Jump to ratings and reviews
Rate this book

வைகை நதி நாகரிகம்

Rate this book
ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களின் செல்வச் செழிப்பான வாழ்வைக் கண்டறிவதோடு கீழடி, தேனூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்வழி யாரும் அறியாத பல தகவல்கள் ஆனந்தவிடனில் கட்டுரையாக வெளியாகி அவற்றை மக்கள் அறிந்துகொண்டனர். நம் பழம்பெரும் வரலாற்றை நாம் அறிய முற்படுவதும் இவற்றை வைத்துத்தான். காப்பியங்களைப் படித்த நாம் காப்பியங்களுக்குள் சென்று காணும் சூழலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஆதி மனிதன் ஓவியத்தின் வழியாக தனக்கான வாழ்வு நெறிகளை வகுத்துக்கொண்டான். அந்த ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவமான எழுத்துகள்தாம் பழம்பெருமை பேசுகின்றன. இன்று நாம் சுலபமாக உரையாடும் எழுதும் வடிவத்துக்கு அவைதான் தாய் எழுத்துகள். வளர்ந்த நாகரிகத்தின் பழைமையான சாட்சியங்கள் பாறை ஓவியங்கள்தான். பல நூற்றாண்டைக் கடந்தும் ரோமானியக் கப்பல்கள் இருந்ததற்கான சான்றாக பானையின் கோட்டோவியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு வணிகமும் எவ்வாறு, எப்படி நடந்தது என்பதைப் பற்றியும் ரோமாபுரியைச் சேர்ந்த மண்பாண்டங்களும் வட இந்திய பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் கைகோத்து நடந்த பெருநகரமாக விளங்கியது மதுரை மாநகரம் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர் சு.வெங்கடேசன். காவியத்தில் வருகிற குறிப்புகளை வைத்து, அகழாய்வு நடத்தி கண்டறியப்பட்ட நகரத்தையே பூர்வீகப் பெயர்கொண்டு குறிப்பிட்டது ஏன்? காப்பியங்களின் வழி கிடைத்த நிலக்குறிப்பை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் இருக்கும் நகரை ஆய்வாளர்கள் என்னவென்று குறிப்பிட்டார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதோடு, பழங்கால வைகை நாகரிகத்தை நம் கண்முன் காட்டும் அரிய பொக்கிஷம் இது.

151 pages, Paperback

Published December 1, 2017

17 people are currently reading
231 people want to read

About the author

Su. Venkatesan

8 books283 followers
Su. Venkatesan (சு. வெங்கடேசன்), also known as S. Venkatesan, is a Tamil writer from Tamil Nadu, India and Tamil Nadu State Committee member of Communist Party of India (Marxist). His debutant novel Kaaval Kottam published in 2008 was awarded the Sahitya Academy Award for Tamil in 2011. The Tamil film 'Aravaan' is based on it. The Sahitya Academy-winning writer is also the president of the Tamil Nadu Progressive Writers Association. His second novel 'Veerayuga Nayagan Velpari' was serialised in Tamil popular magazine Ananda Vikatan. 'Veerayuga Nayagan Velpari' is the second Novel after Ponniyin Selvan to make a big craze between the readers at that time.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
57 (41%)
4 stars
54 (39%)
3 stars
23 (16%)
2 stars
3 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 21 of 21 reviews
Profile Image for Subhashini Sivasubramanian.
Author 5 books188 followers
November 7, 2020
இந்த நூல் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. கீழடி ஆய்வுகள் குறித்து நிறைய தகவல்கள் கொண்ட ஒரு கட்டுரைத் தொகுப்பாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் ஏற்கனவே தெரிந்த சில தகவல்களும், சங்க இலக்கிய காலப் பாடல்கள் சிலவும் கொண்ட நூலாக இருந்துவிட்டது. மேலும், ஆய்வு நூல்கள் போல அல்லாமல், வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்த கட்டுரைகளே இடம்பெற்றிருந்தன.

