தமிழ்ப்பிரபா எழுதியுள்ள ‘பேட்டை’ சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள நாவல். நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம், அங்கு வாழ்க்கை உருப்பெற்று, உருமாறிவந்த விதம், அந்தப் பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள், தர்க்கத்துக்குள் அடங்காத வாழ்வின் கோலங்கள் ஆகியவை புனைவுத் தன்மையுடன் வெளிப்படுகின்றன. படைப்புக்குத் தேவையான நம்பகத்தன்மையுடனும் இவை வெளிப்படுகின்றன. மனிதர்கள், அவர்களின் மொழி, தொழில்கள், நம்பிக்கைகள், வசவுகள், மதிப்பீடுகள், சண்டைகள், ஏமாற்றங்கள், சாதனைகள், சறுக்கல்கள், மோதல்கள், உறவுகள், பிறழ்வுகள் எனப் பல்வேறு அம்சங்களும் இந்நாவலில் ஊடுபாவாய்க் கலந்துள்ளன.
காலமாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டாமல் இயல்பாகவும் நுட்பமாகவும் வெளிப்படச்செய்வது மேலான படைப்புத் திறனுக்கே சாத்தியப்படும். இந்த நாவலில் அது சாத்தியப்பட்டிருக்கிறது. சென்னையின் விளிம்புநிலை மக்களின் வாழ்வு குறித்த அழுத்தமான சலனங்களை ஏற்படுத்தும் புனைவுகள் வாசகப் பிரக்ஞையில் அரிதாகவே வருகின்றன. தமிழ்ப்பிரபாவின் ‘பேட்டை’ அத்தகையதொரு முக்கியமான படைப்பு.
1735-ல் துவங்கி ஆங்கிலேயர்களால் அவர்கள் சுயநலத்திற்க்காக உருவாக்கப்பட்ட 'சின்னதறி பேட்டை' என்கிற 'சிந்தாதிரிப்பேட்டை' ஊர் உருவான வரலாறு, அவ்வூரில் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு, கூவம் நதிக்கரையோரங்களில் அம்மக்கள் தங்கி வாழ ஆரம்பித்து, அந்தப் பகுதியே எப்படி அவர்களின் நிரந்தர வாழ்விடமானது என்ற வரலாற்றிலிருந்து துவங்கி,
அந்தச் சிந்தாதிரிபேட்டையில் பிறந்து வளரும் 'ரூபன்'-இன் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம், அந்தப் பகுதியின் நிலப்பரப்பு, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைமுறை, இசை, மத நம்பிக்கைகள், உணவு, உணவு அரசியல் , போதை, சாதி அரசியல், நில அரசியல் ஆகியவற்றைப் பேசும் Entertaining ஆன நாவல், தமிழ்ப்பிரபா எழுதிய பேட்டை.
தமிழ்ப்பிரபாவின் "பேட்டை" சென்னை சிந்தாத்திரிப்பேட்டை பகுதியை களமாக கொண்டு பயணிக்கிறது. சென்னையின் பூர்வகுடிகளான தலீத்துகளின் வாழ்க்கை முறை, மொழி, இசை, நட்பு, காதல், உணவு, ஆன்மீகம், மூடநம்பிக்கைகள், இறப்பு ஆகியவற்றை இந்நாவல் துல்லியமாக சித்தரிக்கிறது. 1980-களில் துவங்கி இன்று வரை சிந்தாத்திரிப்பேட்டை மற்றும் வட சென்னை பகுதிகளில் நடந்தேறிய மாற்றங்களையும், அவை அப்பகுதி மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களையும் இந்நாவல் புனைவின் வழி நுட்பமாக விவரிக்கிறது.
கதையின் இரண்டு பிரதான கதாப்பாத்திரங்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு காரணங்களால் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். ரெஜினா எனும் பெண் பாதிக்கப்படும் காலத்தில் மன ரீதியான பிரச்சினைகளுக்கு மத வழிபாட்டுத் தளங்களையே உறவினர்களும் அப்பகுதி மக்களும் நாடுகின்றனர். மருத்துவத்தை பற்றிய எண்ணமே வராத அளவுக்கு அது அவர்களுக்கு அணுகக்கூடியதாகவும் இல்லை, அறியாமையால் வரும் பயமும் இருந்திருக்கக்கூடும். ரெஜினாவின் மகன் ரூபன் அதே போல் பாதிக்கப்படும் போது, ரெஜினா மதத்தின் துணையை நாடுகிறாள். கடைசியில் ரூபனின் அலுவலக நண்பர்களின் வற்புறுத்தலால் அவனை மனநல காப்பகத்தில் அனுமதிக்கிறார்கள். இக்காலக்கட்டத்திலும், மருத்துவத்தின் தேவை பற்றிய விழிப்புணர்வு, அறிவியலின் துணையை நாடும் மனநிலை ஆகியவை இருந்தும் மதத்தின் துணையையே விளிம்புநிலை மக்கள் தேடுகின்றனர். அந்த அளவுகடந்த நம்பிக்கையை மதமும், மதபோதகர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர் - அது எந்த மதமாக இருந்தாலும் சரி. குறிப்பாக கிருத்துவ மதச் சபைகளில் நடைபெறும் சாட்சி சொல்லும் முறை, ஏனைய மதங்களில் இருக்கும் பேய் ஓட்டும் முறை ஆகியவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது இந்நாவல்.
இந்நாவல் கவாப்பு போன்ற பீஃப் உணவு வகைகள், அவற்றின் சுவை, செய்முறை ஆகியவற்றை பதிவு செய்வதோடு நில்லாமல் அந்த உணவை சுற்றிய அரசியலையும் பல இடங்களில் பேசுகிறது. கறி என்றவுடன் ஐ.டி. கம்பெனியில் சக ஊழியர்கள் அடையும் உற்சாகம் மாட்டுக்கறி என்ற அறிந்தவுடன் மறைகிறதோடு நில்லாமல் அதைக் கொண்டுவந்த இளைஞனை தற்காலிகமாக ஒதுக்கும் நவீன தீண்டாமையாய் உருவெடுப்பதையும் காட்சிப்படுத்துகிறது இந்நாவல். கதையில் இடம்பெறும் கவாப்பு எனும் உணவின் செய்முறை நம்மை கவர்கிறது, சுவைக்க தூண்டுகிறது.
இந்த பகுதி மக்களின் தொழில்கள், அவற்றில் காலப்போக்கில் நடந்த மாற்றங்கள், அவற்றின் நலிவுக்கான காரணிகள் ஆகியவை கதையில் இடம்பெறுகின்றன. சுவரோவியம் வரைந்து சம்பாதிக்கும் பூபாலன் அச்சு அசலாக அரசியல் தலைவர்களை வரையும் ஆற்றல் பெற்றதோடு கலைஞர் கருணாநிதியின் கவனத்தையும் பெற்றிருந்தவர். அவரது கதை உணர்வுபூரமாக சொல்லப்படுகிறது. டிஜிட்டல் பேனர்களின் வரவால் அவரது தொழில் முடங்கி ஏ.டி.எம் ஒன்றின் இரவு நேர வாட்ச்மேனாக அமர்கிறார். நலிந்த தொழில்களால் நட்டம் அடைந்த எத்தனையோ திறமைசாலிகளின் பிரதிபலிப்பு பூபாலன்.
கதையில் இடம்பெறும் பெண் கதாப்பாத்திரங்களும் வலுவானவை - குறிப்பாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு பிழைப்பு தேடி வந்து விடுதியில் தங்கியிருக்கும் இவாஞ்சலின் - அவளின் தனிமை, நகரத்து பெண்களால் விடுதியில் அவளுக்கு ஏற்படும் தொல்லைகள், அவற்றை சமாளிக்க கோபத்தை கவசமாக ஆக்கிக் கொள்ளும் தன்மை என நாவலில் சிறிய நேரம் வலம் வரும் சிறந்த கதாப்பாத்திரமாக மிளிர்கிறாள்.
