பெரும்பாலான விமர்சனங்கள் இந்தப் புத்தகம் மிகவும் வன்மமாக இருக்கிறது மிகவும் ராவாக எழுதப்பட்டிருக்கிறது ஆனால் இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் தெரிகிறது இந்த வன்மம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று இன்னும் சொல்லப்போனால் கதிர் தன் அப்பாவை கொள்வதை அவனோடு நான் அதிகமாக நேசிக்கிறேன் எனக்கு அந்த வாய்ப்பு இல்லை என்று இதை பட்ரி யோசிக்கவும் செய்தேன் லஷ்மி சரவணகுமார் இந்த புத்தகத்தின் எழுத்தாளர் இவருடைய புத்தகம் ரூ யாரோ ஒரு எழுத்தாளர் என்னை கட்டியணைத்து கதையை சொல்வது போலிருந்தது அதில் வரக்கூடிய ரபியா என்ற கதாபாத்திரம் போல் ஒரு பெண் ஏதோ ஒரு உறவு முறையை எனக்கு கிடைத்து விட்டால் நான் பாக்கியசாலி ஆகிடுவேன் அதேபோல் இந்தப் புத்தகத்தில் வாழக்கூடிய சத்தியா போல் ஒரு பெண் எனக்கு கிடைத்து விட்டாள்
இந்த புத்தகத்தின் குறை நான் கண்டது இதில் வரக்கூடிய bisexual கதாபாத்திரம் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தவில்லை என்று ஒரு சின்ன வருத்தம் மொத்தமாக இந்த நாவலைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால்
காமம் ரத்தம் வன்மம் நாற்றம் சகிப்புத்தன்மை இது அத்தனையும் எனக்கு பிடிக்கும் அதனால் இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
Got reminded of Murakami's Kafka on the shore. The influence was evident. It was an interesting read. The themes explored were completely new, atleast for me. The take on bisexuality could have been better. At many incidents the trauma felt real and the emotions of the traumatized was explained very well. Somewhere the book felt incomplete, maybe that's the whole point of it.
நான் முதலில் படித்த மிக நீண்ட நாவல். ஒரு இடத்தில் கூட சிறு தோய்வு இருக்காது. வியட்நாம் போரின் கொருறத்தை தமிழில் கதை வழியாக கூறிய முதல் நாவல் என்று நினைக்கிறேன்.
மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக எவ்வளவு குரோதம் நிறைந்தவனாக மாறி விடுகிறான் என்பது தான் கதையின் கரு . அந்த குரோதம் தன் தந்தையின் மீது கூட வரும் என்பது தான் இதில் கதையாக நகர்ந்து செல்கிறது. கதை முழுவதும் வரும் கதாபாத்திரங்கள் நடுத்தர வர்க்க மக்களுக்கு பரீச்சப்படாதவர்களாக இருக்கிறார்கள் . வாழ்வின் பொருளாதார நிலைகளில் மிகவும் கீழ்மையும் எதையும் செய்யத்துணிவும் கொண்ட கதாபத்திரங்களால் கதை அற்புதமாக உருண்டோடுகின்றது. கதிர் ஒரு சில இடங்களில் சலிப்பேற்றுவதுபோல நடந்து கொண்டாலும் தன் தொடர் வாழ்வியல் தேடல் நடவடிக்கைகளால் நம்மை விரைவில் ஆட்கொண்டு விடுகிறார் . அருமையாக சொல்லப்பட்டதொரு கதை.