அதுபோக இந்த நூல் தொகுக்கப்பட்ட விதம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை அப்படியே எடுத்துக் கொடுத்திருந்ததால் ஒரே தகவல் மீண்டும் மீண்டும் வந்திருந்தது. இரத்தின சுருக்கமாக எழுதியிருந்தால் 40 பக்கங்களுக்குள் முடிந்திருக்க வேண்டியதை தொகுப்பாக 100+ பக்கங்கள் நீட்டி 200 ரூபாய் விலைக்கு விற்பதெல்லாம் விகடனால் மட்டும் தான் முடியுமென நினைக்கிறேன்.
Profile Image for I'm  Mano.
5 reviews
January 30, 2021
புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு பக்கத்திற்கும் நம்மை கற்பனை உலகத்துக்கு அழைத்துச் சென்று வியப்பை ஏற்படுத்துகிறார் சு. வெங்கடேசன்...
தொல்லியல் குறித்த ஒரு நூலை இவ்வளவு சுவைபட எழுத முடியுமா ? எனும் ஆச்சரியத்தை ஆங்காங்கே அள்ளித் தெளித்துக் கொண்டே, வரலாற்று ஆதாரங்களையும் அதற்கு இணையான இலக்கிய ஆதாரங்களையும் ஒன்றாகப் பின்னியும், மேற்கோள்காட்டியும் அசர வைக்கிறார்...
ஆனால் கீழடி குறித்த அத்தியாயம் படிக்கத் தொடங்கிய சில பக்கங்களிலேயே அவருடைய கட்டுரைத் தொகுப்பு நிறைவுற்றுப் போனதுதான் சற்று ஏமாற்றமாக இருந்தது...
ஆனாலும், கீழடி குறித்த சில நேர்காணல்களை கட்டுரைகளாக வைத்து அதனுடைய முக்கியத்துவத்தை உணர்த்துகின்றார்...
"கீழடி" குறித்து தமிழர்கள் பெருமிதம் மட்டும் கொள்ளாமல், நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தருணமிது ! என்று நமக்கும் நம் அரசாங்கத்திற்கும் விடுக்கும் எச்சரிக்கையாகவும் இந்த புத்தகம் திகழ்கிறது !
Profile Image for Ram M Srinivas.
91 reviews2 followers
September 1, 2023
இந்த வருடத்தில் நான் முடிக்கும் 51ஆவது புத்தகம். வைகை நதி நாகரிகம் என்பது ஒரு கதை அல்ல, இது ஒரு வரலாற்று தொகுப்பு. பிரம்மிக்க வைக்கும் பல விவரங்கள் கொண்ட ஒரு முக்கிய நூல் என்றும் கூறலாம். ஒவ்வொரு விவரங்களும், நம் பண்டை காலத்து மக்களின் வாழ்கையும் சிலிர்க்க வைத்துவிட்டது. குறிப்பாக தந்தத்தாலான தாயக்கட்டை, மூடி அமைப்புடன் பானை, ஓட்டை போட்ட முத்து என்று ஒவ்வொன்றும் நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்தை ஓங்கவைக்கிறது. இந்த அத்தியாயம் நன்று மற்றும் இந்த அத்தியாயம் சுமார் என்று கூறும்படி எதுவும் இல்லை. அனைத்தும் சிலிர்க்க வைக்கும் விவரங்களே. எனினும் "தேவையா" என்று சில என் எண்ணத்தில் தோன்றியது.
இது ஒரு வரலாற்று புத்தகம், இதில் அரசியல் தேவையா என்று எனக்கு எண்ணம் உள்ளது. காரணம்: கருத்தில் சிறிதும் முரண்பாடு இல்லை, ஆனால் விவரங்கள் பாதியில் முடிந்ததாகவும் அதன்பிறகு அரசியல் செய்திகள் கூறியதாகவும் ஒரு எண்ணம் தோன்றுகிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு படிப்பவர்கள் இதை நிச்சயமாக ஒரு வரலாற்று குறிப்பாக உபயோகிப்பார்கள், ஆனால் பாதிக்குமேல் வரும் அரசியல் சமாச்சாரங்கள் என்ன மாதிரியான முடிவை கொடுக்கும் என்று தெரியவில்லை. அது புத்தகத்தின் முக்கியத்துவத்தை பாதிக்கலாம் அல்லது ஆசிரியரின் பெயரை பாதிக்கலாம். அரசியல் உண்மைகளை தனியாக புத்தகமாக எழுதியிருந்தால், அரசியல் பிடித்தவர்கள் தனி வரவேற்பு கொடுத்திருப்பார்கள். ஆனால் ஆசிரியர் கூறியவாறு மத்திய அரசு, கீழடியில் செய்த செயல் ஒரு தரம் குறைந்த செயலே என்பது நிதர்சனமான உண்மை.
கீழடி ஆங்காங்கே தமிழர் பெருமை என்று கூறுகிறோம், ஆனால் இது தமிழ் தாண்டி இந்தியாவின் பெருமை, மொத்த மனித இனத்தின் பெருமை என்னும் உணர்வு வரும்வரை மனிதமும் கீழடியுடன் பூமியில் புதைந்தே கிடக்கும்.
2 reviews
February 17, 2024
our history and culture along with proofs and how the central gvt is plotting against Tamil Civilisation to be not known as ancient civilisation
Profile Image for Raghavan Sridharan.
3 reviews2 followers
May 4, 2020
What could have been an awesome book ended up as a below-average book. Repetitive content would test your patience. What could have been conveyed in less than a page is dragged, and dragged like a dead corpse for 20 or 30 pages with very minimal information about "Vaigai Nadhi Naagarigam".