நாவல் நெடுக இடம்பெறும் மெட்ராஸ் தமிழ் கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்கிறது. மெட்ராஸ் தமிழில் நாவலின் பாத்திரங்கள் பேசும் வசனங்களில் அனாசயமாக இடம்பெரும் கெட்ட வார்த்தைகள் அம்மக்களின் வெளிப்படைத் தன்மையையே உணர்த்துகின்றன.
கூவம் நதிக்கரையில் வசிக்கும் பூர்வகுடி மக்களை நகரத்தை விட்டு அரசு இயந்திரத்தின் துணை கொண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல், சாதிய படிநிலையின் தீவிரம் பள்ளர்-பறையர் பாகுபாடு வரை நிலைத்து நிற்கும் நிலை போன்ற சமகால அரசியலையும், சமூகச் சூழலையும் வெளிப்படுத்தும் இடங்களும் நாவலில் அமைகின்றன.
கிளைக் கதைகள் பல இருந்தும் அவற்றுள் சிக்கிக் கொள்ளாது பயணிக்கிறது. ஆங்காங்கே சிறுசிறு தொய்வுகள் இருந்தாலும் நிறைவான வாசிப்பாக அமைகிறது.
சார்பட்டா பார்க்கும் முன்பே தமிழ்ப்பிரபா எழுதிய “பேட்டை” நாவலை படித்து விட வேண்டும் என்று தொடங்கினேன் நேற்று தான் முடிக்கமுடிந்தது. 380 பக்க நாவல் என்பதால் நேரம் கூடுதலாக தேவை பட்டது. சென்னையை மையமாக வைத்து நகரும் கதைக்களத்தில் ஒரு புத்தகம் படிப்பது எனக்கு இது தான் முதல் முறை. சென்னை அழகு தமிழ் படிக்க படிக்க ஒரு ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் உண்டுசெய்தது.
வரலாற்று அறிமுகத்துடன் தான் தொடங்குகிறது இந்த நாவல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சென்னையில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடந்தேறியது, எப்படி சிந்தாதிரிபேட்டை உருவானது, அங்கு பின்னாளில் எப்படி சாதி ரீதியிலான தெருக்கள் உருவானது என்பதை விளக்கமாகவே எழுதியுள்ளார்.
கதையின் நடுவில் சில தொய்வுகள் இருந்தாலும், கதை களமும் அதில் வரும் மனிதர்களும் நம்மை பிடிப்புடனும் ஈடுபாட்டுடனும் வைத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக ரூபன், சௌமியன், ரெஜினா, நகோமியம்மா போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.
இந்த கதை எழுத்தாளரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் வைத்து எழுதிய ஒன்றாக தான் தெரிகிறது,"பெரும்பாலும் முதல் நாவல்கள் எழுத்தாளனின் வாழ்க்கையை பற்றியதே" என்று வரும் வசனம் அதை உறுதிப்படுத்துகிறது.கதாபாத்திரங்கள் எல்லாம் உண்மையை தன்மை கொண்டாவையாகவும் புனைவு தன்மை குறைந்து காணப்படுவதும் அந்த வாதத்திற்கு வலு சேர்கிறது. எளிய மக்களின் வாழ்வியலை பேசுவது, அவர்களை புரிந்துகொள்ள உதவும் என்றே நினைக்கிறேன்.
மேலும் சார்பட்டா படத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் இந்த நாவலில் வரும் கத��பாத்திரங்களுடன் ஒத்துப்போகிறார்கள், குறிப்பாக டாடி, ரெஜினா போன்ற துணை கதாபாத்திரங்களின் சாயல் படத்திலும் தென்படுகிறது.
எழுத்து நடை, கதை சொல்லும் விதம், நடுநடுவே வரும் இலக்கிய மேற்கோள்கள் எல்லாம் இதனை ஒரு நல்ல நாவலாக மாற்றியள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
1735-ல் துவங்கி ஆங்கிலேயர்களால் அவர்கள் சுயநலத்திற்க்காக உருவாக்கப்பட்ட 'சின்னதறி பேட்டை' என்கிற 'சிந்தாதிரிப்பேட்டை' ஊர் உருவான வரலாறு, அவ்வூரில் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு, கூவம் நதிக்கரையோரங்களில் அம்மக்கள் தங்கி வாழ ஆரம்பித்து, அந்தப் பகுதியே எப்படி அவர்களின் நிரந்தர வாழ்விடமானது என்ற வரலாற்றிலிருந்து துவங்கி,
அந்தச் சிந்தாதிரிபேட்டையில் பிறந்து வளரும் 'ரூபன்'-இன் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம், அந்தப் பகுதியின் நிலப்பரப்பு, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைமுறை, இசை, மத நம்பிக்கைகள், உணவு, உணவு அரசியல் , போதை, சாதி அரசியல், நில அரசியல் ஆகியவற்றைப் பேசும் Entertaining ஆன நாவல், தமிழ்ப்பிரபா எழுதிய பேட்டை.
தமிழ் பிரபா எழுதியுள்ள பேட்டை சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியை தன் களமாக கொண்டுள்ள நாவல். கல்லூரி படிக்கும் பொழுது மெரினா பீச் போவது முதற்கொண்டு தற்பொழுது தரமணியில் வேலை பார்ப்பது முடிய அவ்வழியாக மின்சார ரயிலில் போகும் பொழுது "ரயில் நிலையம் சிந்தாதிரிப்பேட்டை அடுத்த ரயில் நிலையம்" என ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலியினை ரயிலில் கேட்டிருக்கின்றேன்.அப்போதெல்லாம் இந்த இடத்திற்கு பின்னால் இவ்வளவு வரலாறு இருந்தது என்று யோசித்தது கூட இல்லை. எதனால் இந்த இடத்திற்கு சிந்தாதிரிப்பேட்டை என்று பெயர் வந்தது,அங்குள்ள மக்களின் மொழி, தொழில்கள் ,நம்பிக்கைகள், சண்டைகள்,ஏமாற்றங்கள், சாதனைகள், சறுக்கல்கள், உறவுகள் ,உறவுகள் என பல்வேறு அம்சங்களும் இந்நாவலில் கலந்துள்ளன.சென்னையின் விளிம்புநிலை மக்களின் வாழ்வு குறித்த அழுத்தமான சலனங்களை ஏற்படுத்தும் புனைவுகள் வாசகர்கள் மத்தியில் அரிதாகவே வருகின்றன.தமிழ் பிரபாவின் பேட்டை அத்தகையதொரு முக்கியமான படைப்பு.
சென்னையைப் பற்றிய நாவல் என்பதாலேயே வாசிக்க ஆர்வம் அதிகமாகிடுச்சி. நாவலின் ஆரம்பமும் அமர்க்களம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்குத் தேவைப்பட்ட துணிகளை நெய்கிறதுக்கு சின்னத்தரி பேட்டையும் , சாயம் போட காலடிபேட்டையும் உருவான சரித்திரத்தோடு நாவல் ஆரமிக்கிறது. இந்தத் தலைமுறைக்கு முந்தின தலைமுறையை பற்றி விவரிக்கும் முதல் அத்தியாயம் 80 பக்கத்துக்கு சிந்தாதரிப்பேட்டை மக்கள் கூடவே வாழ்ந்த போல இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை beep போடுறாப் போல இருந்த பேச்சு மொழி , எப்படி அந்த வார்த்தைகள் எல்லாம் அவங்க வாழ்க்கையோட அங்கமாவே இருக்கு என்பதை எந்த நெருடலும் இல்லாம உபயோகிச்சு இருக்குறது அருமை. அதுவே பேட்டையின் சிறப்பும்.
