இந்தப் புத்தகம் மனதின் விளக்க முடியாத உணர்வுப் பெருக்கங்களை சுற்றி வரையப்பட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பு.
நிறங்களை காட்சிப்படுத்த நரன் அவர்கள் கையான்டிருக்கும் உவமைகள் தனித்துவமாக விளங்குகிறது.
ஏன்,எதற்காக இதை செய்கிறார்கள், எது இவர்களை இவ்வாறு செய்ய உந்துகிறது போன்ற காரணங்களை எல்லாம் விட்டுவிட்டு இது இவ்வாறு தான் எனக் காட்டும் விதமாக கதைகள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
“தன் மேல் அன்பு செலுத்தவும் தான், அன்பு செலுத்த யாருமே இல்லாத வாழ்க்கை” – இதே வரியால் நரனின் புத்தகத்தைச் சொல்வது சரியாக இருக்கும்.
கேசம் கதையின் நாயகன். காதல், காமம், ஒரே நேரத்தில் தனிமை – இவையெல்லாம் அவனுக்குள் ஒருங்கே நிகழ்கின்றன. அவன் பேசுவதிலும், மெளனத்திலும் கூட ஒரு பரிதாபம், ஒரு அழகு இருக்கிறது.
நரன், அவர் உருவாக்கிய இன்னொரு உள் உலகம் போலவே. அவரது எழுத்துகள் சும்மா இல்லை – சிந்திக்க வைக்கும். குறிப்பாக, “காமத்துக்கு தான் எத்தனை ஆயிரம் கதவுகள்… எந்த கதவு எப்போது திறக்கும் தெரியாது” இது மாதிரியான வரிகள் வாசிக்கும்போது நிறைய யோசிக்க வைக்கிறது.
எனக்குப் பிடித்தது: கதாபாத்திரங்கள் ரொம்ப உண்மையாக இருந்ததுவரிகள் கவிதையை போல இருந்தது மனம் கொள்ளை கொள்ளும் சில நேரங்கள்
முடிவில்: கேசம் – நரன் ஒரு உணர்வுப் பயணம். சில புத்தகங்கள் பேசாததை இதுபோல் மெளனமாக சொல்லும்.
Aathiappan is a 59 year old businessman who is suffering from a skin disease and his both legs are having decaying wounds and with band aid. Due to this condition his wife doesn't like him and she doesn't allow him to touch her. He gets frustrated and starts staying at his cotton godown and his only son brings a maid Avudayammal to help him and look after the godown.