If you have very good patience and if you are ready to read the same set of lines/words again, again and again with a different choice of words, then you can give a try. The good thing about this book is, the size of the book is very small.

In a book where tons of information could be shared ended up a blaming book towards the end and the author tries to impose his political views on the readers. The views which he shared are biased or balanced; it is not the topic of discussion and I'm not getting into there. Either way; biased or balanced; doesn't add up any value to the book.

2 stars for his efforts to compile things which made me to google lot of things about this topic and surprisingly I got more information about "Vaigai Nadhi Naagarigam" by googling.

Profile Image for Prakash Ravichandran.
6 reviews
February 14, 2025
கீழடி பற்றிய செய்திகளை அடிக்கடி செய்தி தொலைக்காட்சிகளில் வாயிலாக பார்த்தது முதல் சமூக வலைதளங்களிலும் வரும் சில தகவல்களின் மூலம் எனக்கு கீழடியை பற்றி தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது அதற்கு பிள்ளையார் சுழி போடுவது போல் அமைந்தது தான் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய இந்த "வைகை நதி நாகரீகம்" என்னும் கட்டுரைத் தொகுப்பு 


சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம் எப்படி இருந்தது என்றும், மக்கள் நாகரிகத்தில் எவ்வாறு முன்னேறி இருந்தார்கள் என்றும் ஆய்வு குறிப்புகளின் அடிப்படையில் ஆசிரியர் நமக்கு பண்டைய தமிழரின் மரபை பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறார் கட்டுரை மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து கீழடி மற்றும் பண்டைய கால பொருட்கள், அகழாய்வு செய்த இடங்களின் அனைத்து புகைப்படங்களையும் தொகுத்து புத்தகமாக நமக்கு வழங்கி இருக்கிறார்.


சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தன் வீட்டின் திண்ணையில் விளையாடிக் கொண்டிருக்கும் பெண்கள் அதில் ஒருத்தி ஆப்கானிஸ்தானில் இருந்து கிடைக்கும் சூது பவளத்தால் ஆன மணிமாலையை அணிந்திருக்கிறாள் மற்றொரு பெண் வெண்ணிற முத்துமணிகளை கோர்த்த மணிமாலை அணிந்திருக்கிறாள் இவர்களுக்கு அருகே உள்ள சிறுமியின் கையில் சங்கினால் ஆன வளையல் இருந்திருக்கிறாள் அவள் கையில் ரோமானிய குவளை வைத்திருக்கிறாள் இவையெல்லாம் 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட அயல் நாட்டுப் பொருட்கள். 


பண்டைய தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்கள் கடல் கடந்தும் பெரு நிலப்பரப்புகளை கடந்தும் தங்கள் வாணிப உறவை மற்ற நாட்டினருடன் வைத்திருந்ததற்காக சான்றுகள் வைகை நதியின் கர��யோரம் கிடைக்கக்கூடிய பொருட்கள் நமக்கு வரலாற்றை பறை சாற்றுகின்றன. 