இரண்டாவது அத்யாயத்துல இருந்து நாவலின் சறுக்கள் ஆரம்பம். சில அத்தியாயங்கள் நுணுக்கமாகவும் நிறையக் குறிப்புகளுடன் மக்களின் இயல்பையும் பல அத்தியாயங்கள் மேலோட்டமாகக் கதை நகர்கிறது. சில புத்தகங்கள்ல வழவழப்பான தாள்களை வண்ண ஓவியமோ புகைப்படமோ இருக்குறாப்போல இந்த நாவல் அங்க அங்க சில அத்தியாயங்கள் அருமையா வந்து இருக்கு.
பெரிய எதிர் பார்ப்போடு வாசிக்க எடுத்த புத்தகம் அரமத்துல என்னவோ நல்ல இருந்தாலும் போக போக ஏமாற்றமே. மேலோட்டமா ஒரு வசிப்பனுபவத்தையே தரக்கூடிய நாவல் .
சிந்தாதிரிப்பேட்டையைக் கதைகளமாகக் கொண்டு 1980களில் இருந்து இன்று வரை மக்களின் வாழ்வியல் மாற்றங்களைப் பேசும் நாவல். அங்கே வாழும் மக்களின் மதநம்பிக்கைகள், மொழி, தொழில், விளையாட்டு, உணவு, இசை என பல்வேறு விஷயங்களை யதார்த்தமாக பேசுகிறது. முதல் அத்தியாயத்தில் சிந்தாதிரிப்பேட்டை உருவான வரலாறு தரும் சுவாரசியம், மற்ற அத்தியாயங்களில் ஏனோ கொஞ்சம் குறைந்தே காணப்படுகிறது.
பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் தஞ்சை, மதுரை, நாகர் கோவிலிருந்து தான் வரவேண்டுமா, வட சென்னையிலும் இருந்து வரலாம் என்று நிறுவிய நாவல். பேட்டை உருவான வரலாறு, மற்றும் அது எப்படி ஹவுசிங் போர்டு ஆக மாறியது மற்றும் அங்கு வாழும் அனைவரையும் பற்றிய கதை. நாவலில் பல கதை மாந்தர்கள் சில நேரம் கதையின் மைய்ய ஓட்டம் எதுவென்று புரியவில்லை. ரூபன், ரெஜினா, நகோமியம்மா, இவாஞ்சலின் கதாபாத்திரங்கள் வலுவாக எழுதப்பட்டுள்ளது. மதம் மற்றும் மதம் எப்படி அவர்களின் வாழ்வில் ஊடுருவியுள்ளது என்று நாவல் நெடுக விவரிக்கப்படுகிறது அதுவே கொஞ்சம் அயற்சியாக உள்ளது. ரூபனுக்கு வந்தது உண்மையான மனப்பிறழ்வா அல்லது அவன் நடத்திய நாடகமா என்று சரியாக விவரிக்கப் படவில்லை. கடைசியில் எல்லாம் சுபமாக முடிவது கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தது. இதெல்லாம் சிறு குறைகள் தான், இந்த நாவலை எழுத தமிழ்ப்பிரபா மிகக் கடினமாக உழைத்துள்ளது தெரிகிறது. நான் நாவல் படிக்கும் போது காட்சிகள் என் கண் முன்னே எளிதாக விரிந்தது. 4 ஸ்டார்கள் கதையில் உள்ள சில குழப்பத்திற்காக மற்றபடி இது ஒரு மிகச் சிறந்த நாவல். நான் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
சென்னை மண்ணின் சரித்திரத்தில் மீண்டும் ஒரு நல்ல பதிவு (அ) முயற்சி. கரண் கார்க்கியின் 'கறுப்பர் நகரம்' நாவல் படித்து முடித்த போது ஏற்பட்ட தாக்கத்தை உணர முடியவில்லை. தமிழ்ப்பிரபாவின் பேட்டை நாவல் சிந்தாதரிப்பேட்டையின் வரலாற்றையும் அந்த நிலத்தின் மக்களின் வாழ்வியல்,அரசியல்,உணவுப்பழக்க வழக்கங்களை மிக அழகாகவும், காலக்கட்டத்தை குறியீடு வழியாகவும் ரூபன் என்ற இளைஞனின் வாழ்க்கையை மிக விரிவாக விவரித்துள்ளார். நகோமியம்மா, ரெஜினா,லாரன்ஸ், சௌமியன் மற்றும் பூபாலன் போன்ற பாத்திரங்கள் நிஜ வாழ்வின் மனிதர்களைப் போல நாவலில் வலம் வருகிறார்கள்.ஆனால் பாலு மற்றும் அண்டா உருட்டி போன்ற கதாப்பாத்திரங்களை இன்னும் சிறப்பாக விவரித்து அணுகி இருக்கலாம்.
சில புத்தகங்களை வாசிக்கும் போது அதன் கதாபாத்திரங்கள் எழுந்து வந்து நம்முடன் நடமாட தொடங்கிவிட்டதாகவே தோன்றும். பேட்டை அவற்றுள் ஒன்று. நம் கையை இறுக்க பிடித்து சிந்தாதிரிப்பேட்டையை சுற்றி காண்பித்தது போல் இருந்தது.
என்னதான் நுணுக்கமான விவரணைகளுடன் எழுதினாலும் அனுபவத்திலிருந்து வரும் சொற்களுக்கு மதிப்பு அதிகம். கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லாது மனம் விட்டு பேசியிருப்பதை போன்றிருக்கும் தமிழ்ப்பிரபாவின் எழுத்து தான் பேட்டையின் பலம்.
சென்னையின் ஒதுக்குப்புறமென கூவம் ஆற்றங்கரையில் ஆங்கிலேயரின் சுயநலத்தால் கூட்டி வந்து குடியமர்த்தப்பட்டு, காலப்போக்கில் ஒதுக்கி வைக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) தலித் மக்களின் தினசரி வாழ்க்கை, வாழ்வியல் எதார்த்தம், மொழி, வசைச் சொற்கள், உணவு, கானா, கேளிக்கை, கேரம் போர்டு, மத நம்பிக்கை, கொண்டாட்டம், குடி, நட்பு, காதல், விளையாட்டு, இயல்பாய் நடக்கும் சண்டை, சச்சரவு, சடங்குகள், பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்பு, ஹவுசிங் போர்டு, அம்மக்களின் மேன்மை, கீழ்மை என சென்னையின், சிந்தாதிரிப்பேட்டையின் அப்பட்டமான வாழ்வியல் பிரதி - பேட்டை...❤️
The novel 'Pettai'! A well-written by Tamilprabha about the habitants of the chindathiri-pettai, a place in Chennai near Coovam river. Protagonist Rooban has mental sickness believed to be inherited from her mother Regina when she's pregnant. Through Rooban, author describes the life style of the 40 years Chindathiri-pet people based on casteism and globalisation.
Few lines from the book:
Reading தமிழ்பிரபா எழுதிய 'பேட்டை' நாவல்: (சிந்தாதிரிப்பேட்டையின் உண்மை நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்ட நாவல்)
லாரன்ஸ் சொன்னதால் காலையில் சௌமியன் ரூபன் வீட்டிற்குப் போய் அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து இருவரும் பாலுவின் வீட்டிற்குப் போனார்கள். பாலுவுக்கு வீடு என்று தனியாக ஒன்றில்லை. பாலுவின் அப்பா தவுடாசோறு வேலை பார்க்கும் கடப்பைக் கல் பட்டறையே அவனுக்கு வீடாக இருந்தது. தவுடாசோறுதான் அந்தக் கல் பட்டறையின் காவலாளி என்பதால் பட்டறைக்குப் பின்புறம் கூவத்தின் நுரை, வீட்டு வாசலை அவ்வப்போது ஈரப்படுத்தும் அளவுக்கு கூவத்தை நெருக்கி ஒட்டியுள்ள ஒரு சிறிய குடிலை பாலுவும் தவுடாசோறும் வீடாக நினைத்து வாழ்ந்து வருவதற்குப் பட்டறை முதலாளி அனுமதித்திருந்தார்.