தேனூரில் மழையினால் வேரோடு சாய்ந்த கருவேல மரத்தின் கீழ் விரல்கள் போல் உள்ள 7 தங்கக் கட்டிகள் கிடைக்கின்றன அதில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த தமிழி எழுத்துக்கள் "கோதை" என்ற பெண்ணை குறிக்கிறது இவையே இந்தியாவில் எழுத்துக்களுடன் கிடைக்கப்பெற்ற முதல் தொல்பொருள் சான்று ஆகும் இவை கி.மு. காலத்தை சேர்ந்தவை.


கடச்சனேந்தலில் உள்ள கண்ணகியின் வீடு அடுத்த சான்றாக அமைகிறது. அடுத்து வைகை கரையில் கிடைத்த ஆச்சரியப்பட வைத்த ஒரு நடுகல் இது "அந்துவன்" எனும் இறந்து போன வீரனின் நினைவாக நடப்பட்ட வீரக்கல் ஆகும். இவன் பசுக்களை கவர்ந்து வரும்போது தாக்கப்பட்டு உயிர் துறக்கிறான். இந்த கல்லில் தூய்மையான தமிழ் பிராமியில் எழுதப்பட்டிருக்கிறது இதுவே தமிழில் கிடைத்த மிகப் பழமையான நடுகல்.

இவர்கள் இருவரைப் பற்றியும் ஆசிரியர் வரலாற்றுப் பெருமையை கையில் ஏந்தியப்படி 'வடகரையில் கோதையும் தென்கரையில் அந்துவனும்' நிற்கிறார்கள் இரண்டு கறைகளுக்கு இடையில் இருப்பது நீரோடும் நதி அல்ல நிலை கொண்ட நாகரிகம் என்று உலகுக்கு சொல்லும் சாட்சிகள் இவர்கள் என்று குறிப்பிடுகிறார்.


ஓவியத்தை சுண்டக்காய்ச்சி எடுத்த வடிவம் தான் எழுத்துகள். ஓவியம் தாயும் சேயும் போல என்றும் கோடுகளின் கடைக்குட்டி தான் எழுத்து என்றும் ஆசிரியர் பண்டைய கால தமிழர்களின் எழுத்து வடிவத்தை பற்றி கூறுகிறார்.


கிரேக்கர்களும், ரோம் நாட்டினரையும் அந்த காலத்தில் "யவனர்கள்" என அழைக்கப்பட்டனர். இதன் மூலம் தமிழ் நிலப்பரப்பிற்கும் கிரேக்கம் மற்றும் ரோமானிய ஆகிய நிலப்பரப்பிற்கும் தொடர்பு இருந்தது நன்கு விளங்குகிறது. இவற்றுக்குச் சான்றாக கிடைக்கப்பெற்றதான் பானை ஓட்டில் வரைந்த கப்பலின் 'கோட்டோவியம்'. அதுமட்டுமில்லாமல் எகிப்து நாட்டின் செங்கடலின் கரையோரம் உள்ள பண்டைய துறைமுகங்களான 'க்வெசிர் அல்காதிம்', 'பெரெனிகே' ஆகிய இடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் கண்ணன், சாத்தன், கொற்றப் பூமான் என்ற தமிழ் பெயர்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. 


கடல்வெளியை கப்பல்களும், கால வெளியை காக்கைகளும் இணைத்துள்ளன. பாண்டிய மண்ணில் கோட்டை காவலிலும், படையிலும் கிரேக்க வீரர்கள் இருந்ததற்கான சான்று உள்ளது. ரோமானிய வீரர்கள் தங்கி இருந்த பகுதிக்கு 'யவனச்சேரி' எனவும் பெயரிடப்பட்டிருந்ததாக வரலாற்று தொல்பொருள் ஆய்வுகள் மூலம் கிடைக்கப் பெற்று இருக்கின்றன. 