பாலுவின் தாத்தனுக்கு அப்பனிலிருந்து மூன்று தலைமுறைகளாக தவுடாசோறு என்றே அவர்கள் கூப்பிடப்பட்டு வருகிறார்கள். அந்தக் காலத்தில் அவர்கள் சாப்பாடு பொங்கிச் சாப்பிடவோ, தங்குவதற்கோ அக்கம் பக்கம் இருக்கும் கூவத்து ஆட்கள் அனுமதிக்கவில்லை. சிந்தாதிரிப்பேட்டைச் சந்தையைச் சுற்றி இருக்கும் உணவகங்களுக்கு ராத்திரிபோலச் சென்று அவை மூடும் நேரத்தில் கையில் ஏதாவது சில்லறை இருந்தால் "தேவுடா சோறு" என்று கேட்பார்கள். என்னென்ன மிச்சம் இருக்கிறதோ அதையெல்லாம் ஒரு பெரிய பொட்டலமாகக் கட்டிக் கொடுப்பதை உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களை தேவுடா சோறு என்றழைத்து அது மருவி தவுடாசோறாக பாலுவின் அப்பாவின் தலையில் நிற்கிறது. இந்தப் பெயரால் தானும் கூப்பிடப்பட்டு விடக் கூடாது என்று பாலு தினமும் அவன் அம்மா படத்துக்கு முன்னும் சாமி படத்துக்கு முன்னும் முணுமுணுத்துக் கொள்வான்.
Reading தமிழ்ப்பிரபா எழுதிய 'பேட்டை' நாவல்
வருட இறுதியில் விறுவிறுவென்று 130 நெசவாளர் குடும்பங்கள் குடியேறின. அக்கிராமத்தில் சின்னச் சின்னத் தறிகள் அமைத்து நெசவு செய்து கொண்டிருந்ததால் அப்பகுதிக்கு "சின்னதறிப் பேட்டை" எனப் பெயர் வைத்து மக்கள் அழைத்தார்கள். (நாளடைவில் அது சிந்தாதிரிப்பேட்டை என அழைக்கப்பட்டது) பேட்டையில் நெசவாளர்கள் அதிகமானது போலவே அவர்களுக்கு மறைமுகத் தேவையாக வரவழைக்கப்பட்ட மற்ற வகையினரும் பல்கிப் பெருகினர். டிசம்பர் மாதம் இங்கிலாந்து செல்வதற்கு முன்பு தான் உருவாக்கிய கிராமத்தைப் பார்வையிட வந்த பிட் கூவம் ஓரத்தில் இருந்த வெற்று நிலத்தில் மக்களை ஒன்று திரட்டி, "உங்களுக்கு ஏதேனும் குறையிருக்கிறது" என்று கேட்டபோது, பெரும்பாலானோர் ஒரு சாரராகத் திரண்டு, துபாஷிகளான செட்டியார்கள் மூலம் தங்கள் விண்ணப்பத்தை பிட்டிடம் முன் வைத்தார்கள்.
அதாகப்பட்டது, "கிராமத்தில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கப் பணத்தில் வீடு கட்டும் வேலை களும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே, இந்தத் தருணத்திலேயே ஜாதி அடுக்குகளை முன்வைத்து வீதி அமைக்கப்பட்டால் பிறகு நாங்கள் தராதரத்துடன் குடித்தனம் நடத்த சௌகரியமாக இருக்கும்" என்றனர்.
ஏற்கனவே எதிர்பார்த்திருந்த விண்ணப்பம் என்பதால் ஆயத்தமான பெருமூச்சுக்குப் பிறகு மக்களகன் நடுவில் நின்று உரத்த குரலில் பிட் பேச ஆரம்பித்தார். "என் அப்பா , அம்மா என்னைப் பெற்றெடுத்து வளர்த்தது இந்திராவில். நான் இந்த நாட்டிலுள்ள எல்லா நெளிவு சுளிவுகளையும், உங்களுடன் எப்படி வியாபாரம் செய்ய வேண்டுமென்ற தந்திரங்களையும் கற்றறிந்து கொண்டேன். எனக்கு கடைசிவரை பிடிபடாத விஷயம் உங்களின் ஜாதி கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம்தான். ஒருபோதும் இந்தியர்களின் ஜாதியடுக்கை ஆராய்ச்சி செய்ய முனையாதே; அது உனக்குப் வைத்தியத்தை உண்டுபண்ணும் என்று என் தந்தை ஜான் சொன்னதை இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன். நான் வியாபாரத்தை நிர்வாகம் செய்ய வந்தவன். எனக்கு அது சிறப்புற நடந்தால் அதுவே முக்கியம். ஆகவே இங்குள்ள பெருவாரியானோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மூர்த்தியப்ப செட்டியாரும், கலவைச் செட்டியாரும் ஜாதி வாரியாகத் தெருக்களை அமைக்க அவர்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். பிட் பேசி முடித்து, துபாஷிகள் அவற்றை மொழூபெயர்த்ததும் சிலர் மகிழ்ச்சியில் பிட்டிடம் ஓடிப்போய் அவர் காலில் விழுந்தனர். சிலர் நின்ற இடத்திலிருந்தே கை தட்டினர். சிலர் கைகளை மேலே உரத்திக் கூக்குரலிட்டனர். சிலர் ஒருவரை யொருவர் மௌனமாகப் பார்த்துக்கொண்டனர்.
Reading தமிழ்ப்பிரபா எழுதிய 'பேட்டை' நாவல்
சில மாதங்களுக்குப் பிறகு வீடுகள் கட்டி முடிந்ததும் ஜாதி, இனப் பிரிவினையை முன்வைத்து வீதிகள் அமைக்கப்பட்டன. கடவுளுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால் கிராமத்திலுள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலை ஒட்டியிருக்கும் அகன்ற சாலைக்கு அக்ரஹாரம் எனப் பெயரிடப்பட்டு பிராமணர்கள் முதலில் குடிபெயர்ந்தனர். நாயக்கர்கள், செட்டியார்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள் போன்றோர்கள் தம் இனவிருத்திக்கேற்ப ஒவ்வொரு சாதியும் மூன்று, நான்கு தெருக்கள் என ஆக்கிரமித்துக் குடிபெயர்ந்தனர். ஒவ்வொரு சாதிக்கும் தலைவர் நியமனம் செய்து தெருக்களுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
இப்படி குடிபெயர்ந்தது போக மிச்சமுள்ள இருபத்தி ஏழு குடும்பங்களுக்கு ஜாதியின் அடிப்படையில் சின்னதறிப்பேட்டை ஊருக்குள் வாழத் தகுதி இல்லை என்று தீர்மானம் ஆகியது. ஆனால் ஒரு சில நிபந்தனைகளுடன் அம்மக்கள் ஊருக்குள் நுழையலாம் என்று சலுகைகள் வழங்கியிருந்தனர். நிபந்தனைகள் பின்வருவன; 1) ஊருக்குள் ஆடு, மாடு, எலி, நாய், பூனை போன்ற ஜீவராசிகள் உயிரிழந்தால் தூக்கிக் கொண்டு போவதற்கு 2) மயிர்ச் சவரம் செய்வதற்கு 3) தேவைப்படுவோருக்கு மாப்பிள்ளைச் சவரம் செய்வதற்கு 4) மலப்புதரில் வாரம் ஒரு முறை வந்து ஊர்ப் பீயைக் கூடையில் அள்ளிக்கொண்டு போவதற்கு 5) வருடத்திற்கொருமுறை நடக்கப்போகும் பெருமாள் யாத்திரையை அக்ரஹாரத்துச் சாலையின் நிழல் படாத தூரத்தில் நின்று ஸ்வாமியைத் தரிசனம் செய்வதற்கு 6) இன்னும் ஊர் மக��கள் விருப்பப்படும் ஏவல் வேலைகளைச் செய்வதற்கு பேட்டையினுள் நுழையலாமேயன்றி மற்றபடி ஊர்க்கூபத்தில் நீரெடுக்கக்கூட அனுமதி இல்லை என்பன போன்ற கட்டளைகளைச் "சலுகைகள்" உள்ளடக்கியிருந்தன.