மதுரையை பண்டைய காலத்தில் "தமிழ் வேலி" என்றும், வைகையை "தமிழ் வைகை" என்றும் அழைத்து இருக்கின்றனர். இது போன்ற பல தொல்பொருள் ஆராய்ச்சி குறிப்புகளும் அவரின் தனிப்பட்ட அனுபவங்களையும் தொகுத்து கட்டுரையாக ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ளார்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Manju Senthil.
46 reviews4 followers
July 8, 2022
புத்தகம் : வைகை நதி நாகரிகம்
ஆசிரியர் : சு. வெங்கடேசன்

தமிழ் மீது பற்றுடைய அனைவரும் அறிந்த விடயம் கீழடி அகழாய்வு. மத்திய தொல்லியல் துறையால் 2014 ஆம் ஆண்டு, வைகை நதி தொடங்கும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை இருகரைகளிலும் 293 கிராமங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கீழடி!

அடுத்த இரண்டு ஆண்டுகள் செய்யப்பட்ட அகழாய்வில் கீழடியில் 5300க்கு மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்தும் மதசார்பற்ற பொருட்கள். ஆம்…2500 ஆண்டுகளுக்கு முன் மதங்களின் ஆதிக்கம் இல்லாத ஒரு நகரம் இருந்திருக்கிறது. அவற்றில் அந்துவன் என்றொரு வீரனுக்கு வைக்கப்பட்ட நடுகல், அசோகரின் ஸ்துபங்களை விட பழமையானதும், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பெற்ற இந்தியாவின் முதன்மையானதும் கூட. யவனர்களின் உடைந்த மதுக்குவளை மற்றும் ரோமாபுரி கப்பல் வரையப்பட்ட பானை ஓடு பாண்டியர்களுக்கும், யவனர்களுக்கும் நடந்திருக்கும் வணிகத்தைக் குறிப்பிடுகிறது. இவை மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானின் பவளங்கள், தந்தத்தால் ஆன தாயக்கட்டை, உடைந்த ஈட்டி முனைகள், தங்கக்கட்டிகள் போன்ற பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த அகழாய்வின் சிறப்பம்சம் என்னவென்றால் சிந்துசமவெளி, ஹரப்பா போன்று கீழடியும் ஒரு நாகரிகநகரம் என்று தெரியவந்துள்ளது. இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள், நெசவு தொழிலகங்கள், கால்வாய்கள், வடிகால்கள், உலைகள் போன்ற கட்டமைப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவை 2500 ஆண்டுகளுக்கு முன் வணிகம், கலை, தொழில்நுட்பம் மற்றும் எழுத்தறிவிலும் கீழடி சிறந்து விளங்கிய நகரம் என்று நமக்கு அடையாளம் காட்டுகிறது. என்னை மெய்சிலிர்க்க வைத்த விடயம் என்னவென்றால், எழுத்தாளர் வணிகம் பற்றிய அத்தியாயத்தில் மெகஸ்தினஸ் கிரேக்கத்தில் எழுதிய இண்டிகா புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பை சுட்டிகாட்டுகிறார். அது பாண்டிய நாட்டைப் பற்றியும், இங்கு விளையும் முத்துக்களின் பிரகாசத்தையும் கூறுவதோடு, பாண்டிய நாட்டை ஒரு பெண்ணரசி ஆட்சி செய்தார் என்றும் குறிப்பிடுகிறது.

இதை எல்லாம் நினைத்து நாம் பெருமிதப்படும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அகழாய்வில் நடந்த அரசியல் சூழ்ச்சிகளை விவரித்து நம்மைக் கலங்கடிக்கிறார் ஆசிரியர். சிறப்பாக ஆய்வு செய்த அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் பணிமாற்றம், அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் கிடைத்த நிலையில் அந்த பணியைத் துவங்காத மத்திய அரசு, புதிய குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளினால் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள் அழியக்கூடிய வாய்ப்பு எனப் பல சிக்கல்களும் முன் வைக்கப்படுகிறது.