கிராமத்தினுள் வாழ அனுமதி கிடைக்காது என்பதெல்லாம் முன்பே தங்களுக்கு நடக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருந்த ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் கூவம் ஆற்றை ஒட்டியிருக்கும் மரங்களுக்குக் கிடையில் ஆற்றங்கரைக் குளிர்ச்சியில் குடில்கள் அமைத்து சுகபோகமாகவே வாழ்ந்தனர். கூவம் நீர் தேங்காய்த் தண்ணீரின் தித்திப்புக்கு சவால் விடும் வகையில் இருந்ததால் ஊர்க்கூபத்தில் நீரெடுக்கும் அவசியம்கூட இல்லாமல் கூவாற்று நீரிலேயே குளித்தும் குடித்தும் சமைத்தும் வாழ்க்கையை ஆனந்தித்தனர்.
This entire review has been hidden because of spoilers.
ஒரே கல்ப்பில் படித்துவிடும்படியான நாவல், ரொம்ப நாளாச்சு இப்டி படிச்சு.
ஒரு pulp fictionக்கான வேகம், ஆனாலும் அவ்ளோ செறிவான கதை சொல்லல். நெறைய இருக்கு சொல்றதுக்கு, நெறைய personas, எறத்தாழ ஒரு மானுடவரைவியல் தான் (எதெதோ இலக்கியம்ன்னு சொல்றத விட இதுதான் நல்லாயிருக்கு), கவாப்பு கறில இருந்து பேயோட்டம் செய்யிறது வரை, போற போக்கில அந்த சிந்தாரிப்பேட்டையே வெகு இயல்பாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது, அத்தோட மீ-நாவல் போல தன்னைத் தானே பரீசீலனைக்குட்படுத்தும் ஒரு layer வேறு!
Book #06/2024 Pettai(Tamil Novel)(Tamizhpraba) பேட்டை(நாவல்)(தமிழ்ப்பிரபா) Tamizhpraba is the co-writer of Sarpatta parambarai. Chinna thari pettai now called as chindatripet is introduced to us in the prologue filled with historical details as the place where the story will happen . Once the stage is set the story quickly starts introducing us to the characters in the novel one after the other Kilyambal, Nagomiamma , Regina , Rooban and so on.... What is so interesting about the narration is that the accounts are so detailed about the language , demographics , lifestyle of the people that predominantly reside in chindatripet. The novel is not set during one time duration but starts during the 80s travels to the current times. In this time flow we get to witness the customs , food choices, the growth religious choices , cutout and wall writing culture , aspirations of the people ,access to education and sports , their career choices hailing from the locality, the way they are perceived in the open world and much much more... Spread over 350 pages, the language is with raw expletives keeping it so real and instantly immerses the reader into their world. Thoroughly enjoyed reading this. This won't disappoint #Recco
பேட்டை உருவான வரலாற்றுடன் துவங்கிய கதை சிங்கப்பூரான் - கிளியாம்பா தம்பதி மகன் குணசீலனுக்கு ரெஜினா உடன் திருமணம் முடிந்து மகன் ரூபன் பிறந்ததிலிருந்து ரூபனும் கிருத்துவ மதமும் பேட்டையில் வளர்ந்ததுடன் முடிகிறது.
பேட்டை நாவலில் என்னை உருக வைத்த நிகழ்வுகள்,
ரூபன் காதலி(இவாஞ்சலின்)பணம் சேர்த்து வைத்து தனக்கென சொந்தமா ஒரு அருவி வாங்கவேண்டும் என்ற ஆசையும் அதற்கான காரணமும் அழகானவை.
இயந்திரத்தின் அசுர வளர்ச்சி ஆர்டிஸ்ட் பூபாலனை ஏடிஎம் காவலாளியாக்கியதை எண்ணி நம்மை கவலைப்பட வைக்கிறது.
தேவுடா சோறு(தவுடாசோறு) பாலூவின் போர்டு விளையாட்டு திறனை லாரான்ஸ் & மாசிலா முன்னேற்ற பாலு விளையாட்டில் முன்னேறி பேட்டையில் ஆயிரம்பேருக்கு அன்னதானமிட்டது நாவலின் பெருமை மிகு தருணம்.
கிளியாம்பா, தோழி நகம்மா (எ) நகோமி, ரெஜினா, இவாஞ்சலின் இன்றும் பேட்டையில் வாழ வேண்டும் என்று நம்மை ஏங்க வைக்கவும் சௌமியன்,ஜான்டி,யோசெப்பு, ஆமோஸ், குணசீலன் பேட்டையில் வாழ்ந்தால் அவர்கள் குடிநோயிலிருந்து மீள வேண்டும் எனவும் நம்மை வேண்ட வைக்கிறது இந்த பேட்டை. -கலைச்செல்வன் செல்வராஜ்.
This book has succeeded in showing the raw Madras! As it is! The language, portrayal of characters, daily life were very well executed! This would be my first Tamil novel with so many swear words and disgusting scenes that I didn't understand most of them. But leaving that aside, the story shows how the life of people in Ramar Thottam (Chintadripet) actually is. Reminded me of Pa.Ranjith and Vetrimaran movies. The characters and their portrayal are so well carved that they with stay with you for a long time! The part played by alcohol in their daily life is beautifully brought out! So many characters! So much of history! Madras etched in every single frame! Right from the slum, in the carom board, in the drawing, as a painter, as a paster to the IT guy! அனைத்திலும் எதார்த்தம்! What confused me the most is the last 50-60 pages! What is the author trying to convey by exaggerating one event over and over again! Made the reading experience boring. Leaving the Madras Tamil conversations, I was impressed with the author's descriptions in pure tamil. அருமையான உரைநடை & மொழிவளம்! It has become hard to find recent works with such rich Tamil! Loved it! After doing a little research, I found that the author has co-written the dialogues of "Sarpatta Parambarai". Stuff like Daddy, Ragimalt were clearly inspired from this novel! Definitely a good read if you're interested in know the raw Madras with no make-up! Rating it 3 due to the same reason mentioned above (those 50-60 pages). Else this book would have been a definite 4.5!
தமிழ்ப்பிரபாவின் பேட்டை - சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை/சின்னத்தறிப்பேட்டை 1735ல் உருவான கதை என்ற முன்னுருவுடன் ஆரம்பிக்கிறது. அக்காலகட்டத்தில் தலித் மக்கள் பல்வேறு பிரிவினைகளுக்கு உட்பட்டுக் கூவ ஆற்றின் அருகே தங்கள் வாழ்வாதாரத்தை குடிசை வழி நடத்தி பின்னாளில் 1967ல் அரசின் உதவியால் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு மாறிய மக்களின் வாழ்வியலைப் பற்றிய ஒரு முழுமையான நாவல்.
பேட்டை நாவல் இப்பகுதி மக்கள் வாழ்வின் பல்வேறு நுணுக்கங்களை மிக தெளிவாகவும் முழுமையாகவும் விவரித்ததோடு இல்லாமல் அதைச் சொன்ன உரைநடையும் அருமை. அங்கு நிலவிய வழக்காடு மொழி, தொழில்முறை, உணவுப்பழக்கம், மத நம்பிக்கை, உறவுகள், மத/சாதி அரசியல், மன உளைச்சல், நகரமயமாதல் மற்றும் பல அழுத்தமான கருத்துக்களை விட்டுச் செல்கின்றது.
நாவலின் மிக முக்கிய அம்சமாய் அமைந்த அதன் எதார்த்த வட்டார வழக்கு சென்னையின் அடையாளத்தை தெளிவுறக் காட்டுகின்றது. தமிழ்ப்பிரபாவின் எழுத்து கதை கண் முன்னே நகர்கின்ற உணர்வைத் தருவது இன்னும் சிறப்பு! இது எல்லாவற்றுக்கும் மேல் கதை சொல்லப்பட்ட தொனியில் நகைச்சுவைக்கப் பஞ்சம் இல்லை.
திரு தமிழ்ப்பிரபா அவர்களின் பேட்டிகளையும் நேர்காணல்களையும் கண்டு அவரை மிகவும் பிடித்துப்போக அவரின் நாவல்களை படிக்க வேண்டும் என்ற ஆசை முளைத்தது. அவரின் "பேட்டை" நாவலை தேர்வு செய்தேன்.
நாவல் மிக சுவாரசியமாக தொடங்கி விறுவிறுவென முன்னேறிக்கொண்டிருந்தது. அவரின் எழுத்து நடையும், கதை மாந்தர்கள், அவர்களின் வாழ்வியல் சார்ந்த விஷயங்களை கூறும் விதமும் அருமையாக இருந்தது.
இருந்தும் ஒரு கட்டத்திற்கு பின் நாவல் எதை நோக்கி நகர்கின்றது என்று எனக்கு புரியாமல் போக, சலிப்பு தட்டியது. ரசித்து படித்தது மாறி நுனிப்புல் மேய்வது போல சாராம்சத்தை மட்டும் படித்து நகர்த்தலானேன்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி, சற்றே ஏமாற்றத்துடன் முடித்தேன்.
நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள பிற நாவல்களை பட்டியல் இட்டு வைத்திருக்கிறேன். அடுத்து "கோசலை".
கதை நகோமியம்மா என்ற ஒரு புள்ளியில் ஆரம்பித்து அவள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, அங்கிருந்து வேறொரு கதாப்பாத்திரம் வழியாக வேறொரு தளத்திற்கு சென்று, இப்படி வெவ்வேறு கதாபாத்திரம் வழியாக பல்கிப்பெருகி இறுதிவடிவம் கொள்கிறது. இதில் இருக்கும் மிகப்பெரிய சவால் கதை வெவ்வேறு தளங்களுக்கு வெவ்வேறு மனிதர்கள் வழியாகத் தாவித்தாவி செல்வத்தின் மூலம் கதையானது தன் சுவாரசியத் தன்மையை இழந்து விடும் வாய்ப்பு அதிகம். இல்லை வாசகனைக் குழப்பி கதையை வேறுவிதமாக புரிந்துகொள்ளச் செய்வதற்கான சாத்தியமும் ஏராளம். இந்த சவாலை முடிந்தளவுக்கு சமாளித்திருக்கிறார் தமிழ்ப்பிரபா என்றே சொல்லவேண்டும்.
திடீரென ஒரு ஐம்பது அறுபது நாட்களுக்கு முன், ‘பேட்டை’ படிக்க வேண்டுமென ஏன் தோன்றியது? படிக்கத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே பிரபாவின் பழைய காணொளியை எது பார்க்க வைத்தது? ‘சார்பட்டா’ வெளியாகும் சமயத்தில் இதெல்லாம் எனக்கு எப்படி நேர்ந்தது, எது நிகழ வைத்தது? ஒருவேளை, சில மாதங்களுக்கு முன் எதேட்சையாக நான் பார்த்த பிரபாவின் நேர்காணல்களில் இருந்த நேர்த்திதான் காரணமா?
பேட்டை பற்றி சிறு குறிப்பு வரைக; இதற்கான பதிலுடன் புத்தகம் தொடங்குகிறது. அதன் நீட்சியாக பயணிக்கிற நாவல், ரூபன் பிறப்பிற்கு முன்னிருந்து ரூபனின் 25-30 வயது வரை செல்கிறது. எவ்வளவு முயன்றும், என் ரூபனுக்கு தமிழ்ப்பிரபாவின் முக ஜாடை வருவதை தவிர்க்க முடியவில்லை. ரூபன் இவாஞ்சலின் ரெஜினா குணசீலன் பாலு ஆமோஸ் சைலேந்தர் விஷால் நகோமியம்மா கிளியாம்பாள் லாரன்ஸ் இன்னும் இன்னும் கதாபாத்திரங்கள். CRIME AND PUNISHMENT-க்கு பிறகு நான் ரசித்து படித்த நாவல் இது. அத்தனை கதாபாத்திரங்களுக்கும் கதை உண்டு; எல்லாரும் ஒரு வினை ஆற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட சோர்ந்து கீழே நான் வைக்காததிற்கு காரணம்; இது கருவாடல்ல; உயிரோடு துள்ளிக்கொண்டே முகத்தில் நீரை வாரியடிக்கும் துடிப்பான மீன்; அத்தனை ஜீவனோடு இருக்கிறது.
எவ்வளவு முயன்றும் என்னால் எழுத முடியவில்லை; காரணம் இதைப் பற்றி சிலாகித்துப் பேசுவதற்கு அத்தனை இருக்கிறது. இருந்தாலும், முடிந்தவரை சுருங்க சொல்ல முயற்சித்திருக்கிறேன். விருப்பமும் நேரமும் உள்ளவர்கள் என் podcastல் கேட்கலாம். podcast இணைப்பு: https://anchor.fm/unmaththan/episodes...
Petta= (2 main characters with split personality/DID & how people around them react) + (chennai places & slang) + (elements: humor, love,fights,friendship,addictions,history & politics)
I agree with one reviewer who said there were less takeaways from this book. People who have very less time but want to read some serious literature can definitely skip this book w/o regret.
The problem with the book is the way it has been presented to the readers: a catchy title, the back cover description that says this book is kind of a representation of the particular area/land. But majority of the book had stories that happen in many places not only specific to 'Petta' (Chintadripet,a locality in Chennai) and I believe many people kind of already aware of those stories through mass media, so it is not an eye opener really. I wanted alot to know about the people of that area of Chennai specifically/Chennai in general, which i guess might be shown in "Karuppar Nagaram", another book that has good ratings & reviews. Anyways, I'm disappointed in this book, felt many parts sluggish, wanted many times to know when would I finish/why I desired for so long to buy this book. It just felt like a commercial entertainer, not an important book after completing.
I also wanna register that it made me laugh some times, had some well written parts and I really enjoyed the slang that I started speaking in it awhile around. Anyways.
சென்னையின் பிரத்யேக மொழியாக நமக்கு சினிமாவிலும் இலக்கியத்திலும் சொல்லப்பட்டிருப்பவையினின்று முற்றிலும் வேறு மாதிரியானது பிரபா நமக்குச் சொல்கிற மொழி. சிந்தாதிரிப்பேட்டையின் தோற்றத்தில் தொடங்குகிற கதை கூவாற்றின் கரையோரம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைகிற லட்சக்கணக்கானோரில் சிலரின் வாழ்க்கையைச் சுற்றி வருகின்றது. வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள், கூவம் ஆறு, பேட்டை வாழ்க்கை, கேரம் போர்ட், எல்லாவற்றுக்கும் மேல் கிறுஸ்தவ மதம் இம்மக்களின் வாழ்வின் மீது செலுத்துகிற ஆளுமையும் அது சார்ந்த வாழ்வியலை எழுதியிருக்கிற விதமும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. வெவ்வேறு சம்பவங்களின் தொகுப்பாகவும் அவை சார்ந்த விவரனைகளாகவும் சிறப்பாகவே எழுதப்பட்டிருந்தாலும், கதையில் ரூபன் புத்தகம் எழுதப்போவதாகத் தொடங்கும் இடத்திலிருந்து இவாஞ்சலினோடான அவனுடைய காதல் வரையிலுமான பகுதிகள் கொஞ்சம் முன்கதைகளோடான தொடர்புகள் (உணர்வுரீதியில் அற்றுப்போய்) வரை முற்றிலும் வேறு ஒரு நாவலாகப் பட்டது. ஆனாலும் மனதில் நிற்பதென்னவோ தனக்கென பிரத்யேகமாய் ’அருவி’ வாங்கித்தரச் சொல்லி காதலனைக் கேட்கிற இவாஞ்சலின் தான். :) பிரபா புதிதாய்க் காட்டியிருக்கிற சென்னையின் மொழிக்காக படிக்கலாம். :)
This entire review has been hidden because of spoilers.