கீழடியின் கண்டுபிடிப்புகள் பற்றி மட்டும் நான் அறிந்துக்கொள்ளவில்லை. 2500 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் சமூகம் வாழ்ந்த வாழ்வையே கண்டுகளிக்கலாம். வரலாற்றின் மீது பற்றுள்ள ஒவ்வொருவரும் படித்து மகிழவேண்டிய புத்தகம் இது. இதை நமக்கு குடுத்த சு.வெங்கடேசன் அவர்களுக்கும், அவரை எழுத தூண்டிய அகழாய்வு நிபுனர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
Profile Image for Ganesh.
28 reviews
June 7, 2024
Su. Venkatesan, in his book "வைகை நதி நாகரிகம்" (Vaigai River Civilization), presents archaeological and literary evidence for the Sangam Tamil era in Madurai and argues for reconsidering the Sangam Tamil era as a "Vaigai River Civilization", an Urban civilization akin to the Indus Valley Civilization as opposed to the current prevailing perception of Sangam Tamil as an ethnic society (இனக்குழு சமூகம்)

First things first, if you bought this book based on the subtitle "Keezhadi Kuritha Pathivugal" (Records/Entries on Keezhadi) and expect to learn more about the Keezhadi site and its findings, I suggest not buying or reading this book. The notes (pages 107-148) are largely repetitive content in the form of essays and interviews given by the author to various magazines and newspapers, urging for continuous surveys on Keezhadi.

Now, regarding the first 100 pages of this book, I have mixed opinions. On one hand, it's interesting to read, but on the other, some chapters seem to be purely speculative about the meaning of the archaeological findings. Another issue is the confusion between Greeks and Romans in Chapter 9. The author mistakenly implies that Alexander the Great was Roman, which is factually incorrect. He also states that Romans invented the 'Sarissa' (a 21 ft long spear/pike), but it was actually the Greeks who invented it, introduced by Philip II of Macedon, Alexander the Great's father. There might be other factual errors, so please read this book with caution.

Overall, while the book offers intriguing insights, it requires careful reading due to potential inaccuracies.
17 reviews
July 28, 2025
கீழடி முதல் கிரேக்கம் வரை,
கொற்கை முதல் அலெக்ஸாண்ட்ரியா வரை...
இப்படி, உலக ஆதி நாகரிகக் கிரீடம் தான் வைகை நதி நாகரிகம்!
தோண்டத் தோண்ட விலைமதிப்பற்ற வரலாற்றுப் பொக்கிஷம்!
மதமில்லா சமூகத்தின் முன்னோடி - தமிழ், ஒரு உலகப் பொதுமொழி!
என நாம் நிரூபித்துக் கொண்டே போகலாம்...
இப்படிப்பட்ட சிறப்புமிக்க வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி,
ஒன்றுபட்ட குரலின் தேவையை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நமக்குச் சுடர்விடும் அறைகூவலாக அமைந்துள்ளது இந்த நூல்!

In English :

From Keezhadi to Greece, From Korkai to Alexandria… In this way, the crown of the world’s earliest civilizations belongs to the Vaigai River civilization! The more we excavate, the more we uncover priceless historical treasures! Tamil – a language of a religionless society – is the forerunner of a universal, global language! We can continue to prove this… This book stands as a clarion call, politically and socially, to expose the conspiracies that attempt to hide such a glorious history, and to emphasize the need for a united voice!
7 reviews
May 3, 2020
Pretty vague... Author has given too much of story behind each things which makes you bored in many places.
We agree that the importance given for kizhadi archeological findings are little lesser when compared with other researches. But, to a reader it looks like, author nicely mixed his political biased views alongside the information of archeological finding and research.
few interview chapters in the end having too much of repetitive information
14 reviews
January 4, 2021
Good book to understand the Keeladi excavation and it’s importance in redefining the Tamil history. Latter chapters have the same content in different formats that’s annoying. Otherwise a good read on the quest to prove that the Madurai city as described in the ancient Tamil literature indeed existed.
Profile Image for Gowthaman Ilango.
35 reviews
October 23, 2022
There is a saying “History is written by the winners” but after reading this we can say “History is written by powerful men”. Very sad to see how politics is altering a two thousand year old civilization! Definitely increased my curiosity to learn more about Keezhadi!
180 reviews1 follower
September 4, 2025
Very surface level book. Highly disappointed with the content. My expectation is high.
Profile Image for Kamali Joe.
23 reviews
December 17, 2025
வரலாற்றை சோபை ஏற்படாத வண்ணம் கீழடி முதல் கிரேக்கம் வரை எளிய நடையில் காட்சிப்படுத்தி பார்க்கும் வண்ணம் எழுதியுள்ளார் சு. வெ
Profile Image for Arjun Subramanian.
3 reviews2 followers
June 4, 2019
வைகை நதி நாகரிகம்! கீழடி குறித்த பதிவுகள்.
ஆசிரியர் : சு.வெங்கடேசன்.

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சு.வெங்கடேசன். எனக்கு மிகவும் பிடித்த துறை வரலாறு. வரலாற்றைப் பற்றி எனக்கு பிடித்த எழுத்தாளர் எழுதினால் படிக்காமல் விடுவேனா.

கீழடி, அது வெறும் ஒரு இடம் இல்லை. தமிழர்களின் கருவூலம். சங்க கால நகரநாகரிகத்தின் அடையாளம். நம்மை அரைபழங்குடிகள் என்று எகத்தாளமாக சொன்ன வரலாற்று ஆய்வாளர்களின் வாய்ப்பூட்டு. சாதியும் மதமும் காண்டிராத பழந்தமிழ் சமூகத்தின் உண்மை முகம். கீழடி பற்றி விரிவான செய்தியை தருகிறது இந்த புத்தகம்.
கீழடி பற்றி நிறைய புத்தகம் இருக்கலாம், இனியும் வரலாம். ஆனால் ஏன் சு.வெங்கடேசன் எழுதிய புத்தகம் வாங்கினேன் என்றால், மதிப்பிற்குரிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் கீழடி ஆய்வு தொடங்கியதில் இருந்து, அவரை மத்திய அரசு பனி இட மாற்றம் செய்த வரை அவரின் கூடவே இருந்து கீழடியை பற்றி கவனித்து வந்தது சு.வெங்கடேசன்.
இந்த புத்தகம் ஆனந்த விகடனில் தொடராக 13 வாரங்கள் சு.வெங்கடேசன் எழுத்தில் வந்தது. பின் தொடராக வந்த 13 அத்தியாயமும், கூடவே சில பேட்டிகளையும் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.
ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள் என்று தொடங்கும் ஆசிரியர், சில மணித்துளிகளிலேயே 2200 வருடங்கள் முன் நம்மை கொண்டு செல்கிறார். ஓவ்வொரு வரியையும் காட்சிப்படுத்தி பார்த்தால் வியப்பாக இருக்கிறது. கீழடி மக்கள் பயண்படுத்திய பொருட்கள் எல்லாம் கூறுகிறார். அவர்களின் பொருட்களில்லாமல் ஆப்கானிஸ்தான், கிரேக்கம், ரோமாபுரி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், பானைகள் போன்ற பொருட்களை பார்த்தால் அவர்களின் வணிகம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கீழடி பற்றி சிறிது பேசிவிட்டு அடுத்த அத்தியாயங்களில் கீழடி விட்டு விலகி கீழடி அகழ்வாராய்ச்சிக்கு முன் நடந்த சில விடயங்களை விவரிக்கிறார். அதை படிக்கும் போது "தல சுத்தீருச்சு". இந்திய வரலாற்றையே மாற்றிய இரண்டு நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவர் சாதாரன ஒரு சங்க கால வீரன் அந்துவன். மற்றொருவர் தங்கமகள் கோதை. படித்துப் பாருங்கள் அவர்கள் அருமை தெரியும். பின் சிலப்பதிகாரம் பற்றிய செய்திகள் நிறையவே தருகிறார். மிக முக்கியமாக இந்த ஆய்வை அமர்நாத் இராமகிருஷ்ணன் எப்படி தொடங்கினார் , வைகை நதி நாகரிகத்திற்க்கும், உலகில் மற்ற பழமையான நாகரிகத்திற்க்கும் என்ன வித்தியாசம், என்ன தனிச்சிறப்பு கீழடிக்கு என்று அருமையாக விளக்குகிறார் ஆசிரியர். கீழடியில் கிடைக்கப்பட்ட பானை ஓவியங்கள், அதை செய்தது யார், கடல் வாணிபம் பேன்ற பல விடயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. இலக்கியத்தையும் வரலாற்றையும் ஒப்பிட்டு ஆசிரியர் வைக்கும் பார்வை மிக அழகாக இருக்கிறது. அது யாரும் பார்த்திராத ஒரு பார்வை என்று நினைக்கிறேன். அதற்க்காகவே இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.