Thala உண்மையான கதையை சொன்ன மாறியே இருக்கு. Introduction-ல வரும் சிந்தாதிரிப்பேட்டையின் வரலாறு அட்டகாசம்..
Nagomi character செம்ம.. அப்புறம் பாலு பத்தி சொன்ன விதம் ரொம்ப அருமையா இருக்கு அந்த பாலுவோட வாழ்க்கை மட்டும் தனியாக படித்த கூட ஒரு கதை படிச்ச feel இருக்கும். யோசப்பு, ஆமோஸ், லாம் Vera level... நீங்க சில dialogs லாம் பயங்கரமா எழுதியிருக்கிங்க நான் அந்த character நினைச்சு சொல்லி பாத்தேன்..
எனக்கு ஒன்னு தெரியணும் எந்த அளவுக்கு இந்த கதையில் உங்க நிஜவாழ்க்கை சம்பந்தம் இருக்கு. இந்த சம்பவம் characters lam நிஜமா இருக்காங்களா? அவங்களை பாக்கணும் போலவே இருக்கே முக்கியமா Nagomi ❤...😍😍😍
Doubt ரூபனுக்கு நிஜமா sowmyin பிரச்சனை இருந்ததா இல்ல எவஞ்சலின் கிட்ட சொன்ன மாறி நாவல் எழுத தானா??
சௌமியின் character தான் கதையின் முக்கிய கருவாக இருந்தாலும் அவரின் இறப்பிற்கு பிறகு கதையில் எதுவும் மாறவில்லை. அந்த whatsapp video பற்றி எதுவும் சொல்லவில்லை??? ...
I loved the book thala கதை செமயா இருக்கு பெரிய பாதிப்பு தான் எனக்கு ❤❤❤❤❤❤❤❤❤
பேட்டை சிந்தாதிரிபேட்டை பகுதியை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் நாவல், சிந்தாதிரிபேட்டை வாசிகள், அவர்களின் வட்டார வழக்கு, தொழில்கள், உறவு முறை, கலாசாரம், நம்பிக்கைகள் என அனைத்தையும் ரூபென் மற்றும் அவரது சுற்றத்தினர் மூலம் ஆராய்கிறது.
பேட்டையின் உலகம் நான் வளர்ந்து வந்த அதே சூழல், அதே போன்ற working class மக்களை மையமாகக் கொண்டிருந்தமையால், எனக்கு இந்த நாவல் மிகவும் நெருக்கமாகத் தோன்றியது. நகைச்சுவை கலந்த, unapologetic narrative என்னை மிகவும் கவர்ந்தது.
நாவலின் ஆரம்பத்தில் ரெஜினாவுக்கு நடக்கும் அபூர்வமான சம்பவமும், அதே போன்று இறுதியில் ரூபனுக்குச் செம்மறியாக நடக்கும் மாறுதலும், அதை எழுதிய விதமும் மிகவும் நேர்த்தியாக கையாளபட்டிருந்தது. கதையின் அமைப்பும் அமானுஷ்யமோ அல்லது மன ரீதியான உளவியல் outrage எனும் தீர்க்கமான நடை இல்லாமல், வாசகரின் எண்ண ஓட்டத்திற்கு திறந்த நிலையில் ஆரம்பித்து, கடைசியில் அறிவியல் ரீதியான ஒரு stand எடுத்திருப்பது மிகவும் சரியாகப் பட்டது.
பேட்டையில் உள்ள மனிதர்களை என்னால் மறக்கவே இயலாது. லாரன்ஸ், ரெஜினா, நாகோமியம்மா, பூபாளன், இவாஞ்சலின், குணசீலன், சௌமியன் என பல கதாபாத்திரங்கள் மூலமும், பிறப்பிலிருந்து இறப்பு வரை அவர்களுக்கு இருக்கும் சடங்கு, சம்பிரதாயங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையும் கலாச்சா���மும் நேர்த்தியாக முன்வைக்கப்படுகிறது.
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய முக்கியமான contemporary நாவல்களில் ஒன்று பேட்டை.
“அடுத்தவங்களோட வீக்னஸ்அ பயன்படுத்தி எதுக்கு உங்க மதத்தை திணிக்கிறீங்க?" என்ற ரூபனின் கேள்வியை படித்ததுமே ‘you will be one of my favorite writers’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புசார் மக்களின் வாழ்க்கை, வழக்காடு, வசதிகள், மதநம்பிக்கை என சென்னை மக்களின் குறிப்பாக வடசென்னையின் கூவத்தையும் குண்டுமல்லியாய் மனம் வீச செய்துள்ளார். பெரும்பாலும் வேற்றுமொழி படைப்புகளையே படித்து பழகி போன எனக்கு பிரபாவின் பேட்டை பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்ளோ 'Raw and Real' ஆஹ் நான் தமிழில் படித்த முதல் படைப்பு.
Think this might be the quickest time it's ever taken me to read one cover to cover. The story had me completely hooked, and I just had to see what happened next!! Thank you so much for this Book
சென்னையில் இருக்கும் மக்களைப் பற்றி அவர்கள் வாழ்வின் பக்கங்களை பல கதாபாத்திரங்கள் வழியாக நம் கண் முன்னே பார்க்கும் வகையில் தமிழ்பிரபா " பேட்டை"யை படைத்து உள்ளார்.
இதன் முடிவு நெருங்கும் தறுவாயில் சில நேரங்களில் மனம் சற்று நேரம் இதை இப்போது படிக்க வேண்டாம் என்று தள்ளிப் போடலாம் என்று தோன்றும் வகையில் சிறிய மன உளைச்சலுக்கு என்னை உண்டாக்கியது.
இதில் பல கதாபாத்திரங்கள் வரும் போதிலும் அவற்றுக்கு என முடிவு இல்லையே என நான் நினைத்த கனத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் முடிவு கூட 2 பக்கத்தில் முடித்தது எனக்கு ஏமாற்றம்.
இருப்பினும் நான் படித்த புத்தகங்களில் இது நிச்சயமாக முக்கியமாகவே நான் பார்க்கிறேன்.
பேட்டையின் வரலாறும், வாழ்வியலும், சமுதாய அமைப்பயும் பதிவு செய்த விதத்தில் தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு படைப்பு! சுயபுனைவாய் பரிணமிக்கும் போது ஒரு சின்ன ஆசுவாசம் எழுந்தாலும் ஒரு நாவலை எழுதி முடிக்கும் பொறுப்பு துரத்துயதில் ஒடிய முனைப்பு தெரிகிறது. இது நல்லதா கெட்டதா என தெரியவில்லை. அது இல்லாமல் நடையின் வேகத்தை ஆசுவாசம் எழும் அதே இடத்தில் கூட்டி இருந்தால் படைப்பின் முழுமை இன்னும் கவர்ந்திருக்க கூடும்.
தமிழ் இலக்கியத்தின் மில்லினியல் வருகையை தமிழ்ப்பிரபா அறிவித்திருக்கிறார். ஜெமொ, எஸ். ரா, சாரு போன்ற பூமர்களிடம் இருந்து தமிழ் இலக்கியத்தை காப்பாற்றி இருக்கிறார். Looking forward to read more from you Prabha!
இது, இந்த புத்தகத்தில் உடல் மற்றும் பாலியல் சார்ந்து பெண்வெறுப்பை உமிழும் வசை சொற்களின் எண்ணிக்கை. அவற்றை உபயோகிப்போர் எளிய / ஒடுக்கப்பட்ட மக்கள் அல்லது பெண்கள் என்பதனால் மட்டுமே அது பெண் இழி இல்லையென்றாகிவிடாது.
யதார்த்தம், தத்ரூபம் என்றெல்லாம் அனைவரும் இதனை புகழ்கின்றனர். யதார்த்தம் எனக்கு இவ்வளவு அருகில் வேண்டாம். அச்சொற்களை நூல் பிரதியிலியிருந்து முன்கூட்டியே அகற்றும் அல்லது அழிக்கும் விருப்பத்தேர்வு எனக்கு இருந்திருக்குமாயின், இவற்றை கடந்து சென்று நாவலின் கதை மீது கவனம் செலுத்துவது எனக்கு எளிதாயிருந்திருக்கும். கதைக்கும் குறைவு ஏதும் ஏற்பட்டிருக்காது.
அதை விட முக்கியமாக விடயம், இவ்வாறு வசைச்சொற்களை சரளமாக பேசுவது கதைமாந்தர்களின் (மற்றும் அவர்களின் நிஜ உலக இணைகளின்) கபடமின்மையை காட்டுகிறது என பல பாராட்டுதல்களை வாசித்தேன். இதைக்கேட்டு எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது . முன்பின் யோசிக்காமல், அல்லது பிறரின் மனதை காயப்படித்தும் படி, அவர்களை அவமானப்படுத்தும் படி, பெண்களின் மீது வன்முறையை உமிழும் வார்த்தைகளை உபயோகிப்பது உயரிய குணமா?! வளரும் சூழ்நிலையால் கற்றுக்கொண்டது என்பது உண்மையென்றாலும், முழு பிரக்ஞை வந்த பிறகும் அவற்றின் பொருள் புரிந்த பின்னரும், வன்மத்தை வாரி இறைப்பதற்காகவே இப்படி ஏசுவது கொண்டாடப்பட வேண்டியதா?
வாழ்வியலின் வடிவம் மட்டும் முக்கியமல்ல, அதன் உட்பொருளும் தான்.
இன்னொரு கேள்வி: எளிய மக்கள் சாதி ரீதியான வசவுகளை வீசினாலும், இதே பாராட்டு நீடிக்குமா? இல்லையெனில், ஏன்? அவ்விடத்தில் மட்டும் அறச்சீற்றம் ஏன் தலையை தூக்குகிறது?!
எவாஞ்சலின் மற்றும் ரெபெக்காவை தவிர நாவலின் மாந்தர்கள் யாரும் என்னை ஈர்க்கவில்லை. நகோமியம்மாவிடம் தான் எத்துணை அன்பு! தான் நேசிப்பவர்களை யாரேனும் மரியாதைக்குறைவாக பேசினாலோ நடத்தினாலோ, எத்துணை சீற்றம்! வசைமாரி, அடிதடி உட்பட. 🥴
நாவலின் முக்கிய ஆண் பாத்திரங்களில் கிட்டத்தட்ட அனைவரும், பாலியல் வன்முறை அல்லது சுரண்டலை நிகழ்த்துகின்றனர். அல்லது நினைக்கின்றனர். அவர்களின் பார்வையிலிருந்து அக்காட்சிகளை வாசிப்பது எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை.
நிற்க.
கதாபாத்திரங்களின் ஊடாக சொல்லப்படும் கதையானது முக்கியமானதாக உள்ளது.
சாதி உருவாக்கும் வரலாறு, வர்க்கத்துடன் ஆன பிணைப்பு, ஒரே வர்ணத்துக்குள்ளான சாதிய அடுக்குகள் ஏற்படுத்தும் பேதம், மத அமைப்புகளின் அளிக்கும் விடுதலையின் எல்லைகள் குறுகி இறுகுதல், மக்களின் வழுபடத்தக்க நிலையை தங்கள் சுரண்டலுக்கு மத அதிகாரம் உள்ளவர்கள் உபயோகித்தல், உளநலப் பிரச்சினைகளின் தவறான புரிதல்கள், அரசு இயந்திரத்தின் போதாமை மற்றும் வன்முறை ஆகியவற்றை கதைமாந்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு இந்நூல் வலுவாகக் காட்சிப்படுத்துகிறது.
போதைப் பொருட்களை நாடிச் செய்யும் சூழல்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நூல் நெடுக உள்ளன. சிறையில் நிகழும் பாலியல் வன்முறைகளை ஒரு சிறிய வாக்கியம் காட்டிச் செல்கிறது. (ஆமோஸின் அப்பா இதயராஜ் பற்றியது)
1985இல் ரெபெக்காவின் வாழ்வில் ஆரம்பித்து, 2016 / 17இல் ரூபனின் வாழ்வையொட்டி நூல் முடிகிறது. சீர்திருத்த சபை கிறிஸ்துவத்தை துல்லியமாக படம் பிடித்துள்ளார் ஆசிரியர். பாஸ்டர்கள் ஜெபிப்பதாக உள்ள பகுதிகளை என் மனம் அதே ராகநயத்துடன் அனிச்சையாக வாசித்தது. அங்கங்கே சத்தமிட்டு சிரிக்கும்படி சில விஷயங்களை கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். (ஏசுவுன் உயரம், இறுதி ஊர்வலத்தில் வயோதிகர்களின் அனாயாச ஆட்டம்)
கிரண்யாவின் 'மீசை'யை ரூபனுக்கு பிடித்திருப்பது, பாலுவின் கேரம் திறனைக் கண்டு அவனை நல்ல பயிற்சியாளரிடம் லாரன்ஸ் அறிமுகப்படுத்துவது என ஃபீல்-குட் தருணங்கள் சில இனிமையாக இருந்தன. pleasant surprises.
பேட்டை, ரூபனின் வாழ்வில் உள்ள முக்கியஸ்தர்கள், அதையும் தாண்டி ராமர் தோட்டத்தில் வாழ்பவர்கள் என நூல் பரந்து விரியும் போது, நடுவில் தொய்வு ஏற்படுகிறது. ஆனால், அந்த எல்லா சரடுகளும் இணைந்து, கதையின் கடைசி 30% விறுவிறுப்பாக செல்கிறது. ரூபனின் பேச்சு வழக்கிற்கும், அவன் எண்ண ஓட்டத��தை விவரிக்கும் செந்தமிழுக்குமான வேறுபாடு குறிப்பிடத்தகுந்தது.
ரூபனின் நாவல் எழுதும் ஆசை குறித்து வரும் அத்தியாயம் கதையின் போக்கிற்கு இடையூறாக உள்ளது. எழுத்து குறித்து ஏற்படும் உரையாடல்கள் சில ஓவர் ஆப்வியசாக எனக்கு தெரிந்தன. மெட்டா கமெண்ட்டரியாக தோன்றவில்லை. a little too on-the-nose.
நாம் நெருங்கிப் பயணித்த கதைமாந்தர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படுவதுடன் நூல் முடிந்து விடுமோ என்ற பதைபதைப்பு இருந்தது. மனநலம் பற்றிய விவரமான காட்சிகளையும் உரையாடல்களையும் கொண்ட நூல், கிளியாம்பாள் கதையுடன் "விடாது கருப்பு" ரீதியில் முடிவடைந்தது எனக்கு ஏமாற்றமே.
இப்புத்தகம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சில இணைப்புகள்: (வசைசொற்கள் பற்றிய கருத்துக்களை தவிர மற்றவற்றுடன் உடன்படுகிறேன்)
Suggested by my partner, this is my first Tamil novel I've read. In the first few pages, this book gives an outline of how slums were developed in Chennai along the Coovam river. The book focuses on the area Chintadripet and revolves around different characters and their lifestyle. Tamizhprabha has given a quirky content showing the og madras people and their slang throughout. Wholly not interesting, has some off parts but would definitely suggest this book.