கீழடியில் நாம் ஒன்றை முக்கியமாக பார்க்கவேண்டும். சாதி என்றால் என்வென்று தெரியாத, மதம் என்றால் என்னவென்று தெரியாத மக்களைக் கொண்டிருந்தது கீழடி. தொல்பொருள் இடங்களை இரண்டாக பிரிப்பார்கள். Habitual site மற்றும் burial site. கீழடி தமிழகத்தில் கிடைத்த முதல் habitual site. இதற்க்கு முன் கிடைத்தவை எல்லாம் burial site. ஆதிச்சநல்லூர் உட்பட. அதனால்தான் கீழடிக்கு இவ்வளவு முக்கியத்துவம். இந்த காலத்தில் இருப்பதைப்போல சாதிக்கு ஒரு சுடுகாடு அந்த காலத்தில் இல்லை. ஏன் சுடுகடே இல்லை, எல்லாம் இடுகாடுகள்தான். தமிழர்களுக்கு இறந்தவர் உடலை புதைக்கும் பழக்கம்தான், எரிக்கும் பழக்கம் பின்னாளில் வந்ததே. சங்க காலத்தில் 10 habitual siteக்கு ஒரு பொது இடுகாடு (burial site) இருந்திருக்கிறது. சாதி என்ற ஒன்றை அறியாத மக்கள் அவர்கள். ஆனால் அவர்களின் சந்ததிகளான நாம் சாதி மதம் என்று இல்லாத ஒன்றை பிடித்துக்கொண்டு சாகிறோம்.
கீழடிதான் நம் மக்களுக்கு 'சாதி நம் அடையாளம் அல்ல' என்று எடுத்துரைப்பதற்க்கு, கண்ணால் பார்க்கவும், கையால் தொடவும் முடிகிற ஆதாரமாக இருக்கிறது. க��ழடியும் அதுபோலே வைகை நதிக்கரையில் இருக்கும் மற்ற 293 கீழடிகளையும் அகழ்வாராய்ச்சி செய்ய, நம்மை பற்றி நாம் அறிய, நாம் ஒன்றுபட்டு கீழடிக்காகவும், அமர்நாத் இராமகிருஷ்ணனுக்காவும் கண்டிப்பாக குரல் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொருவரும் இந்த புத்தகம் படியுங்கள்.
கீழடி பற்றி மேலும் தகவல்களுக்கு அமர்நாத் இராமகிருஷ்ணன் மற்றும் சு.வெங்கடேசன் அவர்களின் YouTube காணொளியை காணுங்கள்.

நன்றி வணக்கம்.

வாழ்க தமிழ்.
Profile Image for Bavya Krishnan.
57 reviews2 followers
June 17, 2020
A book about Tamil history that just brings pride and truth to the fact that our civilization was by hence the oldest and the proofs that substantiates the same.. The proofs that relates trade linkage of Southern India to Greece.. The first part of the book beams up us with pride to be able to be live in an area where our ancestors were the most knowledged tribe in arts, crafts and even warcrafts..
.
.
But the second part hits us with the harshness of current Indian and even state politics that shatter the pride that welds us up so far..
.
.
If you are interested to know the facts of our forefathers just read this one.. I am happy that I was able to explain with pictures that such civilization lived before centuries to my kids..
.
.
I don't know y a pride of Tamilnadu is not considered as a pride of India many a times .. Are we not a part of this Nation
Profile Image for Pt Sivakumar.
5 reviews1 follower
December 28, 2019
Amazing! Well written especially providing the Prof. And the correlations are superbly linked. Very interesting to read however questions and answers section but bored since the information are presented in the previous chapters.
Displaying 1 - 21 of 21 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.